Tamil News | Online Tamil News |
- நில விவகாரத்தில் பிரியங்காவுக்கு இமாச்சல் ஐகோர்ட் 'நோட்டீஸ்'
- தேர்தல் ஆணையத்திற்கே அதிகாரம்சென்னை ஐகோர்ட் திட்டவட்டம்
- 'இந்தியாவுக்கு திரும்பி வரமாட்டேன்': மல்லையா திட்டவட்டம்
- மருத்துவ நுழைவு தேர்வு தேதிகளில்... மாற்றமில்லை கோரிக்கைகளை நிராகரித்தது சுப்ரீம் கோர்ட்
- மே முதல் வாரம் அ.தி.மு.க., அதிரடி?
- வேட்பாளர்களாக பொன்னையன், பண்ருட்டி நீடிப்பார்களா?திக்... திக்...! மாற்று வேட்பாளர்களாக எம்.எல்.ஏ.,க்கள் மனு தாக்கலால் பீதி
- கட்சி மாறப் போவதில்லை தா.பாண்டியன் திட்டவட்டம்
- கருணாநிதி கூட்டம்; துப்பாக்கியால் பரபரப்பு
- விஜயகாந்த் ஆலோசனை புறக்கணிப்பு வைகோ மீது தே.மு.தி.க.,வினர் கடுப்பு
- மே.வங்கத்தில் இன்று 5ம் கட்ட தேர்தல்
| நில விவகாரத்தில் பிரியங்காவுக்கு இமாச்சல் ஐகோர்ட் 'நோட்டீஸ்' Posted: 29 Apr 2016 08:39 AM PDT சிம்லா,: இமாச்சலப் பிரதேச மாநிலம், சிம்லாவில், உயர் பாதுகாப்பு பகுதியில், நிலம் வாங்கியது தொடர்பாக, விளக்கமளிக்குமாறு, காங்கிரஸ் தலைவர் சோனியாவின் மகள் பிரியங்காவுக்கு, அம்மாநில ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. இமாச்சலப் பிரதேச மாநிலத்தில், முதல்வர் வீரபத்திர சிங் தலைமையில், காங்கிரஸ் ஆட்சி நடக்கிறது. தலைநகர், சிம்லாவில், உயர் பாதுகாப்பு மிகுந்த, அரசு குடியிருப்புகள் மட்டுமே உள்ள பகுதியில், காங்கிரஸ் தலைவர் சோனியா மகள்பிரியங்கா, வீடு கட்டி வருகிறார். அந்த நிலம் தொடர்பான ஆவண விவரங்களை தருமாறு, தகவல் உரிமைச் சட்ட ஆர்வலரான, தேவ் ஆஷிஷ் ... |
| தேர்தல் ஆணையத்திற்கே அதிகாரம்சென்னை ஐகோர்ட் திட்டவட்டம் Posted: 29 Apr 2016 10:07 AM PDT சென்னை:ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள் மற்றும் போலீஸ் அதிகாரிகளை இடமாற்றம் செய்யக் கோரிய மனுவை, சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. தி.மு.க., அமைப்பு செயலர் ஆர்.எஸ்.பாரதி தாக்கல் செய்த மனு: தேர்தல் அறிவிப்பு வெளியிட்ட உடன், தேர்தல் ஆணையத்தின் கட்டுப்பாட்டின் கீழ், அரசு அதிகாரிகள் வந்துவிடுவர். ஆனால், தமிழகத்தில் முற்றிலும் முரணாக உள்ளது. மாநில அளவிலும், மாவட்ட அளவிலும், அரசு உயர் அதிகாரிகள், ஆளும் கட்சியினரின் கட்டுப்பாட்டில்தான் உள்ளனர். யாரும், தேர்தல் ஆணையத்தின் கட்டுப்பாட்டில் இருப்பதாக தெரியவில்லை. 19 அதிகாரிகள்: ஆளும் கட்சிக்கு ... |
| 'இந்தியாவுக்கு திரும்பி வரமாட்டேன்': மல்லையா திட்டவட்டம் Posted: 29 Apr 2016 10:13 AM PDT லண்டன்,: ''என் பாஸ்போர்ட் முடக்கப்பட்டு விட்டதால், வேறு வழியின்றி, பிரிட்டனில் தஞ்சமடைந்து இருக்கிறேன். நிலைமை சீராகும் வரை, இந்தியாவுக்கு வரும் திட்டம் இல்லை,'' என, தொழிலதிபர் விஜய் மல்லையா கூறியுள்ளார். இதனால், அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து, மத்திய அரசு ஆலோசித்து வருகிறது. பல்வேறு வங்கிகளில், 9,000 கோடி ரூபாய், கடன் பெற்று திருப்பிச் செலுத்தாத, கர்நாடகாவை சேர்ந்த, பிரபல தொழிலதிபர் விஜய் மல்லையா, பிரிட்டன் தப்பிச் சென்றார். அவரை கைது செய்ய, மும்பை கோர்ட், 'வாரன்ட்' பிறப்பித்துள்ளது; அவர் மீதான வழக்குகள், வேறு பல கோர்ட்டுகளிலும் நடைபெற்று வருகிறது; ... |
