Tamil News | Online Tamil News |
- மாப்பிள்ளை அவர் தான்.. ஆனா சட்டை என்னோடது!
- 'பாரத் மாதா கீ ஜே' சொல்லணும்...! குஜராத் கல்வி நிறுவனங்கள் அறிவிப்பு
- 234 தொகுதிகளிலும் இரட்டை இலை தான் - ஜெ.,: காங்கிரசுக்கு 41 வழங்கி கருணாநிதி தாராளம்
- 10 மந்திரிகள் காலி; காரணம் என்ன?
- காங்கிரசுக்கு 41 தொகுதிகள்: கருணாநிதி - ஆசாத் உடன்பாடு
- 'சிட்டிங்' தொகுதியில் ஜெ.,: ஆட்சி பறிபோகுமா?
- ரூ.1.16 லட்சம் கோடி அன்னிய முதலீடு: 15 ஆண்டுகளில் தமிழகத்திற்கு கிடைத்துள்ளது
- தரவரிசை பட்டியலில் சென்னை ஐ.ஐ.டி., முதலிடம்: அண்ணா பல்கலைக்கு இடமே இல்லை
- வெளிநாட்டில் பணம் பதுக்கிய தலைவர்களின் பெயர் அம்பலம்: அமிதாப், ஐஸ்வர்யா உட்பட, 500 இந்தியர்களும் சிக்கினர்
- பாரபட்சமற்ற நடவடிக்கை: அருண் ஜெட்லி அறிவிப்பு
| மாப்பிள்ளை அவர் தான்.. ஆனா சட்டை என்னோடது! Posted: 04 Apr 2016 08:08 AM PDT 'மாப்பிள்ளை அவர் தான்... ஆனா, அவரு போட்டிருக்கிற சட்டை என்னோடது...' எனச் சொல்லி, எல்லா இடங்களிலும் தானே மாப்பிள்ளை ஆக வேண்டும் என்ற ஆசையை, 'படையப்பா' படத்தில் வெளிப்படுத்துவார் ரஜினி. அதைப் போல, 'அந்தக் கட்சிக்காரங்க தான் போட்டியிடுறாங்க... ஆனா, அவங்க போட்டியிடுற சின்னம் எங்க கட்சியோடது... நாங்க தான், 234 தொகுதிகளிலும் வெற்றி பெறணும்...' என, சொல்லாமல் சொல்கிறார், அ.தி.மு.க., பொதுச் செயலர் ஜெயலலிதா. இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட தயங்கிய, த.மா.கா., தமிழக வாழ்வுரிமை கட்சி, அகில இந்திய பார்வர்டு பிளாக் கட்சி போன்றவை, 'கழற்றி' விடப்பட்டுள்ளன. ஏற்கனவே சொன்னது போல், ... |
| 'பாரத் மாதா கீ ஜே' சொல்லணும்...! குஜராத் கல்வி நிறுவனங்கள் அறிவிப்பு Posted: 04 Apr 2016 09:35 AM PDT ஆமதாபாத்: குஜராத்தில் உள்ள நான்கு கல்வி நிறுவனங்களில், மாணவர் சேர்க்கை பெற, விண்ணப்பப் படிவத்தில், 'பாரத் மாதா கீ ஜே' என எழுத வேண்டும் என்பது, கட்டாயமாக்கப்பட்டு உள்ளது. டில்லி, ஜவஹர்லால் நேரு பல்கலை வளாகத்தில், தேச விரோத கோஷங்கள் எழுப்பிய விவகாரத்தை தொடர்ந்து, 'மாணவர்கள் மத்தியில், தேசபக்தியை வளர்க்க, 'பாரத் மாதா கீ ஜே' கோஷம் பற்றி எடுத்துக் கூற வேண்டும்' என, ஆர்.எஸ்.எஸ்., தலைவர் மோகன் பாகவத் கூறியிருந்தார்.இந்த விவகாரம், தற்போது, நாடு முழுவதும் பெரும் சர்ச்சையைஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், குஜராத்தில் உள்ள ஸ்ரீபடேல் வித்யார்த்தி ஆஸ்ரம் ... |
| 234 தொகுதிகளிலும் இரட்டை இலை தான் - ஜெ.,: காங்கிரசுக்கு 41 வழங்கி கருணாநிதி தாராளம் Posted: 04 Apr 2016 11:50 AM PDT தமிழக சட்டசபை தேர்தல் களம் சூடு பிடிக்க துவங்கியுள்ளது. அ.தி.மு.க., சார்பில் அதிரடியாக நேற்று, 234 தொகுதிகளிலும் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிடும் வேட்பாளர்கள் பட்டியலை முதல்வர் ஜெயலலிதா வெளியிட்டார். அதே நேரத்தில் தி.மு.க., கூட்டணியில், காங்கிரஸ் கட்சிக்கு, 41, 'சீட்' வழங்கி கருணாநிதி தாராளம் காட்டியுள்ளார். மூன்றாவது அணியான மக்கள் நலக் கூட்டணியில் தொகுதி பங்கீட்டில் சலசலப்பு கிளம்பியுள்ளது.தமிழக சட்டசபை தேர்தலில் ஒரு மாதமாக மந்த நிலை இருந்து வந்தது. ஆளுங்கட்சியான அ.தி.மு.க.,வில் நேற்று முன்தினம் நேர்காணல் முடிந்தது. நேற்று பகல் 12:10 மணிக்கு சென்னை ... |
