Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





ஈகரை தமிழ் களஞ்சியம்

ஈகரை தமிழ் களஞ்சியம்


7 வது ஆண்டில் அடியெடுத்து வைக்கிறேன் :)

Posted: 20 Apr 2016 01:11 PM PDT

இங்கு நான் இணைந்து இன்றுடன் 6 வருடங்கள் ஆகின்றன.......வாவ்!............நேற்று ஜகதீசன் ஐயாவின் வாழ்த்தில் அவர் குறிப்பிட்டு  இருந்ததைப் பார்தததும் தான் எனக்குத் தோன்றியது, நாம் இங்கு இணைந்து எத்தனை நாள் ஆச்சு என்று. உடனே, profile  பார்த்தேன், பார்த்தால்....22.4.2010 இல் இணைந்து இருக்கேன்............ 6 வருடங்கள்............வாவ் !...........நாட்கள் ஓடி, வாரங்கள் ஓடி, மாதங்களாகி அது 6 வருடங்களாகிவிட்டதே..............அத்தனை நாளா ஆகிவிட்டது, ஏதோ நேற்று சேர்ந்தது போல இருக்கு எனக்கு திரும்பிப் ...

குழந்தைக்கு சொல்லி கொடுக்க வேண்டிய பழக்கவழக்கங்கள் !

Posted: 20 Apr 2016 12:23 PM PDT

அனைத்து பெற்றோர்களும் செய்ய வேண்டியது, குழந்தைகளுக்கு சிறு வயதில் இருந்தே ஒருசில நல்ல பழக்கங்களை பின்பற்ற வைக்க வேண்டும். அதற்காக குழந்தைகளை வற்புறுத்தி செய்ய வைக்கக்கூடாது. ஏனெனில் அவ்வாறு செய்தால், குழந்தைகளுக்கு பெற்றோர்கள் மீது வெறுப்பு வந்துவிடும். எனவே பெற்றோர்கள் குழந்தைகளுக்கு நல்ல பழக்கங்களைச் சொல்லிக் கொடுக்கும் பொழுதே, அதற்கான நன்மைகளையும் வெளிப்படையாக புரியுமாறு சொன்னால், குழந்தைகள் புரிந்து கொண்டு, அதனை விருப்பத்துடன் பின்பற்றுவார்கள். இப்போது குழந்தைகளுக்கு சிறு வயதில் ...

ஆப்பு வைத்த 'ஆப்'...விழித்துக்கொண்ட இந்திய ராணுவம்!

Posted: 20 Apr 2016 12:18 PM PDT

இந்தியாவுக்கு எதிராக நிழல் யுத்தம் செய்யும் பாகிஸ்தானின் மறைமுக செயல், வெளிச்சத்துக்கு வந்துள்ளது. பாகிஸ்தான் தீவிரவாதிகளால் சமீபத்தில் நடத்தப்பட்ட பதன்கோட்  சம்பவம் ஒரு பயங்கரவாத சம்பவமாக பார்க்கப்படுகிறது. இந்திய ராணுவ வீரர்கள் கொல்லப்பட  காரணமான அந்த தாக்குதலை நிகழ்த்த,   தீவிரவாதிகளுக்கு ஒரு மொபைல் அப்ளிகேசன் உதவியுள்ள அதிர்ச்சிகரமான விஷயம் தற்போது தெரிய வந்துள்ளது. Smesh App என்ற ஆப் தான் இதற்கு உதவியுள்ளதாக தெரியவந்திருக்கிறது. Smesh App எவ்வாறு செயல்படுகிறது? இந்த ஆப் பதிவிறக்கம் ...

குழந்தையும் மலரும் செழிப்புள்ளவை. …

Posted: 20 Apr 2016 12:13 PM PDT

- -யாருடைய மனம் ஏழை எளியவர்களுக்காக இரக்கம் கொள்கிறதோ, அவரே மகாத்மா. – #விவேகானந்தர் – ——————————– * குழந்தைகளோடு நீங்கள் விளையாடினால் போதும். நீங்கள் விரும்பியவாறு அவர்களை மாற்றியமைக்கலாம். – -பிஸ்மார்க் – ————————————— – * குழந்தைகள் என்றால் தூய்மையான மழைநீர்போல. இந்த உலகத்து மாசும் அழுக்கும் படாத தூய்மையான நீர் அது. – -டாக்டர் மு.வ. – ————————————— – * குழந்தையும் மலரும் செழிப்புள்ளவை. அவற்றை மென்மையாகக் கையாள வேண்டும். – -ஜவாஹர்லால் நேரு – ———————————— – * குழந்தைகள்தான் ...

