Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Tamil News | Online Tamil News

Tamil News | Online Tamil News


ஈயடிக்கும் பிரசார கூட்டங்கள்

Posted: 17 Apr 2016 09:18 AM PDT

இந்த சட்டசபை தேர்தலுக்கும், ஈக்களுக்கும் எப்படி நெருங்கிய தொடர்பு ஏற்பட்டதோ

தெரியவில்லை. ஒரு கட்சியின் தேர்தல் அறிக்கையில் இருந்த ஈ, அடுத்த கட்சியின் அறிக்கையின் மீது அமர்ந்ததை நாம் பார்த்தோம். அதே ஈ, இன்னும் எந்தெந்த கட்சிகளின் அறிக்கை மீது அமரப் போகிறதோ, யாமறியோம் ஈயே!
மற்றொரு வகை ஈ, மாநிலம் முழுதும் சுற்றி வருகிறது. ஒவ்வொரு கட்சியும் பிரசாரம் செய்யும் இடங்களில் அமர்கிறது. புரிகிறதா, இல்லையா? அதாவது, பிரசாரக் கூட்டங்களில், கூட்டமே இல்லை என்பது தான், அதற்கு அர்த்தம்.
பொதுவாக, அ.தி.மு.க., பொதுச் செயலர் ஜெயலலிதா பேசும் கூட்டங்களிலோ, ...

தேர்தல் கமிஷனுடன் மோதும் மம்தாவுக்கு கண்டனம்:தோல்வி நிச்சயம் என பிரதமர் மோடி ஆவேசம்

Posted: 17 Apr 2016 10:11 AM PDT

கோல்கட்டா:மேற்கு வங்க மாநில சட்டசபைக்கான இரண்டாவது கட்ட தேர்தல் நேற்று நடந்தது. இதில், 80 சதவீத ஓட்டுக்கள் பதிவாகின. அதேசமயம், மூன்றாம் கட்ட தேர்தல் நடக்கவுள்ள தொகுதிகளில் பிரசாரத்தில் ஈடுபட்ட பிரதமர் நரேந்திர மோடி, தேர்தல் கமிஷனுடன் மோதல் போக்கை கையாண்டு வரும் முதல்வர் மம்தா பானர்ஜிக்கு, கடும் கண்டனம் தெரிவித்தார்.

மேற்கு வங்க மாநில சட்டசபைக்கு ஆறு கட்டங்களாக தேர்தல் நடக்கிறது. மே, 19ல் ஓட்டு எண்ணிக்கை நடக்கிறது. ஏற்கனவே, ஏப்., 4 மற்றும் 11 என, இரு நாட்களில், மொத்தம், 49 தொகுதிகளுக்கு முதல் கட்ட தேர்தல் நடந்தது. இரண்டாம் கட்ட தேர்தலுக்கான ...

சமையல் 'காஸ்' சிலிண்டருடன்ரூ.5 லட்சத்துக்கு இலவச இன்சூரன்ஸ்

Posted: 17 Apr 2016 10:14 AM PDT

புதுடில்லி;சமையல் காஸ் சிலிண்டர் வாங்கும் நுகர்வோருக்கு, அதனுடன், ஐந்து லட்சம் ரூபாய் மதிப்பிலான, 'இன்சூரன்ஸ்' திட்டம் இலவசமாக வழங்கப்படுகிறது.

உயிரிழக்க நேரிட்டால்...நம் வாழ்வில் எதிர்கொள்ளும் பல்வேறு ஆபத்துக்களுக்கு, இன்சூரன்ஸ் திட்டங்களை, குறிப்பிட்ட, 'பிரீமியம்' தொகை செலுத்தி பெற முடியும். ஆனால், சில இன்சூரன்ஸ் திட்டங்கள், நமக்கு இலவசமாக கிடைக்கின்றன. எல்.பி.ஜி.,
எனப்படும், சமையல் காஸ் சிலிண்டர் அல்லது பைப் மூலம் கிடைக்கும் சமையல் காஸ் போன்றவற்றை வாங்கும் நுகர்வோர், விபத்தில் உயிரிழக்க நேரிட்டால், ஐந்து லட்சம் ரூபாய் ...

