Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Dinamani - முகப்பு - http://dinamani.com/

Dinamani - முகப்பு - http://dinamani.com/


100 சதவீத வாக்குப்பதிவு சாத்தியமா...

Posted: 10 Apr 2016 01:14 PM PDT

எந்தத் தேர்தலிலும் இல்லாத அளவுக்கு, 2016 பேரவைத் தேர்தலில் 100% வாக்குப்பதிவை வலியுறுத்தி, தேர்தல் ஆணையம் பல்வேறு அமைப்புகளுடன் இணைந்து தேர்தல் விழிப்புணர்வு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

கோவில்பட்டி, திருச்செந்தூர் அருகே ரூ.3.95 லட்சம் பறிமுதல்

Posted: 10 Apr 2016 01:10 PM PDT

கோவில்பட்டி, திருச்செந்தூர் அருகே உரிய ஆவணங்களின்றி கொண்டு செல்லப்பட்ட ரூ. 3.95 லட்சத்தை தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர்.

தேர்தல் நடத்தை விதி மீறல்: அதிமுகவினர் 200 பேர் மீது வழக்கு

Posted: 10 Apr 2016 01:10 PM PDT

தூத்துக்குடியில் தேர்தல் நடத்தை விதிகளை மீறியதாக அதிமுகவைச் சேர்ந்த 200 பேர் மீது போலீஸார் சனிக்கிழமை வழக்குப் பதிவு செய்தனர்.

100% வாக்குப்பதிவை வலியுறுத்தி துண்டுப்பிரசுரம் விநியோகம்

Posted: 10 Apr 2016 01:10 PM PDT

கோவில்பட்டி நகராட்சிக்குள்பட்ட பகுதிகளில் வாக்காளர்கள் அனைவரும் வாக்கை பதிவு செய்ய வேண்டும் என்பதை வலியுறுத்தி நகராட்சி சார்பில் பொதுமக்களுக்கு துண்டுப்பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டன.

கார் - லாரி மோதல்: இளைஞர் சாவு

Posted: 10 Apr 2016 01:10 PM PDT

தூத்துக்குடி அருகே ஞாயிற்றுக்கிழமை அதிகாலையில் கார் மீது லாரி மோதிய விபத்தில் இளைஞர் உயிரிழந்தார். 5 பேர் காயமடைந்தனர்.

கால்பந்து போட்டி: நாசரேத் யுனைடெட் கிளப் அணி சாம்பியன்

Posted: 10 Apr 2016 01:10 PM PDT

நாசரேத்தில் நடைபெற்ற ஐவர் கால்பந்துப் போட்டியில் யுனைடெட் கிளப் அணி சாம்பியன் பட்டம் வென்றது.

தூத்துக்குடியில் திமுக செயல்வீரர்கள் கூட்டம்

Posted: 10 Apr 2016 01:10 PM PDT

தூத்துக்குடி மாநகர சண்முகபுரம் பகுதி திமுக செயல்வீரர்கள் கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது.

கயத்தாறு அருகே கார் கவிழ்ந்ததில் ஓட்டுநர் சாவு

Posted: 10 Apr 2016 01:10 PM PDT

கயத்தாறு அருகே சனிக்கிழமை திடீரென நிலைகுலைந்த கார் சாலையில் கவிழ்ந்ததில் கார் ஓட்டுநர் சம்பவ இடத்திலேயே இறந்தார்.

அதிமுக அரசின் சாதனைகளை கூறி வாக்கு சேகரிக்க வேண்டும்: அமைச்சர் எஸ்.பி. சண்முகநாதன்

Posted: 10 Apr 2016 01:10 PM PDT

அதிமுக அரசின் சாதனைகளை மக்களிடம் எடுத்துக் கூறி வீடுவீடாக பிரசாரம் செய்து வாக்கு சேகரிக்க வேண்டும் என்றார் சுற்றுலாத் துறை அமைச்சரும், அதிமுக மாவட்டச் செயலருமான எஸ்.பி. சண்முகநாதன்.

குலசேகரன்பட்டினம் கோயிலில் நாளை சித்திரைத் திருவிழா கொடியேற்றம்

Posted: 10 Apr 2016 01:10 PM PDT

குலசேகரன்பட்டினம் அருள்தரும் அறம் வளர்த்த நாயகி உடனுறை அருள்மிகு காஞ்சி விஜயகச்சி கொண்ட பாண்டீஸ்வரர் திருக்கோயிலில் சித்திரைப் பெருந்திருவிழா செவ்வாய்க்கிழமை (ஏப். 12) கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.

காயல்பட்டினத்தில் மாற்றுத் திறனாளிகளின் வாக்காளர் விழிப்புணர்வு கலை நிகழ்ச்சி

Posted: 10 Apr 2016 01:10 PM PDT

காயல்பட்டினத்தில் மாற்றுத் திறனாளிகள் சார்பில் வாக்காளர் விழிப்புணர்வு கலை நிகழ்ச்சிகள் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றன.

திருச்செந்தூரில் வாக்காளர் விழிப்புணர்வு பேரணி

Posted: 10 Apr 2016 01:10 PM PDT

திருச்செந்தூரில் வாக்காளர் விழிப்புணர்வுப் பேரணியை தேர்தல் விழிப்புணர்வு பார்வையாளர் தொடங்கிவைத்தார்.