குழந்தைக்குத் தேவை முன்மாதிரிகளே!

Posted: 20 Apr 2016 12:06 PM PDT

- * நன்கு உண்பதற்கும் நன்கு வழிநடத்தப்படுவதற்கும் ஒவ்வொரு குழந்தைக்கும் உரிமை உண்டு. -ரூதிஸ் மெல்டர் – —————————————- – * குழந்தைக்குத் தேவை முன்மாதிரிகளே! குறை சொல்பவர்கள் அல்ல. -ஜெனபர்ட் – ————————————— – * கள்ளங்கபடமற்ற தன்மையைக் கண்ணால் காண வேண்டுமா? ஒரு குழந்தையின் கண்களை உற்றுப் பாருங்கள். -சுவாமி விவேகானந்தர் – ————————————— – * குழந்தைகளைப் பெற்றோரின் சொத்தாக எண்ணுவதை விட அரசாங்கத்தின் பொதுச் சொத்தாகக் கருத வேண்டும். -பிளாட்டோ – ————————————– – * குழந்தைகள் ...

கோடையில் கொடையிலிருந்து.....

Posted: 20 Apr 2016 12:05 PM PDT

உன் ஸ்பரிசம் உயிரின் சுவாசம் உலகையே மறக்கும் மாயவித்தையின் ஜாலம்! இன்பத்தின் வாசல் இனிமையின் புகலிடம் கண்களை மிளிரச்செய்யும் உந்தன் வனப்பு! இதயத்தை உறைய செய்யும் உந்தன் சிலிர்ப்பு! தேகத்தை மறைக்க செய்யும் கருங்காடு மதியை மறக்கச் செய்யும் மனமகிழ் காடு! இதயம் கொண்ட துன்பம் மேகத்தை போல் கடந்து செல்லும் உன்னை கண்டால்! பச்சை புல்வெளியை பசலை நோய்போல் படர செய்து மாயை எனும் இன்பத்தில் கண்களை மறைய செய்கிறாய் மேகமாய்!! மலை ...

கலை யாருக்கானது ?

Posted: 20 Apr 2016 12:02 PM PDT

" 'கலை கலைக்காகவே'ன்னு சில பேர் கரடி விடுவானுங்க. அதை நீங்க நம்பாதீங்க. அப்படியிருந்தா அது எப்பவோ செத்துப் போயிருக்கும். கலை வாழ்க்கைக்காகத்தான் ; வாழ்க்கையும் கலையும் சேரும் போது தான் அதுக்கு உயிரே வருது " -எம்.ஆர்.ராதா. நட்சத்திர கிரிக்கெட்டை முன்வைத்து நடக்கும் கேலி கூத்துகளை பார்க்கும் போது எம்.ஆர்.ராதா சொன்ன இந்த வாசகம் தான் நினைவிற்கு வருகிறது. கலை எப்போதுமே மக்களுக்கானது. தமிழக திரையுலகம் எப்பொழுதுமே தமிழக மக்களின் வாழ்க்கையை அப்படியே திரையில் காட்டவில்லை. அதீத அளவில் மிகைப்படுத்தியோ ...

‘தாய்மொழி நூல்களைப் படிக்கவில்லை எனில் மொழி நிலைத்திராது’

Posted: 20 Apr 2016 11:54 AM PDT

- சிங்கப்பூரில் அதிகாரத்துவ மொழிகளாக இருக்கின்ற சீனம், மலாய், தமிழ்மொழி உள்ளிட்ட தாய்மொழிப் புத்தகங்களைப் படிக்கவில்லை என்றால் அந்த மொழிகள் சிங்கப்பூரில் புழக்கத்தில் இல்லாமல் போய்விடக்கூடிய ஆபத்து இருக்கிறது என்று தொடர்பு, தகவல் அமைச்சர் யாக்கூப் இப்ராஹிம் எச்சரித்து இருக்கிறார். இத்தகைய ஒரு நிலை ஏற்பட நாம் விட்டுவிடக்கூடாது என்று அவர் வலியுறுத்தினார். "இருமொழிக் கொள்கையை எந்த அளவுக்கு மேம்படுத்த விரும்புகிறோமோ அந்த அளவுக்குப் பள்ளிக்கூடத் தேர்வுக்கு அப்பாலும் தாய்மொழியில் ...

