Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





ஈகரை தமிழ் களஞ்சியம்

ஈகரை தமிழ் களஞ்சியம்


"வத்தல் வடாம் வகைகளுக்கான பின்னூட்டங்கள் இங்கே "

Posted: 25 Apr 2016 03:07 PM PDT

இங்கு உங்களின் மேலான கருத்துகளை சொல்லுங்கள் புன்னகை

உணவுகளின் போட்டோகள் ! :) - சாமை தேன்குழல் !

Posted: 25 Apr 2016 02:56 PM PDT

நான் இங்கு போடப்போகும் போட்டோகள் நான் மற்றும் எங்க கிருஷ்ணா சமைக்கும் போது எடுத்தவை உங்களின் பார்வைக்காக யாருக்காவது போட்டோ பார்த்து செய்ய வேண்டும் என்று தோன்றினால், உணவின் பெயரை சொல்லி "ஓட்டு " வில் இருக்கும் சந்தேகத்திரி இல் கேளுங்கள் சரியா? எப்போதும் போல் உங்கள் ஆதரவு தேவை     குறிப்பு: இன்று ( 31-7-2014) முதல் சிலநாட்களுக்கு என்னுடைய 'லேட்டஸ்ட் சிஷ்யை  & மாட்டுப்பெண் - ஆர்த்தி' லண்டன் இல் சமைத்தபோது எடுத்த போட்டோக்கள் இங்கு 2 வருடமாக  என்னுடன் இருந்து, பார்த்து கற்றுக் கொண்டவைகளை ...

வத்தல் போடலாமா ? மோர் மிளகாய்

Posted: 25 Apr 2016 12:39 PM PDT

வத்தல் போடலாமா ?............ இத நான் மார்ச் மாதமே கேட்டிருக்கணும் ..ம .என்ன பண்ணுவது எனக்கு உடம்பு சரி இல்ல . சரி அக்னி நட்சத்திரம் போகட்டும் என இருந்தேன்.என்ன பாட்டி சொல்வா அக்னி நட்சத்திரத்தில் எப்பவேணா மழை பெய்யுமாம். ஸோ, நாம இப்ப வத்தல் போட தயாராகலாம் . சரியா? உங்கள் மேலான கருத்துகளை யும் , பின்னூட்டங்களையும் கீழே உள்ள லிங்க் இல் தரவும். அப்படி தந்தால் இந்த திரி இல் வெறும் வத்தல் , வாடாம் வகைகள் மட்டும் இருக்கும் . படிப்பவர்களுக்கும் நன்றாக இருக்கும். சரியா? வத்தல் வடாம் வகைகளுக்கான ...

என்னை பற்றி - கோபிநாத்

Posted: 25 Apr 2016 12:35 PM PDT

பெயர்: *கோபிநாத் மதியழகன்*
சொந்த ஊர்: *சென்னை*
ஆண்/பெண்: *ஆண்*
ஈகரையை அறிந்த விதம்: *கூகுள் - ல் தமிழ் சிறுகதைகள் தேடும் போது*
பொழுதுபோக்கு: *தமிழ் புத்தகங்கள் வாசிப்பது*
தொழில்: *மென்பொருள் பொறியாளர்*
மேலும் என்னைப் பற்றி:**
இரு தெய்வங்களின் மகன் (தாய், தந்தை)
ஒரு தேவதையின் கணவன்,
ஒரு இளவரசியின் தந்தை.
*ஒரு சாதாரண மனிதன்*,

ஆயுதம் எடுப்போம்!