நாசரேத் பள்ளியில் வாக்காளர் விழிப்புணர்வுக் கூட்டம்

Posted: 10 Apr 2016 01:10 PM PDT

நாசரேத் மகார்ஷிஸ் மேல்நிலைப் பள்ளியில் காவல் துறை சார்பில் வாக்காளர் விழிப்புணர்வுக் கூட்டம் நடைபெற்றது.

வீரசின்னம்மாள் கோயிலில் 108 திருவிளக்கு பூஜை

Posted: 10 Apr 2016 01:10 PM PDT

கோவில்பட்டியையடுத்த எல்.வி. புரம் கிராமத்தில் உள்ள ஸ்ரீ வீரசின்னம்மாள் திருக்கோயிலில் 108 திருவிளக்கு பூஜை சனிக்கிழமை நடைபெற்றது.

கோவில்பட்டியில் நீரிழிவு சிகிச்சை மையம் திறப்பு

Posted: 10 Apr 2016 01:10 PM PDT

கோவில்பட்டி கமலா சிறப்பு மருத்துவமனையில் நீரிழிவு சிகிச்சை மைய திறப்பு விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

புனித மெக்கா பயணத்துக்கு பயிற்சி

Posted: 10 Apr 2016 01:10 PM PDT

காயல்பட்டினத்திலிருந்து புனித மெக்காவுக்கு உம்றா பயணம் மேற்கொள்ளவிருக்கும் பயணிகளுக்கான பயிற்சி வகுப்பு, காயல்பட்டினம் முஅஸ்கர் மகளிர் அரபிக் கல்லூரி அமைந்துள்ள மவ்லானா அப்பா சின்ன கல் தைக்காவில் நடைபெற்றது.

திமுக தெருமுனைக் கூட்டம்

Posted: 10 Apr 2016 01:09 PM PDT

கோவில்பட்டி மேற்கு ஒன்றிய திமுக சார்பில் இளைஞர் எழுச்சி நாள் தெருமுனை பிரசாரக் கூட்டம் நடைபெற்றது.

ஆறுமுகனேரி கோயிலில் திருவாசகம் முற்றோதுதல்

Posted: 10 Apr 2016 01:09 PM PDT

ஆறுமுகனேரி ஸ்ரீசோமசுந்தரி அம்மன் சமேத ஸ்ரீசோமநாத சுவாமி திருக்கோயிலில் ஞாயிற்றுக்கிழமை திருவாசகம் முற்றோதுதல் நடைபெற்றது.

மக்கள் நலனுக்கு எதிரானது மக்கள் நலக் கூட்டணி: சி.பி.ராதாகிருஷ்ணன்

Posted: 10 Apr 2016 12:57 PM PDT

மக்கள் நலக் கூட்டணி என்பது மக்களுக்கு எதிரானது என்றார் பாஜக தேசிய செயற்குழு உறுப்பினர் சி.பி.ராதாகிருஷ்ணன்.

குமரி மாவட்டத்தில் 2015இன் சிறந்த படைப்புகள் தேர்வு

Posted: 10 Apr 2016 12:57 PM PDT

தெற்கு எழுத்தாளர் இயக்கம் சார்பில் 2015 ஆம் ஆண்டுக்கான விருது வழங்கும் விழா நாகர்கோவிலில் நடைபெற்றது.

ரூ. 2 லட்சம் வரதட்சிணை கேட்டு ஆசிரியை சித்திரவதை: கணவர் உள்பட 6 பேர் மீது வழக்கு

Posted: 10 Apr 2016 12:57 PM PDT

மார்த்தாண்டம் அருகே வரதட்சிணை கேட்டு ஆசிரியையை சித்திரவதை செய்ததாக கணவர் உள்பட 6 பேர் மீது வழக்கு தொடரப்பட்டுள்ளது.

நாகர்கோவில் அருகே இரும்புக்கம்பி விழுந்து தொழிலாளி சாவு

Posted: 10 Apr 2016 12:57 PM PDT

நாகர்கோவில் அருகே இரும்புக் கம்பி விழுந்ததில் கட்டடத் தொழிலாளி உயிரிழந்தார்

மீனவக் கிராமங்களில் அதிமுக வேட்பாளர் வாக்கு சேகரிப்பு

Posted: 10 Apr 2016 12:57 PM PDT

குளச்சல் தொகுதி அதிமுக வேட்பாளர் கே.டி.பச்சைமால் எம்.எல்.ஏ. மீனவக் கிராமங்களில் ஞாயிற்றுக்கிழமை வாக்கு சேகரித்தார்.

வியாபாரிகள் நலச்சங்க கூட்டம்

Posted: 10 Apr 2016 12:57 PM PDT

கருங்கல்லில் வியாபாரிகள் நலச்சங்க கூட்டம் சங்க அலுவலகத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

நாகர்கோவில்

Posted: 10 Apr 2016 12:57 PM PDT

அன்பு மட்டுமே குடும்ப உறவுகளை கட்டிக் காக்கும்: மரியம்மா உம்மன்சாண்டி

Posted: 10 Apr 2016 12:57 PM PDT

அன்பு மட்டுமே குடும்ப உறவுகளை கட்டிக்காக்கும் என்றார் கேரள முதல்வர் உம்மன் சாண்டியின் மனைவி மரியம்மா உம்மன்சாண்டி.

குமரி பகவதியம்மன் கோயிலில் 108 கலசபூஜை

Posted: 10 Apr 2016 12:57 PM PDT

மழை பெய்ய வேண்டி கன்னியாகுமரி பகவதியம்மன் கோயிலில் ஞாயிற்றுக்கிழமை 108 கலசபூஜை நடைபெற்றது.