கழிவறையைவிட அசுத்தமான கைபேசிகள்

Posted: 20 Apr 2016 11:53 AM PDT

- சிங்கப்பூர் - மற்ற வயதினரைக் காட்டிலும் இளை\ர்களே கைபேசியை கழிவறையில் அதிகம் பயன் படுதுகின்றனர் - அத்துடன் இருவரில் ஒருவர்தான் கழிவறையை பயன்படுத்தியபின் கைகளை சுத்தம் செய்கின்றார் - ஆயினும் கைபேசியைச் சுத்தம் செய்வதில்லை எனும் திடுக்கிடும் தகவல்களை வெளியிட்டுள்ளது நன்யாங் தொழில்நுட்பப் பல்கலைக்கழகம் மேற்கொண்ட ஆய்வு ஒன்று. - இப்போக்கு சிங்கப்பூர் இந்தியச் சமுதாயத்திலும் பரவலாகக் காணப்பட்டாலும் ஆய்வு முடிவுகளைக் காட்டிலும் கைபேசியைக் கழிவறையில் பயன்படுத்தும் இந்தியச் ...

தெரிஞ்சுக்கோங்க!.......பிளாஸ்டிக் எப்படி கிடைக்கிறது?

Posted: 20 Apr 2016 11:48 AM PDT

வலி நிவாரணத் தைலம் எப்படி வேலை செய்கிறது? வலி தோன்றுவது உடலில் காயம் இருப்பதையோ, நோயுற்றிருப்பதையோ நமக்கு எச்சரிக்கும் ஓர் உணர்வாகும். நமது உடலிலுள்ள நரம்புகளில் வலியை உணரும் முடிச்சுகள் உள்ளன. இவை முதுகுத் தண்டின் வழியாக வலி உணர்வை மூளைக்கு அனுப்புகின்றன. இதுவே நாம் உணரும் வலி ஆகும். பொதுவாக வலி நிவாரணத் தைலங்களில் மீதைல் சாலிசிலேட், கற்பூரம் மற்றும் மென்த்தால் அடங்கியுள்ளன. இவ்வலி நிவாரணத் தைலத்தை அழுத்தத் தேய்க்கும்போது, அந்த அழுத்தம் நரம்புகளின் முடிச்சுகளை மரத்துப் போகச் செய்கிறது. எனவே, ...

தமிழ் மொழியோடு பெயர் வைத்துக்கொள்ள முடியும்

Posted: 20 Apr 2016 11:32 AM PDT

ஹிந்தியை தாய்மொழியாக கொண்டவர்கள் தங்களது பெயரில் ஹிந்தி எனும் வார்த்தையை இணைத்துக்கொள்ள முன்வரவில்லை. முடியவும் முடியாது. கன்னடா------முடியாது தெலுங்கு----- முடியாது மலையாளம்------முடியாது ஏனைய மொழிகள்----முடியாது ஏனென்றால் மற்ற மொழிகள் யாவும் மொழியாக மட்டுமே வரையறுக்கப்பட்டது. ஆனால் தமிழில்..... தமிழ், தமிழ்ச்செல்வி, தமிழ்ச்செல்வன், தமிழரசன், தமிழ்க்கதிர், தமிழ்க்கனல், தமிழ்க்கிழான், தமிழ்ச்சித்தன், தமிழ்மணி, தமிழ்மாறன், தமிழ்முடி, தமிழ்வென்றி, தமிழ்மல்லன், தமிழ்வேலன், ...

மதன் எழுதிய மனிதனும் மர்மங்களும் புத்தகம் வேண்டும்?

Posted: 20 Apr 2016 11:16 AM PDT

hi nanbarkale,
enakku மதன் எழுதிய மனிதனும் மர்மங்களும் endra book vendum.yaravathu help pannungale..
Siva sir am waiting for reply