Posted: 25 Apr 2016 12:33 PM PDT

ஆயுதம் எடுப்போம்!!!! கோடைக்கு கொடநாடு போறவங்களுக்கு கொடி பிடிக்க கொளுத்தும் வெயிலில் கோமாளியாய் நிற்கிறான் ஏழை சிவனாண்டி?! வயிறுக்கு வழியில்லாதவனிடம் வாட்ஸ்அப்பில் பேசுகிறார்களாம்?! குடிக்கும் தண்ணீரை காசாக்கி களவாடி மிட்டா மிராசுக்கு மினரல் வாட்டராம்?! ஏர்பிடித்து உழுதவன் ஏமாளியாய் இருக்க எதுவுமே செய்யாதவன் ஏரோபிளேன்ல பறக்கிறானாம்?! சிறிது சிந்திப்போமா?! அரியணையை ராஜபோகத்திற்கு பயன்படுத்தி நாட்டை நாசமாக்கி நடுவீதியில் நலம்கெட விழச்செய்யும் ...

தெளிந்த புத்தியுள்ளவர்களாயிருங்கள். .

Posted: 25 Apr 2016 12:29 PM PDT

- ஒரு குளத்தில் ஒரு மீன் நீந்தி விளையாடிக் கொண்டிருந்தது. அதைப்பார்த்த ஒரு கழுகு, வேகமாக கீழ்நோக்கிப் பறந்து வந்து அம்மீனை தன் இரு கால்களாலும் பற்றிக்கொண்டு, மேலெழுந்து, மலைச் சிகரத்திலிருந்த தன் இருப்பிடத்துக்கு தூக்கி சென்றது. அந்த பெரிய மீனும் பலவாறாக துள்ளி, நெளிந்து தன்னை காப்பாற்றிக்கொள்ள முயன்றது. ஆனால் கழுகோ தன் கூரிய நகங்களை மீனுக்குள் அழமாக செலுத்தி, இறுகப்பற்றியிந்தது. மேலே போகப்போக களைப்புற்றது கழுகு. அந்த மீனின் எடையைத் தூக்கிக் கொண்டு பறப்பது சிரமமாக இருந்தது. ...

நீண்ட இடைவெளிக்குப் பிறகு..................

Posted: 25 Apr 2016 12:25 PM PDT

நீண்ட இடைவெளிக்குப் பிறகு மீண்டும்...........

உங்கள் அனைவரையும் என்னுடைய மகிழ்ச்சியை பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்................

எங்களுக்கு இரண்டாவது குழந்தை பிறந்தது உள்ளது (12/12/2015)...Master.SRINITHAN (ஸ்ரீரங்காக்கு தம்பி)..

என் இரண்டுக் குழந்தைகளும் நீண்ட வாழ்க்கை வாழ வேண்டுமென்ற ஆசீர்வதியுங்கள்....

நீதித்துறையைக் காப்பாற்றுமாறு மோடியிடம் தலைமை நீதிபதி டி.எஸ்.தாக்கூர்

Posted: 25 Apr 2016 12:16 PM PDT

- நீதிமன்றங்களில் நீதிபதிகளை அதிகரித்து சாமானிய, ஏழை மக்களுக்கும், விசாரணைக் கைதிகளாக சிறையில் வாடுபவர்களுக்கும் நீதி வழங்க நீதித்துறையின் சுமையைக் குறைத்து நீதித்துறையை காப்பாற்றுங்கள் என்று உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி டி.எஸ்.தாக்கூர் பிரதமர் மோடியிடம் கண்ணீர் மல்க உணர்ச்சிகர வேண்டுகோள் விடுத்தார். புதுடெல்லியில் இன்று நடைபெற்ற வருடாந்திர முதல்வர்கள் மற்றும் தலைமை நீதிபதிகள் மாநாட்டில் பிரதமர் மோடி மேடையில் இருக்கும் போதே, நீதித்துறை விவகாரத்தில் மத்திய அரசின் செயலற்ற ...

