Tamil News | Online Tamil News |
- 100 சதவீத ஓட்டுப்பதிவுக்கு தேர்தல் கமிஷன்.இலக்கு ! பாதிப்பு வருமோ என அரசியல் கட்சிகள் கலக்கம்
- யு.ஜி.சி.,யின் அதிகாரங்களை குறைக்க அரசு திட்டம் அதிரடி நிகர்நிலை பல்கலைகளுக்கு கட்டுப்பாடு தளர வாய்ப்பு
- யாருக்கு அந்த ஒரு ஓட்டு?
- எம்.பி.,க்களின் சம்பளம் இரட்டிப்பாகிறது விர்ர்! பார்லி., குழு பரிந்துரையால் அதிர்ஷ்டம்
- தொங்கு சட்டசபை அமையாது: கருணாநிதி உறுதி
- நம் கூட்டணி திருப்புமுனை ஏற்படுத்தும்: விஜயகாந்த் நம்பிக்கை
- தொடர்கிறது! தேர்தல் கமிஷனின் அதிரடி நடவடிக்கைகள்... டி.ஜி.பி., கலெக்டர்கள், எஸ்.பி.,க்கள் மாற்றம்
- தமிழகத்தில் அறிவிக்கப்படாத மின் தடை?மக்கள் தவிப்பு; அதிகாரிகள் அலட்சியம்
- பட்டையை கிளப்பும் சுப்பிரமணியன் சாமி!
- மருத்துவ படிப்புக்கு இன்று நுழைவு தேர்வுசுப்ரீம் கோர்ட் திட்டவட்டம்
- உ.பி. வாரணாசி தொகுதிக்கு பிரதமர் மோடி பயணம்
| 100 சதவீத ஓட்டுப்பதிவுக்கு தேர்தல் கமிஷன்.இலக்கு ! பாதிப்பு வருமோ என அரசியல் கட்சிகள் கலக்கம் Posted: 30 Apr 2016 08:13 AM PDT தமிழக சட்டசபை தேர்தலில், 100 சதவீத ஓட்டுப்பதிவு என்ற இலக்குடன், தேர்தல் கமிஷன் பல நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. ஓட்டுப்பதிவு அதிகரித்தால், தங்களுக்கு பாதிப்பு ஏற்படுமோ என்ற கலக்கம், அரசியல் கட்சியினரிடம் ஏற்பட்டுள்ளது. தமிழக சட்டசபை பொதுத் தேர்தல், மே, 16ம் தேதி நடைபெற உள்ளது. இந்த தேர்தலில், '100 சதவீதம் நேர்மை; 100 சதவீதம் ஓட்டுப்பதிவு' என்ற கோஷத்துடன், தேர்தல் கமிஷன் களம் இறங்கி உள்ளது. 100 சதவீதம் ஓட்டுப்பதிவை எட்ட வேண்டும் என்பதற்காக, தேர்தல் விழிப்புணர்வு பிரசாரத்தை தீவிரப்படுத்தி உள்ளது. தகவல் தொழில் நுட்பத்தை பயன்படுத்தி, சமூக வலைதளங்களில், ... |
| Posted: 30 Apr 2016 08:18 AM PDT புதுடில்லி: நிகர்நிலை பல்கலைகள் தொடர்பான சில விவகாரங்களை, யு.ஜி.சி., எனப்படும், பல்கலை மானியக்குழு சரியாகக் கையாளவில்லை என, மத்திய அரசு கருதுகிறது; எனவே, அதன் அதிகாரங்களை குறைக்க, மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. ராஜஸ்தான் மாநிலம், பிலானியில் உள்ள, 'பிட்ஸ்' எனப்படும், பிர்லா அறிவியல் மற்றும் தொழில்நுட்ப கல்வி மையம், மும்பை, நார்ஸி மாஞ்சி மேலாண்மை கல்வி மையம், டாடா அடிப்படை ஆராய்ச்சி கல்வி மையம் உள்ளிட்ட புகழ்பெற்ற சில கல்வி நிறுவனங்களுடன், அவற்றின் விரிவாக்கத் திட்டங்களுக்கு எதிராக, யு.ஜி.சி., உத்தரவுகள் பிறப்பித்துள்ளது. இவற்றை எதிர்த்து, இக்கல்வி ... |
