Tamil News | Online Tamil News |
- சறுக்குகிறது அ.தி.மு.க.,
- டில்லி போக்குவரத்து கட்டுப்பாடு: விதி மீறிய பா.ஜ., - எம்.பி.,க்கு ரூ. 2,000 அபராதம்
- புல்லட் ரயில் திட்டம் சாத்தியமா?
- 'கரன்சி' இருந்தால் தான் காங்கிரஸ் கட்சியிலும் 'சீட்'
- ரேஷன் கடைகளில் பணப்பட்டுவாடா: ஊழியர்களை மிரட்டும் நிர்வாகிகள்
- ஜெ.,கொத்தடிமை ஆட்சிக்கு முடிவு: ஸ்டாலின்
- மல்லையாவுக்கு எதிராக மும் கோர்ட்.. விரைவில் கைதாக வாய்ப்புள்ளதாக தகவல்
- * தேர்தலை சந்திக்க எல்லா கட்சிகளிலும் வேட்பாளர்கள் அறிவிப்பு!... * உளுந்தூர்பேட்டையில் விஜயகாந்த் - பென்னாகரத்தில் அன்புமணி * காங்கிரசில் வழக்கம் போல் கடைசி நேரம் வரை காத்திருப்பு
- தி.மு.க.,வுடன் ஒப்பிட்டு பார்த்து ஓட்டளியுங்கள்! * காஞ்சிபுரத்தில் ஜெ., ஓட்டு சேகரிப்பு
- மசூத் அசார் விவகாரம் சீனாவுக்கு சுஷ்மா கண்டனம்
| Posted: 18 Apr 2016 07:28 AM PDT என்ன ஆயிற்று அ.தி.மு.க., பொதுச் செயலர் ஜெ.,க்கு? நடக்க இருக்கும் சட்டசபை தேர்தலுக்காக, மற்ற கட்சிகளுக்கு முந்தி, 4ம் தேதியே, 227 தொகுதிகளுக்கு வேட்பாளர் பெயரை அறிவித்தவர், அடுத்த, 15 நாட்களுக்குள், ஏழு முறை வேட்பாளர்களை மாற்றி விட்டார். 'அரசியலில் இதெல்லாம் சகஜமப்பா' என ஒதுக்கித் தள்ள முடியுமா இதை?காரணம், பட்டியல் வெளியாவதற்கு முன் நடந்த நேர்காணலின்போது, விண்ணப்பித்தவர்களின் தெளிவின்மை கண்டு, தனக்கு திருப்தி இல்லை எனச் சொன்னவர், தானாகவே ஒரு பட்டியலைத் தயார் செய்து வெளியிட்டார்.அவர் மனதுப்படி எல்லாம் நடந்திருந்தால், அந்தப் பட்டியலே, இறுதிப் ... |
| டில்லி போக்குவரத்து கட்டுப்பாடு: விதி மீறிய பா.ஜ., - எம்.பி.,க்கு ரூ. 2,000 அபராதம் Posted: 18 Apr 2016 08:13 AM PDT புதுடில்லி,:டில்லி ஆம் ஆத்மி அரசின் போக்குவரத்து கட்டுப்பாட்டு திட்டத்தின் இரண்டாம் கட்டம், நேற்று தான் முழு அளவில் அமலானது. விதியை மீறிய பா.ஜ., - எம்.பி., விஜய் கோயலுக்கு, 2,000 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது.உலகளவில், மாசு நிறைந்த நகரங்கள் பட்டியலில், டில்லியும் இடம் பிடித்துள்ளது. இதற்கு காரணம், அங்கு இயக்கப்படும், 90 லட்சம் வாகனங்கள் தான். காற்று மாசைக் கட்டுப்படுத்த, முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி அரசு, புதிய கட்டுப்பாடு திட்டத்தை அறிவித்தது. தனியார் வாகனங்களின் பதிவெண்ணின் கடைசி எண், ஒற்றைப்படையாக இருந்தால், அது, ஒற்றைப் படை ... |
| புல்லட் ரயில் திட்டம் சாத்தியமா? Posted: 18 Apr 2016 09:17 AM PDT ஆமதாபாத்:'மும்பை - ஆமதாபாத் இடையே, திட்டமிடப்பட்டுள்ள புல்லட் ரயில், ஒரு நாளைக்கு 1.1 லட்சம் பயணிகளை ஏற்றிச் சென்றால் தான், நஷ்டமின்றி இயங்க முடியும்' என, ஆய்வறிக்கையில் கூறப்பட்டுள்ளது. மஹாராஷ்டிர மாநில தலைநகர் மும்பை - குஜராத்தின் ஆமதாபாத் நகரங்களை இணைக்கும் வகையில், 534 கி.மீ., துாரத்துக்கு, புல்லட் ரயில் இயக்க, மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இத்திட்டத்துக்கு ஆகும் செலவில், 80 சதவீத தொகையாக, 97,636 கோடி ரூபாயை, 0.1 சதவீத வட்டியில், ஜப்பான் அரசு கடனாக வழங்குகிறது. இத்திட்டம் தொடர்பாக, ஆமதாபாத்தை சேர்ந்த, ஐ.ஐ.டி., நிறுவனம் ஆய்வு நடத்தி வெளியிட்ட அறிக்கை ... |
