Tamil Star |
- காணாமல் போன தமிழ்ப் பெண்ணை கண்டுபிடிக்க பொதுமக்களின் உதவி நாடப்பட்டுள்ளது
- ஒஷாவா பகுதியில் துப்பாக்கிச் சூடு : 7 வயது சிறுவன் உட்பட இருவர் காயம்
- பாலியல் தாக்குதல் குற்றச்சாட்டில் ரொரன்ரோ நபர் கைது
- குற்றச்சாட்டுக்களில் இருந்து விடுபட்டார் செனற்ரர் Duffy
- மசகு எண்ணெய் விலை வீழ்ச்சி: பாதிப்புகளில் இருந்து மீள்வதற்கு மூன்று ஆண்டுகள் பிடிக்கும்
| காணாமல் போன தமிழ்ப் பெண்ணை கண்டுபிடிக்க பொதுமக்களின் உதவி நாடப்பட்டுள்ளது Posted: 22 Apr 2016 06:09 PM PDT
44 வயதுடைய கலாமாலினி சிவகுமார் என்ற நபரையே கடந்த பெப்ரவரி மாதம் 19ம் திகதியில் இருந்து காணவில்லை என்று கூறப்பட்டுள்ளது. இவர் தமது வீட்டைவிட்டுச் வெளியேறிச் சென்றபோது கொண்டு சென்ற இவரின் வாகனம் அண்மையிலுள்ள வணிக வளாகம் ஒன்றில் கண்டுபிடிக்கப்பட்டதாகவும்,அதனுள் "தான் 15 நாட்களிற்குள் திரும்பி வருவேன் தன்னைத் தேட வேண்டாம்" என அவர் எழுதி வைத்திருந்த குறிப்பொன்றையும் விட்டுச் சென்றுள்ளார் என்றும் தெரிவிக்கப்படுகிறது. 44 வயதுடைய இவர் 5 அடி 2 அங்குல உயரத்தை உடையவராகவும், நடுத்தரத் தோற்றத்தையுடையவராகவும், நீண்ட கறுத்த தலைமுடியைக்கொண்டவர் என காவல்த்துறையினர் அடையாளம் வெளியிட்டுள்ளனர். இவர் கடைசியாக காணப்படும் போது ரீ சேட்டும், கறுப்பு நிற கோட்டும், நீல காற்சட்டையும் அணிந்திருந்தார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இவர் தொடர்பில் தகவல் தெரிந்தவர்கள் தங்களை தொடர்பு கொள்ளுமாரு யோர்க் பிராந்தியக் காவல்த்துறையினர் கேட்டுக்கொண்டுள்ளனர். The post காணாமல் போன தமிழ்ப் பெண்ணை கண்டுபிடிக்க பொதுமக்களின் உதவி நாடப்பட்டுள்ளது appeared first on Tamil.com. This posting includes an audio/video/photo media file: Download Now |
| ஒஷாவா பகுதியில் துப்பாக்கிச் சூடு : 7 வயது சிறுவன் உட்பட இருவர் காயம் Posted: 22 Apr 2016 09:15 AM PDT
நேற்று வியாழக்கிழமை 11 மணியளவில் Colborne Street West பகுதியில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. துப்பாக்கிச் சூட்டுச் சத்தங்கள் கேட்பதாக தமக்கு முறைப்பாடு கிடைத்ததாகவும், அதனை அடுத்து உடனடியகா தாம் குறித்த அந்த இடத்துக்கு சென்றிருந்ததாகவும் காவல்த்துறையினர் தெரிவித்துள்ளனர். சம்பவ இடத்தில் சிறுவன் ஒருவரும் மேலும் ஒரு ஆணும் துப்பாக்கிச் சூட்டுக் காயங்களுடன் காணப்பட்ட நிலையில், உடனடியாகவே அவர்கள் இருவரும் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டதாக அதிகாரிகள் கூறியுள்ளனர். எனினும் இந்த துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் இடம்பெற்றமைக்கான காரணம், யாரால் மேற்கொள்ளப்பட்டது உள்ளிட்ட மேலதிக விபரங்கள் எவையும் உடனடியாக கிடைக்கப்பெறவில்லை. காயமடைந்த வயதானவர் சிறுவனின் தந்தை இல்லை என கூறப்பட்டுள்ள போதிலும், அவர்கள் இரவருக்கும் இடையிலான உறவு தொடர்பில் தகவல் எவையும் வெளியிடப்படவில்லை. The post ஒஷாவா பகுதியில் துப்பாக்கிச் சூடு : 7 வயது சிறுவன் உட்பட இருவர் காயம் appeared first on Tamil.com. This posting includes an audio/video/photo media file: Download Now |
| பாலியல் தாக்குதல் குற்றச்சாட்டில் ரொரன்ரோ நபர் கைது Posted: 22 Apr 2016 09:11 AM PDT
இரண்டு வெவ்வேறு சந்தர்ப்பங்களில் குறித்த இருவர் மீதும் குறித்த நபர் தாக்குதல் நடாத்தியுள்ளார் என குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது. முதலாவது சம்பவம் மார்ச் மாதம் 18 ஆம் நாள் காலை 10 மணியளவில் எக்லிங்டன் அவனியூ கிழக்கு மற்றும் கிங்சன் வீதியில் உள்ள தொடருந்துக் கட்டிடத்தில் இடம்பெற்றுள்ளது. பின்னர் இரண்டாவது சம்பவம் ஏப்பிரல் மாதம் 18 ஆம் நாள் இரவு 10.15 மணியவில் இடம்பெற்றுள்ளதாகவும் காவல்த்துறையினர் குறிப்பிட்டுள்ளனர். இந்த சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட ரொரன்ரோ நபர் 21 வயதான துசாந் அரியநாயகம் (Thusanth Ariyanayagam) என தெரிவிக்கப்பட்டுள்ளதுடன், கடந்த புதன்கிழமை கைது செய்யப்பட்டுள்ள அவர் இன்று வெள்ளிக்கிழமை நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளார். இவரினால் மேலும் யாரேனும் பாதிக்கப்பட்டிருப்பி்ன் தம்மைத் தொடர்புகொள்ளுமாறும் காவல்த்துறையினர் அறிவுறுத்தியுள்ளனர். The post பாலியல் தாக்குதல் குற்றச்சாட்டில் ரொரன்ரோ நபர் கைது appeared first on Tamil.com. This posting includes an audio/video/photo media file: Download Now |