| Posted: 30 Apr 2016 08:20 AM PDT 'முதல் இரண்டு இடம் நமக்கில்லை... இல்லை... இல்லே... ஆனால், மூன்றாவது இடம்? விடக் கூடாது, பா.ம.க.,வுக்கு இந்த இடத்தைப் பிடிக்க வாய்ப்பே தரக் கூடாது...' என்ற, 'திருவிளையாடல்' தருமியின் மனநிலையில், தே.மு.தி.க.,வும்; 'உன்னை விட நான் பெரியவன், யார் வெற்றி பெறுவார் பார்ப்போம்' என்று சவால் விடுக்கும் மனநிலையில் பா.ம.க.,வும் உள்ளது, இலைமறைக்காயாக வெளிப்படத் துவங்கி விட்டது.அ.தி.மு.க., - -தி.மு.க.,வுக்கு மாற்றாக, -ம.ந.கூ., - -த.மா.கா., இணைந்து, புதிய கூட்டணியை தே.மு.தி.க., உருவாக்கியுள்ளது. கூட்டணியின் முதல்வர் வேட்பாளராக, விஜயகாந்த் அறிவிக்கப்பட்டிருக்கிறார். அதற்காகவே, அவரது ... |
| எம்.பி.,க்களின் சம்பளம் இரட்டிப்பாகிறது விர்ர்! பார்லி., குழு பரிந்துரையால் அதிர்ஷ்டம் Posted: 30 Apr 2016 08:42 AM PDT புதுடில்லி : எம்.பி.,க்களுக்கான சம்பளம் மற்றும் பிற படிகளை, 100 சதவீதம் உயர்த்தும் படி, பார்லிமென்ட் குழு பரிந்துரைத்துள்ளது. இதற்கு நிதி அமைச்சகம் ஒப்புதல் அளித்துவிட்டது. பிரதமர் ஒப்புதல் கிடைத்ததும், எம்.பி.,களின் சம்பள உயர்வு அறிவிப்பு நடைமுறைக்கு வரும். தற்போது, எம்.பி.,க்களுக்கு, மாதந்தோறும், 50 ஆயிரம் ரூபாய் சம்பளமாக வழங்கப்பட்டு வருகிறது. பிற படிகளாக, 45 ஆயிரம் முதல் 90 ஆயிரம் ரூபாய் வரை கிடைக்கிறது. இந்த சம்பளம் போதாதென்றும், சம்பளத்தை அதிகப்படுத்த வேண்டும் என்றும், அனைத்துக் கட்சிகளை சேர்ந்த எம்.பி.,க்கள் வலியுறுத்தி வந்தனர்.100 ... |
| தொங்கு சட்டசபை அமையாது: கருணாநிதி உறுதி Posted: 30 Apr 2016 09:03 AM PDT சென்னை : ''தி.மு.க.,வினருக்கு சொந்தமாக இருந்தாலும், மதுவிலக்கு அமல்படுத்தப்பட்டதும், அந்த ஆலைகள் அனைத்தையும் மூடி விடுவோம்,'' என, தி.மு.க., தலைவர் கருணாநிதி உறுதி அளித்துள்ளார். முதல் கட்ட தேர்தல் சுற்றுப்பயணத்தை முடித்து, சென்னை திரும்பியதும், 'டிவி' சேனலுக்கு கருணாநிதி அளித்த பேட்டி:கண்டிப்பாக, நான் முதல்வராகும்போது, தமிழக மக்களுக்காக, ஏற்கனவே செய்த நல்ல திட்டங்களை மீண்டும் செயல்படுத்துவேன். என் அரசியல் வாழ்க்கையில், ஜெயலலிதா ஆட்சியில்தான் அதிக துன்பங்களை சந்தித்தேன். அவர், என்னையும், என் குடும்பத்தினரையும் வதைத்தார். அது என்னை அதிகமாக ... |