வரலாற்றில் முதல்முறையாக நடிகர் சங்கக் கடன் தீர்க்கப்பட்டது #விஷால் குஷி

Posted: 25 Apr 2016 12:14 PM PDT

தென்னிந்திய நடிகர்சங்க கடன் முழுமையாக அடைத்துவிட்டோம் என்று விஷால் மகிழ்ச்சியாகத் தெரிவித்துள்ளார். முன்னதாக, தென்னிந்திய நடிகர்சங்க பழைய நிர்வாகிகள் நடிகர்சங்க நிலத்தை எஸ்பிஐ சினிமாஸிடம் ஒப்படைத்து, அதன் மூலம் நடிகர்சங்க கடனை அடைக்கவும், வருவாய் ஈட்டவும் ஒப்பந்தம் செய்திருந்தார்கள். சமீபத்தில் நடிகர்சங்க புதிய பொறுப்பாளர்களாக பொறுப்பேற்ற பாண்டவர் அணியான விஷால், நாசர், கார்த்தி உள்ளிட்டோர் எஸ்.பி.ஐ.சினிமாஸிடன் பேசி கடன் வாங்கி நடிகர்சங்க நிலத்தை மீட்டனர். கடன் தொகையை அளிப்பதற்காகவும், ...

108 ஆண்டுகளுக்குப் பின்னர் வேலூரில் 111 டிகிரி வெயில்

Posted: 25 Apr 2016 12:05 PM PDT

-- வேலூரில் ஞாயிற்றுக்கிழமை அதிகபட்சமாக 111 டிகிரி ஃபாரன்ஹீட் வெயில் பதிவானதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும், தமிழகத்தின் வட மாவட்டங்களில், வெப்ப அலையின் தாக்கம் கடுமையாக இருக்கும் என்றும் தெரிவித்துள்ளது. வரலாறு காணாத வெயில்: வேலூர் மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை அதிகபட்சமாக 111 டிகிரி ஃபாரன்ஹீட் அளவுக்கு வெப்பம் பதிவாகியது. இதுவரை இல்லாத அளவுக்கு, ஏப்ரல் மாதத்தில் ஞாயிற்றுக்கிழமை அதிக பட்சமாக வெப்பம் பதிவானது. அதாவது, சுமார் 108 ஆண்டுகளுக்குப் பின்னர் ...

எனது இலங்கைப் பயணம் .

Posted: 25 Apr 2016 12:02 PM PDT

எனது இலங்கைப் பயணம் ========================= சென்ற டிசம்பர்த் திங்கள் 23 ம் நாள் முதல் ஜனவரி - 2016 ம் திங்கள் 3 ம் நாள் வரையில் 10 நாட்களுக்கு இலங்கைப் பயணம் மேற்கொண்டேன் . இது ஒரு சுற்றுலா நோக்கில் மேற்கொண்ட பயணமாகும் . இந்தப் பயணத்தில் நான் , என் துணைவியார் , என் மாப்பிள்ளை , என் மகள் மற்றும் அவர்களுடையை ஒரே பையன் பிரணவ் ஆகிய ஐந்து பேரும் கலந்துகொண்டோம் . இது என்னுடைய இரண்டாவது விமானப் பயணம் ஆகும் . முதல் விமானப் பயணம் , சில ஆண்டுகளுக்கு முன்பு சென்னையிலிருந்து , புனே சென்றது ஆகும் . என்னுடைய ...

துள்ளி துள்ளி நீ பாடம்மா சீதையம்மா

Posted: 25 Apr 2016 11:38 AM PDT

படம் : சிப்பிக்குள் முத்து இசை : இளையராஜா பாடியவர்கள் : பாலசுப்ரமணியம், ஜானகி வரிகள் : வைரமுத்து – —————————— துள்ளி துள்ளி நீ பாடம்மா சீதையம்மா நீ கண்ணீர் விட்டால் சின்ன மனம் தாங்காதம்மா துள்ளி துள்ளி நீ பாடம்மா சீதையம்மா நீ கண்ணீர் விட்டால் சின்ன மனம் தாங்காதம்மா துள்ளி துள்ளி நீ பாடம்மா சீதையம்மா துள்ளி துள்ளி துள்ளீ துள்ளி துள்ளி துள்ளி துள்ளி துள்ளி நீ பாடம்மா சீதையம்மா – கட்டிய தாலி உண்மையென்று நீ அன்று ராமனை நம்பி வந்தாய் கட்டிய தாலி உண்மையென்று நீ அன்று ராமனை நம்பி ...

