Tamil News | Online Tamil News |
- வாசனின் த.மா.கா., கட்சியின் நிலை திரிசங்கு: அ.தி.மு.க., - தி.மு.க., கதவடைப்பு
- வைகோவுக்கு கூட்டணியில் எச்சரிக்கை!
- ஐ.ஐ.டி., கல்வி கட்டணம் இரண்டு மடங்குஎகிறியது: எஸ்.சி., - எஸ்.டி., மாணவர்களுக்கு முழு விலக்கு
- மக்கள் பிரச்னைகளுக்கு தீர்வு காண விஞ்ஞானிகளுக்கு மோடி அழைப்பு
- அழகிரி ‛ஆக்டிவ்!'
- அ.தி.மு.க., வேட்பாளர் பட்டியல் 5வது முறையாக மாற்றம்
- விஜயகாந்த் வீட்டில் நள்ளிரவு யாகம்: முதல்வர் பதவிக்காக நடத்தப்பட்டதா
- சசிகலா கை ஓங்குகிறதா அ.தி.மு.க.,வில் சலசலப்பு
- கறுப்பு பண புழக்கத்துக்கு வழிவகுக்கும் டி.டி.ஆர்., திட்ட குளறுபடி:சி.எம்.டி.ஏ., மீது நகரமைப்பு வல்லுனர்கள் புகார்
- அதிக கட்டணம் வசூலிக்கும் 'கால்டாக்சி'களுக்கு 'ஆப்பு!'
| வாசனின் த.மா.கா., கட்சியின் நிலை திரிசங்கு: அ.தி.மு.க., - தி.மு.க., கதவடைப்பு Posted: 07 Apr 2016 09:38 AM PDT பெரிதும் எதிர்பார்த்த அ.தி.மு.க.,வும், ராகுலின் தடை உத்தரவு காரணமாக தி.மு.க.,வும், கதவடைப்பு செய்து விட்டதால் வாசனின்த.மா.கா., கட்சிக்கு திரிசங்கு நிலை ஏற்பட்டுள்ளது. இரண்டு பெரிய கட்சிகளிலும் இடமில்லை என்றாகி விட்ட நிலையில் அக்கட்சிக்கு எஞ்சியிருப்பது மூன்று வழிகள் மட்டுமே. அன்புமணி தலைமையை ஏற்று பா.ம.க.,வுடன் இணைவதா; பா.ஜ., அணியில் இடம் பெறுவதா அல்லது தே.மு.தி.க., - மக்கள் நல கூட்டணியில் போய்சேர்வதா என்பது தான் இப்போது த.மா.கா., முன் எழுந்துள்ள கேள்விகள்.இந்த மூன்றில் எதை அக்கட்சி தேர்வு செய்யப் போகிறது என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ள சூழலில் அக்கட்சி ... |
| வைகோவுக்கு கூட்டணியில் எச்சரிக்கை! Posted: 07 Apr 2016 10:04 AM PDT 'போக்கு இப்படியே தொடர்ந்தால், கூட்டணி குறித்து மறுபரிசீலனை செய்ய நேரிடும்' என, கம்யூனிஸ்டுகள், வைகோவுக்கு கடும் எச்சரிக்கை விடுத்துள்ளனர். மக்கள் நலக்கூட்டணி ஒருங்கிணைப்பாளர் என்ற முறையில் வைகோ பேசுபவை, கூட்டணிக்கு பெரும் நெருக்கடி ஏற்படுத்துகிறது என, கம்யூனிஸ்ட் கட்சிகளுக்குள் ஏற்பட்ட எதிர்ப்பைத் தொடர்ந்து, வைகோவுக்கு இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளதாக தெரிகிறது.எல்லை கடந்த பேச்சு:'தே.மு.தி.க.,வை கூட் டணிக்கு இழுக்க, 500 கோடி ரூபாய் பணம் கொடுக்க தி.மு.க., முயற்சி; பத்திரிகையாளர்கள் பணம் வாங்கிக் கொண்டு ... |
| ஐ.ஐ.டி., கல்வி கட்டணம் இரண்டு மடங்குஎகிறியது: எஸ்.சி., - எஸ்.டி., மாணவர்களுக்கு முழு விலக்கு Posted: 07 Apr 2016 10:37 AM PDT புதுடில்லி:நாட்டின் உயர் கல்வி நிறுவனமான, ஐ.ஐ.டி., எனப்படும், இந்திய தொழில்நுட்ப மையங்களில், இளங்கலை பட்டப் படிப்புக்கான கல்விக் கட்டணம், இரண்டு மடங்குக்கு மேல் உயர்த்தப்பட்டுள்ளது. இருப்பினும், மாற்றுத் திறனாளிகள், எஸ்.சி., - எஸ்.டி., பிரிவினர், பொருளாதாரத்தில் பின்தங்கியோருக்கு, கல்விக் கட்டணத்தில் இருந்து முழு விலக்கு அளிக்கும் முடிவுக்கு பலத்த வரவேற்பு கிடைத்துள்ளது. இந்தியாவில், பொறியியல் கல்விக்கு, புகழ்பெற்ற உயர்கல்வி நிறுவனமான, ஐ.ஐ.டி., சென்னை, டில்லி, கவுகாத்தி, கான்பூர், கரக்பூர், மும்பை, ரூர்கி, புவனேஸ்வர், காந்திநகர், ஐதராபாத், இந்துார், ... |