| 10 மந்திரிகள் காலி; காரணம் என்ன? Posted: 04 Apr 2016 12:01 PM PDT அ.தி.மு.க., வேட்பாளர் பட்டியலில், 10 அமைச்சர்களுக்கு, 'சீட்' வழங்கப்படவில்லை. இது குறித்து பரபரப்பான பின்னணி தகவல்கள் வெளியாகியுள்ளன.பூனாட்சி: சிவபதியிடம் இருந்து அமைச்சர் பதவி பறிக்கப்பட்டதன் காரணமாக, மண்ணச்சநல்லுார் தொகுதி எம்.எல்.ஏ.,வாக இருந்த பூனாட்சிக்கு யோகம் அடித்தது; முத்தரையர் கோட்டாவில், கதர் மற்றும் கிராமத் தொழில் அமைச்சரானார்.அமைச்சர் பதவியை பயன்படுத்தி, சகோதரரின் சொத்தை அபகரிக்க முயன்றார்; ஆட்சிக்கு எதிராக நடந்த முத்தரையர் போராட்டத்துக்கு பின்னணியாக இருந்தார் என்ற உளவுத்துறை அறிக்கை, அவரது சரிவுக்கு காரணமாக ... |
| காங்கிரசுக்கு 41 தொகுதிகள்: கருணாநிதி - ஆசாத் உடன்பாடு Posted: 04 Apr 2016 12:07 PM PDT தி.மு.க., கூட்டணியில், காங்கிரசுக்கு, 41 தொகுதிகள் ஒதுக்கப்பட்டு உள்ளன. தி.மு.க., தலைவர் கருணாநிதி - காங்., மேலிட தலைவர் குலாம்நபி ஆசாத் இடையே, நேற்று நடந்த பேச்சில், இந்த உடன்பாடு ஏற்பட்டது.தி.மு.க., - காங்., கூட்டணி, பிப்ரவரி, 13ல் உறுதியானது. குலாம்நபி ஆசாத், மேலிட பொறுப்பாளர் முகுல் வாஸ்னிக், தமிழக தலைவர் இளங்கோவன் ஆகியோர், கருணாநிதியை, அவரது வீட்டில் சந்தித்து, கூட்டணியை உறுதி செய்தனர். மார்ச், 25ல், கருணாநிதியை மீண்டும் சந்தித்த ஆசாத், தொகுதி பங்கீடு குறித்து பேசினார். கடந்த முறை போல், 63 தொகுதிகளை, காங்கிரஸ் கேட்டது. ஆனால், 25 தொகுதிகள் என, தி.மு.க., கூறியதால், ... |
| 'சிட்டிங்' தொகுதியில் ஜெ.,: ஆட்சி பறிபோகுமா? Posted: 04 Apr 2016 12:10 PM PDT திருச்சி: கடந்த, 1991ம் ஆண்டு, முதன்முதலாக தமிழக முதல்வராக ஜெயலலிதா தேர்வு செய்யப்பட்டார். அந்த தேர்தலில் ஜெயலலிதா, காங்கேயம் மற்றும் பர்கூர் தொகுதிகளில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். இதில், காங்கேயத்தை ராஜினாமா செய்து விட்டு, பர்கூர் தொகுதி எம்.எல்.ஏ.,வாக தொடர்ந்தார்.அந்த ஆட்சி முடிந்த போது, 1996ம் ஆண்டு, பர்கூர் தொகுதியிலேயே மீண்டும் ஜெ., போட்டியிட்டு தோல்வியைத் தழுவினார். அப்போது, அ.தி.மு.க.,ஆட்சியையும் இழந்தது.பின், 2001 தேர்தலில் ஜெ., போட்டியிடாமல், 2002ல் முதல்வராக பதவியேற்ற பின், ஆண்டிபட்டி தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். அந்த ... |
