Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Tamil News | Online Tamil News

Tamil News | Online Tamil News


காமராஜர் உயரத்தை எட்டுவாரா ஜெ.,?

Posted: 02 Apr 2016 08:52 AM PDT

'தமிழகத்தின், 234 தொகுதிகளிலும் நாமே வெற்றி பெற வேண்டும்' என, முதல்வர் ஜெயலலிதா, தொண்டர்களுக்கு கடிதம் எழுதி உள்ளார். எந்த தலைவரும் பாதி தொகுதிகளில் ஜெயித்தால் போதும் என, அறிவுறுத்தப் போவதில்லை. அன்புணியும், சீமானுமே அப்படித்தான் அறிவுறுத்துவார்கள். இருப்பினும், இந்த முறை, அ.தி.மு.க., தனித்து போட்டியிடுவதில் ஒரு முக்கியமான மைல்கல் விஷயத்தை கவனிக்க வேண்டியிருக்கிறது.சட்டசபை தேர்தலில் இதுவரை, தமிழகத்தில், தனித்து போட்டியிட்டு, வெற்றி பெற்ற ஒரே கட்சி, காமராஜர் தலைமையிலான காங்கிரஸ் மட்டும் தான். அ.தி.மு.க.,வும் கிட்டத்தட்ட அதே நிலையில், இன்று இருப்பதாக ...

கல்விக்குழு என்ற பெயரில் தனியார் பள்ளிகளிடம் வசூல்:புத்தகங்கள் விற்பனையில் அதிகாரிகள் அடாவடி

Posted: 02 Apr 2016 09:02 AM PDT

கல்விக்குழு அமைப்பதாக கூறி தனியார் பள்ளிகளுக்கான 5 சதவீத பாடப் புத்தக தள்ளுபடியை வழங்காமல் கூடுதலாக ஆயிரக்கணக்கில் கல்வித்துறை அதிகாரிகள் வசூல் வேட்டை நடத்துவதாக புகார் எழுந்துள்ளது.தனியார் மெட்ரிக் பள்ளிகள் மற்றும் தமிழ் பாடப் புத்தகம் வாங்கும், மத்திய இடைநிலை கல்வி வாரியமான சி.பி.எஸ்.இ., பள்ளிகளுக்கு, தமிழ்நாடு பாடநுால் மற்றும்கல்வியியல் பணிகள் கழகத்தில், 5 சதவீத விலை சலுகை உண்டு. தனியார் பள்ளிகள் பாடப்புத்தகங்களுக்கான கட்டணத்தில் தமிழ்நாடு பாடநுால் கழகத்தில் 95 சதவீதம் அளித்தால் மட்டும் போதும். ஆனால் ஒவ்வொரு மெட்ரிக் ஆய்வாளர் அலுவலகம் ...

அரசியல் கட்சிகள் தேர்தல் அறிக்கை அடுத்த வாரம் வெளியீடு:இலவசங்களை அறிவிப்பர் என மக்கள் எதிர்பார்ப்பு

Posted: 02 Apr 2016 10:26 AM PDT

சட்டசபை தேர்தலில், பல முனைப் போட்டிகள் நிலவுவதால், வெற்றியை நிர்ணயிக்க உதவும், தேர்தல் அறிக்கையை, அடுத்த வாரத்தில், அரசியல் கட்சிகள், அடுத்தடுத்து வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது. அரசியல் கட்சிகளின் வாக்குறுதிகளை, மக்கள் ஆவலுடன் எதிர்பார்த்தபடி உள்ளனர்.தமிழக சட்டசபை தேர்தலில், இதுவரை இல்லாத அளவுக்கு, முதன் முறையாக, பல முனைப் போட்டி ஏற்பட்டுள்ளது. கடந்த, 2009 சட்டசபை தேர்தலில், அ.தி.மு.க., - தி.மு.க., - தே.மு.தி.க., என, மும்முனைப் போட்டி நிலவியது.

புதிய அமைப்புகள்:
இம்முறை அ.தி.மு.க., - தி.மு.க., - தே.மு.தி.க., மக்கள் நலக் கூட்டணி - பா.ம.க., - பா.ஜ., என, பல ...

