Cinema.tamil.com |
- பாரதிராஜாவின் கனவு நனவாகிறது - குற்றப்பரம்பரை நாளை துவக்கம்!
- கார்த்தியின் உழைப்பு என்னை எழுந்து உட்கார வைத்தது - நாகர்ஜூனா!
- எந்தப் பேய் வசூல் பேய் ?
- செல்வராகவன் இயக்கத்தில் விஜய் சேதுபதி
- ஏ.எல்.விஜய் இயக்கும் மூன்று மொழிப்படம்
- மனிதன் படத்துக்கு போட்டி வேண்டாம் : உதயநிதியின் கோரிக்கை
- தோழா சாட்டிலைட் ரைட்ஸ் 9 கோடி
- வானிலை சம்பந்தப்பட்ட கதையில் ஜெயம்ரவி!
- அதர்வாவின் 'செம போதை ஆகாதா'
- கால்சீட் பிரச்சினையில் சிக்கிய ஐஸ்வர்யா தத்தா!
- கபாலி படத்துக்கு பரபரப்பு கூட்டும் ரஞ்சித்!
- 2017 தீபாவளிக்கு 2.0 ?
- ராத்திரியில் கரீனாவுக்கு போன் : அர்ஜூனை எச்சரித்தாரா சைப்.?
- நமஸ்தே இங்கிலாந்து மீண்டும் தாமதமா.?
- விருது நிகழ்ச்சிகளில் பங்கேற்காதது ஏன்.? அஜய்
- சஞ்சய் லீலா பன்சாலியின் ஆல்-டைம் ஹீரோயின் ஐஸ்வர்யாராய்
- சமூகவலைதளங்களின் ராணி சோனாக்ஷி சின்ஹா
- மீண்டும் போலீஸ் அதிகாரியாக மீரா ஜாஸ்மின்.
- கிரிக்கெட் வீரர் ஸ்ரீசாந்த் ஜோடியாக நிக்கி கல்ராணி..!
- திலீப் தயாரிப்பில் உருவாகும் 'கட்டப்பனையிலே ஹ்ரித்திக் ரோஷன்'..!
| பாரதிராஜாவின் கனவு நனவாகிறது - குற்றப்பரம்பரை நாளை துவக்கம்! Posted: பாரதிராஜாவின் கனவுப்படமான 'குற்றப்பரம்பரை' நாளை(ஏப்.3ம் தேதி) ஆரம்பமாக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. கிராமத்து மண் மனம் மாறாமல் யதார்த்தமான படங்களை இயக்குவதில் வல்லவர் இயக்குநர் இமயம் பாரதிராஜா. இவரின் நீண்டகால ஆசை என்பதை விட இவரின் கனவுப்படம் 'குற்றப்பரம்பரை'. தென் தமிழகத்தின் குறிப்பிட்ட சில பகுதி மக்கள் ... |
| கார்த்தியின் உழைப்பு என்னை எழுந்து உட்கார வைத்தது - நாகர்ஜூனா! Posted: வம்சி இயக்கத்தில் கார்த்தி, நாகார்ஜுனா, தமன்னா மற்றும் பலர் நடிக்க தமிழ், தெலுங்கில் கடந்த வாரம் வெளியான படம் 'தோழா'. பிரெஞ்சு மொழியில் வெளியான தி இன்டச்சபிள்ஸ் படத்தின் ரீ-மேக் தான் இது. இரண்டு மொழிகளிலும் இந்தப் படத்திற்கு நல்ல விமர்சனங்களும், வரவேற்பும் கிடைத்தது. அதனால், எதிர்பார்க்கப்பட்டதை விடவும் இப்படத்திற்கு வசூல் ... |
| Posted: தமிழ் சினிமாவில் பேய்களின் ராஜ்ஜியம் இன்னும் தொடர்ந்து கொண்டுதானிருக்கிறது. நேற்று, ஒரே நாளில் இரண்டு பேய்ப் படங்கள் வெளியாகும் அளவிற்கு நிலைமை இருந்து கொண்டிருக்கிறது. இன்னமும் சில பேய்ப் படங்கள் தயாரிக்கப்பட்டு வெளியாகத் தயாராக உள்ளன. சில பேய்ப் படங்கள் தயாராகிக் கொண்டிருக்கின்றன. நேற்று வெளிவந்த 'டார்லிங் 2, ஹலோ ... |