| குற்றச்சாட்டுக்களில் இருந்து விடுபட்டார் செனற்ரர் Duffy Posted: 22 Apr 2016 09:08 AM PDT
செனட் செலவீன ஊழல் தொடர்பில் அவர் மீது 31 குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டிருந்த நிலையில், 31 குற்றச்சாட்டுக்களில் அவர் குற்றமற்றவர் என ஒட்டாவா நீதிமன்றம் நேற்று தீர்பளித்துள்ளது. Prince Edward Islandஇன் செனற்றராக இருந்த இவர் மீது 2014 யூலை மாதம் இந்த ஊழல் தொடர்பான குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டன. அதனைத் தொடர்ந்து கடந்த பல மாதங்களாக இவர் மீதான குற்றச்சாட்டு தொடர்பிலான விசாரணைகள் நடைபெற்று வந்திருந்த நிலையில், நேற்று தீர்ப்பு வழங்கப்பட்டது. தீர்ப்பில் அவர் மீது சுமத்தப்பட்ட 31 குற்றச்சாட்டுக்களில் இருந்தும் அவர் விடுவிக்கப்பட்டு விடுதலை செய்யப்பட்டுள்ளார். The post குற்றச்சாட்டுக்களில் இருந்து விடுபட்டார் செனற்ரர் Duffy appeared first on Tamil.com. This posting includes an audio/video/photo media file: Download Now |
| மசகு எண்ணெய் விலை வீழ்ச்சி: பாதிப்புகளில் இருந்து மீள்வதற்கு மூன்று ஆண்டுகள் பிடிக்கும் Posted: 22 Apr 2016 08:52 AM PDT
மசகு எண்ணெய் விலையில் சரிவு ஏற்பட்டு அது கனடாவின் பொருளாதாரத்தில் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளநிலையில் மத்திய வங்கியின் ஆளுநர் ஸ்டீபன் பொலோஸ் இதனைத் தெரிவித்துள்ளார். எரிசக்தியை பிரதானமாக ஏற்றுமதி செய்யும் கனடாவில், இந்த விலை மாற்றம் பாரிய தாக்கத்தினை ஏற்படுத்தியதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். எனினும் தற்போது வெளித் தோற்றப்பட்டுக்கு சாதகமான சில சமிக்கைகள் தெரிகின்ற போதிலும், உள் நிலவரப்படி இன்னமும் எதிர்மறையான விடயங்கள் காணப்படுப்படுகின்றது. இந்த விலை வீழ்ச்சியால் ஏற்பட்ட அதிர்ச்சியில் இருந்து மீள்வதற்கு கனடாவிற்கு மூன்று ஆண்டுகளுக்கும் அதிகமான காலம் தேவைப்படும் எனவும் அவர் மதிப்பிட்டுள்ளார். அத்துடன் எண்ணெய் விலையில் ஏற்பட்ட திடீர் வீழ்ச்சி காரணமாக வங்கி வட்டி வீதங்களும் குறைக்கப்பட வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டிருந்ததுடன்,அந்த வட்டி வீதங்கள் இரண்டு மடங்கினால் குறைக்கப்பட்டதையும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். அவ்வாறு வட்டி வீதங்கள் இரண்டு மடங்கினால் குறைக்கப்பட்டமை மட்டுமல்லாது நாட்டில் வேலையற்றோர் வீதமும் அதிகரித்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். The post மசகு எண்ணெய் விலை வீழ்ச்சி: பாதிப்புகளில் இருந்து மீள்வதற்கு மூன்று ஆண்டுகள் பிடிக்கும் appeared first on Tamil.com. This posting includes an audio/video/photo media file: Download Now |
| You are subscribed to email updates from Tamil.com. To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States | |

காணாமல் போன யோர்க் பிராந்திய தமிழ்ப் பெண்ணை கண்டுபிடிக்க பொதுமக்களின் உதவியை காவல்த்தறையினர் நாடியுள்ளனர்.
ஒஷாவா பகுதியில் மேற்கொள்ளப்பட்ட துப்பர்ககிச் சூட்டுச் சம்பவத்தில் 7 வயது சிறுவன் ஒருவர் உட்பட இருவர் காயமடைந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
17 வயது மற்றும் 42 வயது பெண்கள் மீது பாலியல் தாக்குதல் மேற்கொண்டதான குற்றச்சாட்டில் ரொரன்ரோ நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
முன்னாள் ஊடகவியலாளரும், செனற்ரருமானமைக் Mike Duffy அவர் மீது சுமத்தப்பட்ட அனைத்துக் குற்றச்சாட்டுக்களில் இருந்தும் விடுதலையாகியுள்ளார்.
மசகு எண்ணெய் விலை நிலவரம் சீரடைவதற்கு எதிர்பார்க்கப்பட்டதனை விடவும் அதிக காலம் பிடிக்கும் என கனேடிய மத்திய வங்கி தெரிவித்துள்ளது.