சர்வதேச பயங்கரவாதிகள் இந்தியாவை தாக்கசதி திட்டம்:புலனாய்வு அமைப்புகள் பலத்த எச்சரிக்கை

Posted: 02 Apr 2016 10:46 AM PDT

புதுடில்லி;பாகிஸ்தான் மட்டுமின்றி, உலகம் முழுவதும் இருந்து பயங்கரவாத அமைப்புகள் இந்தியாவை குறி வைத்து செயல்படுவதாக, தகவல் வெளியாகியுள்ளது. இதனால், உள்நாட்டில் பாதுகாப்பை பலப்படுத்த வேண்டிய அவசியம் எழுந்துள்ளதாக புலனாய்வு அமைப்புகள் கூறியுள்ளன.பாகிஸ்தானில் இருந்து செயல்படும், லஷ்கர் - இ - தொய்பா, ஜெய்ஷ் - இ - முகமது உள்ளிட்ட பயங்கரவாத அமைப்புகள் இந்தியாவில், தொடர்ந்து நாசவேலைகளில் ஈடுபட்டு வருகின்றன.பார்லிமென்ட், அக் ஷர் தாம் கோவில் மற்றும் மும்பையில் தாக்குதல் நடத்திய பயங்கரவாதிகள், சமீபத்தில், பஞ்சாப் மாநிலம், பதன்கோட் விமானப்படை தளத்தின் ...

பறிமுதல் படகுகள் அவ்ளோதான்: இலங்கை அமைச்சர் திமிர்

Posted: 02 Apr 2016 10:52 AM PDT

''பறிமுதல் செய்யப்பட்ட தமிழக மீனவர்களின் படகுகள், யாழ்ப்பாணம் மீனவர்களுக்கு வழங்கப்படும். அத்துமீறி நுழையும், தமிழக மீனவர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்த, இங்குள்ள மீனவர்கள் வற்புறுத்துகின்றனர்,'' என, இலங்கை கடல் தொழில் அமைச்சர் மஹிந்த அமரவீர பேசி உள்ளது, தமிழக மீனவர்களை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.தமிழக - இலங்கை மீனவர்கள் பிரச்னைக்கு தீர்வு காண, மீனவ பிரதிநிதிகள் பங்கேற்ற, மூன்று கட்ட பேச்சு நடந்தும், முன்னேற்றம் இல்லை. அடுத்த கட்ட பேச்சு நடத்த வேண்டும்; இலங்கை சிறையில் உள்ள மீனவர்களை விடுவிப்பதோடு, படகுகளையும் விடுவிக்க வேண்டும் என, ...

மின் தேவையை அரசு ஆலோசிக்கவில்லை: கருணாநிதி

Posted: 02 Apr 2016 10:54 AM PDT

சென்னை: தி.மு.க., தலைவர் கருணாநிதி, நேற்று வெளியிட்ட அறிக்கை:இலவச கிரைண்டர்களை அரசுக்கு கொடுத்த அதன் தயாரிப்பாளர்களுக்கு, 400 கோடி ரூபாய் இன்னும் தர வேண்டும். வங்கிகளிடம் கடன் பெற்று, இலவச கிரைண்டர்களை அரசுக்கு வழங்கியவர்கள், வங்கிகளுக்கு கடன் கட்ட முடியாமல் சிரமப்படுகின்றனர். அரசிலே உள்ளவர்களிடம் கேட்டால், நாங்கள் உங்களுக்கு மட்டுமா கடன்பட்டிருக்கிறோம் என, கிண்டல் செய்கின்றனர்.மின் வாரியம், மதுரைபவர் என்ற நிறுவனத்திடம், 106 மெகாவாட், பிள்ளை பெருமாள் நல்லுார் நிறுவனத்திடம், 330.50 மெகாவாட் மின்சாரம், ஒரு யூனிட், 12 ரூபாய் வீதம் விலைக்கு வாங்க ...

தமிழக சட்டசபை தேர்தலுக்கு வேட்புமனு தாக்கல் துவங்க 20 நாள்: கூட்டணி, தொகுதிகள் முடிவு செய்வதில் இன்னமும் இழுபறி

Posted: 02 Apr 2016 10:56 AM PDT

தமிழக சட்டசபை தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் துவங்க, 20 நாட்களே உள்ள நிலையில்,கூட்டணி மற்றும் தொகுதிகளை முடிவு செய்வதில், கட்சிகள் இடையே, இன்னமும் இழுபறிநிலை நீடிக்கிறது. இதனால், பிரசாரத்திற்கு போதிய நாட்கள் இருக்காதே என,போட்டியிட உள்ள புள்ளிகள் கலக்கம் அடைந்துள்ளனர்.தமிழக சட்டசபை தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல், வரும், 22ல் துவங்குகிறது. அதற்கு இன்னும், 20 நாட்களே உள்ளன. ஆனால், தி.மு.க., - மக்கள் நலக் கூட்டணிகளில், இன்னும் தொகுதி பங்கீடு முடிவுக்கு வரவில்லை. அ.தி.மு.க., - த.மா.கா., போன்ற கட்சிகளில், கூட்டணியே முழுமை பெறவில்லை; இரு தரப்பிலும் இழுபறி ...