தோவாளையில் அதிமுக வேட்பாளர் வாக்கு சேகரிப்பு

Posted: 10 Apr 2016 12:57 PM PDT

தோவாளையில் பூ வியாபாரிகளிடம் கன்னியாகுமரி சட்டப்பேரவைத் தொகுதி அதிமுக வேட்பாளர் என்.தளவாய்சுந்தரம் ஞாயிற்றுக்கிழமை வாக்கு சேகரித்தார்.

கோடை மழை: விவசாயிகள் மகிழ்ச்சி

Posted: 10 Apr 2016 12:57 PM PDT

கன்னியாகுமரி மாவட்டத்தில் சனிக்கிழமை பெய்த பரவலான மழையால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

திருவட்டாறு கோயில் பங்குனி திருவிழா இன்று தொடக்கம்

Posted: 10 Apr 2016 12:56 PM PDT

திருவட்டாறு ஆதிகேசவப் பெருமாள் கோயிலில் பங்குனித் திருவிழா திங்கள்கிழமை (ஏப்.11) கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.

வாக்காளர் விழிப்புணர்வுப் பணிகள்: தேர்தல் மேற்பார்வையாளர் ஆய்வு

Posted: 10 Apr 2016 12:53 PM PDT

கன்னியாகுமரி மாவட்டத்தில் நடைபெற்று வரும் வாக்காளர் விழிப்புணர்வுப் பணிகளை, தேர்தல் விழிப்புணர்வு மேற்பார்வையாளர் சித்தார்த் பாபன்ராவ் போட்கே ஞாயிற்றுக்கிழமை ஆய்வு செய்தார்.  

நுழைவுத் தேர்வுகளில் ஓபிசி பிரிவினருக்கு சலுகை இல்லை: ஜேஎன்யு முடிவு

Posted: 10 Apr 2016 12:32 PM PDT

எம்.ஃபில், பிஎச்டி ஆகிய ஆராய்ச்சி படிப்புகளுக்கான நுழைவுத் தேர்வுகளில், இதர பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கு (ஓபிசி) எந்த சலுகையும் வழங்குவதில்லை என தில்லி ஜவாஹர்லால் நேரு பல்கலைக்கழகம் (ஜேஎன்யு) முடிவு செய்துள்ளது.

சாலை விபத்தில் காயமடைந்த இருவருக்கு ரூ.15 லட்சம் இழப்பீடு

Posted: 10 Apr 2016 12:31 PM PDT

சாலை விபத்தில் காயமடைந்த இருவருக்கு ரூ.15.76 லட்சம் இழப்பீடு வழங்குமாறு காப்பீட்டு நிறுவனத்துக்கு மோட்டார் வாகன விபத்து இழப்பீட்டுக் கோரல் தீர்ப்பாயம் உத்தரவிட்டது.

இடைத் தேர்தல்: முன்னாள் எம்எல்ஏக்களுக்கு வாய்ப்பளிக்க பாஜக திட்டம்

Posted: 10 Apr 2016 12:31 PM PDT

தில்லி மாநகராட்சியின் 13 வார்டுகளுக்கான இடைத்தேர்தலில் முன்னாள் எம்எல்ஏக்களுக்கு வாய்ப்பளிக்க பாஜக திட்டமிட்டுள்ளது.

மிரட்டல் தொலைபேசி அழைப்புகளின் உண்மை தன்மையை கண்டறிவது அதிகரிப்பு

Posted: 10 Apr 2016 12:30 PM PDT

வெடிகுண்டு வைத்துள்ளதாக மிரட்டல் விடுத்து வரும் மர்ம தொலைபேசி அழைப்புகளின் உண்மைத் தன்மையை தொழில்நுட்ப உதவியுடன் கண்டறிவது அதிகரித்துள்ளதாக தில்லி காவல் துறையினர் தெரிவித்துள்ளனர்.

சிறுவர்களுக்கு மது: கேளிக்கை விடுதிக்கு அபராதம்

Posted: 10 Apr 2016 12:30 PM PDT

தேசியத் தலைநகர் வலயப் பகுதியான குர்கானில் சிறுவர்களுக்கு மது விற்ற கேளிக்கை விடுதிக்கு அபராதம் விதிக்கப்பட்டது.

தில்லி தமிழ்ச் சங்கத்தில் மகளிர் தின பரிசளிப்பு விழா

Posted: 10 Apr 2016 12:29 PM PDT

தில்லி தமிழ்ச் சங்கத்தில் மகளிர் தின பரிசளிப்பு விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

புலிகளைக் கண்காணிக்க அனைத்து காப்பகங்களிலும் மின்னணு வசதி: மத்திய அரசு தகவல்

Posted: 10 Apr 2016 12:29 PM PDT

புலிகளைக் கண்காணிப்பதற்கான மின்னணு தொழில்நுட்ப வசதி, நாடு முழுவதும் உள்ள அனைத்து புலிகள் காப்பகங்களுக்கும் விரைவில் விரிவுபடுத்தப்படவுள்ளது என்று மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

"சிறைக்குச் செல்வதற்கு முன்பு வெளிநாடு செல்ல முயன்றார் சஹாரா குழுமத் தலைவர்'

Posted: 10 Apr 2016 12:28 PM PDT

நிதி மோசடி வழக்கில் சஹாரா குழுமத் தலைவர் சுப்ரதா ராய், தனக்கு சிறைத் தண்டனை விதிக்கப்படுவதற்கு முன்பு, வெளிநாட்டுக்குச் செல்ல முயன்றார் என்று இந்திய பங்குப் பரிவர்த்தனை ஆணையத்தின் (செபி) வழக்குரைஞர் தெரிவித்துள்ளார்.

