Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Tamil News | Online Tamil News

Tamil News | Online Tamil News


சனி பகவான் கோவிலுக்குள் நுழைய பெண்களுக்கு அனுமதி ; தொடர் போராட்டத்தால் பாகுபாட்டிற்கு முற்றுப்புள்ளி

Posted: 08 Apr 2016 09:07 AM PDT

மும்பை: மஹாராஷ்டிராவில் உள்ள சனி பகவான் கோவிலுக்குள், பெண்களை அனுமதிக்க மாட்டோம் என, அடம்பிடித்து வந்த கோவில் நிர்வாகம், நேற்று, தன் முடிவை மாற்றிக் கொண்டது. மஹாராஷ்டிராவில், 'குடி பாட்வா' புத்தாண்டான நேற்று, ஆண்களுடன், பெண்களும் சென்று, சனி பகவான் கோவிலில் வழிபாடு நடத்தினர்.

மஹாராஷ்டிர மாநிலத்தில், முதல்வர் தேவேந்திர பட்நாவிஸ் தலைமையிலான, சிவசேனா - பா.ஜ., கூட்டணி ஆட்சி நடைபெறுகிறது. இம்மாநிலத்தில், அஹமத்நகர் மாவட்டத்தில் உள்ள சனி சிங்னாபூர் கோவில், பிரசித்தி பெற்றது. கோவிலின் உள்ளே, திறந்தவெளி பகுதியில் அமைந்துள்ள கருவறையில் நுழைய ...

'ரிமோட் கன்ட்ரோல்' ஆட்சி காங்., பற்றி பிரதமர் கிண்டல்

Posted: 08 Apr 2016 09:09 AM PDT

ராஹா,:''ரிமோட் கன்ட்ரோல் ஆட்சியால், நாடு பெரும் பிரச்னைகளை சந்தித்ததை, அசாம் மக்கள் மறந்துவிடக் கூடாது. அதுபோன்ற நிலைமை, அசாம் மாநிலத்திற்கு ஏற்படாமல் இருக்க, பா.ஜ.,வை பெரும்பான்மையுடன் மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்,'' என, பிரதமர் நரேந்திர மோடி கூறினார்.

அசாமில், ஏப்ரல், 4ல், முதற்கட்ட தேர்தல் நடைபெற்ற நிலையில், ஏப்ரல், 11ம் தேதி, இரண்டாம் கட்ட தேர்தல் நடைபெறுகிறது. .இதில், முதல்வர் தருண் கோகோய் தலைமையிலான காங்கிரசுக்கும், பா.ஜ.,வுக்கும் இடையே நேரடி போட்டி நிலவி வருகிறதுபிரதமர் நரேந்திர மோடி, நேற்று அங்கு பா.ஜ.,வுக்கு ஆதரவு திரட்டினார். அப்போது ...

உப்பிலியப்பன் கோவில் நகை மோசடியில் சர்வதேச 'மாபியா'க்கள்?: அறநிலையத்துறை மீது பக்தர்கள் கடும் அதிருப்தி

Posted: 08 Apr 2016 09:34 AM PDT

தஞ்சை மாவட்டம், கும்பகோணம் அருகில் உள்ள உப்பிலியப்பன் கோவிலில், தங்க, வைர நகைகள் மாயமான விவகாரத்தில், அறநிலையத்துறை துணை ஆணையர் இளம்வழுதி கைது செய்யப்பட்ட நிலையில், இதன் பின்னணியில் சர்வதேச, 'மாபியா'க்கள் கைவரிசை இருக்குமோ என்ற சந்தேகம் எழுந்து உள்ளது.

தஞ்சை மாவட்டம், கும்பகோணம் அருகே உள்ள உப்பிலியப்பன் என்ற வெங்கடாசலபதி கோவில், வைணவர்களின், 108 திவ்யதேசங்களில் ஒன்று. இக்கோவிலுக்கு பெரிய அளவில் சொத்துக்களும், விலை உயர்ந்த பாரம்பரிய நகைகளும் நுாற்றாண்டுக்கும் மேலாக பராமரிக்கப் பட்டு வருகின்றன.இந்த கோவிலை நிர்வகிக்க வந்த அறநிலையத்துறை ...