தேரை துள்ளி வெளியே வந்தது--ஸ்ரீ பெரியவா

Posted: 25 Apr 2016 11:37 AM PDT

- சிற்ப சாஸ்திரத்தில் ஸ்ரீ பெரியவாளுக்கு அபாரமான ஞானம். சிற்பிகளால் கூட அறிய முடியாத உண்மையை ஸ்ரீ பெரியவர்கள் சிற்பிகளுக்கே உணர்த்துவார்கள். - ஆகம சாஸ்திரங்களில் ஆண் கல்,பெண் கல், ஆணும் பெண்ணும் இல்லாத கல் என பாறாங்கற்களை மூன்றாகப்பிரித்துள்ளார்கள். - சில தெய்வச் சிலைகள், ஆண் கற்களால் தான் செய்ய வேண்டும். சில தெய்வச் சிலைகளை பெண் கற்களால் தான் செய்ய வேண்டும்.சில தெய்வச் சிலைகளை நபும்ஸக கற்களால்தான் செய்ய வேண்டும். சிற்பிகள் பாறைகளில் உளியால் செதுக்கி, கல்லின் தன்மையை அறிவார்கள். ...

இந்தியர்கள் எதையும் எளிதில் புரிந்து கொள்வதில்லை:அமெரிக்க மாகாண ஆளுநர் ஆதங்கம்

Posted: 25 Apr 2016 11:35 AM PDT

அமெரிக்காவில் உணவகங்கள் உள்ளிட்ட இடங்களில் பணியாற்றும் இந்தியப் பணியாளர்கள் எதையும் எளிதில் புரிந்து கொள்வதில்லை என்று அமெரிக்காவின் மெயின் மாகாண ஆளுநர் பால் லிப்பேஜ் ஆதங்கத்துடன் தெரிவித்துள்ளார். அமெரிக்காவில் குடியரசுக் கட்சி சார்பில் வரும் ஜூலை மாதம் நடைபெறவுள்ள தேசிய மாநாட்டில் பங்கேற்கும் பிரதிநிதிகளை தேர்ந்தெடுப்பதற்கான ஆலோசனைக் கூட்டம், வாஷிங்டனில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இதில் பால் லிப்பேஜ் பேசியபோது, "அமெரிக்காவின் பல்வேறு பகுதிகளில் உள்ள உணவகங்கள் உள்ளிட்ட ...

பிச்சை எடுப்பதற்கு பதில் நடனமாடுவது மேல்: சுப்ரீம் கோர்ட் கருத்து

Posted: 25 Apr 2016 07:20 AM PDT

புதுடில்லி டான்ஸ் பார்கள் நடத்துவதற்கு அனுமதி அளித்து சுப்ரீம் கோர்ட் ஏற்கனவே பிறப்பித்துள்ள உத்தரவு கடும் சர்ச்சையை கிளப்பிய நிலையில், இன்று மீண்டும் டான்ஸ் பார்களுக்கு ஆதரவான கருத்தை சுப்ரீம் கோர்ட் வெளியிட்டுள்ளது. இவ்வழக்கில் கருத்து தெரிவித்துள்ள நீதிபதிகள் பெஞ்ச், தெருக்களில் பிச்சை எடுப்பதை விட நடனமாடி சம்பாதிப்பது மேல் என தெரிவித்துள்ளது. மகாராஷ்டிராவில் டான்ஸ் பார்கள் நடத்துவதற்கு புதிய கட்டுப்பாடுகளை விதித்தும், புதிய பார்களுக்கு அனுமதி அளிக்க மறுப்பு தெரிவித்தும் அம்மாநில அரசு ...