| மருத்துவ நுழைவு தேர்வு தேதிகளில்... மாற்றமில்லை கோரிக்கைகளை நிராகரித்தது சுப்ரீம் கோர்ட் Posted: 29 Apr 2016 10:19 AM PDT புதுடில்லி,: ''மருத்துவக் கல்லுாரிகளில் மாணவர் சேர்க்கைக்காக, ஏற்கனவே திட்டமிட்டபடி, மே, 1ம் தேதி நுழைவுத் தேர்வு நடத்தப்பட வேண்டும்; இதில் மாற்றம் எதுவும் செய்ய முடியாது,'' என, சுப்ரீம் கோர்ட் உறுதியாக தெரிவித்தது. 'நாடு முழுவதும் உள்ள, 400க்கும் மேற்பட்ட அரசு மற்றும் தனியார் மருத்துவக் கல்லுாரிகளில், இளங்கலை மருத்துவ மற்றும் பல் மருத்துவப் படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கையை, தேசிய நுழைவுத் தேர்வு மூலமே நிரப்ப வேண்டும்' என, சுப்ரீம் கோர்ட், நேற்று முன்தினம் தீர்ப்பளித்தது.'ஏற்கனவே, ஏ.ஐ.பி.எம்.டி., எனப்படும் அனைத்திந்திய மருத்துவ நுழைவுத் ... |
| மே முதல் வாரம் அ.தி.மு.க., அதிரடி? Posted: 29 Apr 2016 10:31 AM PDT 'என்னாடீ இது... அவிய்ங்கவிய்ங்க, அதக் குடுக்குறேன்... இதக் குடுக்குறேன்னு பொளந்து கட்டுறாய்ங்க... இந்தம்மா ஒண்ணுமே சொல்ல மாட்டேங்குறாங்க... பிரசாரத்துல பேசினாப்ல ஆயிடிச்சா... அறிக்கையைக் காணோம்...' மதுரை மேலமாசி வீதியில் நேற்று, பூக்காரம்மா ஒருத்தங்க கேட்ட கேள்வி இது. நியாயமான கேள்வியாகவே தெரிஞ்சிச்சு. ஏன் இவ்வளவு ரகசியம் காக்குறாங்க... என்ன விஷயம்...' என, நம் மண்டை சூடு பிடித்து சிந்திப்பதற்குள், 'எலக்சனுக்கு வேட்பாளர்களைத் தேர்வு செய்யிறப்பவே, அந்தம்மாவுக்கு கோவம் வந்திருச்சு... அதுல ஆரம்பிச்ச கொழப்பம் இன்னும் தீரல போலிருக்கு டீ... பேசாம இரு... ... |
| Posted: 29 Apr 2016 10:53 AM PDT அ.தி.மு.க.,வில் முன்னாள் அமைச்சர்கள் பொன்னையன், பண்ருட்டி ராமச்சந்திரன் போன்றோர் வேட்பாளர்களாக நீடிப்பரா என்ற கேள்வி எழுந்துள்ளது. ஏனெனில் தலைமை உத்தரவுப்படி சைதாப்பேட்டையில் போட்டியிடும் பொன்னையனுக்கு மாற்றாக தொகுதி எம்.எல்.ஏ., செந்தமிழன்; ஆலந்துாரில் நிற்கும் பண்ருட்டி ராமச்சந்திரனுக்கு மாற்றாக, 'சிட்டிங்' எம்.எல்.ஏ., வெங்கட்ராமன் ஆகியோர் மனு தாக்கல் செய்துள்ளனர்.பல தொகுதிகளில் மாற்று வேட்பாளர்களாக கட்சி நிர்வாகிகள் மனு தாக்கல் செய்திருப்பதால் இன்னமும் மாற்றம் இருக்குமோ என்ற பீதியில், வேட்பாளர்கள் 'திக்...திக்...' ... |
