Tamil Star |
- ஈற்ரோபிக்கோவில் துப்பாக்கிச் சூடு – ஒவர் படுகாயம்
- அமெரிக்க கனேடிய எல்லைப் பகுதி ஊடாக ஆயுதக் கடத்தல்
- அமெரிக்காவின் ஏவுகணைப் பாதுகாப்பு திட்டத்திற்கு கனடா ஒத்துழைப்பு வழங்க வேண்டும் – ஜேசன் கெனி
- வயிற்றுப்பூச்சிகளை வெளியேற்றும் புடலங்காய்!
- மனிற்ரோபாத் தேர்தல்: முற்போக்கு பழைமைவாத கட்சி அமோக வெற்றி!
| ஈற்ரோபிக்கோவில் துப்பாக்கிச் சூடு – ஒவர் படுகாயம் Posted: 20 Apr 2016 08:22 PM PDT
Queensway மற்றும் Atomic அவனியூவிற்க அருகில் Deluxe Inn முன்புறமாக பிற்பகல் 1 மணியளவில் இந்த துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கபடப்டுள்ளது.. துப்பாக்கிச் சூட்டுசக் காயங்களுடன் அவதியுற்றுக்கொண்டிருந்த நபரை உடனடியாக மரத்துவமனைக்கு கொண்டு சென்று சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளதாக அவசர மருத்துவப் பிரிவினர் தெரிவித்துள்ளனர். காயத்திற்கு உள்ளான நபர் மீது பல முறை துப்பாக்கி்ச் சூடு நடத்தப்பட்டுள்ளதாகவும், இதன் போது அங்கு சென்றுகொண்டிரந்த பிக்கப் ரக வாகனம் ஒன்றையும் துப்பாக்கிச் சன்னம் ஒன்று துளைத்துள்ளது என்றும் காவல்த்துறையினா விபரித்துள்ளனர். எனினும் அந்த ரக் ரக வாகனத்தின் சாரதிக்கு காயங்கள் எவையும் ஏற்படவில்லை என்று தெரிவிக்கப்படுகிறது. குறித்த சம்பவம் தொடர்பிலான சந்தேக நபர் கறுப்பினத்தவர் என்றும், ஆறு அடி உயரம் உரையவர் என்றும் அடையாளப்படுத்தப்பட்டுள்ளதுடன், அவர் சம்பவ இடத்தில் இருந்து வாகனம் ஒன்றில் தப்பியோடிவிட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது. The post ஈற்ரோபிக்கோவில் துப்பாக்கிச் சூடு – ஒவர் படுகாயம் appeared first on Tamil.com. This posting includes an audio/video/photo media file: Download Now |
| அமெரிக்க கனேடிய எல்லைப் பகுதி ஊடாக ஆயுதக் கடத்தல் Posted: 20 Apr 2016 08:18 PM PDT
அமெரிக்க கனேடிய எல்லைப் பகுதி ஊடாக மேற்கொள்ளப்பட்ட இந்த கடத்தல் நடவடிக்கையே எல்லைப் படையினரால் முறியடிக்கப்பட்டுள்ளது. இது தொடாபில் அல்பேர்ட்டா எல்லைச் சாவடிப் பகுதியில் வைத்து மூனறு அமெரிக்கர்களை கைது செய்துள்ளதாக கூறும் எல்லைப் பாதுகாப்பு அதிகாரிகள், அவர்கள் கனடாவுக்குள் துப்பாக்கிகளை எடுத்துவர முயன்றதாகவும் தெரிவித்துள்ளனர். அவர்களிடமிருந்து துப்பாக்கிகளும், ரவைகள், ரவைக்கூடுகள் என்பனவும் கைப்பற்றப்பட்டதாகவும் அவர்கள் தகவல் வெளியிட்டுள்ளனர். கடந்த பெப்ரவரி மாதம் இறுதிப் பகுதிக்குப் பின்னரே இந்த மூன்று சம்பவங்களும் இடம்பெற்றுள்ளதாகவும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர். அத்துடன் ஆயுதங்களுடன் கனடாவினுள் நுளை முயன்ற அமெரிக்கர்கள் சிலர் திருப்பி அனுப்பப்பட்ட சம்பவங்களும் இடம்பெற்றுள்ளதாக எல்லைக் காவல் அதிகாரிகள் கூறுகின்றனர். The post அமெரிக்க கனேடிய எல்லைப் பகுதி ஊடாக ஆயுதக் கடத்தல் appeared first on Tamil.com. This posting includes an audio/video/photo media file: Download Now |
| அமெரிக்காவின் ஏவுகணைப் பாதுகாப்பு திட்டத்திற்கு கனடா ஒத்துழைப்பு வழங்க வேண்டும் – ஜேசன் கெனி Posted: 20 Apr 2016 01:09 PM PDT