குழந்தைக்கு கொண்டு சென்ற 15 லிட்டர் தாய்ப்பாலை கொட்டிய விமான நிலைய அதிகாரிகள்

Posted: 25 Apr 2016 07:16 AM PDT

லண்டனில் உள்ள ஹீத்ரோவ் விமான நிலையத்திற்கு அமெரிக்க நாட்டை சேர்ந்த ஜெசிக்கா கோக்லி என்ற பெண்மணி சில தினங்களுக்கு முன்னர் சென்றுள்ளார். பெண்ணின் உடமைகளை போலீசார் சோதனை செய்தனர். அப்போது ஒருபாட்டிலில் சுமார் 14.8 லிட்டர் அளவுள்ள தாய்ப்பால் இருந்ததை கண்டுபிடித்துள்ளனர். இது குறித்து விசாரணை செய்தபோது, 'நான் மற்றொரு நகரில் பணி செய்து வருகிறேன். இரண்டு கிழமைக்கு ஒருமுறை மட்டுமே வீட்டிற்கு திரும்புவேன். இந்த இரண்டு கிழமைக்கு தனது 8 மாத குழந்தைக்கு தாய்ப்பால் அவசியம் என்பதால், அதனை பத்திரமாக சேமித்து ...

தேர்தலில் போட்டியிடவில்லை : கடைசி நேரத்தில் முடிவை மாற்றிய வைகோ

Posted: 25 Apr 2016 07:13 AM PDT

கோவில்பட்டி தமிழக சட்டசபை தேர்தலில் கோவில்பட்டி தொகுதியில் தான் போட்டியிட போவதில்லை என மதிமுக பொதுச் செயலாளர் வைகோ அறிவித்துள்ளார். தேமுதிக-மக்கள் நல கூட்டணி- தமாகா வெற்றிக்காக பிரசாரம் மட்டுமே செய்ய உள்ளதாகவும், கோவில்பட்டியில் தன்னை மையப்படுத்தி சாதி மோதல் உருவாவதை தடுக்கவே தேர்தலில் போட்டியிடும் முடிவை மாற்றிக் கொண்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, தேமுதிக-மக்கள் நல கூட்டணியின் ஒருங்கிணைப்பாளராக இருந்து வருகிறார். இவர் சட்டசபை தேர்தலில் இம்முறை ...

கில்லட்டின்‬ கருவியால் முதல் மனிதர் கொல்லப்பட்ட தினம்

Posted: 25 Apr 2016 06:20 AM PDT



வரலாற்றில் கில்லட்டின்‬ கருவியால் முதல் மனிதர் கொல்லப்பட்ட தினம் இன்று.
.
ஏப்ரல் 25.1792 ல் ‪#‎Nicolas_Jacques_Pelletier‬ என்ற பிரான்சு நாட்டுகாரர் முதல் மனிதனாக இந்த கருவியால் கொல்லப்பட்டார்.
.
ஜோசப்-இக்னேஸ் கில்லட்டின் எனும் மருத்துவரின் பெயரால் இவ்வியந்திரங்கள் "கில்லட்டின்" என்று அழைக்கப்பட்டன.

-முகனூல்

தினம் தினம் திருமணம் : திருவிடந்தை

Posted: 25 Apr 2016 05:30 AM PDT

கடலலை கூட சற்று அலுப்போடு ஓய்ந்து போனாலும் போகலாம். ஆனால், அதே கடலின் அருகிலிருக்கும் திருவிடந்தை நித்ய கல்யாணப் பெருமாள் கோயிலில் நடைபெறும் திருமணத்திற்கு முடிவேயில்லை. இந்தப் பெண்ணுக்கு கல்யாணம் ஆக வேண்டுமே, இந்தப் பையனுக்கு சீக்கிரம் நல்ல பெண் அமைய வேண்டுமே என்று பெற்ற தந்தை-தாயைவிட ஒரு படி கூடவே கருணையும் கவலையும் கொண்டு அருள் பாலித்து வருகிறார், திருவிடந்தை வராகப் பெருமாள். புராண காலத்தில் தன்னை வெளிப்படுத்திக் கொண்ட ஞானப்பிரான், சரித்திர காலத்திலும் லீலைகளை நிகழ்த்தியிருக்கிறான். ...