பயங்கரவாதிகளுக்கு அணு ஆயுதம் கிடைக்க கூடாது: மோடி திட்டவட்டம்

Posted: 02 Apr 2016 10:57 AM PDT

வாஷிங்டன்: ''அணு ஆயுதங்கள், பயங்கரவாதிகள் கைகளுக்கு சென்றுவிடக் கூடாது என்பதில், இந்தியா உறுதியாக உள்ளது. இதற்காக, பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன,'' என, பிரதமர் நரேந்திர மோடி கூறினார்.உலகம் முழுவதும் பயங்கரவாத தாக்குதல்கள் அதிகரித்து வரும் நிலையில், பேரழிவை ஏற்படுத்தக்கூடிய அணு ஆயுதங்கள், அவர்கள் கைகளுக்கு செல்லும் ஆபத்து இருந்து வருகிறது. பாக்., போன்ற நாடுகளிடமிருந்து, அணு ஆயுதங்களை கைப்பற்ற, பயங்கரவாதிகள் முயன்று வருகின்றனர்.எனவே, அணு ஆயுதங்களை பாதுகாப்பாக வைக்கவும், இந்த விஷயத்தில், உலக நாடுகளிடையே ஒருங்கிணைப்பை ஏற்படுத்தவும், ...

த.மா.கா.,வுக்கு அ.தி.மு.க.,வில் கதவடைப்பு!

Posted: 02 Apr 2016 11:05 AM PDT

தொடர்ந்து நிபந்தனைகளை விதித்து வந்த த.மா.கா.,வுக்கு, அ.தி.மு.க., கூட்டணி வாய்ப்பை மறுத்து, கதவை சாத்திவிட்டதாக கூறப்படுகிறது. சட்டசபை தேர்தலில், அ.தி.மு.க., கூட்டணியில், 35 தொகுதிகளை வாங்கி விட வேண்டும் என, கணக்குப் போட்டு அக்கட்சியினருடன், த.மா.கா., தரப்பு பேச்சு நடத்தி வந்தது.ஆனால், சின்ன கட்சிகளைப் போல, 'வரும் தேர்தலில், அ.தி.மு.க.,வுக்கு தான் எங்கள் ஆதரவு' என, த.மா.கா.,வும் வெளிப்படையாக அறிவிக்க வேண்டும் என, அ.தி.மு.க., தலைமை எதிர்பார்த்தது. ஆனால், அதற்கு த.மா.கா., தலைமை உடன்படவில்லை. இதனால், த.மா.கா.,வுடன் கூட்டணி அமைப்பதில், துவக்கம் முதல், அ.தி.மு.க., விருப்பம் ...

பெற்ற குழந்தையை இணையதளம் மூலம் விற்க முயன்ற தந்தை

Posted: 02 Apr 2016 12:42 PM PDT

பிரசில்லா: பிரேசிலில் இணையதளம் மூலம் குழந்தையை விற்க முயன்ற தந்தையை போலீசார் கைது செய்தனர். அவர் தனது விளம்பரத்தில், சிறந்த முதலீடு, அழகான குழந்தை ஆரோக்கியமான உடல்நிலையில் உள்ளது எனக்கூறி அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளார்.பிரேசிலின் தென் கிழக்கு பகுதியில் உள்ள பெலோ ஹாரிஜோன்டே என்ற இடத்தில் நடந்துள்ளது. கைது செய்யப்பட்ட நபர் ஓஎல்எக்ஸ் இணையதளத்தில், பிறந்த 10௦ நாளே ஆன தனது குழந்தையை விற்க முயற்சி செய்துள்ளார். இதனையடுத்து அவரை கைது செய்த போலீசார், அந்த நபரின் பெயர் அபிமயல் கோஸ்டா எனவும், அவருக்கு மூன்று குழந்தைகள் உள்ளதும் ...



Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™