Tamil Star |
- சிறப்பு புலனாய்வுப் பிரிவினரின் நடவடிக்கைகள் வெளிப்படைத்தன்மையற்றுள்ளன – ஜோன் ரொறி
- Corktown பகுதி துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் பலி
- அணுசக்திப் பாதுகாப்பு: 42 மில்லியன் டொலர்களை செலவிடுவதாக கனடா தெரிவிப்பு
- ரொப் ஃபோர்ட்டின் வெற்றிடத்திற்கு டக் ஃபோர்ட்?
| சிறப்பு புலனாய்வுப் பிரிவினரின் நடவடிக்கைகள் வெளிப்படைத்தன்மையற்றுள்ளன – ஜோன் ரொறி Posted: 02 Apr 2016 09:56 PM PDT
நேற்று மாலை ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்டிருந்த ரொரன்ரோ நகரபிதா ஜோன் ரொறி இந்த குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். தாம் எவ்வாறு விசாரணைகளை மேற்கொள்கிறோம் என்ற விடயங்களை ஒன்ராறியோ சிறப்பு புலனாய்வுப் பிரிவினர் தெளிவாக முன்வைப்பதில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார். காவல்த்துறையினரின் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி பொதுமக்கள் பலியாகுதல் போன்ற சம்பவங்கள் தொடர்பில் வெளிப்படைத் தன்மை பேணப்படாத நிலையில், காவல்த்துறை மீதான பொதுமக்களின் நம்பகத் தன்மை குறைந்துவருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். வெளிப்படைத் தன்மை அற்ற நடவடிக்கைகளால், விசாரணைகளில் என்ன நடக்கின்றது என்பது தொடர்பில் அறிய முடியாத நிலைமை இருப்பதாகவும் அவர் கூறியுள்ளார். தன்னிடமுள்ள ரொரன்ரோ காவல்த்துறை சேவைகள் சபையின் உறுப்புரிமையைப் பயன்படுத்தி தன்னால்கூட ஒன்ராறியோ சிறப்பு புலனாய்வுப் பிரிவினரிடமிருந்து மேலதிக தகவல்களைப் பெற்றுக்கொள்ள இயலவில்லை என்றும் ரொரன்ரோ நகரபிதா ஜோன் ரொறி மேலும் தெரிவித்துள்ளார். The post சிறப்பு புலனாய்வுப் பிரிவினரின் நடவடிக்கைகள் வெளிப்படைத்தன்மையற்றுள்ளன – ஜோன் ரொறி appeared first on Tamil.com. This posting includes an audio/video/photo media file: Download Now |
| Corktown பகுதி துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் பலி Posted: 02 Apr 2016 01:52 PM PDT
இன்று சனிக்கிழமை அதிகாலையில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. Richmond வீதி மற்றும் Parliament வீதியில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்தின் வாகனத் தரிப்பிடப் பகுதியில் துப்பாக்கிச் சூட்டினால் பாதிக்கப்பட்ட நபரைக் காவல்த்துறை அதிகாரிகள் அதிகாலை 2 மணிக்கு சற்றுப் பின்னராக கண்டதாக தெரிவித்துள்ளனர். குறித்த அந்த நபர் துப்பாக்கிச் சூட்டுக் காயங்களால் அவதிப்பட்ட நிலையில், பின்னர் அந்த இடத்திலேயே அவர் உயிரிழந்து விட்டார் என்று அவசர மருத்துவப் பிரிவினர் தெரிவித்துள்ளனர். இதேவேளை இந்த சம்பவம் குறித்த சந்தேக நபர் தொடர்பிலான தகவல்கள் எவையும் வெளியிடப்படவில்லை. தொடர்ந்து விசாரணைகளை மேற்கொண்டு வரும் காவல்த்துறையினர், இந்த சம்பவம் தொடர்பில் தகவல் தெரிந்தவர்கள் அதனைத் தமக்கு தெரியப்படுத்துமாறும் கேட்டுக்கொண்டுள்ளனர். The post Corktown பகுதி துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் பலி appeared first on Tamil.com. This posting includes an audio/video/photo media file: Download Now |
| அணுசக்திப் பாதுகாப்பு: 42 மில்லியன் டொலர்களை செலவிடுவதாக கனடா தெரிவிப்பு Posted: 02 Apr 2016 08:03 AM PDT
