Tamil Star |
- மிசிசாகாவின் நெடுஞ்சாலை 401 அகலப்படுத்தப்படவுள்ளது
- தீ சம்பவம்: ஒருவர் மருத்துவமனையில்
- 23 வயது பெண் ஒருவரைக் காணவில்லை
| மிசிசாகாவின் நெடுஞ்சாலை 401 அகலப்படுத்தப்படவுள்ளது Posted: 15 Apr 2016 07:56 PM PDT
இதற்கான அறிவிப்பை இன்று வெள்ளிக்கிழமை வெளியிட்டுள்ள ஒன்ராறியோ மாகாண முதலமைச்சர் குறித்த பகுதியில் தற்போது காணப்படும் 6 வழித்தடங்கள் 12 வழித்தடங்களாக அதிகரிக்கப்படும் என தெரிவித்துள்ளார். Credit River மற்றும் Hurontario வீதிகளுக்கு இடைப்பட்ட நெடுஞ்சாலை 401இன் நான்கு கிலோமீற்றர் தூரம் வரையான பகுதியே 12 வழித்தடங்களைக் கொண்டதாக அகலப்படுத்தப்பட இருப்பதாகவும் அவர் விபரித்துள்ளார். இந்த வீதி அகலப்படுத்தும் நிர்மானப் பணிகள் இந்த ஆண்டின் பிற்பகுதியில் ஆரம்பிக்கப்பட இருப்பதாகவும், எதிர்வரும் 2019ஆம் ஆண்டில் அதன் நிர்மானப் பணிகள் நிறைவடையும் என்று எதிர்பார்ப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார். இந்த வீதி விரிவுபடுத்தும் திட்டத்திற்கான செலவு 81மில்லியன் டொலர்கள் என மதிப்பிடப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ள அவர் இதன் நிர்மானப் பணிகள் சுமார் 800வரையானவர்களுக்கு வேலை வாய்ப்புக்களை வழங்குவதற்கு உதவியாக இருக்கும் என்றும் விபரித்துள்ளார். அத்துடன் ஒன்ராறியோ அரசாங்கம் இந்த ஆண்டு வீதி மற்றும் பாலங்களுக்காக 2.1 பில்லியன் டொருக்கு அதிகமான தொகையினனை ஒதுக்கியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். The post மிசிசாகாவின் நெடுஞ்சாலை 401 அகலப்படுத்தப்படவுள்ளது appeared first on Tamil.com. This posting includes an audio/video/photo media file: Download Now |
| தீ சம்பவம்: ஒருவர் மருத்துவமனையில் Posted: 15 Apr 2016 09:04 AM PDT
Bloor மற்றும் Bathurst பகுதியில் இன்று காலை ஏற்பட்ட தீ சம்பவம் ஒன்றில் ஒருவர் உயிராபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அதிகாலை 8.30 மணியளவில் கிடைத்த தகவலை அடுத்து குறித்த சம்பவ இடத்திற்கு அவசர மீட்புப் படையினர் சென்றிருந்தனர். யப்பானிய உணவம் ஒன்றின் மேலே உள்ள அடுக்குமாடிக் கட்டடத்திலேயே இந்த தீ சம்பவம் இடம் பெற்றிருந்தது. சுமார் 12 தீயணைப்பு வாகங்களும் 45 தீயணைப்புப் படையினரும் சம்பவ இடத்திற்கு பிரசன்னமாகியிருந்தனர். இந்த தீயணைப்பு நடவடிக்கையில் ஈடுபட்ட பணியாளர் ஒருவரும் சிறிய காயங்களுக்கு ஆளாகியுள்ளனர். காலை 9 மணியளவில் குறி்த்த தீ கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. தீ பற்றிய காரணம் தொடர்பிலான தகவல்கள் எவையும் இன்னமும் வெளியிடப்படவில்லை.
The post தீ சம்பவம்: ஒருவர் மருத்துவமனையில் appeared first on Tamil.com. This posting includes an audio/video/photo media file: Download Now |
| 23 வயது பெண் ஒருவரைக் காணவில்லை Posted: 15 Apr 2016 08:51 AM PDT
அவரை தேடும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டிருந்த நிலையில் தற்போது அந்த நடவடிக்கைகள் ஆகாய மார்க்கமாகவும் தரை மார்க்கமாகவும் மேலும் விரிவுபடுத்தி முன்னெடுக்கப்பட்டு வருவதாக கூறப்பட்டுள்ளது. அத்துடன் தற்போது குடும்ப உறுப்பினர்கள் நண்பர்களிடமும் விசாரணைகளை நடாத்தி வரும் காவல்த்துறையினர், சமூக வலைத்தளங்கள் ஊடாகவும் தகவல்களைத் தேடி வருகின்றனர். கடைசியாக அவர் கடந்த செவ்வாய்கிழமை பிற்பகல் 2.30 மணியளவில் ஹெலன் அவனியூவில் இருந்து மேற்காக கெனடி வீதிப் பகுதியை நோக்கி நடந்து சென்றமை அவதானிக்கப்பட்டுள்ளது. McCowan வீதி மற்றும் South Unionville Avenue பகுதியில் தற்காலிக நடவடிக்கை முகாம் அமைத்து தேடுதல் நடவடிக்கைகளைக் காவல்த்துறையினர் முன்னெடுத்திருந்தனர். சான்டி லுவோங் என்ற அந்த 23 வயது பெண் தொடர்பில் தகவல் அறிந்தோர் தம்மைத் தொடர்பு கொள்ளுமாறும் காவல்த்துறையினர் பொதுமக்களைக் கேட்டுக்கொண்டுள்ளனர்.
The post 23 வயது பெண் ஒருவரைக் காணவில்லை appeared first on Tamil.com. This posting includes an audio/video/photo media file: Download Now |
| You are subscribed to email updates from Tamil.com. To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States | |

மிசிசாகாப் பகுதியில் நெடுஞ்சாலை 401 இன் நான்கு கிலோ மீற்றர் தூரம் வரையிலான வீதிப் பகுதியியை அகலப்படுத்தப் போவதாக ஒன்ராறியோ அரசாங்கம் அறிவித்துள்ளது.

