Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Tamil News | Online Tamil News

Tamil News | Online Tamil News


பலமுனை போட்டி நிலவுவதால் வேட்பாளர் எண்ணிக்கை. அதிகரிக்கும்! 22ம் தேதி துவங்கும் மனு தாக்கலுக்கு ஏற்பாடுகள் தயார்

Posted: 16 Apr 2016 06:49 AM PDT

தமிழகம் மற்றும் புதுச்சேரி சட்டசபை தேர்தலுக்கான, வேட்பு மனு தாக்கல், இம்மாதம் 22ல் துவங்குகிறது. இம்முறை பலமுனைப் போட்டி நிலவுவதால், வேட்பாளர் எண்ணிக்கை அதிகரிக்கும் என, எதிர்பார்க்கப்படுகிறது.

தமிழகத்தில், அரசியல் கட்சிகள் இடையே, கூட்டணி உருவாகி, தொகுதி பங்கீடு முடிந்து, ஒவ்வொரு கட்சியும், வேட்பாளர் பட்டியலை வெளியிட்டு வருகின்றன. அ.தி.மு.க., பொதுச் செயலர் ஜெயலலிதா, வேட்பாளர் பட்டியலை, ஏப்., 4ல் வெளியிட்டார். வேட்பாளர்களை ஆதரித்து, ஏப்., 9ல் தேர்தல் பிரசாரத்தை துவக்கினார். தி.மு.க.,வும் வேட்பாளர் பட்டியலை அறிவித்து, பிரசாரத்தை துவக்கி உள்ளது. தி.மு.க., ...

தேசிய நெடுஞ்சாலைகளில் வேகத்தடைகளை அகற்ற. உத்தரவு ! விபத்துகளை தடுக்க மத்திய அரசு நடவடிக்கை

Posted: 16 Apr 2016 07:51 AM PDT

புதுடில்லி:'தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள எண்ணற்ற வேகத் தடைகளால், விபத்து ஏற்பட்டு, பொதுமக்கள் அதிகளவில் பலியாகின்றனர்.

இதனால், அனுமதியின்றி போடப்பட்டுள்ள வேகத் தடைகளை உடனே அகற்ற வேண்டும்' என, மாநில அரசுகளுக்கு, மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.மாநில அரசுகளுக்கு, மத்திய சாலை போக்குவரத்து அமைச்சகம் எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது: வாகனங்கள், நெருக்கடியில் சிக்காமல், வேகமாகச் செல்வதற்காகத் தான், தேசிய நெடுஞ்சாலைகள் அமைக்கப்படுகின்றன.
வேகத்தடை
ஆனால், பல மாநிலங்களில், தேசிய நெடுஞ்சாலைகளில், உள்ளூர் நிர்வாகம், வேகத் தடைகளை ...

பொருளாதார குற்றங்களில் ஊழியர் பங்கு 61 சதவீதம் அம்பலம் ! கோடிக்கணக்கில் நஷ்டத்தை சந்திக்கும் நிறுவனங்கள்

Posted: 16 Apr 2016 08:42 AM PDT

புதுடில்லி: நாடு முழுவதும், நான்கில் ஒரு நிறுவனம் பொருளாதார குற்றங்களால் பாதிக்கப்பட்டு உள்ளதாகவும், பொருளாதார குற்றங்களில், 61 சதவீதம், நிறுவனங்களின் ஊழியர்களால் அரங்கேற்றப்படுவதாகவும், ஆய்வு முடிவுகள் அதிர்ச்சி தகவல்களை அம்பலப்படுத்தி உள்ளன.

சர்வதேச அளவில் முன்னணியில் உள்ள, நிதித்துறை சார்ந்த ஆய்வு நிறுவனங்களில் ஒன்று, பி.டபிள்யூ.சி., எனப்படும் பிரைஸ் வாட்டர்ஹவுஸ் கூப்பர். இந்த நிறுவனம், இந்திய தொழில் நிறுவனங்களில் சமீபத்தில் நடத்திய ஆய்வு முடிவுகள் விவரம்:கடந்த இரு ஆண்டுகளில், நாடு முழுவதும், 73 சதவீத நிறுவனங்கள், பொருளாதார ...