அமெரிக்காவின் வேசிங்டனில் நடைபெற்றிருந்த அணு சக்தி பாதுகாப்பு தொடர்பிலான இரண்டுநாள் மாநாட்டில் பிரதம்ர் ஜஸ்டின் ரூடோ இதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளார். குறித்த மாநாட்டில் உரையாற்றிய பிரதமர் ஜஸ்டின் ரூடோ, அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா பதவி விலகிச் சென்ற பின்னரும், அணுசக்தி பாதுகாப்பு தொடர்பான இந்த முனைப்பினை முன்கொண்டு செல்லவேண்டிய பொறுப்பு அனைத்துலக சமூகத்திற்கு உள்ளது என்பதனை வலியுறுத்தியுள்ளார். பயங்கரவாதக் குழுக்களுடன் தொடர்புடையவர்களின் கைகளில் அணு சக்திசார் விடயங்கள் சென்று சேர்வதனை தடுப்பதற்கான சீரான ஏற்பாடுகள் எந்த நாட்டிலும் இல்லை என்பதனையும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். எதிர்வரும் ஆண்டுகளில் இவ்வாறான சவால்களை எதிர்கொள்ள வேண்டிய நிலை ஏற்படும் என்பதனால், அதனைத் தடுப்பதற்கான இவ்வாறான செயற்பாடுகள் தொடர்ந்து முன்னெடுக்கப்படுவது உறுதிசெய்யப்பட வேண்டும் எனவும் பிரதமர் ஜஸ்டின் ரூடோ வலியுறுத்தியுள்ளார். The post அணுசக்திப் பாதுகாப்பு: 42 மில்லியன் டொலர்களை செலவிடுவதாக கனடா தெரிவிப்பு appeared first on Tamil.com. This posting includes an audio/video/photo media file: Download Now |
| ரொப் ஃபோர்ட்டின் வெற்றிடத்திற்கு டக் ஃபோர்ட்? Posted: 02 Apr 2016 07:57 AM PDT
ரொப் ஃபோர்ட்டின் மறைவை அடுத்து அவரது தொகுதிக்கான ஆசனம் வெற்றிடமான அறிவிப்பினை நாளை நடைபெறவுள்ள நகரசபை அமர்வின் போதே உத்தியோகபூர்வமாக அறிவிக்கவுள்ளதாக ரொரன்ரோ நகரபிதாவின் அலுவலகம் அறிவித்துள்ள நிலையில் இந்த கருத்து வெளியிடப்பட்டுள்ளது. குறித்த வெற்றிடத்திற்கு டக் ஃபோர்ட்டை நியமிப்பதே பொருத்தமானதாக இருக்கும் என வலியுறுத்தியுள்ள ரொரன்ரோ நகரசபை உறுப்பினர் ஜியோர்ஜியோ மமோலிட்டி, டக் ஃபோர்ட்டை நியமிக்குமாறு கோரும் அவசரகால தீர்மானம் ஒன்றினை விரைவில் நகரசபையில் முன்வைக்க தீர்மானித்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். நாளை அமர்வின் போதே குறித்த இந்த அவசரகால தீர்மானத்தினை சபையில் முன்வைத்து, அன்றே டக் ஃபோர்ட்டை பதவியில் அமர்த்துவதற்கான முயற்சிகளை தான் மேற்கொள்ளவுள்ளதாக ஜியோர்ஜியோ மமோலிட்டி நேற்று மாலை தெரிவித்துள்ளார். The post ரொப் ஃபோர்ட்டின் வெற்றிடத்திற்கு டக் ஃபோர்ட்? appeared first on Tamil.com. This posting includes an audio/video/photo media file: Download Now |
| You are subscribed to email updates from Tamil.com. To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States | |

ஒன்ராறியோ சிறப்பு புலனாய்வுப் பிரிவினரின் நடவடிக்கைகள் வெளிப்படைத் தன்மையற்று இருப்பதாக குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.
Corktown குடியிருப்புப் பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் 22 வயதான ஆண் ஒருவர் உயிரிழந்து விட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
பயங்கரவாதிகளின் கைகளில் அணு ஆயுதங்கள் உள்ளிட்ட அணுசக்தி சார் பொருட்கள் சென்று சேராமல் இருப்பதனை உறுதிப்படுத்தும் நடவடிக்கைகளுக்கு கனடா நிதி உதவி வழங்க தீர்மானித்துள்ளது. அதற்காக 42 மில்லியன் டொலர் நிதி உதவியினை வழங்க அது முன்வந்துள்ளது.
மறைந்த முன்னாள் ரொரன்ரோ நகரபிதாவும், ரொரன்ரோ நகரசபை உறுப்பினருமான ரொப் ஃபோர்ட்டின் வெற்றிடத்திற்கு, ரொப் ஃபோர்ட்டின் சகோதரரும், முன்னாள் நகரசபை உறுப்பினருமான டக் ஃபோர்ட்டை நியமிக்க வேண்டும் என்ற கருத்து முன்வைக்கப்பட்டுள்ளது.