சித்திரை திருவிழா மதுரை - 2016

Posted: 20 Apr 2016 11:11 AM PDT

சித்திரை முதல் நாள் சுந்தரேசுவரர் கற்பக விருட்ச வாகனத்திலும் அம்மன் சிம்ம வாகனத்திலும் மாசி வீதிகளில் பவனி வருகின்றனர். இதில் கற்பக மரம் படைத்தல் தத்துவத்தை குறிப்பதாகும். கற்பக விருட்சம் கேட்டதெல்லாம் கொடுக்கும் தன்மை கொண்டது அதானால் சுவாமி கற்பக விருட்ச மரத்தில் வருகிறார். கேட்டதெல்லாம் கிடைத்து விட்டால் தான் என்ற ஆணவம் வந்து விடும். அதை போக்க அம்மன் சிம்மவாகனத்தில் பவனி வருகிறார். - முகனூல் (வீரம்வெளஞ்சமதுரை) சிறப்பு நன்றிகள் இரா.ஸ்டாலின்பாபு அண்ணாவிற்கு கேட்டவுடன் போட்டோ வை ...

ஓ! பெருங்காயத்தில் இவ்ளோ... விஷயம் இருக்கா!

Posted: 20 Apr 2016 10:57 AM PDT

உணவுக்கு மணம் மற்றும் சுவையை கூட்டுவதோடு மட்டுமல்லாமல், ஜீரணத்திற்கும் சிறந்த மருந்துப் பொருள் பெருங்காயம்; இது ஒரு தாவரப்பொருள். இந்த தாவரங்கள் ஈரான், ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளில் மட்டுமே வளர்கிறது. 'பெரூவா' எனும் செடியில் இருந்து வெளிவரும் திரவமே பெருங்காயம் ஆகும். புதர்மேல் மண்டிக் கிடக்கும் இந்த செடியின் வேர் தெரியும் படியாக மண்ணை முதலில் அப்புறப்படுத்துவர். பின்னர், வேரை கத்தியினால் கீறி விடுவர். கீறிய இடத்தில் பசை போன்ற திரவம் வெளிப்பட்டு அங்கேயே கெட்டியாக உலர்ந்து போகும். ஒரு செடியில் ...

உடலுறுப்பு தானம் செய்யுங்கள் ,

Posted: 20 Apr 2016 10:55 AM PDT

- பிரேசிலின் மிகப்பெரும் கோடீஸ்வரர் தனக்கு சொந்தமான பத்து லட்சம் அமெரிக்க டாலர் மதிப்புள்ள பெண்ட்லே சொகுசு காரை புதைக்க விரும்புவதாக விளாம்பரப்படுத்தினார் , அதற்கு அவர் சொன்ன காரணம் - இறப்புக்கு பின்னர் இந்த கார் பயன்படும் என்று . - இதைக்கேட்ட பத்திரிக்கைகள் விமர்சனம் செய்தன , பைத்தியக்காரன் பத்துலட்சம் டாலரை வீணடிக்கிறானே முட்டாள் என்றெல்லாம் திட்டி எழுதினார்கள் . பொதுமக்கள் திட்டி தீர்த்தார்கள் . - புதைப்பதாக சொன்ன தேதியும் வந்தது எல்லோரும் ஆவலாக என்னதான் நடக்குது ...

செய்து பாருங்கள் - பட்டன் கரடி அட்டை!

Posted: 20 Apr 2016 10:51 AM PDT

தேவைப்படும் பொருட்கள்: பென்சில், ஸ்கேல், கத்தரிக்கோல், வெளிர் மஞ்சள் நிற கார்ட் போர்டு, க்ளூ ஸ்டிக், விதவிதமான நிறங்களில் பட்டன்கள்! செய்யலாமா குட்டீஸ்...? 1. முதலில் வெளிர் மஞ்சள் நிற கார்ட் போர்டை 20x10 செமீ அளவில் கட் செய்து, அதை இரண்டாக மடித்துக் கொள்ளவும். அதில் நான்கு துளைகள் உள்ள சற்று பெரிய பட்டனை கரடியின் தலையாக ஒட்டவும். 2. பிறகு அதை விட பெரிய பட்டனை அதன் கீழே ஒட்டவும். (இதுதான் கரடியின் உடல்) 3. பிறகு நான்கு வயலட் கலர் சிறிய பட்டன்களை இந்த பெரிய பட்டனின் நான்கு புறங்களிலும் ...