| நம் கூட்டணி திருப்புமுனை ஏற்படுத்தும்: விஜயகாந்த் நம்பிக்கை Posted: 30 Apr 2016 09:08 AM PDT துாத்துக்குடி,:''நம் கூட்டணி திருப்புமுனை ஏற்படுத்தும், அ.தி.மு.க., - தி.மு.க.,வுக்கு, இளைஞர்கள் ஓட்டு போடக்கூடாது,'' என, தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்த் பேசினார். துாத்துக்குடி மாவட்டம், ஒட்டப்பிடாரத்தில், கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து, விஜயகாந்த் பேசியதாவது:முதல்வர் ஜெயலலிதாவுக்கு, பகல் நேரங்களில் கூட்டம் நடத்தக் கூடாது என, தேர்தல் கமிஷன் அறிவுறுத்தியுள்ளது. நாம் பிரசார நேரத்திற்கு மேலாக, ஐந்து நிமிடம் பேசினாலும், நடவடிக்கை எடுத்து, சிறையில் போடுகிறார்கள்.திருப்புமுனையை ஏற்படுத்தும் தமிழகத்தைகாப்பாற்ற இளைஞர்கள் முன்வர ... |
| தொடர்கிறது! தேர்தல் கமிஷனின் அதிரடி நடவடிக்கைகள்... டி.ஜி.பி., கலெக்டர்கள், எஸ்.பி.,க்கள் மாற்றம் Posted: 30 Apr 2016 10:00 AM PDT தேர்தல் கமிஷனின் அதிரடி நடவடிக்கைகளின் தொடர்ச்சியாக, நேற்று, போலீஸ் டி.ஜி.பி., ஐந்து மாவட்ட கலெக்டர்கள், இரண்டு மாவட்ட போலீஸ் எஸ்.பி.,க்கள் மாற்றப்பட்டு உள்ளனர். தேர்தலுக்கு என, தனி டி.ஜி.பி., நியமிக்கப்பட்டுள்ளார். மேலும், சில அதிகாரிகள் மாற்றப்பட உள்ளதாக, தகவல் வெளியாகி உள்ளது.தமிழக சட்டசபை தேர்தல், 16ம் தேதி நடைபெற உள்ளது. பொதுவாக தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதும், மூன்று ஆண்டுகளாக, ஒரே இடத்தில், ஒரே பணியில் இருக்கும் அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்படுவது வழக்கம். இதையடுத்து, பல ஆண்டுகளாக கலெக்டர் மற்றும், எஸ்.பி.,யாக இருப்போரை, ஆளும் அரசு ஏற்கனவே ... |
| தமிழகத்தில் அறிவிக்கப்படாத மின் தடை?மக்கள் தவிப்பு; அதிகாரிகள் அலட்சியம் Posted: 30 Apr 2016 10:08 AM PDT தமிழகத்தில், அறிவிக்கப்படாமல் செய்யப்படும் மின் தடையால், பொதுமக்கள் கடுமையாக பாதிப்படைந்துள்ளனர்.தமிழகத்தில், கோடை வெயில் சுட்டெரிப்பதால், 'ஏசி, பிரிஜ்' உள்ளிட்ட மின் சாதனங்களின் பயன்பாடு அதிகரித்துள்ளது. மின் தேவை அதிகரிப்பால், துணைமின் நிலையங்களில் இருந்து மின்சாரம் கொண்டு வரப்படும், 'பீடர்' என்ற வழித்தடங்களிலும், 'டிரான்ஸ்பார்மர், பில்லர் பாக்ஸ்' போன்ற மின் சாதனங்களிலும், 'ஓவர்லோடு' காரணமாக, பழுது ஏற்படுவது தொடர் கதையாகி வருகிறது.இதன் காரணமாக, சென்னை, காஞ்சி, திருவள்ளூர், கோவை, திருச்சி, மதுரை உட்பட மாநிலத்தின்முக்கிய நகரங்களில், பல ... |