புது தில்லி

Posted: 10 Apr 2016 12:27 PM PDT

புதிய கட்சி தொடங்க ஸ்வராஜ் அபியான் திட்டம்?

Posted: 10 Apr 2016 12:26 PM PDT

புதிய அரசியல் கட்சித் தொடங்குவது குறித்த திட்டத்தை, ஆம் ஆத்மி முன்னாள் தலைவர்கள் யோகேந்திர யாதவ், பிரசாந்த் பூஷண் தலைமையிலான "ஸ்வராஜ் அபியான்' அமைப்பு அடுத்த வாரம் அறிவிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

பசுமையாக்கத்தில் மாநகராட்சிப் பூங்காக்கள்: பர்வேஷ் வர்மா எம்.பி. தகவல்

Posted: 10 Apr 2016 12:26 PM PDT

தெற்கு தில்லியை பசுமையாக மாற்றியதில் மாநகராட்சிகளின் பூங்காக்கள் முக்கியப் பங்கு வகித்துள்ளன என்று மேற்கு தில்லி எம்.பி. பர்வேஷ் வர்மா தெரிவித்தார்.

மொஹல்லா கிளினிக்குகள்: பொதுமக்கள் ஆர்வம்!

Posted: 10 Apr 2016 12:25 PM PDT

தில்லியில் ஆம் ஆத்மி அரசு மூலம் தொடங்கப்பட்டுள்ள மொஹல்லா கிளினிக்குகளை பயன்படுத்துவதில் உள்ளூர் மக்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

நாடாளுமன்ற இணைப்புக் கட்டடத்தில் தீ

Posted: 10 Apr 2016 12:24 PM PDT

தில்லி நாடாளுமன்ற இணைப்புக் கட்டடத்தில் ஞாயிற்றுக்கிழமை தீ விபத்து ஏற்பட்டது. இதையடுத்து, தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்தில் துரிதமாகப் பணியில் ஈடுபட்டு தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.

சிஎன்ஜி ஸ்டிக்கர் வழங்கும் பணி: கண்காணிப்பு தீவிரம்

Posted: 10 Apr 2016 12:23 PM PDT

தில்லியில் வாகனக் கட்டுப்பாடு திட்டத்தையொட்டி, வாகனங்களுக்கு அழுத்தப்பட்ட இயற்கை எரிவாயு (சிஎன்ஜி) ஸ்டிக்கர்கள் வழங்கும் பணி தீவிரக் கண்காணிப்புக்கு உள்படுத்தப்பட்டுள்ளதாக தில்லி அரசு தெரிவித்துள்ளது.

புகார்களில் சிக்கிய அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுப்பதில் வங்கிகள் தாமதம்: சிவிசி குற்றச்சாட்டு

Posted: 10 Apr 2016 12:23 PM PDT

நிதி முறைகேடுகளில் தொடர்புடைய சுமார் 100 வங்கி அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுப்பதற்கு பொதுத் துறை வங்கிகள் தாமதம் செய்து வருவதாக மத்திய ஊழல் கண்காணிப்பு ஆணையம் (சிவிசி) குற்றம் சாட்டியுள்ளது.

தில்லியில் மனித உரிமைகள் ஆணையம் அமைப்பதில் தாமதம் ஏன்?: மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் கேள்வி

Posted: 10 Apr 2016 12:22 PM PDT

தலைநகரில் மாநில மனித உரிமைகள் ஆணையம் அமைப்பதில் நீண்ட தாமதம் நிலவுவது ஏன்? என்று மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.

"கடன் தொகை குறித்து மல்லையாவிடம் பேச்சுவார்த்தை நடத்துங்கள்'

Posted: 10 Apr 2016 12:20 PM PDT

வங்கிகளிடம் இருந்து ரூ.9,000 கோடி கடன் பெற்ற விஜய் மல்லையாவிடம் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்று இந்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை கூட்டமைப்பு (அசோசேம்) அறிவுறுத்தியுள்ளது.

கேஜரிவால் மீது "ஷு' வீசியவருக்கு ஒரு நாள் நீதிமன்ற காவல்

Posted: 10 Apr 2016 12:19 PM PDT

தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவால் மீது "ஷூ' வீசிய நபரை, ஒரு நாள் நீதிமன்ற காவலில் வைக்க நீதிமன்றம் ஞாயிற்றுக்கிழமை உத்தரவிட்டது.

தலைநகரில் நில அதிர்வு

Posted: 10 Apr 2016 12:18 PM PDT

தில்லி மற்றும் என்சிஆர் பகுதிகளில் ஞாயிற்றுக்கிழமை நில அதிர்வு உணரப்பட்டதால் பொதுமக்கள் பீதி அடைந்தனர்.

பொறியியல் கல்லூரி ஆண்டு விழா

Posted: 10 Apr 2016 12:17 PM PDT

மாமல்லபுரம் தனலட்சுமி சீனிவாசன் பொறியியல் கல்லூரி ஆண்டு விழா சனிக்கிழமை நடைபெற்றது.