| செல்வராகவன் இயக்கத்தில் விஜய் சேதுபதி Posted: செல்வராகவன் இயக்கத்தில் சிம்பு நடித்த கான் படம் கடந்த வருடம் கைவிடப்பட்டது. கான் படம் ட்ராப்பானதால் சற்றே அப்செட்டில் இருந்த செல்வராகவன் அதன் பிறகு ரிலாக்ஸாகி, கௌதம் மேனன் தயாரிப்பில் நெஞ்சம் மறப்பதில்லை என்ற படத்தை இயக்கத் தொடங்கினார். எஸ்.ஜே.சூர்யா, ரெஜினா, நந்திதா உள்ளிட்ட பலர் நடித்து வரும் இப்படத்தின் படப்பிடிப்பு ... |
| ஏ.எல்.விஜய் இயக்கும் மூன்று மொழிப்படம் Posted: நடன இயக்குநராக பல படங்களில் பணியாற்றிய பிரபுதேவாவை இயக்குநர் ஷங்கர் ஹீரோவாக்கினார். நடிகராக பல வெற்றிப்படங்களைக் கொடுத்தநிலையில், திடீரென இயக்குனராக அவதாரம் எடுத்தார். தமிழ், தெலுங்கில் வெற்றிப்படங்களை இயக்கிய நிலையில் பாலிவுட்டிற்குச் சென்றார் பிரபுதேவா. அங்கு பிசியான இயக்குநராக இருந்து கொண்டே மீண்டும் தமிழுக்கு வந்தார். ... |
| மனிதன் படத்துக்கு போட்டி வேண்டாம் : உதயநிதியின் கோரிக்கை Posted: 'என்றென்றும் புன்னகை' படத்தின் இயக்குநர் ஐ.அஹமது இயக்கத்தில் உதயநிதி நடித்த படம் - 'மனிதன்'. 'ஜாலி எல்எல்பி' ஹிந்தி படத்தின் ரீமேக்காக உருவாகியுள்ள இப்படத்தில் உதயநிதிக்கு ஜோடியாக ஹன்சிகா மோத்வானி நடித்துள்ளார். இவர்களுடன் ஐஸ்வர்யா ராஜேஷ், பிரகாஷ் ராஜ், விவேக், ராதா ரவி ஆகியோரும் நடித்துள்ளனர். 'மனிதன்' படத்திற்கு ... |
| Posted: வம்சி இயக்கத்தில் நாகார்ஜூன், கார்த்தி, தமன்னா நடித்த தோழா திரைப்படம் மார்ச் 25-ல் வெளியானது. வினோத் ஒளிப்பதிவு செய்திருந்த இப்படத்துக்கு கோபி சுந்தர் இசையமைத்திருந்தார். பி.வி.பி சினிமாஸ் படநிறுவனம் இப்படத்தை தமிழ் மற்றும் தெலுங்கு என இரு மொழிகளிலும் தயாரித்தது. தமிழ் மற்றும் தெலுங்கு என இரு மொழிகளிலும் இப்படத்திற்கு ... |
| வானிலை சம்பந்தப்பட்ட கதையில் ஜெயம்ரவி! Posted: ஜெயம்ரவி- லட்சுமிமேனன் ஜோடி சேர்ந்து நடித்து வெளியான படம் மிருதன். தமிழில் வெளியான முதல் ஜோம்பி படமான அப்படம் வெற்றியை கொடுத்தது. அதனால் ரோமியோ ஜூலியட் ஹிட்டுக்கு பிறகு தற்போது லட்சுமண் இயக்கத்தில் போகன் படத்தில் நடிப்பது போன்று, அந்த படத்தை முடித்தும் மிருதன் இயக்குனர் சக்தி செளந்தரராஜன் இயக்கும் படத்தில் நடிக்க கால்சீட் ... |
| Posted: ஈட்டி, கணிதன் படங்களின் வெற்றிக்குப்பிறகு உற்சாகமாக நடித்துக்கொண்டிருக்கிறார் அதர்வா. அதோடு கிக்காஸ் எண்டர்டெய்ன்மென்ட் என்ற பெயரில் ஒரு சொந்த பட நிறுவனம் தொடங்கிய அவர், தன்னை பாணா காத்தாடி படத்தில் அறிமுகம் செய்த பத்ரிக்கு, தான் தயாரித்து நடிக்கும் முதல் படத்தை இயக்கும் வாய்ப்பினையும் கொடுத்தார். அந்த வகையில், ருக்குமணி ... |
