Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Tamil News | Online Tamil News

Tamil News | Online Tamil News


கிரானைட் தொழிலதிபரை விடுதலை செய்த மாஜிஸ்திரேட் சஸ்பெண்ட்: நேரில் நடந்த விசாரணைக்குப்பின் ஐகோர்ட் அதிரடி உத்தரவு

Posted: 01 Apr 2016 11:43 AM PDT

மதுரை: கிரானைட் குவாரி முறைகேடு வழக்குகளை விசாரித்து வந்த, மதுரை மாவட்டம், மேலுார் குற்றவியல் நீதித்துறை மாஜிஸ்திரேட் மகேந்திர பூபதி, நேற்று, 'சஸ்பெண்ட்' செய்யப்பட்டார். கிரானைட் தொழிலதிபரை விடுதலை செய்து, மாஜிஸ்திரேட் மகேந்திர பூபதி பிறப்பித்த உத்தரவு குறித்து, நேரில் விசாரணை நடத்திய பின், உயர் நீதிமன்ற பதிவுத்துறை, இதற்கான உத்தரவை பிறப்பித்தது.மதுரை, மேலுார் பகுதியில், கிரானைட் முறைகேட்டில் ஈடுபட்டதாக, பி.ஆர்.பி., உட்பட பல நிறுவனங்கள் மீது மேலுார், ஒத்தக்கடை, கீழவளவு போலீஸ் நிலையங்களில், 98 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன.இந்த கிரானைட் வழக்குகள் ...

மத்திய அமைச்சர்கள் குற்றச்சாட்டு: மின் வாரிய அதிகாரிகள் மகிழ்ச்சி

Posted: 01 Apr 2016 11:45 AM PDT

தமிழக மின் திட்டங்கள் குறித்து, மத்திய அமைச்சர்கள் புகார் எழுப்பி வருவதால், தமிழ்நாடு மின் வாரிய அதிகாரிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.தனியார் நிறுவனங்களிடம் மின்சாரம் கொள்முதல் உட்பட பல காரணங்களால், தமிழ்நாடு மின் வாரியத்தின் கடன் சுமை, ஒரு லட்சம் கோடி ரூபாயை எட்டி உள்ளது. இதனால், புதிய மின் திட்டங்கள், துணை மின் நிலையம் உள்ளிட்ட பணிகளை, மின் வாரியத்தால், சொந்த நிதியில் மேற்கொள்ள முடியவில்லை. மத்திய அரசின் உதவியை, மின் வாரியம் எதிர்பார்க்கிறது.இந்த நிலையில், மின் திட்டங்களை செயல் படுத்துவதில், தமிழக அரசு அலட்சியம் காட்டுவதாகவும், பலமுறை ...

'பயங்கரவாதிகளுடன் தொடர்பு': பாக்., மீது பிரதமர் மோடி மறைமுக தாக்கு

Posted: 01 Apr 2016 11:46 AM PDT

வாஷிங்டன்:''நாட்டை வழி நடத்துபவர்கள், பயங்கரவாதிகளுடன் சேர்ந்து செயல்படுவது, மிகப்பெரிய ஆபத்து,'' என பிரதமர் நரேந்திர மோடி, பாகிஸ்தானை மறைமுகமாக தாக்கி பேசினார்.உலகம் முழுவதும் பயங்கரவாத தாக்குதல்கள் அதிகரித்து வரும் நிலையில், பேரழிவை ஏற்படுத்தக்கூடிய, அணு ஆயுதங்கள் அவர்கள் கைகளுக்கு செல்லும் ஆபத்து இருந்து வருகிறது.குறிப்பாக பாகிஸ்தான் போன்ற நாடுகளிடம் இருந்து, அணுஆயுதங்களை கைபற்ற பயங்கரவாதிகள் முயன்று வருகின்றனர்.எனவே, அணு ஆயுதங்களை பாதுகாப்பாக வைக்கவும், இந்த விஷயத்தில் உலக நாடுகளிடையே, ஒருங்கிணைப்பை ஏற்படுத்தவும், அமெரிக்க தலைநகர் ...