| மக்கள் பிரச்னைகளுக்கு தீர்வு காண விஞ்ஞானிகளுக்கு மோடி அழைப்பு Posted: 07 Apr 2016 10:37 AM PDT புதுடில்லி;''நாட்டில், மக்கள் சந்திக்கும், 100 பிரச்னைகளை பட்டியலிட்டு, அவற்றுக்கு, அறிவியல்பூர்வமாக தீர்வு காண வேண்டும்,'' என, அறிவியல் மற்றும் தொழிற்துறை ஆராய்ச்சி கவுன்சிலுக்கு, பிரதமர் நரேந்திர மோடி, கோரிக்கை விடுத்துள்ளார். சி.எஸ்.ஐ.ஆர்., எனும், அறிவியல் மற்றும் தொழில்துறை ஆராய்ச்சி கவுன்சிலைச் சேர்ந்த மூத்த விஞ்ஞானிகள் மத்தியில், பிரதமர் நரேந்திர மோடி பேசியதாவது:நாட்டில், மக்கள் சந்திக்கும், 100 பிரச்னைகளை பட்டியலிட்டு, அவற்றுக்கு, குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள், அறிவியல்பூர்வமாக தீர்வு காண வேண்டும். புதிய ... |
| Posted: 07 Apr 2016 12:47 PM PDT திரைமறைவில் இருந்தபடி, தி.மு.க.,வில் அழகிரி, 'ஆக்டிவ்' ஆக செயல்படுவது தெரியவந்துள்ளது. 'தில்லுமுல்லு கட்சி' எனக் கூறிய பிரேமலதாவுக்கு, முதல் ஆளாக பதில் சொன்னதாகட்டும்; கருணாநிதியை அவதுாறாக பேசிய வைகோ கொடும்பாவியை கொளுத்தியதாகட்டும், அழகிரி ஆட்டம் ஆரம்பமாகி உள்ளதையே காட்டுகிறது. கட்சியை விட்டு நீக்கப்பட்டிருந்தாலும், கட்சி விவகாரங்களில், அழகிரி அடிக்கடி மூக்கை நுழைக்கிறார் என்பது, தி.மு.க.,வினருக்கு தெரியாதது அல்ல. இவ்வளவு நாளும், 'தே,மு.தி.க.,வுடன் சேர்ந்தாலும், தி.மு.க., ஜெயிக்காது' என, திரும்ப திரும்ப சொல்லிக் கொண்டிருந்த அழகிரி, சமீபத்தில், ... |
| அ.தி.மு.க., வேட்பாளர் பட்டியல் 5வது முறையாக மாற்றம் Posted: 07 Apr 2016 01:20 PM PDT அ.தி.மு.க.,வில் வேட்பாளர் பட்டியல், அறிவிக்கப்பட்ட மூன்று நாளில், ஐந்து முறை வேட்பாளர்கள் மாற்றப்பட்டு உள்ளனர். நேற்று, இரண்டு தொகுதிக்கு, வேட்பாளர்கள் மாற்றப்பட்டனர். அ.தி.மு.க., வேட்பாளர் பட்டியல், ஏப்., 4ம் தேதி வெளியிடப்பட்டது. மறுநாள் இரவு, அருப்புக்கோட்டை வேட்பாளர் மாற்றப்பட்டார். நேற்று முன்தினம் மதியம், 10 வேட்பாளர்கள் மாற்றப்பட்டு, பட்டியல் வெளியானது.அடுத்து மூன்றாவதாக, பல்லாவரம் வேட்பாளர் மாற்றப்பட்டு, அறிவிப்புவெளியானது. அதை தொடர்ந்து, மதுரை வடக்கு தொகுதி வேட்பாளர் மாற்றம் அறிவிப்பு வெளியானது. நேற்று முன்தினம் மட்டும், மூன்று ... |