| கால்சீட் பிரச்சினையில் சிக்கிய ஐஸ்வர்யா தத்தா! Posted: நகுல்-தினேஷ் நடித்த தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும் என்ற படத்தில் அறிமுகமானவர் ஐஸ்வர்யா தத்தா. அந்த படத்தில் நகுலுக்கு ஜோடியாக நடித்த அவர், பின்னர் பாயும்புலி, ஆறாது சினம் படங்களிலும் நடித்தார். இந்த நிலையில், தற்போது அவர் மறைந்திருந்து பார்க்கும் மர்மமென்ன, தனிக்காட்டு ராஜா, முடிசூடா மன்னன் ஆகிய படங்களில் நடித்து வருகிறார். ... |
| கபாலி படத்துக்கு பரபரப்பு கூட்டும் ரஞ்சித்! Posted: லிங்காவிற்கு பிறகு ரஜினி நடித்துள்ள படம் கபாலி. இந்த படத்தில் தனது ரியல் கெட்டப்பில் நடித்திருக்கிறார் ரஜினி. அவரது இளம் வயது காட்சிகளும் ப்ளாஷ்பேக்கில் இடம்பெறுகிறதாம். அப்போது அவரது மனைவியாக நடித்துள்ள ராதிகா ஆப்தேவுடன் ரஜினி நடித்துள்ள ரொமான்ஸ் மற்றும் தங்களது குழந்தையுடன் நடித்துள்ள செண்டிமென்ட் காட்சிகள் ... |
| Posted: ஷங்கர் இயக்கத்தில் ரஜினிகாந்த், அக்ஷய்குமார், எமி ஜாக்சன் மற்றும் பலர் நடித்து வரும் படம் '2.0'. இந்தப் படத்தின் படப்பிடிப்பு கடந்த பத்து நாட்களக்கும் மேலாக டெல்லியில் நடைபெற்று வருகிறது. முதலில் அக்ஷய்குமார் சம்பந்தப்பட்ட காட்சிகள் படமாக்கப்பட்டன. சில நாட்களுக்கு முன்பிருந்து ரஜினிகாந்தும் படப்பிடிப்பில் கலந்து கொண்டு ... |
| ராத்திரியில் கரீனாவுக்கு போன் : அர்ஜூனை எச்சரித்தாரா சைப்.? Posted: பால்கி இயக்கத்தில், அர்ஜூன் கபூர், கரீனா கபூர் நடித்து வெளியாகியுள்ள படம் ''கி அண்ட் கா''. இப்படம் நேற்று ஏப்ரல் 1ம் தேதி திரைக்கு வந்துள்ளது. படத்திற்கு வரவேற்பும் கிடைத்துள்ளது. இந்நிலையில் சில தினங்களாக பாலிவுட்டில் ஒரு செய்தி வெளியாகியுள்ளது. அதாவது, அர்ஜூன் கபூர், கரீனாகபூருக்கு ராத்திரியில் போன் செய்து தொல்லை ... |
| நமஸ்தே இங்கிலாந்து மீண்டும் தாமதமா.? Posted: பாலிவுட்டின் இயக்குநரும், தயாரிப்பாளருமான விபுல்ஷா விரைவில் இயக்கவிருக்கும் படம் ''நமஸ்தே இங்கிலாந்து''. இப்படத்தின் ஷூட்டிங் கிட்டத்தட்ட பாதி முடிந்திருக்க வேண்டியது, ஆனால் இன்னும் படப்பிடிப்புகள் ஆரம்பமாகவில்லை. ஆகஸ்ட் மாதம் இதன் படப்பிடிப்பு ஆரம்பமாக இருக்கிறது. இதனிடையே இப்படத்தின் படப்பிடிப்பு மீண்டும் ... |
| விருது நிகழ்ச்சிகளில் பங்கேற்காதது ஏன்.? அஜய் Posted: கிட்டத்தட்ட நம்மூர் அஜித் போன்றவர் பாலிவுட் நடிகர் அஜய் தேவ்கன். அஜித் எப்படி எந்தவொரு நிகழ்ச்சிகளிலும் பங்கேற்க மாட்டோரா, அதேப்போன்று அஜய்யும் எந்தவொரு விருது நிகழ்ச்சியிலும் பங்கேற்க மாட்டார். சமீபத்தில் மத்திய அரசு வழங்கி கவுரவித்த பத்மஸ்ரீ விருது நிகழ்ச்சியில் மட்டும் பங்கேற்றார். இந்நிலையில் அஜய், தான் ஏன்,? விருது ... |