சொத்து வாங்க, வங்கி கணக்கு துவங்க அனுமதி:பாக்., ஹிந்து அகதிகளுக்கு மத்திய அரசு சலுகை

Posted: 17 Apr 2016 10:58 AM PDT

புதுடில்லி:இந்தியாவில் தஞ்சமடைந்துள்ள, பாகிஸ்தான் ஹிந்து அகதிகள், சொத்துக்கள் வாங்கவும், வங்கிக் கணக்குகள் துவங்கவும் அனுமதியளித்து, மத்திய அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

பாகிஸ்தான், வங்கதேசம் போன்ற அண்டை நாடுகளில் இருந்து, இந்தியாவில் தஞ்சமடைந்துள்ள அகதிகளுக்கு, பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான, தே.ஜ., கூட்டணி அரசு, பல்வேறு சலுகைகளை வழங்கி வருகிறது. பாக்., ஹிந்து அகதிகள் நீண்ட காலம் இந்தியாவில் தங்கியிருக்க வசதியாக, நீண்ட கால, 'விசா' வழங்கப்பட்டது. விசா காலம் முடிவடைந்த பிறகும், இந்தியாவில் தங்கியிருக்க அனுமதி வழங்கப்பட்டது.
இந்த ...

முதல்வர் ஜெயலலிதாவை எதிர்த்து திருமாவளவன்.போட்டி?

Posted: 17 Apr 2016 11:02 AM PDT

விடுதலை சிறுத்தைகள் மீதான 'இமேஜை' மாற்றுவதற்காக சென்னை ஆர்.கே.நகர் தொகுதியில், முதல்வர் ஜெயலலிதாவை எதிர்த்து போட்டியிட திருமாவளவன் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

அ.தி.மு.க., - தி.மு.க., கூட்டணியில் மாறி மாறி இணைந்து தேர்தலை சந்தித்து வந்த விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கும் அதன் தலைவர் திருமாவளவனுக்கும் வெற்றி - தோல்வி கிட்டியுள்ளது. இருப்பினும் கட்சி ஆரம்பித்து 25 ஆண்டுகள் ஆகியும் அதை ஒரு கட்டத்திற்கு மேல் அவரால் வளர்க்க முடியவில்லை.தாழ்த்தப்பட்ட மக்களுக்கான இயக்கம் என்பதால் மற்ற சமுதாய மக்களிடம் இருந்து விடுதலை சிறுத்தைகள் விலகியே ...

கூட்டு பிரசாரம் இல்லை: தே.மு.தி.க., - ம.ந.கூ., முடிவு

Posted: 17 Apr 2016 11:50 AM PDT

தே.மு.தி.க., - -ம.ந.கூட்டணியில், தே.மு.தி.க., தரப்பில், 93 தொகுதி வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டு உள்ளனர்.

ம.தி.மு.க., அனைத்து தொகுதிகளுக்கும் வேட்பாளர்களை அறிவித்துள்ளது. வி.சி., வேட்பாளர் பட்டியல் இன்று அல்லது, நாளை அறிவிக்கப்படுகிறது. இந்திய கம்யூ., வேட்பாளர் பட்டியல், இன்று வெளியாக வாய்ப்புள்ளது. மார்க்சிஸ்ட் பட்டியலும், இந்த வாரத்தில் வெளியிடப்படும் என கூறப்படுகிறது. வேட்பாளர் களை அறிவித்த கையோடு, தே.மு.தி.க.,தலைவர் விஜய காந்த், அவரது மனைவி பிரேம லதா, ம.தி.மு.க., பொதுச் செயலர் வைகோ, சுற்றுப்பயணத்தை துவங்கினர்.
மற்ற தலைவர்களும் வேட்பாளர்களை ...

உண்மையான கபட நாடகம்!: கருணாநிதி

Posted: 17 Apr 2016 12:22 PM PDT

கச்சத்தீவை மீட்கும் அதிகாரம் மத்திய அரசுக்கு தான் இருக்கிறது.