பிரதமர் ஜஸ்டின் ரூடோ தலைமையிலான புதிய லிபரல் அரசாங்கம் கனடாவின் இராணுவ கொள்கைகள் தொடர்பிலான மீள் பரிசீலனையினை ஆரம்பித்துள்ள நிலையில் இந்த வலியுறுத்தல் விடுக்கபடபட்டுள்ளது. முன்னாள் பழமைவாதக் கட்சி அரசாங்கத்தின் பாதுகாப்பு அமைச்சராக இருந்த ஜேசன் கெனி இந்த கருத்தினை வெளியிட்டுள்ளார். ஸ்டீபன் ஹாப்பர் அரசாங்கத்தில் அமெரிக்காவின் ஏவுகணைப் பாதுகாப்பு திட்டத்திற்கு ஆக்ககரமான ஆதரவினை வழங்குவதான நிலைப்பாட்டினை கனடா வெளியிட்டிருந்தததன் பின்னர் தற்போதைய அரசாங்கத்தில் அது குறித்து பேசப்பட்டு வருவதை அவர் சுட்டிக்காட்டியுள்ளார். ஏவுகணைப் பாதுகாப்புத் திட்டத்தில் கனடாவையும் இணைந்து கொள்ளுமாறு அமெரிக்கா ஏற்கனவே அழைப்பு விடுத்துள்ள நிலையில், அவ்வாறு இணைந்து கொள்ள இணங்குவது கனடாவுக்கு பலனுள்ளதாகவே அமையும் என்றும் ஜேசன் கெனி கருத்து வெளியிட்டுள்ளார். பழமைவாதக் கட்சி ஆட்சிபுரிந்த காலத்தில் இவ்வாறான ஒரு அழைப்பு விடுக்ப்பட்டிருந்தால் அதனை தமது அரசாங்கம் வரவேற்றிருக்கம் என்பது தனது தனிப்பட்ட எண்ணம் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார். The post அமெரிக்காவின் ஏவுகணைப் பாதுகாப்பு திட்டத்திற்கு கனடா ஒத்துழைப்பு வழங்க வேண்டும் – ஜேசன் கெனி appeared first on Tamil.com. This posting includes an audio/video/photo media file: Download Now |
| வயிற்றுப்பூச்சிகளை வெளியேற்றும் புடலங்காய்! Posted: 20 Apr 2016 09:24 AM PDT
இதில், சுவையான காய்கறிகளில் ஒன்றான, புடலங்காயை அன்றாடம் உணவில் சேர்த்துக்கொண்டால் உடலுக்கு நல்ல ஆரோக்கியம் கிடைக்கும். இதனை மெல்லியதாக இருக்கும் போதே பயன்படுத்த வேண்டும். முதிர்ந்த புடலங்காய் கசக்கும். அதிலுள்ள விதைகளை நீக்கிவிட்டு சமைத்தல் அவசியம். The post வயிற்றுப்பூச்சிகளை வெளியேற்றும் புடலங்காய்! appeared first on Tamil.com. This posting includes an audio/video/photo media file: Download Now |
| மனிற்ரோபாத் தேர்தல்: முற்போக்கு பழைமைவாத கட்சி அமோக வெற்றி! Posted: 20 Apr 2016 09:14 AM PDT
மொத்தமாக உள்ள 57 ஆசனங்களில் முற்போக்கு பழைமைவாத கட்சி 40 ஆசனங்களையும் புதிய சனநாயகக் கட்சி மைவாத கட்சி 14 ஆசனங்களையும், லிபரல் கட்சி 3 ஆசனங்களையும் பெற்றுள்ளன. இந்த வெற்றியை அடுத்து மனிற்ரோபாவின் முதல்வராக பிரெயின் பலிஸ்டர் ( Brian Pallister) பதவி ஏற்கிறார். குறித்த இந்த தேர்தல் தோல்வியை அடுத்து கடந்த 2009 ஆம் ஆண்டு முதல் மனிடோபா முதல்வராக பணியாற்றிய புதிய சனநாயகக் கட்சியின் தலைவர் கிரேக் செலிங்கர் பதவியில் இருந்து விலகுகின்றார். தேர்தல் வெற்றியை அடுத்து முற்போக்கு பழமைவாத கட்சிக்கு கனேடிய பிரதமர் ஜஸ்ரின் ரூடோ தமது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். The post மனிற்ரோபாத் தேர்தல்: முற்போக்கு பழைமைவாத கட்சி அமோக வெற்றி! appeared first on Tamil.com. This posting includes an audio/video/photo media file: Download Now |
| You are subscribed to email updates from Tamil.com. To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States | |

இன்று பிற்பகல் அளவில் ஈற்ரோபிக்கோப் பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் நபர் ஒருவர் படுகாயமடைந்துள்ளதாக காவல்த்துறையினர் தகவல் வெளியிட்டுள்ளனர்.
கனடாவுக்குள் ஆயுதங்களை கடத்திவரும் நடவடிக்கைகள் சில கனேடிய எல்லைப் பாதுகாவல் படையினரால் முறியடிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்காவின் ஏவுகணைப் பாதுகாப்பு திட்டத்திற்கு கனடா ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.


மனிற்ரோபாவில் நேற்று நடைபெற்ற மாநிலத் தேர்தலில் முற்போக்கு பழைமைவாத கட்சி அமோக வெற்றிபெற்றுள்ளது. இதனை அடுத்து அங்கு கடந்த 16 ஆண்டுகளாக ஆட்சியில் இருந்த வந்த புதிய சனநாயகக் கட்சி ஆட்சியை இழக்கின்றது.