Tamil Star |
- தடுப்புக் காவலில் இருந்த குடியேறிகள் உயிரிழந்தமை தொடர்பில் விசாரணை தேவை – மனித உரிமைக் குழுக்கள்
- ஸ்காபரோப் பகுதியில் மீட்கப்பட்ட சடலம் இனம்காணப்பட்டுள்ளது
- வாரம் ஒரு முறை அசைவம்…தினம் ஒரு முட்டை: கண்டிப்பாக சாப்பிடுங்கள்!
- பச்சை வாழைப்பழத்தை சாப்பிடுவதால் இவ்வளவு நன்மைகளா?
- பிறின்ஸ் எட்வேர்ட் ஐலன்ட் மாநிலத்தில் கருக்கலைப்பு மீதான தடை நீக்கம்
- சைனாரவுணில் நபர் ஒருவர் மீது தாக்குதல்
| தடுப்புக் காவலில் இருந்த குடியேறிகள் உயிரிழந்தமை தொடர்பில் விசாரணை தேவை – மனித உரிமைக் குழுக்கள் Posted: 01 Apr 2016 09:49 PM PDT
கனடாவின் குடிவரவுத் துறை தடுப்புக் காவலில் வைக்கப்பட்டிருந்த போது, புரூண்டி நாட்டைச் சேர்ந்த 39 வயதான ஒருவரும், 64 வயதான மற்றொருவரும் என இரண்டு குடியேறிகள் சுமார் ஒரு வாரகால இடைவெளியில் உயிரிழந்திருந்தனர். குறித்த இந்த இரண்டு உயிரிழப்புச் சம்பவங்களும் இந்த மாதத்தில் ஆரம்பத்தில் இடம்பெற்றிருந்ததுடன், குடியேறிகளின் இந்த உயிரிழப்பை கனேடிய எல்லைப் பாதுகாப்பு திணைக்களமும் உறுதிப்படுத்தியுள்ளது. அதேவேளை மொன்றியலைத் தளமாக கொண்டுள்ள கனேடிய அகதிகள் ஆணையகத்தின் தலைவர், கனேடிய எல்லைப் பாதுகாப்புத் திணைக்களத்தின் நடவடிக்கைகள் தொடர்பில் சுயாதீனமான கண்காணிப்புகள் இல்லை என குறைகூறியுள்ளார். அவ்வாறு சுயாதீனமான கண்காணிப்பு மேற்கொள்ளப்படாமை நீதியான செயல் அல்ல என அனைத்துலக மன்னிப்பு சபையின் கனேடிய கிளை செயலாளர் நாயகமும் கருத்து வெளியிட்டுள்ளார். கனேடிய குடிவரவுத் திணைக்கள தடுப்புக் காவல்களில் தடுத்து வைக்கப்படுவோர் உயிரிழக்கும் சம்பவங்கள் அதிகரித்துச் செல்வது, அங்கு மிக மோசமான மனித உரிமை துஸ்பிரயோகம் இடம்பெறுவதனை தெளிவாக எடுத்துக் காட்டுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். The post தடுப்புக் காவலில் இருந்த குடியேறிகள் உயிரிழந்தமை தொடர்பில் விசாரணை தேவை – மனித உரிமைக் குழுக்கள் appeared first on Tamil.com. This posting includes an audio/video/photo media file: Download Now |
| ஸ்காபரோப் பகுதியில் மீட்கப்பட்ட சடலம் இனம்காணப்பட்டுள்ளது Posted: 01 Apr 2016 09:45 PM PDT
இனம் தெரியாத நபர் ஒருவரின் அழைப்பை அடுத்து Steeles அவனியூவின் தென்கிழக்கில் Passmore அவனியூ மற்றும் Middlefield வீதிப் பகுதிக்கு மாலை 5.30 மணியளவில் காவல்த்துறையினர் சென்றிருந்தாக கூறப்பட்டுள்ளது. அங்கு சென்ற போது நபர் ஒருவர் துணியினால் சுற்றப்பட்ட நிலையில் இருந்தாகவும், அவசர மீட்புப் படையினர் குறித்த நபரை உயிர்ப்பூட்டும் முயற்சியில் ஈடுபட்டிருந்த போதிலும், அவர் குறித்த அந்த இடத்திலேயே உயிரிழந்து விட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும் குறித்த நபரின் மரணத்தை சாதாரணமானது என கருத முடியாது என அன்றைய நாளே காவல்த்துறை அதிகாரி Sgt. Ken Lee தெரிவித்திருந்தார். இந்த நிலையில் இன்று வெள்ளிக்கிழமை பிற்பகல் இது தொடர்பில் தகவல் வெளியிட்ட காவல்த்துறையினர் உயிரிழந்த நபர் அடையாளம் காணப்பட்டுள்ளார் என்றும், அவர் பிரம்டனைச் சேர்ந்த 30 வயதான ஹார்ஜீத் சிங் (Harjeet Singh) என்பவர் எனவும் தெரிவித்துள்ளது. அதேவேளை அவரின் இந்த மரணம் தொடர்பில் தகவல் தெரிந்தவர்கள் 416-808-4200 என்ற இலக்கத்தில் காவல்த்துறையினரை அல்லது 416-222-TIPS (8477) என்ற இலக்கத்தில் குற்றத் தடுப்புப் பிரிவினரைத் தொடர்பு கொள்ளுமாறும் கேட்டுக்கொண்டுள்ளனர். The post ஸ்காபரோப் பகுதியில் மீட்கப்பட்ட சடலம் இனம்காணப்பட்டுள்ளது appeared first on Tamil.com. This posting includes an audio/video/photo media file: Download Now |