தமிழகத்தில் மீண்டும் ஜெ., ஆட்சி: சொல்கிறது 'டிவி' கருத்துக்கணிப்பு

Posted: 01 Apr 2016 11:51 AM PDT

புதுடில்லி:தமிழகம், மேற்கு வங்கம், அசாம், கேரளா, புதுச்சேரியில் சட்டசபை தேர்தல் நடக்கவுள்ளது. இங்கு ஆட்சி அமைக்கப்போவது யார் என்பது குறித்து, 'டைம்ஸ் நவ்' தொலைக்காட்சி, 'சி வோட்டர்ஸ்' நிறுவனத்துடன் இணைந்து தேர்தலுக்கு முந்தைய கருத்துக்கணிப்பு நடத்தியது. இதில், தமிழகத்தில், அ.தி.மு.க., 130 தொகுதிகளில் வெற்றி பெற்று மீண்டும் ஆட்சி அமைக்கும் என, தெரி-விக்கப்பட்டு உள்ளது.

மீண்டும் மம்தா:
மேற்கு வங்கத்தில், மம்தாவின் திரிணமுல் காங்., மீண்டும் ஆட்சியை பிடிக்கும். அசாமில், பா.ஜ., - - காங்., இடையே இழுபறி நிலை காணப்படுகிறது. கேரளாவில் மார்க்சிஸ்ட், 86 ...

ஜெ., பதில் சொல்வாரா? கருணாநிதி கேள்வி

Posted: 01 Apr 2016 11:52 AM PDT

சென்னை: 'ஜாவடேகர் குற்றச்சாட்டுகளுக்காவது, முதல்வர் ஜெயலலிதா பதில் அளிப்பாரா?' என, தி.மு.க., தலைவர் கருணாநிதி கேள்வி எழுப்பியுள்ளார்.அவரது அறிக்கை:தமிழக திட்டங்களை நிறைவேற்றுவதை பற்றி பேசுவதற்கு, தொடர்ச்சியாக முயற்சி செய்தும், முதல்வர் ஜெயலலிதாவை சந்திக்கவே இயலவில்லை என, மத்திய அமைச்சர்கள் பியுஷ் கோயலும், பொன்.ராதாகிருஷ்ணனும் வெளிப்படையாக குற்றஞ்சாட்டினர். ஆனால், முதல்வர் ஜெயலலிதா நேரடியாக பதில்கூறாமல், இரண்டு அமைச்சர்கள் ஏதோ கூற வேண்டுமென, மழுப்பலாக அறிக்கை கொடுத்தனர்.தற்போது, மற்றொரு மத்திய அமைச்சரான ஜாவடேகர், ...

ஆவின் பால் தரம் குறைகிறதா? வியாபாரிகள், நுகர்வோர் புகார்

Posted: 01 Apr 2016 11:53 AM PDT

மக்கள் அதிகம் விரும்பி வாங்கும் ஆவின் பால் தரம் குறைந்து வருவதாக, நுகர்வோர் மற்றும் வியாபாரிகள் குற்றம் சாட்டியுள்ளனர். இந்த விவகாரத்தில், அதிகாரிகள் தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கோரிக்கை விடுத்துள்ளனர்.தமிழகத்தின் பெரும்பாலான பகுதிகளில், ஆவின் பாலைத் தான் மக்கள் அதிகம் பயன்படுத்துகின்றனர். குழந்தைகள் முதல், வயதானவர்கள் வரை, அனைத்து தரப்பினருக்கும் உகந்த வகையில் இருப்பதால், மக்கள் மத்தியில் ஆவின் பாலுக்கு தனி வரவேற்பு உண்டு.இந்நிலையில் சமீப காலமாக, ஆவின் பாலின் தரம் குறைந்து வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. காலையில் சிறு கடைகள் ...

பயங்கரவாதிக்கு ஆதரவு: சீனாவுக்கு இந்தியா கண்டனம்

Posted: 01 Apr 2016 11:54 AM PDT

புதுடில்லி: ஜெய்ஷ் - இ - முகமது பயங்கரவாத அமைப்பு தலைவன், மசூத் அசாருக்கு தடை விதிக்கும், ஐ.நா., பாதுகாப்பு கவுன்சில் முடிவை, சீனா தடுத்து நிறுத்தியதற்கு, இந்தியா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. பஞ்சாப் மாநிலம், பதன்கோட் விமானப்படை தளத்தில், பாகிஸ்தானை தலைமையிடமாக கொண்டு செயல்படும், ஜெய்ஷ் - இ - முகமது பயங்கரவாதிகள், இரு மாதத்துக்கு முன், தாக்குதல் நடத்தினர். தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்ட, அந்த அமைப்பின் தலைவன், மசூத் அசார் மீது, நடவடிக்கை எடுக்குமாறு, பாகிஸ்தானிடம் இந்தியா வலியுறுத்தி வருகிறது. இதற்கிடையில், மசூத் அசாருக்கு தடை விதிக்க கோரி, ...

