Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Tamil Star

Tamil Star


மொன்றியலில் அமைந்துள்ள சிரிய தூதரகம் மூடப்படுகிறது

Posted: 19 Apr 2016 11:41 AM PDT

Global_Affairs_Canada_-_19042016

Global_Affairs_Canada_-_19042016கனேடிய அரசாங்கத்தின் உத்தரவிற்கமைய மொன்றியலில் அமைந்துள்ள சிரிய தூதரகம் மூடப்படுகிறது.

இது தொடர்பில் சிரியாவிற்கு கனேடிய அரசாங்கம் விடுத்துள்ள செய்தியில், மொன்றியலில் அமைந்துள்ள அலுவலகம் சிரிய தூதரகமான அங்கீகரிக்கப்பட மாட்டாது எனவும், அங்கு கடமையாற்றிய நெல்லி கானொளி இனி தூதரக அதிகாரியாக மதிக்கப்பட மாட்டார் எனவும்தெரிவித்துள்ளது.

குறித்த அந்த அதிகாரி அதிபர் பஷார் அல் அசாத்திற்கு ஆதரவாக தொடர்ச்சியாக குரல் கொடுத்து வருகின்ற நிலையிலேயே அவரை தூதரக அதிகாரியாக ஏற்றுக்கொள்ள முடியாது என்பதனை அறிவித்துள்ள கனடா, அவரது அலுவலத்தினையும் மூடுமாறு உத்தரவிட்டுள்ளது.Global_Affairs_Canada_-_19042016

குறித்த அந்த அலுவலகத்தை மூடுவதற்கான உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில், சிரியாவுக்கான தூதரக தொடர்புகளை வன்கூவரில் உள்ள சிரிய தூதரகம் மூலம் மட்டுமே மேற்கொள்ள முடியும் என்று கூறப்படுகிறது.

கடந்த 2012ஆம் ஆண்டில் ஒட்டாவில் அமைந்திருந்த சிரிய தூரகம் மூடப்பட்டு அங்கிருந்த அதிகாரிகள் அங்கிருந்து வெளியேறியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

The post மொன்றியலில் அமைந்துள்ள சிரிய தூதரகம் மூடப்படுகிறது appeared first on Tamil.com.

This posting includes an audio/video/photo media file: Download Now

வடக்கு பிரிட்டிஷ் கொலம்பியாவில் காட்டுத் தீ – அவசரகால நிலை பிரகடனம்

Posted: 19 Apr 2016 11:28 AM PDT

northern_BC_-_19042016

northern_BC_-_19042016பிரிட்டிஷ் கொலம்பியாவின் வட பிராந்தியத்திற்கு அவசரகால நிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.

குறித்த அந்த பகுதியில் ஏற்பட்டுள்ள காட்டுத் தீ தீவிரமடைந்துள்ளதனை அடு்த்தே அங்கு அவசரகால நிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.

காட்டுத்தீ தொடர்ந்தும் வேகமாக பரவி வருவதால் பலரையும் அங்கிருந்து வெளியேற்ற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

ஃபோர்ட் சென் ஜோன் மற்றும் டெய்லர் மாவட்ட பகுதிகளில் உள்ள கட்டிடங்கள் பலவும் ஏற்கனவே தீக்கிரையாகி விட்டுள்ளதனை அடுத்து, குடியிருப்பாளர்கள் பலரும் தமது வீடுகளை விட்டு வெளியேறியுள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

காட்டுத் தீ காரணமாக அங்கு பல வீதிகளும் மூடப்பட்டுள்ளன என்று கூறப்படுகிறது.northern_BC_-_19042016

வெப்பத்துடன் கூடிய வேகமான காற்று காரணமாக காட்டுத்தீ கட்டுக்கடங்காமல் பரவி வருவதனால், தீயணைப்பு பணிகளை முன்னெடுப்பதில் பணியாளர்கள் சிரமத்தை எதிர்கொண்டு வருவதாகவும், மேலதிக தீயணைப்பு படையினர் சம்பவ இடங்களுக்கு அனுப்பப்பட்டு வருவதாகவும் கூறப்படுகிறது.

The post வடக்கு பிரிட்டிஷ் கொலம்பியாவில் காட்டுத் தீ – அவசரகால நிலை பிரகடனம் appeared first on Tamil.com.

This posting includes an audio/video/photo media file: Download Now



Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™