| 'கரன்சி' இருந்தால் தான் காங்கிரஸ் கட்சியிலும் 'சீட்' Posted: 18 Apr 2016 09:23 AM PDT தமிழக சட்டசபை தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் துவங்க, இன்னும் மூன்று தினங்களே உள்ள நிலையில், காங்கிரசில் வேட்பாளர்கள் அறிவிக்கப்படவில்லை.ஒவ்வொரு தேர்தலிலும், காங்கிரஸ் இப்படி தேர்தல் களத்தில் பின்தங்கியே இருந்து வருகிறது. இதுவே கூட்டணிக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்துவதாக உள்ளது.ஒவ்வொரு தொகுதியிலும், தங்கள் ஆதரவாளர்களுக்கு, 'சீட்' பெற்றுவிட வேண்டும் என, கோஷ்டி தலைவர்கள் அடித்துக் கொள்வது தான், இந்த தாமதத்திற்கு காரணம்.சத்தியமூர்த்தி பவனில் இருந்து, ஒவ்வொரு தொகுதிக்கும், மூன்று பேர் கொண்ட பட்டியல், டில்லி ... |
| ரேஷன் கடைகளில் பணப்பட்டுவாடா: ஊழியர்களை மிரட்டும் நிர்வாகிகள் Posted: 18 Apr 2016 09:31 AM PDT ரேஷன் கடைகள் மூலம் வாக்காளர்களுக்கு பணம் பட்டுவாடா செய்வதற்காக, அரசியல் கட்சி நிர்வாகிகள், ஊழியர்களை மிரட்டி, முறைகேடாக விவரங்களை எடுத்து செல்வதாக புகார் எழுந்துள்ளது. சட்டசபை தேர்தலுக்காக அரசியல் கட்சிகள், வாக்காளர்களுக்கு பரிசு பொருட்கள், பணம் கொடுக்க திட்டமிட்டுள்ளன. ஆனால், தேர்தல் ஆணையத்தின் கெடுபிடிகளால் அவற்றை வழங்க முடியாமல் திணறி வருகின்றன.இந்நிலையில், ரேஷன் கடைகள் மூலம் பணம் பட்டுவாடா செய்வதற்காக, ஊழியர்களை மிரட்டி, மக்களின் விவரங்களை கட்சியினர்எடுத்து செல்வதாக குற்றச்சாட்டு ... |
| ஜெ.,கொத்தடிமை ஆட்சிக்கு முடிவு: ஸ்டாலின் Posted: 18 Apr 2016 09:53 AM PDT கரூர்:''கரூரில், இரண்டு முறை வெற்றி பெற்ற செந்தில் பாலாஜியை அரவக்குறிச்சியில் எதற்காக போட்டியிட செய்தனர்? தி.மு.க., வேட்பாளர் கே.சி.பழனிசாமியிடம் தோற்க வேண்டும் என்பதற்காக இதை செய்துள்ளனர்,'' என, தி.மு.க., பொருளாளர் ஸ்டாலின் பேசினார். கரூர் மாவட்டத்தில் போட்டியிடும் தி.மு.க., வேட்பாளர்கள் அரவக்குறிச்சி - கே.சி.பழனிசாமி, குளித்தலை - ராமர் ஆகியோரை ஆதரித்து, குளித்தலையில் அக்கட்சி பொருளாளர் ஸ்டாலின் பேசியதாவது:கடந்த, 1957ல் குளித்தலையில், எப்போது முதன் முதலாக கருணாநிதி போட்டியிட்டாரோ அன்று முதல், தோல்வி என்பதை அறியாமல் ஒவ்வொரு ... |