கும்மிடிப்பூண்டியில் இன்று விஜயகாந்த் பிரசாரம்

Posted: 10 Apr 2016 12:17 PM PDT

தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் பிரசாரத்தை தேமுதிக தலைவர் விஜயகாந்த் கும்மிடிப்பூண்டியில் திங்கள்கிழமை தொடங்குகிறார்.

பார்வையற்றோர் வாக்களிப்பதற்கான சிறப்பு ஏற்பாடுகள்

Posted: 10 Apr 2016 12:16 PM PDT

பார்வையற்றோர், மாற்றுத் திறனாளிகள் வாக்களிப்பதற்காக மாவட்டம் முழுவதும் உள்ள 3,253 வாக்குச் சாவடிகளிலும் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் எ.சுந்தரவல்லி தெரிவித்தார்.

திமுக ஆலோசனைக் கூட்டம்

Posted: 10 Apr 2016 12:16 PM PDT

மாவட்ட திமுக நகர, ஒன்றிய, பேரூர் மகளிர் அணி நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் திருவள்ளூரில் அண்மையில் நடைபெற்றது.

ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணியின் முப்பெரும் விழா

Posted: 10 Apr 2016 12:15 PM PDT

தமிழக ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணியின் புதிய இணையதளம் தொடக்க விழா, மரம் நடுவிழா, தேசிய நல்லாசிரியர் விருது பெற்றவர்களுக்கு பாராட்டு உள்ளிட்ட முப்பெரும் விழா திருவள்ளூரில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

திருத்தணியில் தேர்தல் விழிப்புணர்வு ஊர்வலம்

Posted: 10 Apr 2016 12:15 PM PDT

நடைபெறவிருக்கும் சட்டப்பேரவைத் தேர்தலில் 100 சதவீதம் வாக்களிப்பை வலியுறுத்தி திருத்தணியில் நடைபெற்ற வாக்காளர் விழிப்புணர்வு ஊர்வலத்தை கோட்டாட்சியர் சேதுமாதவன் அண்மையில் தொடக்கி வைத்தார்.

வீட்டின் பூட்டை உடைத்து 20 பவுன் நகை திருட்டு

Posted: 10 Apr 2016 12:14 PM PDT

பூந்தமல்லியில் வீட்டின் பூட்டை உடைத்து 20 பவுன் நகைகள், ரூ.1.50 லட்சத்தை திருடிச் சென்ற நபர்களை போலீஸார் தேடி வருகின்றனர்.

பேருந்து ஓட்டுநர் தற்கொலை

Posted: 10 Apr 2016 12:13 PM PDT

பணியிடை நீக்கம் செய்யப்பட்ட மாநகர அரசுப் பேருந்து ஓட்டுநர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.

பேருந்து நிலையத்தில் நிறுத்தப்படும் தனியார் வாகனங்கள்: பயணிகள் அவதி

Posted: 10 Apr 2016 12:13 PM PDT

ஸ்ரீபெரும்புதூர் பேரூராட்சி நிர்வாகத்தின் எச்சரிக்கையையும் மீறி, பேருந்து நிலையத்தில் நிறுத்தப்படும் இருசக்கர வாகனங்களால் பயணிகள் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.

அதிமுக தேர்தல் அலுவலகம் திறப்பு

Posted: 10 Apr 2016 12:12 PM PDT

மாமல்லபுரம் நகர அதிமுக சார்பில் தேர்தல் அலுவலகம் திறக்கப்பட்டது.

செங்கல்பட்டு

Posted: 10 Apr 2016 12:11 PM PDT

100 சதவீத வாக்குப் பதிவை வலியுறுத்தி விழிப்புணர்வு பிரசாரம்

Posted: 10 Apr 2016 12:11 PM PDT

காஞ்சிபுரத்தில் 100 சதவீத வாக்குப் பதிவை வலியுறுத்தி பல்வேறு இடங்களில் விழிப்புணர்வு பிரசாரம் சனிக்கிழமை நடைபெற்றது.

அதிமுகவினர் தீவிர வாக்குச் சேகரிப்பு

Posted: 10 Apr 2016 12:11 PM PDT

காஞ்சிபுரத்தில் அதிமுகவினர் தீவிர வாக்குச் சேகரிப்பில் ஞாயிற்றுக்கிழமை ஈடுபட்டனர்.

பாஜகவினர் வாக்குச் சேகரிப்பு

Posted: 10 Apr 2016 12:09 PM PDT

காஞ்சிபுரத்தில் பாஜகவினர் தீவிர வாக்குச் சேகரிப்பில் ஈடுபட்டனர்.

விவசாயத்துக்கு தனி பட்ஜெட், லோக் ஆயுக்த:திமுக தேர்தல் அறிக்கையில் வாக்குறுதி

Posted: 10 Apr 2016 12:09 PM PDT

மதுவிலக்கை அமல்படுத்த சட்டம், லோக் ஆயுக்த சட்ட அமைப்பு, விவசாயத்துக்கு தனி பட்ஜெட் உள்ளிட்ட பல்வேறு வாக்குறுதிகள் திமுகவின் தேர்தல் அறிக்கையில் கொடுக்கப்பட்டுள்ளன.

ஜேடியு புதிய தலைவராக நிதீஷ் குமார் தேர்வு

Posted: 10 Apr 2016 12:08 PM PDT

ஐக்கிய ஜனதா தளம் (ஜேடியு) கட்சியின் புதிய தலைவராக பிகார் மாநில முதல்வர் நிதீஷ் குமார் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

காஞ்சிபுரம் மாவட்டத்தில் பள்ளிச் செல்லா குழந்தைகள் கணக்கெடுப்பு

Posted: 10 Apr 2016 12:08 PM PDT

காஞ்சிபுரம் மாவட்டத்தில் பள்ளிச் செல்லா குழந்தைகளைக் கணக்கெடுப்பதற்காக 215 பேர் பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.

