Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Tamil Star

Tamil Star


Attawapiskatஇல் மேலும் ஐந்து சிறுவர்கள் தற்கொலை முயற்சி

Posted: 17 Apr 2016 09:50 AM PDT

Attawapiskat_-_17042016

Attawapiskat_-_17042016Attawapiskat பகுதியில் மேலும் ஐந்து தற்கொலை முயற்சிகள் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

Attawapiskat பகுதியில் நேற்று முன்தினம் வெள்ளிக்கிழமை மாலையில் மேலும் 5 சிறுவர்கள் தற்கொலைக்கு முயற்சித்துள்ளார்கள் என அந்த பழங்குடிச் சமூகத்தின் தலைவர் Bruce Shisheesh தமது டுவிட்டர் பக்கத்தில் தகவல் வெளியிட்டுள்ளார்.

மார்ச் மாத்தில் 28 தற்கொலை முயற்சிகளும், கடந்த ஏப்பிரல் மாதத்தில் 11 தற்கொலை முயற்சிகளும் இடம்பெற்றதை அடுத்து, ஒன்ராறியோவின் வடக்குப் புறத்தில் உள்ள பழங்குடிச் சமூகத்தின் தலைவர் கடந்த ஏப்பிரல் 9 ஆம் நாள் அந்த பகுதிக்கு அவசர கால நிலைமையை பிரகடப்படுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.Attawapiskat_-_17042016

இதற்கு பின்னர் சில நாட்கள் கடந்த நிலையில் 13 இளைய aboriginal மக்கள் தற்கொலைக்கு முயற்சித்தனர் என்றும், அதில் ஒருவர் ஒன்பது வயதுகளேயான சிறுவர் என்றும் தகவல் வெளியிடப்பட்டுள்ளது.

தற்கொலைக்கு முயற்சித்த அந்த சிறுவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனா என தெரிவிக்கப்பட்டுள்ள போதிலும், அவர்கள் எவ்வாறு முயற்சித்தார்கள் என்பது தொடர்பான தகவல்கள் வெளியிடப்படவில்லை.

The post Attawapiskatஇல் மேலும் ஐந்து சிறுவர்கள் தற்கொலை முயற்சி appeared first on Tamil.com.

This posting includes an audio/video/photo media file: Download Now

Stoney Creek பகுதியில் துப்பாக்கிச்சூடு: மூவர் பலி

Posted: 17 Apr 2016 08:29 AM PDT

Hamilton_-17042016

Hamilton_-17042016ரொரன்ரோவின் கிழக்குப் பகுதியில் வீடு ஒன்றில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் மூவர் உயிரழந்ததுடன் ஒருவர் காயமடைந்துள்ளார்.

நேற்றுச் சனிக்கிழமை பிற்பகலில் இந்த சம்பவம் இடம்பெற்றதாகவும், Stoney Creek பகுதியின் Valrose Drive அமைந்துள்ள வீடு ஒன்றிற்கு வருமாறு மாலை 6.30மணியளவில் தாம் அழைக்கப்பட்டிருந்தாக காவல்த்துறையினர் தெரிவித்துள்ளனர்.

தாம் குறித்த வீட்டிற்கு சென்ற போது அங்கு மூவர் உயிரிழந்து கிடந்தனர் என்றும்,நான்காவது நபர் காயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார் என்றும் தகவல் வெளியிட்டுள்ளனர்.

எனினும் இதில் பாதிக்கப்பட்ட நபர்களுக்கு இடையிலான உறவு தொடர்பான விபரங்களை காவல்த்துறையினர் வெளியிடவில்லை.

குறித்த வீட்டில் பெண் ஒருவரும் அவருடைய இரண்டு மகன்மார்களும் சுமார் 20 வருடங்களுக்கு மோலாக அந்த வீட்டில் வசித்து வருவதாக அயல் வீட்டவர் ஒருவர் தெரிவித்துள்ளார்.Hamilton_-17042016

இது தொடர்பில் சந்தேக நபர் எவரையும் தடுத்த வைக்கவில்லை என்றும், சந்தேக நபர்கள் யாரையும் தேடவில்லை என்றும் குறிப்பிட்டுள்ள காவல்த்துறையினர், இந்த தொடர்பில் தகவல் அறிந்தவர்கள் 905-546-4123 என்ற இலக்கத்தில் தம்மைத் தொடர்புகொள்ளுமாறு கேட்டுக்கொண்டுள்ளனர்.

The post Stoney Creek பகுதியில் துப்பாக்கிச்சூடு: மூவர் பலி appeared first on Tamil.com.

This posting includes an audio/video/photo media file: Download Now



Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™