ஜெ.,வின் 'ஸ்டீரியோ டைப்' பிரசாரம்: அ.தி.மு.க.,வினர் அதிருப்தி

Posted: 16 Apr 2016 09:02 AM PDT

மக்களை ஓரிடத்திற்கு அழைத்து வந்து, அரசு சாதனைகளை பட்டியலிடும் ஜெயலலிதாவின் பிரசாரம், மக்களை கவராதது, கட்சியினரிடம் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.

அனைத்து கட்சிகளுக்கும் முன், அ.தி.மு.க., வேட்பாளர் பட்டியலை, ஏப்., 4ம் தேதி, ஜெயலலிதா வெளியிட்டார். அன்றே தேர்தல் பிரசார சுற்றுப்பயணத்தை அறிவித்தார். அடுத்து ஏப்., 9ம் தேதி, சென்னை தீவுத்திடலில் பிரசார பொதுக்கூட்டத்தில் பேசினார்.
பயணம் துவக்கம்
அதைத் தொடர்ந்து, கடலுார் மாவட்டம், விருத்தாசலம்; தர்மபுரி; விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டை ஆகிய இடங்களில், அ.தி.மு.க., வேட்பாளர்களை ஆதரித்து ...

சுலபமான 'மொபைல்' பண பரிமாற்றம் மத்திய அரசின் திட்டம் அறிமுகம்

Posted: 16 Apr 2016 09:05 AM PDT

புதுடில்லி: 'ஸ்மார்ட்போனில்' இருந்து, எஸ்.எம்.எஸ்., அனுப்புவது போல், மிகவும் சுலபமாக, பணத்தை பரிமாறிக் கொள்ளும், யு.பி.ஐ., எனப்படும் ஒருங்கிணைந்த பணம் செலுத்தும் முறை அறிமுகம் செய்யப்பட்டது.

மத்திய அரசின், தேசிய பணம் செலுத்தும் வாரியம் மற்றும் மத்திய ரிசர்வ் வங்கி இணைந்து, இந்த புதிய முறையை வடிவமைத்து உள்ளன.தற்போது, நாடு முழுவதும் நடக்கும் வர்த்தகத்தில், 95 சதவீதம் மற்றும் அதன் மதிப்பில், 65 சதவீதம் ரொக்கமாகவே செலுத்தப்படுகிறது.நாட்டில், 50 கோடி பேரிடம் ஸ்மார்ட் போன் உள்ளதால், மொபைல் போன் மூலம் வர்த்தக நடைமுறைகளை மேற்கொள்ள, மத்திய அரசு ...

தி.மு.க., தேர்தல் அறிக்கைதான் தமிழகத்தை மீட்கும் 'ஹீரோ': ஸ்டாலின் வர்ணனை

Posted: 16 Apr 2016 09:34 AM PDT

வத்தலக்குண்டு: ''ஜெயலலிதாவிடம் இருந்து தமிழகத்தை மீட்கும் ஹீரோ தி.மு.க.,வின் தேர்தல் அறிக்கை,'' என தி.மு.க., பொருளாளர் ஸ்டாலின் பேசினார்.

திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை (தனி) தொகுதி வேட்பாளர் அன்பழகனை ஆதரித்து வத்தலக்குண்டில் ஸ்டாலின் பேசியதாவது: தேர்தல் சமயத்தில் மட்டும் மக்களை சந்தித்து ஓட்டுக் கேட்கும் முதல்வர் ஜெலலிதாவை போல அல்ல நான். இரண்டாவது முறையாக உங்களை சந்திக்க வந்துள்ளேன்.நாங்கள் மாநிலத்திற்கு ஒரு தேர்தல் அறிக்கையும், மாவட்டத்துக்கு ஒரு தேர்தல் அறிக்கையும் வெளியிட்டுள்ளோம். ஆனால் அ.தி.மு.க., ஆட்சியில் திண்டுக்கல் பாதாள சாக்கடை ...