பரிசுகொடு நூலை – (கனகரவி)

Posted: 25 Apr 2016 02:46 AM PDT

- கடலில் உண்டு அலை காற்றில் ஆடும் சோலை வாழை போடும் குலை வளர்க்க வேண்டும் கலை மனிதருக்கும் உண்டு தலை மரத்தில் உண்டு இலை வீட்டில் உண்டு நிலை வீரனுக்கு வைப்பர் சிலை அரிசியாக்கு நெல்லை அடுப்பில் வை உலை மீன்பிடிக்க வலை மின்னலும் ஓர் கலை அம்மா தராள் தொல்லை அவளே அன்பின் மாலை படிக்க வேண்டும் நூலை பரிசு கொடு நூல —————- நட்புடன் – கனகரவி

பேசும் மெளனம்: அழகூர். அருண். ஞானசேகரன்

Posted: 25 Apr 2016 02:24 AM PDT

- மன்னவனோர் மௌனியென மக்கள்தமின் ஓலக்குரல் ஏன்னாளும் ஒலிக்குமாம் இரைந்து ! மௌனமதைக் காக்கவோ மக்களன்று வாக்கிட்டார், எவ்வகையில் நியாயமோ இது ? தலைவனவன் மௌனமும் , தறுதலைகள் உளரல்களும் , விலைபோகா தென்பதனை விளக்கு ! அறிஞர்களின் மௌனமதால் ஆக்கமதும் கெடுமென்ற நெறிதன்னை உணர்த்திடுவாய் நீ ! மன்றமாள வந்துபின் மௌனியென் றானதென்ன நன்றான செயல்தானோ நவில் ! பேச்சாற்றல் கொண்டிருந்தும் பேராண்மை இல்லையென போச்சுஅவன் மதிப்பென்றே ...

ஜெயலலிதா, கருணாநிதி இன்று மனு தாக்கல்

Posted: 25 Apr 2016 12:38 AM PDT

- - முதல்வரும், அதிமுக பொதுச் செயலாளருமான ஜெயலலிதா, திமுக தலைவர் கருணாநிதி ஆகியோர் சட்டப் பேரவைத் தேர்தலில் போட்டியிடுவதற்கான வேட்பு மனுக்களை திங்கள்கிழமை (ஏப். 25) தாக்கல் செய்கின்றனர். சென்னை மாவட்டத்துக்குட்பட்ட ராதாகிருஷ்ணன் நகர் (ஆர்.கே.நகர்) தொகுதியில் முதல்வர் ஜெயலலிதாவும், திருவாரூர் தொகுதியில் தி.மு.க. தலைவர் கருணாநிதியும் வேட்புமனு தாக்கல் செய்யவுள்ளனர். இதற்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் அந்தந்த தொகுதிகளுக்குட் பட்ட தேர்தல் நடத்தும் அதிகாரிகளின் அலுவலகங்களில் ...

தொண்டனாக இருந்து பணியாற்றியவர் மகாத்மா காந்தி:நடிகர் கமல்ஹாசன்

Posted: 25 Apr 2016 12:14 AM PDT

- கோவையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் தமிழில் மொழி பெயர்க்கப்பட்ட மகாத்மா காந்தியின் "சத்திய சோதனை' நூலை வெளியிடும் நடிகர் கமல்ஹாசன். உடன் (இடமிருந்து) சப்னா புத்தக நிலைய தலைமை செயல் அலுவலர் வி.கார்த்திகேயன், புத்தக நிலைய நிர்வாக இயக்குநர் நிதின் ஷா, பாரதிய வித்யா பவன் தலைவர் பி.கே.கிருஷ்ணராஜ் வாணவராயர், பண்ணாரி அம்மன் குழுமத் தலைவர் எஸ்.வி.பாலசுப்பிரமணியம், எழுத்தாளர் ஆண்டாள் பிரியதர்ஷினி, கவிஞர் புவியரசு. ============== மகாத்மா காந்தி தலைவனாக இல்லாமல் தொண்டனாக இருந்து பணியாற்றியதால்தான் ...