இன்று தேர்தல் பிரசாரத்தை துவக்குகிறார் ஜெ.,ஒரே மேடையில் 20 வேட்பாளர்கள் அறிமுகம்

Posted: 08 Apr 2016 10:49 AM PDT

சென்னை தீவுத் திடலில் முதல்வர் ஜெயலலிதா இன்று மாலை தேர்தல் பிரசாரத்தை துவக்குகிறார். சட்டசபை தேர்தலில் அ.தி.மு.க., சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை அறிமுகம் செய்யும் அவர் கட்சியின் தேர்தல் அறிக்கையையும் வெளியிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. அ.தி.மு.க., வேட்பாளர் பட்டியல் ஏப்., 4ம் தேதி வெளியிடப்பட்டது. அ.தி.மு.க., வேட்பாளர்களை ஆதரித்து முதல்வர் ஜெயலலிதா இன்று பிரசாரத்தை துவக்குகிறார். தமிழகம் முழுவதும் 15 பொதுக் கூட்டங்களில் பங்கேற்கும் அவர் அ.தி.மு.க., மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் செய்ய உள்ளார்.சென்னை, ...

விஜயகாந்த் கூட்டணியில் தொடரும் இழுபறி

Posted: 08 Apr 2016 11:04 AM PDT

ம.ந.கூட்டணி கேட்கும் வட மாவட்ட தொகுதிகள் பலவற்றையும் விட்டுக் கொடுக்க முடியாது. கூட்டணியில் த.மா.கா., இணைவதாக பகிரங்கமாக அறிவித்தால் தொகுதியை பகிர்ந்தளிப்பது குறித்து பரிசீலிப்பதாக வைகோவிடம் விஜயகாந்த் கறாராக கூறியுள்ளார்.

சட்டசபை தேர்தலை இணைந்து சந்திக்க தே.மு.தி.க.,- - மக்கள் நலக்கூட்டணி முடிவு செய்துள்ளது. இதற்காக இருதரப்பிலும் கடந்த மாதம் 23ம் தேதி தொகுதி பங்கீடு ஒப்பந்தம் செய்யப்பட்டது. தே.மு.தி.க., 124 தொகுதிகளிலும் ம.ந.கூட்டணி 110 தொகுதிகளிலும் போட்டியிட முடிவானது.கூட்டணியில் பலத்தை அதிகரிக்க கூடுதல் கட்சிகளை சேர்ப்பதற்கு திட்டமிடப்பட்டது. ...

தள்ளாட்டம்!புதுச்சேரியில் கூட்டணி அமைப்பதில் இழுபறி...

Posted: 08 Apr 2016 11:27 AM PDT

புதுச்சேரியில் கூட்டணி அமைப்பதில் இழுபறி ஏற்பட்டுள்ளதால் என்.ஆர்.காங்கிரஸ், பா.ஜ., மற்றும் பா.ம.க., ஆகிய கட்சிகள் தள்ளாட்டத்தில் உள்ளன.

பொறுமை இழந்த பா.ம.க.,வும், - பா.ஜ.,வும் தனித்து போட்டியிட தயாராகும் என்பதால் தமிழகத்தைப் போல புதுச்சேரியிலும் பலமுனை போட்டிக்கு வாய்ப்பு ஏற்பட்டுஉள்ளது.புதுச்சேரியில் ஆளும் கட்சியான என்.ஆர்., காங்கிரசுடன் கூட்டணி அமைப்பதற்காக, பா.ஜ., - பா.ம.க., உள்ளிட்ட கட்சிகள் ஆர்வத்துடன் உள்ளன. ஆனால் யாருடன் கூட்டணி என்பதில், என்.ஆர்.காங்கிரஸ் தொடர்ந்து மவுனம் காப்பதால் இழுபறி நிலை ஏற்பட்டுள்ளது.புதுச்சேரி மாநில காங்., முதல்வராக ...

எச்சரிக்கை ஓட்டுக்கு பணம் கொடுத்தால் நடவடிக்கை தலைமை தேர்தல் கமிஷனர் திட்டவட்டம்

Posted: 08 Apr 2016 12:01 PM PDT

''ஓட்டுக்கு பணம் வழங்கப்படுவதை தடுக்க கடும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும். ஓட்டுக்குப் பணம் கொடுப்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். பறக்கும் படை மற்றும் கண்காணிப்பு குழுவில் மத்திய அரசு ஊழியர் மற்றும் மத்திய பாதுகாப்பு படை வீரர்கள் நியமிக்கப்படுவர்,'' என தலைமை தேர்தல் கமிஷனர் நஜீம் ஜைதி தெரிவித்தார்.