| சஞ்சய் லீலா பன்சாலியின் ஆல்-டைம் ஹீரோயின் ஐஸ்வர்யாராய் Posted: இயக்குநர் சஞ்சய் லீலா பன்சாலி மிகுந்த உற்சாகத்துடன் இருக்கிறார். அவர் இயக்கிய பாஜிராவ் மஸ்தானி படம் சூப்பர் ஹிட்டானதோடு, சிறந்த இயக்குநருக்கான தேசிய விருதும் வென்றுள்ளது. இதை கொண்டாடும் விதமாக சில தினங்களுக்கு முன்னர் பார்ட்டி ஒன்றை ஏற்பாடு செய்தார் சஞ்சய் லீலா பன்சாலி. இதில் பாலிவுட்டின் பல பிரபலங்கள் பங்கேற்றனர். நடிகை ... |
| சமூகவலைதளங்களின் ராணி சோனாக்ஷி சின்ஹா Posted: நடிகர் சத்ருஹன் சின்ஹாவின் வாரிசு சோனாக்ஷி சின்ஹா. பாலிவுட்டின் முன்னணி நடிகையான இவர் பேஸ்புக், டுவிட்டர், இன்ஸ்ட்ராகிராம் போன்ற சமூக வலைதளங்களிலும் விழிப்புடன் இருப்பவர். சோனாக்ஷி எப்போதும் தனது ரசிகர்களுடன் கலந்துரையாடுவார், போட்டோக்களை பதிவிடுவார், தன் படம் சம்பந்தப்பட்ட விஷயங்களையும் உடனுக்கு உடன் தெரிவிப்பார். இதனால் ... |
| மீண்டும் போலீஸ் அதிகாரியாக மீரா ஜாஸ்மின். Posted: திருமணத்திற்குப்பின் மீண்டும் படங்களில் நடிக்கலாமா வேண்டாமா என்கிற குழப்பத்தில் தான் கொஞ்ச நாட்கள் இருந்துவந்தார் மீரா ஜாஸ்மின். காரணம் மீரா ஜாஸ்மின் நடிக்க வந்து பதினான்கு வருடம் ஆகிவிட்டது. இப்போது திருமணமும் பண்ணிவிட்டார். வயதோ முப்பத்து ஐந்தை தொட்டுவிட்டது. இனி கதாநாயகியாகவெல்லாம் நடிக்க முடியாது என்பது அவருக்கே ... |
| கிரிக்கெட் வீரர் ஸ்ரீசாந்த் ஜோடியாக நிக்கி கல்ராணி..! Posted: கிரிக்கெட் சூதாட்ட புயலில் சிக்கி ஒருவழியாக கரையேறியுள்ள கிரிக்கெட் வீரர் ஸ்ரீசாந்துக்கு இந்த வருடம் எல்லாமே இனிப்பான செய்திகளாகவே கிடைத்து வருகின்றன. அந்தவகையில் பி.ஜேபி கட்சியின் சார்பில் கேரள சட்டமன்ற தேர்தலில் போட்டியிடுகிறார் ஸ்ரீசாந்த். இன்னொரு பக்கம் இவர் ஹீரோவாக நடிக்கும் படத்தின் வேலைகளும் துவங்கப்பட உள்ளன. ... |
| திலீப் தயாரிப்பில் உருவாகும் 'கட்டப்பனையிலே ஹ்ரித்திக் ரோஷன்'..! Posted: கடந்த வருடம் பிருத்விராஜ், இந்திரஜித், ஜெயசூர்யா என மூவரையும் ஒன்று சேர்த்து 'அமர் அக்பர் அந்தோணி' படத்தை இயக்கினாரே நாதிர்ஷா, அவரை ஞாபகம் இருக்கிறது தானே, பிளாக் பஸ்டர் ஹிட்டான அந்தப்படத்தை தொடர்ந்து திலீப் நடிக்கும் புதிய படத்தை இயக்குவார் என்றே எதிர்பார்க்கப்பட்டது. காரணம் திலீப்பின் மிக நெருங்கிய நண்பர் தான் நாதிர்ஷா. ... |
| You are subscribed to email updates from Cinema.Dinamalar.com | 2016-04-02. To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States | |