| விஜயகாந்த் வீட்டில் நள்ளிரவு யாகம்: முதல்வர் பதவிக்காக நடத்தப்பட்டதா Posted: 07 Apr 2016 01:24 PM PDT விஜயகாந்த் வீட்டில், நேற்று முன்தினம் நள்ளிரவு ரகசிய யாகம் நடந்துள்ளது. தே.மு.தி.க., வட்டாரத்தில் கூறப்படுவதாவது:தஞ்சாவூரில் இருந்தும், கேரளாவில் இருந்தும் வேத விற்பனர்கள், நேற்று முன்தினம் காலை சென்னைக்கு அழைத்து வரப்பட்டனர்.வடபழனியில் உள்ள நட்சத்திர ஓட்டலில் தங்க வைக்கப்பட்டனர். அன்று நள்ளிரவு, விஜயகாந்த் வீட்டிற்கு அவர்கள் வந்தனர்.வீட்டின் கதவுகளை அடைத்து விட்டு, யாகம் நடத்தியுள்ளனர். மஞ்சள் நிற ஈர புடவையில் பிரேமலதாவும், வேட்டி மட்டும் கட்டி, சட்டையின்றி விஜயகாந்தும், இந்த யாகத்தில் பங்கேற்றனர். விஜயகாந்திற்கு, ஒன்பதரை ... |
| சசிகலா கை ஓங்குகிறதா அ.தி.மு.க.,வில் சலசலப்பு Posted: 07 Apr 2016 01:45 PM PDT அ.தி.மு.க., வேட்பாளர் பட்டியலில், சசிகலா குடும்பத்தினர் ஆதரவு பெற்றவர்கள், அதிக அளவில் இடம் பெற்றுள்ளனர். வேட்பாளர் மாற்றத்திலும், அவர்களின் கை ஓங்கியிருப்பது, கட்சியினரிடம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. அ.தி.மு.க.,வை பொறுத்தவரை, சாதாரண தொண்டன் உயர் நிலைக்கு வருவதும், உயர் நிலையில் இருப்பவர், ஒரே நாளில் சாதாரண நிலைக்கு தள்ளப்படுவதும் சாதாரணம். யாருக்கு வேண்டுமானாலும் வாய்ப்பு கிடைக்கும் என்பதால், இம்முறை ஏராளமானோர், சட்டசபை தேர்தலில் போட்டியிட விருப்பம் தெரிவித்து, மனு கொடுத்தனர்.'சீட்' வாங்கி தருவதாகக் கூறி, ஏராளமானோர் வசூல் ... |
| Posted: 07 Apr 2016 01:48 PM PDT 'சென்னை பெருநகர் வளர்ச்சி குழுமமான, சி.எம்.டி.ஏ., செயல்படுத்தும் வளர்ச்சி உரிமை மாற்றத்துக்கான, டி.டி.ஆர்., திட்ட குளறுபடியால், கட்டுமானத்துறையில் கறுப்பு பண புழக்கம் அதிகரிக்கும் அபாயம் உருவாகி உள்ளது' என, நகரமைப்பு வல்லுனர்கள் புகார் தெரிவித்தனர். மெட்ரோ ரயில், சாலை விரிவாக்கம் போன்ற உள்கட்டமைப்பு திட்டங்களுக்கு, தனியார் நிலங்களை கையகப்படுத்தும் போது ஏற்படும் செலவு மற்றும் சிக்கல்களுக்கு தீர்வு காண, வளர்ச்சி உரிமை மாற்ற சான்று வழங்குவதற்கான டி.டி.ஆர்., திட்டத்தை, 2008ல், சி.எம்.டி.ஏ., துவக்கியது.நடைமுறை:இதன்படி, ஒரு குறிப்பிட்ட நிலத்தை ... |
| அதிக கட்டணம் வசூலிக்கும் 'கால்டாக்சி'களுக்கு 'ஆப்பு!' Posted: 07 Apr 2016 02:28 PM PDT
பெங்களூரு : 'உபேர், ஓலா' போன்ற, 'கால் டாக்சி' நிறுவனங்களுக்கு, கட்டண நிர்ணயம் உட்பட, பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது, கர்நாடக அரசு. கர்நாடகாவில், முதல்வர் சித்தராமையா தலைமையிலான காங்., அரசு உள்ளது. தகவல் தொழில்நுட்ப நகரமான பெங்களூரில், அதிகளவு, 'கால் டாக்சி'கள் இயக்கப்படுகின்றன. போக்குவரத்து நெரிசல் அதிகமுள்ள முக்கிய நேரங்களில், இந்த கார் நிறுவனங்கள், வழக்கமான கட்டணத்தை விட, இரண்டு அல்லது மூன்று மடங்குக்கு, அதிகமாக வசூலிப்பதாக பல புகார்கள் எழுந்தன. அதை தொடர்ந்து, இந்த நிறுவனங்களுக்கு, பல்வேறு கட்டுப்பாடுகளை கர்நாடக அரசு ... |
| You are subscribed to email updates from Dinamalar.com |ஏப்ரல் 08,2016. To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States | |