| ரூ.1.16 லட்சம் கோடி அன்னிய முதலீடு: 15 ஆண்டுகளில் தமிழகத்திற்கு கிடைத்துள்ளது Posted: 04 Apr 2016 12:13 PM PDT தமிழகத்துக்கு, 15 ஆண்டுகளில், 1.16 லட்சம் கோடி ரூபாய் அன்னிய முதலீடு கிடைத்துள்ளது. மகாராஷ்டிரா, டில்லி ஆகியவற்றுக்கு அடுத்த படியாக, அன்னிய முதலீட்டை ஈர்த்ததில் தமிழகம், மூன்றாவது இடத்தை பிடித்துள்ளது.நாடு முழுவதும், 15 ஆண்டுகளில் கிடைத்த அன்னிய தொழில் முதலீடு விவரங்களை, ரிசர்வ் வங்கி தயாரித்துள்ளது. அதை, மத்திய தொழில் மற்றும் வர்த்தக அமைச்சகம் தொகுத்து வெளியிட்டுள்ளது.அதன் விவரம்:* கடந்த, 15 ஆண்டுகளில், மூன்று லட்சம் கோடியே, 86 லட்சத்து, 778 ஆயிரம் ரூபாய் அன்னிய முதலீட்டை மகாராஷ்டிரா ஈர்த்துள்ளது; இது, மொத்த முதலீட்டில், 29 சதவீதம்* அடுத்ததாக, டில்லி, ... |
| தரவரிசை பட்டியலில் சென்னை ஐ.ஐ.டி., முதலிடம்: அண்ணா பல்கலைக்கு இடமே இல்லை Posted: 04 Apr 2016 12:14 PM PDT இந்தியாவில் உள்ள பல்கலைகளின் தரவரிசை பட்டியலை முதல்முறையாக மத்திய அரசு அறிவித்துள்ளது. இதில், சென்னை ஐ.ஐ.டி., முதலிடம் பெற்றுள்ளது. அண்ணா பல்கலை பட்டியலில் இடம் பெறவில்லை.உலக அளவில், பல்கலைகளின் செயல்பாடுகளை, பல்வேறு தகுதிகளின் அடிப்படையில், இங்கிலாந்தை சேர்ந்த,' குவாக்வாரெல்லி சைமண்ட்ஸ்' நிறுவனம், ஒவ்வொரு ஆண்டும் சர்வதேச அளவில் தரவரிசை பட்டியலை வெளியிடும். இதில், இந்திய பல்கலைகள் இடம் பெறுவதில்லை என குறை இருந்தது.எனவே, இந்த பிரச்னையை போக்க,'இந்திய பல்கலைகளை மத்திய அரசே தரம் பிரித்து, தர வரிசை பட்டியலை வௌியிடும்' என, கடந்த ஆண்டு மத்திய அமைச்சர் ... |
| Posted: 04 Apr 2016 12:23 PM PDT பாரீஸ்: வெளிநாடுகளில், போலி நிறுவனங்களின் பெயரில், ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின், பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் உட்பட, பல்வேறு உலகத் தலைவர்கள், கோடிக்கணக்கில் பணத்தை பதுக்கி வைத்துள்ள அதிர்ச்சி தகவல் அம்பலமாகி உள்ளது. 'பனாமா பேப்பர்ஸ்' என்ற பெயரில் வெளியாகியுள்ள, இந்த மோசடியில் ஈடுபட்டுள்ளவர்கள் பட்டியலில், பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சன், நடிகை ஐஸ்வர்யா ராய் உட்பட, 500 இந்தியர்களின் பெயரும் இடம்பெற்றுள்ளன. சுவிட்சர்லாந்து போன்ற சில ஐரோப்பிய நாடுகளில் வரிச்சலுகை கிடைப்பதால், அந்நாட்டு வங்கிகளில் பலர் முதலீடு செய்து வந்தனர்; குறிப்பாக கறுப்புப் பணம், ... |
| பாரபட்சமற்ற நடவடிக்கை: அருண் ஜெட்லி அறிவிப்பு Posted: 04 Apr 2016 02:23 PM PDT புதுடில்லி: ''வெளிநாடுகளில் உள்ள போலி நிறுவனங்களில் பணத்தை பதுக்கியுள்ளவர்கள் குறித்து வெளியான, 'பனாமா பேப்பர்ஸ்' பட்டியலில் உள்ள இந்தியர்கள் குறித்த விசாரணை துவங்கியுள்ளது; இந்த விஷயத்தில் பாரபட்சமின்றி நடவடிக்கை எடுக்கப்படும்,'' என, நிதி அமைச்சர் அருண் ஜெட்லி கூறினார். மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி கூறியதாவது: வெளிநாடுகளில் பணத்தை பதுக்கியுள்ளோர், முதலீடு செய்துள்ளோர், அது குறித்த தகவலை தெரிவித்து, வரி மற்றும் அபராதம் செலுத்தி சட்டப்பூர்வமாக்கி கொள்ளலாம் எனஅறிவித்தோம். அந்த வாய்ப்பை பயன்படுத்தாதவர்களுக்கு, மிகப் பெரிய ... |
| You are subscribed to email updates from Dinamalar.com |ஏப்ரல் 05,2016. To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States | |