| மல்லையாவுக்கு எதிராக மும் கோர்ட்.. விரைவில் கைதாக வாய்ப்புள்ளதாக தகவல் Posted: 18 Apr 2016 10:07 AM PDT மும்பை:வங்கிகளில் கடன் வாங்கி, திருப்பிச் செலுத்தாமல் மோசடி செய்ததாக தொடரப்பட்ட வழக்கில், பிரபல தொழிலதிபர் விஜய் மல்லையாவுக்கு எதிராக, மும்பை கோர்ட் பிடிவாரன்ட் பிறப்பித்துள்ளது. இதனால் அவர், பிரிட்டனில் இருந்து இந்தியாவுக்கு நாடு கடத்தப்பட்டு, கைது செய்யப்படுவதற்கான வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. பல்வேறு வங்கிகளுக்கு, 9,000 கோடி ரூபாய் கடன் பாக்கி வைத்துள்ளதாக, ஏய்ப்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள, 'கிங்பிஷர் ஏர்லைன்ஸ்' நிறுவனத்தலைவர் விஜய் மல்லையா மீது, சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு உள்ளது. இந்நிலையில், பிரிட்டன் தலைநகர் லண்டனுக்கு, கடந்த மாதம், விஜய் ... |
| Posted: 18 Apr 2016 10:15 AM PDT சட்டசபை தேர்தலை சந்திக்க எல்லா கட்சிகளிலும் வேட்பாளர்கள் அறிவிப்பு தீவிரமடைந்துள்ளது. தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்த் உளுந்துார்பேட்டையிலும் பா.ம.க., முதல்வர் வேட்பாளர் அன்புமணி, பென்னாகரத்திலும் போட்டியிடுகின்றனர். வழக்கம் போல காங்கிரசில் மட்டும் காத்திருப்பு படலம் கடைசி வரை நீடிக்கும் என தெரிகிறது. * கடந்த 2006ம் ஆண்டு சட்டசபை தேர்தலில் கடலுார் மாவட்டம் விருத்தாசலம் தொகுதியிலும்; 2011ல் விழுப்புரம் மாவட்டம், ரிஷிவந்தியம் தொகுதியிலும் விஜயகாந்த் போட்டியிட்டு வெற்றி பெற்றார். இந்த தேர்தலில் முதல்வர் வேட்பாளராக, உளுந்துார்போட்டை ... |
| தி.மு.க.,வுடன் ஒப்பிட்டு பார்த்து ஓட்டளியுங்கள்! * காஞ்சிபுரத்தில் ஜெ., ஓட்டு சேகரிப்பு Posted: 18 Apr 2016 10:32 AM PDT காஞ்சிபுரம்: ''தமிழக மக்களே, தி.மு.க., ஆட்சியையும், என் ஆட்சியையும் ஒப்பிட்டுப் பார்த்து, வரும் சட்டசபை தேர்தலில் ஓட்டளிக்க வேண்டும்,'' என, வாரணவாசியில் நடைபெற்ற, அ.தி.மு.க., தேர்தல் பிரசார கூட்டத்தில், அ.தி.மு.க., பொதுச் செயலரும், தமிழக முதல்வருமான ஜெயலலிதா பேசினார்.அ.தி.மு.க., வேட்பாளர்களை ஆதரித்து, காஞ்சிபுரம் மாவட்டம், வாரணவாசியில் நடைபெற்ற கூட்டத்தில், ஜெயலலிதா பேசியதாவது: கடந்த, 2011 சட்டசபை தேர்தலின் போது, 'குடும்ப ஆட்சியை ஒழிக்க வேண்டும்; மக்களாட்சி மலர வேண்டும்' என, அ.தி.மு.க.,வை ஆட்சியில் அமர்த்தினீர்கள். நான் ஆட்சி பொறுப்பில் வந்தவுடன், ... |
| மசூத் அசார் விவகாரம் சீனாவுக்கு சுஷ்மா கண்டனம் Posted: 18 Apr 2016 01:46 PM PDT மாஸ்கோ: பாகிஸ்தான் பயங்கரவாதி மசூத் அசாரை, சர்வதேச பயங்கரவாதியாக அறிவிக்கும் முயற்சிக்கு, சீனா தடையாக இருப்பதற்கு, ரஷ்யா சென்றுள்ள வெளியுறவு அமைச்சர் சுஷ்மா சுவராஜ், நேரில் கண்டனம் தெரிவித்தார்.ரஷ்யா, சீனா, இந்தியா வெளியுறவு அமைச்சர்கள் மாநாடு, ரஷ்யாவின் மாஸ்கோவில் நடக்கிறது. இதற்காக மாஸ்கோ சென்றுள்ள வெளியுறவு அமைச்சர் சுஷ்மா சுவராஜ், சீன வெளியுறவு அமைச்சர் வாங்க் யீயை, நேற்று சந்தித்து பேசினார்.இரு தரப்பு உறவுகள் குறித்து இந்த சந்திப்பின்போது விவாதிக்கப்பட்டது.பாகிஸ்தானில் இருந்து செயல்படும் லஷ்கர் - இ- தொய்பா அமைப்பின் தலைவரும், பதன்கோட் ... |
| You are subscribed to email updates from Dinamalar.com |ஏப்ரல் 19,2016. To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States | |