இந்தியாவிற்கும், இலங்கைக்கும் இடையே நல்லுறவு வேண்டும் என்பதற்காகவே, கச்சத்தீவு இலங்கைக்கு கொடுக்கப்பட்டது. கச்சத்தீவில்,இலங்கைக்கு உள்ள இறையாண் மையை ஏற்றுக் கொள்ள வேண்டும் என, ஏற்கனவே பேசி அறிக்கை விடுத்த ஜெயலலிதா, அவ்வளவை யும் திரை போட்டு மறைத்துமூடி ஓடி விட்டு, கச்சதீவை நான் தாரை வார்த்து விட்டேன் என்றும், தான் மீண்டும் ஆட்சிக்கு வந்தால், அதை மீட்பேன் என்றும், தற்போது தேர்தல் நேரத்தில் பேசுவது தான் உண்மையான கபட ...

எந்த பதவியும் எனக்கு வேண்டாம்; ஸ்டாலின் பரபரப்பு பேச்சு

Posted: 17 Apr 2016 12:27 PM PDT

''கருணாநிதியின் மகன் என்கிற அங்கீகாரம் ஒன்றே போதும்; எனக்கு, எந்த பதவியும் தேவையில்லை,'' என, ஸ்டாலின் பேசினார்.

திருப்பூர் மாவட்டம், பல்லடம் தி.மு.க., வேட்பாளர் கிருஷ்ணமூர்த்தியை ஆதரித்து, ஸ்டாலின் பேசியதாவது: தி.மு.க., தேர்தல் அறிக்கையில், 501 வாக்குறுதிகள் உள்ளன. ஒவ்வொரு மாவட்ட அளவிலான தேவைகளை நிறைவேற்றும் வகையில், அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது. மதுவிலக்கு முடியாது என்று சட்டசபையில் கூறிய ஜெயலலிதா, இப்போது, படிப்படியாக குறைக்கிறோம் என்கிறார்.எனக்கு எந்த பதவியும் தேவையில்லை; கருணாநிதி மகன் என்கிற அங்கீகாரம் போதும். உடல் நலன் உள்ளிட்ட எதையும் ...

குட்டிக்கதை சொல்லி விஜயகாந்த் பிரசாரம்

Posted: 17 Apr 2016 12:49 PM PDT

வேலுார்;வேலுார் மாவட்டம், திருப்பத்துாரில் தே.மு.தி.க., பிரசார பொதுக்கூட்டம், நேற்று முன்தினம் இரவு நடந்தது. அதில், தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்த் பேசியதாவது:

ஒரு குட்டிக்கதை சொல்கிறேன். ஒரு குரு, தனது சீடர்கள் 50 பேரிடம், மாம்பழங்களை கொடுத்து, அதை மறைவான இடத்தில், சாப்பிடுமாறு சொல்கிறார். அவர்களில், ஒரு சீடன் மட்டும் திரும்பி வந்து, குருவிடம் நின்றான்.அவனிடம், 'உனக்கு மறைவான இடம் கிடைக்கவில்லையா' என்று குரு கேட்டார். அதற்கு, 'எல்லாவற்றையும் மேலே இருப்பவன் பார்த்துக் கொண்டிருக்கிறான்' என்று பதில் சொன்னான் சீடன்.அதைபோலதான், இவர்கள் செய்யும் ...

'பேரிடர்களை சந்திக்க பயிற்சி:நாட்டு மக்களுக்கு அவசியம்'

Posted: 17 Apr 2016 01:17 PM PDT

புதுடில்லி : நாட்டில், வெள்ளம், நிலநடுக்கம் என பேரிடர்கள் தொடர்ந்து வரும் நிலையில், ''பேரிடர்களை எதிர்த்து போராட, நாட்டு மக்கள் அனைவருக்கும் பயிற்சி அளிக்க வேண்டிய நேரம் இது,'' என, என்.டி.ஆர்.எப்., எனும், தேசிய பேரிடர் மீட்புப் படை இயக்குனர். ஓ.பி.சிங் தெரிவித்தார்.

டில்லி ஐ.ஐ.டி.,யைச் சேர்ந்த இரு ஆய்வாளர்கள், என்.டி.ஆர்.எப்., சந்திக்கும் சவால்கள், நடைமுறைகள் குறித்து ஆய்வு செய்துள்ளனர். இந்த அறிக்கை சமீபத்தில் வெளியிடப்பட்டது. இதுசம்பந்தமான கருத்தரங்கம், டில்லியில் நடந்தது.
இதில், தேசிய பேரிடர் மீட்புப் படை இயக்குனர் ஓ.பி.சிங் ...



Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™