| பட்டையை கிளப்பும் சுப்பிரமணியன் சாமி! Posted: 30 Apr 2016 10:34 AM PDT 'சோனியாவை சிறைக்கு அனுப்பியே தீருவேன்' என, சபதம் போட்டுள்ள சுப்பிரமணியன் சாமியை, ராஜ்யசபா எம்.பி., ஆக்கியுள்ளார் பிரதமர் மோடி. ராஜ்யசபாவில் பா.ஜ., அவைத் தலைவராக இருப்பவர் நிதியமைச்சர் அருண் ஜெட்லி. இவருக்கும், சாமிக்கும் ஆகாது. அதே சபையில், சாமி இருந்தால் பிரச்னை வரும் என்கிற பலமான எதிர்ப்பையும் மீறி, சாமியை எம்.பி., ஆக்கிவிட்டார் மோடி. ராஜ்யசபாவில் ஆளுங்கட்சியான பா.ஜ.,விற்கு மெஜாரிட்டி கிடையாது ; எதிர்க்கட்சிகள் தான் மெஜாரிட்டி. இதனால், பா.ஜ., அரசு எந்த ஒரு மசோதாவை கொண்டுவந்தாலும், காங்., உட்பட அனைத்து எதிர்க்கட்சிகளும் ஒத்துழைப்பதில்லை. விரைவில், ... |
| மருத்துவ படிப்புக்கு இன்று நுழைவு தேர்வுசுப்ரீம் கோர்ட் திட்டவட்டம் Posted: 30 Apr 2016 12:21 PM PDT புதுடில்லி:மருத்துவப் படிப்புகளுக்கான, முதல்கட்ட பொது நுழைவுத் தேர்வை நடத்துவதற்கான உத்தரவை மாற்றக்கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை விசாரிக்க, சுப்ரீம் கோர்ட் நேற்று மறுத்துவிட்டது. இதனால், திட்டமிட்டபடி, இன்று தேர்வு நடக்கிறது. இரண்டு கட்டமாக...நாடு முழுவதும், 2016 - 17ம் கல்வியாண்டில், எம்.பி.பி.எஸ்., - பி.டி.எஸ்., போன்ற மருத்துவப் படிப்புகளுக்கான, பொது நுழைவுத் தேர்வு தொடர்பாக, சுப்ரீம் கோர்ட்டில் நேற்று முன்தினம் விசாரணை நடந்தது.அப்போது, பொது நுழைவுத் தேர்வை, மே, 1;ஜூலை, 24 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டமாகநடத்த, நீதிபதிகள் உத்தரவிட்டனர். இந்த உத்தரவை ... |
| உ.பி. வாரணாசி தொகுதிக்கு பிரதமர் மோடி பயணம் Posted: 30 Apr 2016 12:56 PM PDT லக்னோ: உ.பி., மாநிலம் வாரணாசி தொகுதியில் பிரதமர் மோடி இன்று சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். சுற்றுப்பயணத்தின் போது அவர் பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்க உள்ளார்.மேலும் ஆசிய காட் பகுதியில் உள்ள மீனவர்களுக்கான சூரிய ஒளி மூலம் இயங்கும் படகுகளையும், இ-ரிக்ஷா திட்டத்தையும் துவக்கி வைக்க உள்ளார். முன்னதாக இங்குள்ள பால்லியா மாவட்டத்திற்கு செல்லும் பிரதமர் வறுமைக்கோட்டிற்கு கீழே வாழும் மக்களுக்கு இலவச காஸ் இணைப்பு வழங்கும் மத்திய அரசின் திட்டமான பிரதான் மந்திரி உஜ்வாலா யோஜ்னா திட்டத்தை துவக்கி வைக்கிறார். இத்திட்டத்தின் மூலம் ... |
| You are subscribed to email updates from Dinamalar.com |மே 01,2016. To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States | |