எல்லாம் அவன் மயம்

Posted: 20 Apr 2016 10:31 AM PDT



அவனோடு மட்டுமே
அசைபோடுவது
என்றாகும் வாழ்வில்
தன் சுயமிழந்து
அவளுக்கானது
என்று எதுவுமே
இல்லாது போகிறது

எல்லாம் அவன் மயம்


(குட்டிக் கவிதைக்கு ஒரு பக்கம் இல்ல. இதில் மேலும் கவிதைகள் தொடர்வேன் என்பதைக் கூறிக்கொள்கிறேன்)

கட்சிகளின் தேர்தல் அறிக்கைகள்

Posted: 20 Apr 2016 08:43 AM PDT

தே மு தி க தேர்தல் அறிக்கை அபத்தக் களஞ்சியமான தேமுதிகவின் தேர்தல் அறிக்கை இது தேர்தல் காலம். வானத்தை வில்லாக வளைப்பதாகவும், நட்சத்திரங்களை கையில் பிடித்து வீட்டு வாசலில் கொண்டு வந்து கொட்டுவதாகவும் அரசியல் கட்சிகள் வாக்குறுதிகளை அள்ளி விடும் காலம்தான். சகட்டுமேனிக்கு வாக்குறுதிகளை அரசியல் கட்சிகள் வாரி வழங்குவார்கள். இந்த வாக்குறுதிகள் நிறைவேற்றப் படக்கூடிய வாய்ப்புள்ளவையா, அப்படியே நிறைவேற்றப்பட்டாலும் அதற்கான சாத்தியக் கூறுகள் எத்தகைய சதவிகிதம் என்பது பற்றியெல்லாம கிஞ்சித்தும் கவலைப் ...

சுவாமி விவேகானந்தர்

Posted: 20 Apr 2016 08:28 AM PDT

சமுதாயமானாலும் அரசியலானாலும் அதன் அமைப்புக்கு அடிப்படையாக உள்ளது மனிதனின் நற்குணமே. பாராளு மன்றம் இதை வகுத்து ,அதைவகுத்து என்ற காரணங்களால் ஒரு நாட்டை நல்லது என்றோ , பெருமை மிக்கது என்றோ கூற முடியாது........
சுவாமி விவேகானந்தர்.

தமிழ்ச்சாரல் !

Posted: 20 Apr 2016 04:33 AM PDT

- – கண்ணழகு ராதையை கட்டியணைக்க தோனுதடி பெண்ணழகு பேதையினால் பேராசை கூடுதடி உன்னழகு ஓவியமே உருகுலையச் செய்குதடி என்னழகு எதுவென்பேன் எழிலாளை கண்டபின்னே . – மொண்டுவிடத் தோனுதடி முத்தழகுத் தமிழை கண்டுவிட்ட பின்னே கற்கண்டாய் ஆனதடி தொன்றுதொட்டு வரும் மரபை நாளும் வென்றுவிட களியாட்டம் போடும் மனமே. – காலைச் சோலையிலே கன்கவர் வித்தாக மாலைக் காட்சியிலோ மயக்கிடும் மானாக சேலைப் பூவிலும் சேர்ந்திடுமே உன்வாசம் ஆலைக் கரும்பாக ஆனதடி என்னுள்ளம். – தென்றல் சசி

தமிழக தேர்தல் செய்திகள் - தொடர் பதிவு

Posted: 20 Apr 2016 04:26 AM PDT


-
ஆர்.கே.நகரில் தேமுதிக மக்கள் நலக் கூட்டணி
சார்பில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின்
மோதிரம் சின்னத்தில் மனோன்மணியம் சுந்தரனார்
பல்கலை முன்னாள் துணை வேந்தர் வசந்தி தேவி
போட்டியிடுவார் என அக்கட்சித் தலைவர்
தொல்.திருமாவளவன் அறிவித்துள்ளார்.
-

எண்களின் ரகசியம் புத்தகம்

Posted: 20 Apr 2016 03:16 AM PDT

பண்டிட் சேதுராமன் எழுதிய எண்களின் ரகசியம் புத்தகம் தேவை. பகிர்ந்தால் நன்றாக இருக்கும்.

சுப்ரமணியன்

ஜெ. வழக்கில் சசிகலா தரப்பு வாதம் தொடங்கியது

Posted: 20 Apr 2016 02:38 AM PDT

- தமிழக முதல்வர் ஜெயலலிதா, சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகியோர் மீதான சொத்துக் குவிப்பு மேல்முறையீட்டு வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நீதிபதிகள் பினாகி சந்திரகோஷ், அமிதவ ராய் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்னிலையில் நேற்று விசாரணைக்கு வந்தது. கர்நாடக அரசு, சுப்பிரமணியன் சுவாமி மற்றும் ஜெயலலிதா தரப்பின் இறுதி வாதம் ஏற்கெனவே நிறைவடைந்துவிட்டது. இதனால் சசிகலா, சுதாகரன், இளவரசி தரப்பின் இறுதி வாதம் தொடங்கியது. மூவர் தரப்பிலும் ஆஜரான மூத்த வழக்கறிஞர் சேகர் நாப்டே, "கர்நாடக அரசு குற்றம் ...