| கட்சி மாறப் போவதில்லை தா.பாண்டியன் திட்டவட்டம் Posted: 29 Apr 2016 11:05 AM PDT இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னாள் மாநில செயலர் தா.பாண்டியன், கட்சிக்குள் ஏற்பட்டுள்ள அதிருப்தி காரணமாக, முதல்வர் ஜெயலலிதா முன்னிலையில், அ.தி.மு.க.,வில் இணைய முடிவு செய்துள்ளார்' என, நேற்றைய, 'தினமலர்' நாளிதழில் செய்தி வெளியிடப்பட்டது. இதைத் தொடர்நது, தா.பாண்டியன் அளித்த பேட்டி:கட்சிக்குள் ஏற்பட்டுள்ள அதிருப்தி காரணமாக நான், அ.தி.மு.க.,வில் இணைய முடிவு செய்துள்ளேன் என்ற செய்தி தவறானது. இது, அடிப்படை ஆதாரமற்றதாகும். அப்படி எந்த ஒரு சம்பவமும் நடக்கவில்லை. எனது மகனை, சென்னை பல்கலைக்கழக துணைவேந்தராக்க நான் முயற்சி செய்கிறேன் என்பதும், தவறான ... |
| கருணாநிதி கூட்டம்; துப்பாக்கியால் பரபரப்பு Posted: 29 Apr 2016 11:08 AM PDT தி.மு.க., தலைவர் கருணாநிதி, தன் முதற்கட்ட பிரசாரத்தை, 23ம் தேதி மாலை சைதாப்பேட்டையில் துவக்கி, திருவாரூர், தஞ்சை, திருச்சி, விழுப்புரம் வழியாக, 28ம் தேதி செங்கல்பட்டில் முடித்தார். l முதல் நாள் பிரசாரத்தில் புதுப்பட்டினம், கல்பாக்கம், மரக்காணம் ஆகிய பகுதிகளில் பெண்கள் கூட்டம் அதிகளவில் காணப்பட்டது. l திருவாரூரில் வேட்பு மனு தாக்கல் செய்தார். குடும்ப உறுப்பினர்கள் அதிகம் பேர் திரண்டிருந்தனர்.தள்ளுமுள்ளு: கடந்த, 26ம் தேதி, தஞ்சாவூர் பொதுக் கூட்டத்தில் லட்சக்கணக்கான தொண்டர்கள் பங்கேற்றனர். கருணாநிதி மேடைக்கு நுழையும் முன், கட்சி தொண்டர்கள் ... |
| விஜயகாந்த் ஆலோசனை புறக்கணிப்பு வைகோ மீது தே.மு.தி.க.,வினர் கடுப்பு Posted: 29 Apr 2016 11:15 AM PDT விஜயகாந்த் ஆலோசனையை ஏற்று, தேர்தலில் போட்டியிடும் முடிவை, வைகோ எடுக்காதது, தே.மு.தி.க.,வினர் மத்தி யில் கடுப்பை ஏற்படுத்தி உள்ளது. மக்கள் நல கூட்டணி யில், தே.மு.தி.க., இடம்பெற மூல காரணம், ம.தி.மு.க., பொது செயலர் வைகோ. இதனால், தி.மு.க., கூட்டணியை விரும்பிய அக்கட்சியினர், வைகோ மீது ஏற்கனவே கடும் அதிருப்தியில் உள்ளனர். சாத்துார் தொகுதி: இந்நிலையில், கோவில் பட்டி தொகுதியில் போட்டியிடாமல் கடைசி நேரத்தில் வைகோ ஒதுங்கினார். வைகோவின் இந்த முடிவால், கூட்டணி யின் செல்வாக்கு சரியும் என விஜயகாந்த் மற்றும் அக்கட்சி நிர்வாகிகள் கருதினர்.இதையடுத்து, ... |
| மே.வங்கத்தில் இன்று 5ம் கட்ட தேர்தல் Posted: 29 Apr 2016 01:03 PM PDT கோல்கட்டா :மேற்கு வங்க மாநில சட்டசபைக்கு, இன்று, ஐந்தாம் கட்ட தேர்தல் நடைபெறுகிறது. மேற்கு வங்க மாநில சட்டசபைக்கு, ஏப்ரல், 4ல் துவங்கி, ஆறு கட்டங்களாக தேர்தல் நடைபெறுகிறது. இதில், முதல்வர் மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணமுல் காங்கிரசுக்கும், இடதுசாரி - காங்கிரஸ் கூட்டணிக்கும் இடையே நேரடி போட்டி நிலவுகிறது. பா.ஜ., தனித்து போட்டியிடுகிறது. இந்நிலையில், ஐந்தாம் கட்டமாக, தெற்கு 24 பர்கானா, ஹூக்ளி, கோல்கட்டா தெற்கு உள்ளிட்ட மாவட்டங்களில், 53 தொகுதிகளில், இன்று தேர்தல் நடைபெறுகிறது. மொத்தம், 349 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்; 1.2 கோடி வாக்காளர்கள், ஓட்டு போடவுள்ளனர். ... |
| You are subscribed to email updates from Dinamalar.com |ஏப்ரல் 30,2016. To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States | |