விருகம்பாக்கத்தில் தமிழிசை போட்டி":பாஜக இரண்டாவது வேட்பாளர் பட்டியல் வெளியீடு

Posted: 10 Apr 2016 12:08 PM PDT

தமிழக சட்டப் பேரவைத் தேர்தலில் விருகம்பாக்கம் தொகுதியில் பாஜக மாநிலத் தலைவர் தமிழிசை செளந்தரராஜன் போட்டியிட உள்ளார்

லாரி மோதியதில் தம்பதி சாவு

Posted: 10 Apr 2016 12:07 PM PDT

ஸ்ரீபெரும்புதூர் அருகே டிப்பர் லாரி மோதியதில் தம்பதி ஞாயிற்றுக்கிழமை இறந்தனர்.

அரசியல்ல இது சகஜமப்பா!

Posted: 10 Apr 2016 12:07 PM PDT

சமீபத்தில் திமுக தலைவர் கருணாநிதி குறித்து மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கூறியது ஒரு மிகப்பெரிய சர்ச்சையைக் கிளப்பி இருக்கிறது. அரசியல் நாகரிகம் இல்லாத பேச்சு என்று அதைக் கண்டிக்காதவர்களே கிடையாது. அவரே, தான் பேசியது தவறு என்றும் அதற்கு மன்னிப்புக் கோருகிறேன் என்றும் கூறிவிட்டிருக்கிறார்.

மணல் கடத்திய வாகனங்கள் பறிமுதல்

Posted: 10 Apr 2016 12:07 PM PDT

காஞ்சிபுரம் மாவட்டம், படூரில் மணல் கடத்திய வாகனங்கள் சனிக்கிழமை பறிமுதல் செய்யப்பட்டன.

உத்திரமேரூர் தொகுதி: திமுகவுக்கா? கூட்டணிக் கட்சிக்கா?

Posted: 10 Apr 2016 12:06 PM PDT

கூட்டணிக் கட்சிகளுக்கான தொகுதி ஒதுக்கீடு முடிந்த நிலையில், உத்தரமேரூர் தொகுதி திமுகவுக்குத்தான் என்று அக்கட்சியினர் நினைத்தனர். ஆனால் இப்போது அத் தொகுதியை திமுக கூட்டணியில் உள்ள கட்டடத் தொழிலாளர் அமைப்பு கேட்டு வருவதாக திமுக வட்டாரங்களில் பரபரப்பாகப் பேசப்படுகிறது.

தமாகாவில் இருந்து முன்னாள் எம்.பி. விலகல்: காங்கிரஸில் இணையப் போவதாக அறிவிப்பு

Posted: 10 Apr 2016 12:06 PM PDT

தமாகாவில் இருந்து காஞ்சிபுரம் நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினர் பி.விசுவநாதன் அக் கட்சியில் இருந்து விலகினார். தாய்க் கட்சியான காங்கிரஸில் மீண்டும் இணைய உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

இருசக்கர வாகனத்தில் ரூ. 80 ஆயிரம் திருட்டு

Posted: 10 Apr 2016 12:05 PM PDT

படப்பை அருகே இருசக்கர வாகனத்தின் பெட்டியினுள் வைக்கப்பட்டிருந்த ரூ. 80,000 பணத்தை மர்ம நபர்கள் வெள்ளிக்கிழமை திருடிச் சென்றனர்.

நகராட்சி மெத்தனத்தால் வீணாகும் குடிநீர்

Posted: 10 Apr 2016 12:05 PM PDT

செங்கல்பட்டு அரசு மருத்துவமனை அருகே நகராட்சியால் கழிவுநீர் கால்வாய் தோண்டப்பட்ட போது, குடிநீர் செல்லும் குழாய் உடைந்ததால் குடிநீர் வீணாகி வருவதுடன், சுகாதாரச் சீர்கேடும் ஏற்பட்டுள்ளது.

வங்கதேசத்தினரின் ஊடுருவல் விவகாரத்தில் பாஜக அரசியல் செய்கிறது

Posted: 10 Apr 2016 12:04 PM PDT

அயோத்தியில் ராமர் கோவில் கட்டுவது, அஸ்ஸாம் மாநிலத்தில் வங்கதேச மக்கள் ஊடுருவுவது போன்ற விவகாரங்கள் குறித்து தேர்தல் நேரத்தில் மட்டும்தான் பாஜக பேசி வருகிறது என்று அஸ்ஸாம் முதல்வரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான தருண் கோகோய் குற்றம்சாட்டினார்.

தொகுதி ஓர் அறிமுகம்: ஆவடி

Posted: 10 Apr 2016 12:04 PM PDT

மத்திய பாதுகாப்புத் துறையின் தரைப்படை, விமானப்படைக்குத் தேவையான போர்க் கருவிகள், கவச போர் வாகனங்கள், ராணுவ வீரர்களின் சீருடைகள்  உள்ளிட்டவற்றைத் தயாரிக்கும் ராணுவ தொழிற்சாலைகள் நிரம்பிய கேந்திரமாக ஆவடி விளங்குகிறது.

யாருக்கு ஓட்டு?