சித்ராபெளர்ணமி விழா

Posted: 20 Apr 2016 02:03 AM PDT

சித்ராபொளர்ணமி சித்ரகுப்தன் பிறந்தநாளாக கொண்டாடப்படுகிறது. ஒவ்வொரு ஆண்டும் சித்திரை மாதம் பெளர்ணமி வரும் நாள் சித்ரா பெளர்ணமியாக கொண்டாடப் படுகிறது. சித்திரா பெளர்ணமி சித்திர குப்தன் பிறந்தநாளாக கொண்டாடப்படுகிறது. இதுபற்றி இரண்டு புராண கதைகள் கூறப்படுகின்றன. மனிதர்களின் ஆயுட்காலம் முடிந்ததும், அவர்களின் உயிர்களை எடுப்பவர் எமதர்மராஜா. அவரவர் செய்த பாவ,புண்ணியத்திற்கேப்ப தண்டனைகளையும் கொடுத்துவந்தார் அவர். அவர் ஒரு முறை மும்மூர்த்திகளில் ஒருவரான சிவபெருமானை சந்தித்து ...

கிளாஸ் பெயிண்டிங்

Posted: 20 Apr 2016 01:05 AM PDT

கிளாஸ் பெயிண்டிங் (glass painting ) பீட்ஸ் வொர்க் (beats work ) அப்ளிக் வொர்க் (appique work )

அம்மாவுக்கு…

Posted: 19 Apr 2016 11:37 PM PDT

- அம்மா நம் எல்லோருடைய வாழ்க்கையும் ஆயுட்காலம் சிறைபோல, நான் அழவில்லை இந்தக் கலங்கி வீங்கிய நதியைத் தாண்டி நான் உன்னிடம் வந்து சேருவேன் நீ விளக்கை அணைத்து விடாதே நான் வந்து சேரும் வரை நமது வீட்டை யாருக்கும் கொடுத்து விடாதே – ————– ஆஷாலதா (மலையாளம்)\ தமிழில் சுகுமாரன்

தெரியுமா உங்களுக்கு ? :)

Posted: 19 Apr 2016 11:02 PM PDT

உடற்சூட்டை தணிப்பவை பச்சைப்பயிறு, மோர், உளுந்தவடை, பனங்கற்கண்டு, வெங்காயம், சுரைக்காய், நெல்லிக்காய், வெந்தயக்கீரை, மாதுளம் பழம் நாவற்பழம், கோவைக்காய், இளநீர் ருசியின்மையைப் போக்குபவை புதினா, மல்லி, கறிவேப்பிலை, நெல்லிக்காய், எலுமிச்சை, மாவடு, திராட்சை, வெல்லம், கருப்பட்டி, மிளகு, நெற்பொறி சிவப்பணு உற்பத்திக்கு புடலைங்காய், பீட்ரூட், முருங்கைக்கீரை, அவரை, பச்சைநிறக் காய்கள், உளுந்து, துவரை, கம்பு, சோளம் கேழ்வரகு,பசலைக்கீரை மருந்தை முறிக்கும் உணவுகள் அகத்தி, பாகற்காய், வேப்பிலை, ...

எங்கே பிராமணன்-சோ

Posted: 19 Apr 2016 08:26 PM PDT



நூல் பெயர் - எங்கே பிராமணன்

எழுத்தாளர் - சோ

நன்றி - மூலமின்நூல் பதிவாளருக்கு

DOWNLOAD

சித்திரை மாதம் பவுர்ணமி நேரம்

Posted: 19 Apr 2016 08:16 PM PDT

This posting includes an audio/video/photo media file: Download Now

ராமன் எத்தனை ராமனடி...