| வாரம் ஒரு முறை அசைவம்…தினம் ஒரு முட்டை: கண்டிப்பாக சாப்பிடுங்கள்! Posted: 01 Apr 2016 06:07 PM PDT
கீரை, பழங்கள், மற்றும் பச்சைக் காய்கறிகள் அதிகமாக உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும். கீரை, தானியங்கள், ஓட்ஸ், கொண்டைக்கடலை, கொள்ளு, பருப்பு, கேழ்வரகு ஆகியவற்றை தினமும் உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும். ஆரஞ்சு மற்றும் மஞ்சள் வண்ணக் காய்கறிகள் மற்றும் பழங்களும், மக்காச்சோளம் ஆகியவற்றையும் உணவில் சேர்க்கவும். அசைவ உணவுகள் வாரம் ஒரு முறை மட்டும் எடுத்துக் கொள்ளலாம். தினமும் ஒரு முட்டை வேகவைத்து சாப்பிட வேண்டும். சுண்ட காய்ச்சிய பால் ஒரு நாளைக்கு நான்கு டம்ளர்கள் அருந்த வேண்டும். காய்கறிகளை அரை வேக்காட்டில் சாப்பிடுவதன் மூலம் கால்சியம் சத்து முழுமையாக கிடைக்கும். உலர்ந்த திராட்சை, பாதாம், காலிபிளவர், முட்டைக்கோஸ், வாழைப்பூ, வாழைத்தண்டு, வாழைப்பழம், மாதுளை மற்றும் இரும்புச் சத்து அதிகம் உள்ள உணவு வகைகளையும் தினமும் உணவில் சேர்க்கவும். இலுப்பைக் கொட்டையில் இருந்து எண்ணெய் எடுத்து இடுப்பில் தேய்த்தால் நிவாரணம் பெறலாம். உளுந்து, கோதுமை, கஸ்தூரி மஞ்சள் மூன்றையும் சம அளவு எடுத்து பொடி செய்து அதில் வெந்நீரில் கலந்து பற்று போட்டால் மூட்டு வாதம், மூட்டு வலி குணமாகும். The post வாரம் ஒரு முறை அசைவம்…தினம் ஒரு முட்டை: கண்டிப்பாக சாப்பிடுங்கள்! appeared first on Tamil.com. This posting includes an audio/video/photo media file: Download Now |
| பச்சை வாழைப்பழத்தை சாப்பிடுவதால் இவ்வளவு நன்மைகளா? Posted: 01 Apr 2016 06:04 PM PDT
குடல்களில் சுரக்கும் அமிலங்களும் நச்சுப் பொருட்களும் அரிப்பதன் காரணமாக குடல்புண் என்கிற அல்சர் ஏற்படுகிறது. பச்சை வாழைப்பழத்தை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் இந்த பாதிப்பில் இருந்து விடுபடலாம். குடல்களில் பழுதுபட்ட மெல்லிய சவ்வுத் தோல்களைச் விரைவில் வளரச் செய்து புண்ணை ஆற்றிவிடும் சக்தி பச்சை வாழைப்பழத்திற்கு உண்டு. பச்சை வாழைப்பழத்தில் ஸ்டார்ச் அதிக அளவில் உள்ளதால் நீரிழிவு நோயாளிகள் ரத்த சர்க்கரை அளவை கட்டுக்குள் வைத்திருக்க வேண்டுமெனில் இதனை சாப்பிடலாம். மேலும், இதய நோயாளிகளுக்கும் சிறந்தது, அதுமட்டுமின்றி சூடாக்கிய 1 கப் பச்சை வாழைப்பழத்தில் 3.6 கிராம் நார்ச்சத்து உள்ளது, எனவே உடல் எடையை குறைக்க விரும்புவோர் இதனை எடுத்துக்கொள்ளலாம். மஞ்சை வாழைப்பழத்துடன் ஒப்பிடுகையில் பச்சை வாழைப்பழத்தில் அதிக அளவு பொட்டாசியம் சத்து உள்ளது, ஒரு கப் பச்சை வாழைப்பழத்தில் 531 மில்லிகிராம் பொட்டாசியம் உள்ளது. எனவே இதயநோயாளிகள் இதனை சாப்பிட வேண்டும், ஆனால் அதிக அளவு பொட்டாசியம் சத்து சிலரின் உடலுக்கு பயனிளிக்காது என்பதால் அதனை கருத்தில் கொள்ள வேண்டும். மேலும், இதில் விட்டமின் B6 நிறைந்துள்ளதால் உடலில் ஆக்ஸிஜனேற்றம் சிறப்பாக செயல்புரிய உதவுகிறது, மேலும் அது ஹீமோகுளோபின் உருவாவதற்கு விட்டமின் B6 அவசியமான ஒன்றாகும். மேலும், விட்டமின் B6 இரத்ததில் சர்க்கரை அளவை கட்டுப்படுத்த உதவுகிறது. மேலும், சீரான பற்களின் வளர்ச்சிக்கு பச்சை வாழைப்பழம் சாப்பிட வேண்டிய ஒன்றாகும். The post பச்சை வாழைப்பழத்தை சாப்பிடுவதால் இவ்வளவு நன்மைகளா? appeared first on Tamil.com. This posting includes an audio/video/photo media file: Download Now |