Posted: 10 Apr 2016 12:04 PM PDT

யாருக்கு ஓட்டு

உள்ளது உள்ளபடி: கே.குப்பன் (அதிமுக) சட்டப்பேரவை உறுப்பினர், திருவொற்றியூர்

Posted: 10 Apr 2016 12:04 PM PDT

2001-ஆம் ஆண்டு சட்டப் பேரவைத் தேர்தலில் திருவொற்றியூர் தொகுதியில் வெற்றி பெற்றவர் கே.குப்பன் (அதிமுக). இவர் 1991-இல் இதே தொகுதியில் எம்எல்ஏவாகவும் தேர்வு செய்யப்பட்டார்.

கொழும்புவை வர்த்தக மாவட்டமாக சீனா கட்டமைக்கும்: ரணில்

Posted: 10 Apr 2016 12:04 PM PDT

கொழும்பில் துறைமுகம் அமைப்பதுடன், அதனை வர்த்தக மாவட்டமாக உருவாக்கும் திட்டத்தையும் சீனா செயல்படுத்தும் என்று இலங்கை பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.

ஹைதராபாத் பல்கலை. விவகாரம்:எஸ்.சி. விரிவுரையாளர்கள் பணியில் நீடிப்பதாக உறுதி

Posted: 10 Apr 2016 12:03 PM PDT

ஹைதராபாத் பல்கலைக்கழக எஸ்.சி./எஸ்.டி. விரிவுரையாளர்கள் பெரும்பாலானோர் பல்கலைக்கழக நிர்வாகப் பொறுப்புகளில் இருந்து விலக மாட்டோம் என உறுதியளித்துள்ளனர். இந்தத் தகவலை பல்கலைக்கழக நிர்வாகம் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்டது.

கேரளத்தில்தீ விபத்து:ராகுல் நேரில் ஆய்வு

Posted: 10 Apr 2016 12:02 PM PDT

கேரளத்தில் தீ விபத்து ஏற்பட்ட பகுதிக்கு காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி ஞாயிற்றுக்கிழமை நேரில் வந்து ஆய்வு மேற்கொண்டார்.

சமூகச் சூழலை சீர்குலைக்கும் பாஜக: காங்கிரஸ் தாக்கு

Posted: 10 Apr 2016 12:02 PM PDT

பாஜகவும், ஆர்எஸ்எஸ் அமைப்பும் சமூகச் சூழலை சீர்குலைப்பதற்கான நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றன என்று காங்கிரஸ் குற்றம்சாட்டியுள்ளது.

ஈரான் எரிசக்தித் துறையில் ரூ.1.3 லட்சம் கோடி முதலீடு செய்ய இந்தியா திட்டம்

Posted: 10 Apr 2016 12:02 PM PDT

ஈரானில் எண்ணெய் மற்றும் எரிவாயு, பெட்ரோகெமிக்கல் மற்றும் உரம் ஆகிய துறைகளில் 2,000 கோடி அமெரிக்க டாலரை (ரூ.1.3 லட்சம் கோடி) இந்தியா முதலீடு செய்ய திட்டமிட்டுள்ளது.

ஏப்ரல் 20-இல் இந்தியா-சீனா பேச்சுவார்த்தை

Posted: 10 Apr 2016 12:01 PM PDT

இந்தியா-சீனா ஆகியவற்றின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர்கள் இடையிலான பேச்சுவார்த்தை வரும் 20-ஆம் தேதி தொடங்குகிறது.

கோஹினூர் வைரத்தைத் திரும்ப கொண்டு வர இயலாது: மத்திய அரசு

Posted: 10 Apr 2016 12:01 PM PDT

பிரிட்டனில் உள்ள கோஹினூர் வைரத்தைத் திரும்பக் கொண்டு வர இயலாது என மத்திய அரசு தெரிவித்துள்ளது.

தேசிய கீதம், தேசியக் கொடி ஆகியவை அவமதிக்கப்படுவதைத் தடுக்க வேண்டும்:மாநில அரசுகளுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல்

Posted: 10 Apr 2016 11:59 AM PDT

தேசிய கீதமும், தேசியக் கொடியும் அவமதிக்கப்படுவதைத் தடுக்க வேண்டும் என்று மாநில அரசுகளுக்கு மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.

1 லட்சம் கிராமங்களில் வை-ஃபை இணைய வசதி:பிஎஸ்என்எல் சோதனை முயற்சி

Posted: 10 Apr 2016 11:58 AM PDT

கிராமப்புறங்களில் மத்திய அரசின் அகண்ட அலைவரிசை (பிராட்பேண்ட்) இணையதள வசதி அளிக்கும் திட்டம் தாமதமாவதால், அடுத்த ஓராண்டுக்குள் 1 லட்சம் கிராம ஊராட்சிகளில் வை-ஃபை இணையதள வசதி அளிப்பதற்கு பிஎஸ்என்எல் நிறுவனம் முயன்று வருகிறது.

ஆந்திரத்தில் சாலை விபத்து: 11 பேர் பலி

Posted: 10 Apr 2016 11:58 AM PDT

ஆந்திரப் பிரதேச மாநிலம், விசாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள நக்கப்பள்ளி பகுதி அருகே தேசிய நெடுஞ்சாலையில் கார், லாரி, இருசக்கர வாகனம் ஆகிய மூன்றும் மோதிக் கொண்டதில், 11 பேர் உயிரிழந்தனர்.