Posted: 19 Apr 2016 08:15 PM PDT

This posting includes an audio/video/photo media file: Download Now

சித்ரா பவுர்ணமி: திருவண்ணாமலை கோவிலில் கிரிவலம் செல்லும் நேரம்

Posted: 19 Apr 2016 07:42 PM PDT

திருவண்ணாமலையில் சித்ரா பவுர்ணமியையொட்டி வரும் 21–ஆம் தேதி இரவு கிரிவலம் செல்ல உகந்த நேரம் அறிவிக்கப்பட்டுள்ளது. திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் மாதந்தோறும் பவுர்ணமி நாட்களில் ஏராளமான பக்தர்கள் கிரிவலம் செல்வது வழக்கம். சித்ரா பவுர்ணமி, மகா தீபத்தன்று லட்சக்கணக்கானோர் திருவண்ணாமலைக்கு வந்து கிரிவலம் சென்று அண்ணாமலையாரை வழிபடுகின்றனர். இந்த ஆண்டு சித்ரா பவுர்ணமி வரும் 21–ஆம் தேதி வியாழக்கிழமை காலை 9.54 மணிக்கு தொடங்கி, மறுநாள் வெள்ளிக்கிழமை காலை 11.53 மணிக்கு நிறைவடைகிறது. ...

கோடையில் மின் பற்றாக்குறை ஏற்படாது

Posted: 19 Apr 2016 07:30 PM PDT

கோடைக் காலத்தில் மின் பற்றாக்குறை ஏற்படாது என்றும் அதிகரித்துள்ள தேவையைக் கணக்கில் கொண்டு மின்சார உற்பத்தியும் அதிகரிக்கப்பட்டுள்ளது என்றும் மின்வாரிய அதிகாரிகள் கூறினர். தமிழக மின்சார வாரியத்தின் கீழ் 8 அனல் மின் நிலையங்கள் செயல்பட்டு வருகின்றன. தமிழகத்துக்குத் தேவையான பெரும்பாலான அளவு மின்சாரம் அனல் மின் நிலையங்களில் இருந்துதான் பெறப்படுகிறது. இதுதவிர, அணைக்கட்டுகள் மூலம் மின்சாரம் சேகரிக்கும் 16 யூனிட்டுகள் உள்ளன. காற்றாலை மின் உற்பத்தி, சூரிய ஒளி மின்சாரம் என பல்வேறு ...

அன்னியச் செலாவணி மோசடி வழக்கு: வாசன் கண் மருத்துவமனையுடன் தொடர்புடைய நிறுவனத்தில் சோதனை

Posted: 19 Apr 2016 07:27 PM PDT

அன்னியச் செலாவணி மோசடி வழக்கில், வாசன் கண் மருத்துவமனையுடன் தொடர்புடையதாக குற்றம்சாட்டப்பட்டுள்ள தனியார் முதலீட்டு நிறுவனத்துக்கு (செக்குயா) சொந்தமாக, பெங்களூருவில் உள்ள அலுவலகங்களில் அமலாக்கத் துறை அதிகாரிகள் திங்கள்கிழமை அதிரடி சோதனை நடத்தினர். அன்னியச் செலாவணி நிர்வாகச் சட்டத்தின்கீழ் மேற் கொள்ளப்பட்ட இந்தச் சோதனை குறித்து, செக்குயா நிறுவனம் வெளியிட்ட சுட்டுரைப் பதிவில் தெரிவித்துள்ளதாவது: வாசன் கண் மருத்துவமனை தொடர்பான வழக்கு விசாரணையின் ஒரு பகுதியாக, பெங்களூரில் ...

பாஜக எம்.பி.யின் கன்னத்தில் இளைஞர் அறைந்ததால் பரபரப்பு

Posted: 19 Apr 2016 07:24 PM PDT

ராஜஸ்தான் மாநிலம், பார்மர் மக்களவைத் தொகுதி எம்.பி.யும், பாஜக மூத்த தலைவர்களில் ஒருவருமான சோனாராம் சௌதரியின் கன்னத்தில் இளைஞர் ஒருவர் அறைந்தது பரபரப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து, அந்த இளைஞரை போலீஸார் கைது செய்தனர். இதுகுறித்து பார்மர் மாவட்ட காவல் துறைக் கண்காணிப்பாளர் பாரிஸ் தேஷ்முக் கூறியதாவது: பார்மர் நகரில் திங்கள்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியொன்றில், மாவட்ட ஆட்சியர் சுதிர் சர்மாவும், தொகுதி எம்.பி. சோனாராம் சௌதரியும் கலந்துகொண்டனர். அப்போது, சோனாராம் சௌதரிக்கும், ...


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™