சென்னையில் நஜீம் ஜைதி கூறியதாவது:முதல் கட்டமாக பறக்கும் படை மற்றும் கண்காணிப்பு குழுவை பலப்படுத்த உள்ளோம். செலவினப் பார்வையாளர் எண்ணிக்கையை அதிகப்படுத்த உள்ளோம். போலீஸ் அகாடமியில் பயிற்சி பெறும் ஐ.பி.எஸ்., அதிகாரிகளை, பறக்கும் ...

வாரிசுகளுக்கு சீட்: அப்பாக்கள் லொள்ளு

Posted: 08 Apr 2016 12:37 PM PDT

தி.மு.க., தலைவர் கருணாநிதியின் கோபாலபுரம் இல்லத்தில், முதல் கட்டமாக, தி.மு.க.,- காங்கிரஸ் கூட்டணி உறுதியான பின், இரண்டாவது கட்டமாக, தொகுதி பங்கீடு உறுதி செய்வது குறித்து, கருணாநிதி யுடன் காங்கிரஸ் மேலிட தலைவர் குலாம்நபி ஆசாத் நடத்திய பேச்சு தோல்வி அடைந்தது.

தோல்வி, தொண்டர்கள் மத்தியில் எந்த சலசலப்பையும் ஏற்படுத்தவில்லை. எதையும் எதிர்பார்க்காத தொண்டர்களுக்கு அது ஏமாற்றத்தையும் தரவில்லை. ஆனால், எதிர்பார்ப்புடன் காத்திருக்கும் கோஷ்டி தலைவர்கள் தான், தி.மு.க., கூட்டணியை முறித்துக் கொள்ளக் கூடாது என்பதில், ஒருமித்த கருத்துடன் கூடி ...

நத்தம் ஆதரவாளருக்கும் ஜெ., 'செக்!'

Posted: 08 Apr 2016 01:14 PM PDT

மதுரை: மதுரை அ.தி.மு.க.,வில், அமைச்சர் செல்லுார் ராஜுவும், மேயர் ராஜன் செல்லப்பாவும் மேடைகளில் ஒன்றாக தோன்றினாலும், அவர்களின் மறைமுக அரசியலை தொண்டர்கள், நிர்வாகிகள் அறிவர்.

அமைச்சர் பன்னீர்செல்வம் தலைமையிலான ஐவர் அணி, செல்வாக்குடன் இருந்த போது, செல்லுார் ராஜு பன்னீர்செல்வத்தின் ஆதரவாளராகவும், ராஜன் செல்லப்பா, நத்தம் விஸ்வநாதனின் ஆதரவாளராகவும் வலம் வந்தனர். ஆட்டம் கண்டது: இதனால், இருவருக்கும், 'சீட்' கிடைக்கும் என, எதிர்பார்க்கப்பட்டது. இந் நிலையில், ஐவர் அணி ஆட்டம் கண்டது. ஆனால், பன்னீர் செல்வத்திற்கு சாதகமான போடி தொகுதி ...

எல்லா பெட்டிகளிலும் 'சிசிடிவி கேமரா': அமிர்தசரஸ் - டில்லி ரயிலில் அறிமுகம்

Posted: 08 Apr 2016 01:33 PM PDT

புதுடில்லி, : ரயில்களில் பயணிகளின் பாதுகாப்பை வலுப்படுத்தும் முயற்சியாக, ஷான் - இ - பஞ்சாப் எக்ஸ்பிரஸ் ரயிலில், அனைத்து பெட்டிகளிலும், சி.சி.டி.வி., எனப்படும், கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்ட, முதல் ரயில் என்ற பெருமையை, இந்த ரயில் தட்டிச் சென்றுள்ளது.
'ரயில்களில், பெண் பயணிகள் உள்ளிட்ட பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்படும்' என, ரயில்வே பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டிருந்தது. இதன்படி, அமிர்தசரஸ் - டில்லி இடையில் இயக்கப்படும், ஷான் - இ - பஞ்சாப் எக்ஸ்பிரஸ் ரயிலில் உள்ள, 21 ...



Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™