| பிறின்ஸ் எட்வேர்ட் ஐலன்ட் மாநிலத்தில் கருக்கலைப்பு மீதான தடை நீக்கம் Posted: 01 Apr 2016 10:04 AM PDT
பிறின்ஸ் எட்வேர்ட் ஐலன்ட்டில் பெண்கள் தாங்கள் விரும்பியவாறு கருக்கலைப்பினை மேற்கொள்ள முடியாத நிலை இதுரை காலமும் காணப்பட்டு வந்ததுள்ளமை குறிப்பிடத்தக்கது. கனடா முழுவதிலும் உள்ள மாநிலங்களுடன் ஒப்பிடுகையில் இந்த மாநிலத்திலேயே இவ்வாறான ஒரு நடைமுறை பல தசாப்தங்களாக இருந்து வந்துள்ளது. இந்த தடைக்கு எதிரான அமைப்புகள் நீண்டகாலமாக போராட்டங்களை நடாத்தி வந்துள்ள நிலையில், தற்போது குறித்த தடையினை விலக்கிக் கொள்ளும் முடிவு மேற்கொள்ளப்பட்டுள்ளது. அதற்கான அறிவிப்பினை அந்த மாநிலத்தின் முதல்வர் நேற்று வெளியிட்டுள்ளார். அதேவேளை அங்கு மருத்துவ ரீதியில், கருக்கலைப்புக்கான அறுவைச் சிகிச்சையினை மேற்கொள்ளக்கூடிய சுகாதார நிலையம் ஒன்றினை விரைவில் அமைக்கவுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். அமைக்கப்படவுள்ள அந்த சுகாதார நிலையத்தில் இந்த ஆண்டு இறுதியிலிருந்து கருக்கலைப்பு அறுவைச் சிகிச்சைகள் சட்டரீதியாக மேற்கொள்ளப்படும் எனவும் அவர் கூறியுள்ளார். The post பிறின்ஸ் எட்வேர்ட் ஐலன்ட் மாநிலத்தில் கருக்கலைப்பு மீதான தடை நீக்கம் appeared first on Tamil.com. This posting includes an audio/video/photo media file: Download Now |
| சைனாரவுணில் நபர் ஒருவர் மீது தாக்குதல் Posted: 01 Apr 2016 09:42 AM PDT
இன்று வெள்ளிக்கிழமை காலையில் இந்த தாக்குதல் இடம்பெற்றதாகவும், தாக்குதலுக்கு ஆளான நபருக்கு உயிராபத்தான காயங்கள் எவையும் இல்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. வங்கி ஒன்றின் முன்னாள் மேற்கொள்ளப்பட்ட இந்த தாக்குதலைத் தொடர்ந்து பாதிக்கப்பட்ட நபர் தடப்பேருந்தின் அருகில் ஒடிச் சென்ற உதவி கோரியுள்ளார் என காவல்த்துறையினர் தெரிவித்துள்ளனர். அதேவேளை தாக்குதல் நடாத்திய சந்தேக நபர் குறித்த விபரணங்கள் எவையும் இதுவரையில் வெளியிடப்படவில்லை. சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் யாரும் இருப்பின் தகவல் தருமாறு காவல்த்துறையினர் கேட்டுக்கொண்டுள்ளனர். The post சைனாரவுணில் நபர் ஒருவர் மீது தாக்குதல் appeared first on Tamil.com. This posting includes an audio/video/photo media file: Download Now |
| You are subscribed to email updates from Tamil.com. To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States | |

கனடாவின் குடிவரவுத் துறையின் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டிருந்த குடியேறிகள் இருவர் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் அதிகாரிகளிடம் விசாரணை நடாத்தப்பட வேண்டும் என மனித உரிமைக் குழுக்கள் வலியுறுத்தியுள்ளன.
ஸ்காபரோவின் வடக்கு பிராந்தியத்தில் கடந்த ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் அளவில் துணியால் சுற்றப்பட்ட நிலையில் நபர் ஒருவரின் உடல் மீட்கப்பட்டது.
நாம் அன்றாடம் உண்னும் உணவில் இயற்கையில் விளைந்த காய் ,கனிகளை சேர்த்து கொள்ள வேண்டும்.
பச்சைப் பழங்கள் வயிற்றுப் பாதையில் உள்ள குடல் புண்களை ஆற்றும் தன்மையுடையது.