அதிமுகவில் இணைய விரும்புவதாக ஜெ.-க்கு நமீதா கடிதம்

Posted: 25 Apr 2016 12:12 AM PDT

- அதிமுகவில் இணைய விருப்பம் தெரிவித்து முதல்வர் ஜெயலலிதாவுக்கு நடிகை நமீதா கடிதம் எழுதியுள்ளார். இது தொடர்பாக இன்று அவர் எழுதி அனுப்பிய கடிதத்தில், ''நமீதா ஆகிய நான் தமிழ் திரைத் துறையில் நடிகையாக உள்ளேன். தங்களது சீர்மிகு நிர்வாகமும், ஆட்சி முறையும் தமிழகத்தை இந்தியாவின் சிறந்த மாநிலமாகத் திகழ வைத்துள்ளது. சிறந்த தலைவியாகத் திகழும் தங்கள் தலைமையில் நானும் இணைந்து என்னாலான பங்களிப்பைத் தர விரும்புகிறேன். தங்கள் தலைமையில் அஇஅதிமுகவில் அடிப்படை உறுப்பினராக என்னைச் சேர்த்துக் கொள்ளுமாறு ...

திருவரங்கன் உலா – ஸ்ரீ வேணுகோபாலன் - ஈகரை நேரடி தரவிறக்கம்.

Posted: 24 Apr 2016 11:49 PM PDT

திருவரங்கன் உலா – ஸ்ரீ வேணுகோபாலன் திருவரங்கன் உலா ஒரு உண்மை சம்பவத்தை உள்வாங்கி எழுதப்பட்டது. கதை இதுதான். பதினான்காம் நூற்றாண்டில் (1323 AD) டில்லி சுல்தான் உளுக்கான் (இன்னொரு பெயர் முகமது பின் துக்ளக்) ஒரு பெரிய படையை திரட்டிக்கொண்டு தென்னிந்தியாவிற்கு வருகிறான். ஸ்ரீரங்கத்துக் கோவிலின் சொத்துக்களையும், திருவரங்கன் சிலையையும் (உலோகத்தால் ஆனா உற்சவர் சிலை) திருட வருகிறான். ஸ்ரீரங்கம் வாசிகள், கோவிலில் இருக்கும் தேவதாசிகள், வேதாந்த தேசிகர் (வடகலை ஐய்யங்கார்களின் ஆச்சாரியார்) மற்றும் ...

நாணயம் - நான் போகிறேன் மேலே

Posted: 24 Apr 2016 10:28 PM PDT

This posting includes an audio/video/photo media file: Download Now

எங்கெங்கோ கால்கள் செல்லும் பாதையில்

Posted: 24 Apr 2016 09:05 PM PDT

படம் : நந்தா (2001) இசை : யுவன் சங்கர் ராஜா பாடியவர் : இளையராஜா வரிகள் : புலமைப்பித்தன் – ——————– எங்கெங்கோ கால்கள் செல்லும் பாதையில் போகின்றாய் ஏதேதோ நாளை என்ற ஆசையில் வாழ்கின்றாய் உன் சொந்தம் இங்கு யார் யாரோ நீ சொல்லிக்கொள்ள யார் யாரோ நீ வாழும் வாழ்வில் அர்த்தம் என்ன என்றே நீ சொல்லு – எங்கெங்கோ கால்கள் செல்லும் பாதையில் போகின்றாய் ஏதேதோ நாளை என்ற ஆசையில் வாழ்கின்றாய் – காதில்லா ஊசியுமே கடைசி வரைக்கும் வராதே பட்டினத்தார் சொன்னானே பாட்டு ஒன்று அப்போதே எதனை கொண்டு நாம் வந்தோம் எதனை ...


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™