களத்தில் வைகோ: விஜயகாந்த் தொகுதி எது?

Posted: 16 Apr 2016 10:06 AM PDT

கோவில்பட்டி தொகுதியில் ம.தி.மு.க., பொதுச் செயலர் வைகோ போட்டியிடப் போவதாக அறிவித்துள்ள நிலையில், திருமாவளவன், விஜயகாந்த் போட்டியிடும் தொகுதிகள் குறித்து தகவல் வெளியாகி உள்ளது.

இதுவரை, ஏழு முறை இந்த தொகுதியில் வெற்றி பெற்றுள்ள, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, இந்த முறை வைகோவுக்காக தொகுதியை விட்டுக் கொடுக்க, கடைசி வரை முரண்டு பிடித்ததாக கூறப்படுகிறது.இந்திய கம்யூனிஸ்ட் கட்சியிடம் இருந்து போராடி பெற்றுள்ள இந்த தொகுதியில், வெற்றி பெற முடியாவிட்டாலும், இரண்டாம் இடத்தையாவது பெற வேண்டும்என்ற எண்ணத்தில், தென் மாவட்டகட்சியினரை, கோவில்பட்டி நோக்கி, ...

தமிழகத்தின் மின் தேவை15,000 மெகாவாட்டாக...எகிறியது! காற்றாலை கைகொடுத்தால்மே மாதம் சமாளிக்கலாம்

Posted: 16 Apr 2016 10:28 AM PDT

கடும் வெயில்காரணமாக தமிழகத்தின் தினசரி மின் தேவை 15 ஆயிரம் மெகாவாட்டை தொட்டுள்ளது. காற்றாலை மின்சாரம்

கைகொடுத்தால் மட்டுமே மே மாத மின் தேவையை சமாளிக்க முடியும்.கடந்த 15 மாலை தமிழகத்தின் மின் தேவை 14 ஆயிரத்து, 969 மெகாவாட்டாகஅதிகரித்து புதிய வரலாறு படைத்தது. அதே அளவிற்கு மின் உற்பத்தியும் மின்கொள்முதலும் இருந்த தால் மின் பற்றாக்குறை ஏற்படவில்லை.ஆனால் வானிலை ஆய்வுமையம் நேற்று முன்தினம் சொன்னதுபோல் நேற்று வெப்பம் அதிகரித்தது; இன்றும் அதிகரித்தே காணப்படும் எனக் கூறப்பட்டுள்ளது. அதனால் இன்னும் சில தினங்களில் மின் தேவை 15 ஆயிரம் ...

ஏழு ஆண்டுகளில் 17 புராதன கோவில்கள் சிதைப்பு: திருப்பணி பெயரில் அறநிலையத்துறை அட்டூழியம்

Posted: 16 Apr 2016 11:36 AM PDT

தமிழகத்தில், திருப்பணி என்ற பெயரில், கடந்த, ஏழு ஆண்டுகளில், 17 புராதன கோவில்கள், அறநிலையத்துறை துணையுடன் சிதைக்கப்பட்டு உள்ளது தெரியவந்துள்ளது.

இதன் பின்னணியில், சர்வதேச சிலை கடத்தல் கும்பல்களுக்கு தொடர்பு இருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்து உள்ளது. தமிழகத்தில் பாரம்பரிய சிறப்பு மிக்க கோவில்களை பாதுகாக்க, 17 உறுப்பினர் அடங்கிய வல்லுனர் குழுவை அமைக்கும் நடவடிக்கைகளை, தமிழக அரசு கிடப்பில் போட்டு உள்ளதாக புகார் எழுந்தது. இந்த விவகாரத்தை, உயர் நீதிமன்றம் தானாக முன்வந்து வழக்காக எடுத்து விசாரித்தது.
தடை
கோவில்கள், தொல்லியல் ...



Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™