வரவழைத்து ஏப்ரல் 'பூல்' ஆக்கிய விஜயகாந்த்: விருந்தை புறக்கணித்த ம.ந.கூ., தலைவர்கள்

Posted: 01 Apr 2016 11:55 AM PDT

சட்டசபை தேர்தலில், மக்கள் நலக் கூட்டணியுடன், விஜயகாந்தின் தே.மு.தி.க., கூட்டணி அமைத்துள்ளது. தே.மு.தி.க., 124 தொகுதிகளிலும், ம.ந.கூ., 110 தொகுதிகளிலும் போட்டியிடுவது என, தீர்மானிக்கப்பட்டு உள்ளது.இந்நிலையில், மக்கள் நலக் கூட்டணி ஒருங்கிணைப்பாளர் வைகோ தலைமையில், திருமாவளவன், ராமகிருஷ்ணன், முத்தரசன் ஆகியோர், நேற்று பகல், 12:00 மணியளவில், சென்னை கோயம்பேட்டில் உள்ள, தே.மு.தி.க., தலைமை அலுவலகத்திற்கு சென்றனர். அங்கு விஜயகாந்துடன் தொகுதி பங்கீடு பேச்சை நடத்தியுள்ளனர். இது குறித்து, தே.மு.தி.க., வட்டாரத்தில் கூறியதாவது:மக்கள் நலக்கூட்டணி போட்டியிட விரும்பும், 110 ...

மஹாராஷ்டிரா கோவில்களில் பெண்கள் நுழைய அனுமதி: 'தடுக்க முடியாது' என மும்பை ஐகோர்ட் உத்தரவு

Posted: 01 Apr 2016 11:57 AM PDT

மும்பை: 'கோவில்களுக்குள் செல்வது, பெண்களின் அடிப்படை உரிமை; அதை மாநில அரசு பாதுகாக்க வேண்டும்' என, மும்பை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. இதனால், மஹாராஷ்டிராவில் உள்ள கோவில்களுக்குள், பெண்கள் செல்வதை எவரும் தடுக்க முடியாத நிலை உருவாகி உள்ளது.மஹாராஷ்டிரா மாநிலத்தில், முதல்வர் தேவேந்திர பட்நாவிஸ் தலைமையிலான, பா.ஜ., - சிவசேனா கூட்டணி ஆட்சி நடக்கிறது. இங்குள்ள, சனி ஷிங்னாபூர் கோவிலுக்குள் பெண்கள் நுழைய தடை விதிக்கப்பட்டதை எதிர்த்து, இரு பெண்கள், மும்பை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர்.வழக்கை விசாரித்த, தலைமை நீதிபதி தலைமையிலான அமர்வு, 'கோவிலுக்குள் பெண்கள் ...

தருண் விஜய்க்கு யோகம்: மீண்டும் எம்.பி., பதவி

Posted: 01 Apr 2016 01:27 PM PDT

உத்தரகண்ட் மாநிலத்தில் நிலவும் அரசியல் குழப்பம், சற்றும் எதிர்பாராத விதத்தில், பா.ஜ.,வைச் சேர்ந்த தருண் விஜய் எம்.பி.,க்கு, அதிர்ஷ்டத்தை ஏற்படுத்தலாமென்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.உத்தரகண்ட் மாநிலத்தில், முதல்வர் ஹரீஷ் ராவத் தலைமையில் இருந்த, காங்கிரஸ் அரசு, பெரும் தள்ளாட்டத்தை சந்தித்தது. உட்கட்சி பூசல் காரணமாக, முதல்வருக்கு எதிராக, அம்மாநில காங்கிரசின், ஒன்பது எம்.எல்.ஏ.,க்கள், கிளம்பியுள்ளதையடுத்து, அங்கு ஜனாதிபதி ஆட்சி அமல்படுத்தப்பட்டுஉள்ளது.இதை எதிர்த்து, தாக்கல் செய்யப்பட்ட வழக்கை விசாரித்த ஐகோர்ட், மார்ச் 31ல், பெரும்பான்மையை ...



Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™