பிரிட்டன் இளவரசர் வில்லியம்-கேத் மிடில்டன் தம்பதி இந்தியா வருகை

Posted: 10 Apr 2016 11:57 AM PDT

பிரிட்டன் இளவரசர் வில்லியமும், அவரது மனைவி கேத் மிடில்டனும் மும்பை நகருக்கு ஞாயிற்றுக்கிழமை காலை வந்தனர். இருவரும் இந்தியா வருவது இதுவே முதல் முறையாகும்.

அருண் ஜேட்லி நாளை அமெரிக்கா பயணம்

Posted: 10 Apr 2016 11:56 AM PDT

மத்திய நிதி அமைச்சர் அருண் ஜேட்லி, 10 நாள் அரசு முறைப் பயணமாக செவ்வாய்க்கிழமை (ஏப்.12) அமெரிக்கா செல்கிறார்.

காஷ்மீர்: பாக். ராணுவம் அத்துமீறி துப்பாக்கிச் சூடு

Posted: 10 Apr 2016 11:54 AM PDT

ஜம்மு-காஷ்மீர் மாநிலம், பூஞ்ச் மாவட்டத்தில் உள்ள எல்லையில், போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி பாகிஸ்தான் ராணுவம் ஞாயிற்றுக்கிழமை அத்துமீறி துப்பாக்கிச் சூடு நடத்தியது.

வடமாநிலங்களில் நிலஅதிர்வு

Posted: 10 Apr 2016 11:54 AM PDT

ஆப்கானிஸ்தானில் உள்ள ஹிந்துகுஷ் மலைப் பகுதிகளில் நிலநடுக்கம் ஏற்பட்டதால் பாகிஸ்தான் மற்றும் வடஇந்தியாவின் பல்வேறு பகுதிகளில் ஞாயிற்றுக்கிழமை நில அதிர்வு ஏற்பட்டது.

ஸ்ரீநகர் விமான நிலையத்தில் நடிகர் அனுபம் கெர் தடுத்து நிறுத்தப்பட்டார்:என்ஐடி செல்ல அனுமதி மறுப்பு

Posted: 10 Apr 2016 11:54 AM PDT

ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் அண்மையில் இரு தரப்பு மாணவர்களுக்கு இடையே மோதல் வெடித்த தேசிய தொழில்நுட்பக் கல்வி நிறுவனத்துக்கு (என்ஐடி) செல்வதற்காக வந்த ஹிந்தி நடிகர் அனுபம் கெர், அந்த மாநில போலீஸாரால் விமான நிலையத்திலேயே தடுத்து நிறுத்தப்பட்டார்.

கேரள விபத்து எதிரொலி:வாணவேடிக்கைகளுக்கு தடை கோரி வழக்கு தொடர ஐஎம்ஏ முடிவு

Posted: 10 Apr 2016 11:53 AM PDT

கேரள மாநிலம், கொல்லத்தில் கோயில் திருவிழாவின் போது ஏற்பட்ட தீவிபத்தைக் கருத்தில் கொண்டு, அபாயகரமான வாணவேடிக்கைகளை கோயில் திருவிழாக்கள், அரசியல் நிகழ்ச்சிகள் ஆகியவற்றில் நடத்த

அஸ்ஸாமில் இன்று 2ஆம் கட்டத் தேர்தல்:மேற்கு வங்கத்தில் 31 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு

Posted: 10 Apr 2016 11:53 AM PDT

அஸ்ஸாம் மாநில சட்டப்பேரவையில் உள்ள 61 தொகுதிகளுக்கு 2ஆவது மற்றும் இறுதிக்கட்ட தேர்தல் திங்கள்கிழமை நடைபெறவுள்ளது.

திரௌபதி அம்மன் கோயில் தீமிதி உற்சவம்

Posted: 10 Apr 2016 11:51 AM PDT

திருத்தணி காந்தி சாலை ஸ்ரீ திரௌபதி அம்மன் கோயிலில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற குண்டம் திருவிழாவில் ஏராளமான பக்தர்கள் தீமிதித்து வழிபாடு செய்தனர்.

அரசுப் பேருந்து மீது  கார் மோதி தீப்பிடித்தது

Posted: 10 Apr 2016 11:51 AM PDT

உளுந்தூர்பேட்டை அருகே ஏ.குமாரமங்கலத்தில், அரசுப் பேருந்து மீது கார் மோதியதில், இரு வாகனங்களும் தீப்பிடித்து எரிந்து சேதமடைந்தன. இதில் பயணிகள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.

ஆன்ட்ரே ரஸல், பிராட் ஹாக் அபாரம்:98 ரன்களில் சுருண்டது டெல்லி

Posted: 10 Apr 2016 11:51 AM PDT

ஐபிஎல் கிரிக்கெட் போட்டியின் 2-ஆவது லீக் ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸுக்கு எதிராக முதலில் பேட் செய்த டெல்லி டேர்டெவில்ஸ் அணி 17.4 ஓவர்களில் 98 ரன்களுக்கு சுருண்டது.

அருணாசலேஸ்வரர் கோயிலில் நாளை சித்திரை வசந்த உற்சவம் தொடக்கம்

Posted: 10 Apr 2016 11:51 AM PDT

திருவண்ணாமலை ஸ்ரீஅருணாசலேஸ்வரர் கோயிலின் 10 நாள் சித்திரை வசந்த உற்சவம் செவ்வாய்க்கிழமை தொடங்குகிறது.


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™