Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





ஈகரை தமிழ் களஞ்சியம்

ஈகரை தமிழ் களஞ்சியம்


சுற்றுலா கிளப்களின் பகீர் மோசடிகள்...! - இது கார்பரேட் சதுரங்கவேட்டை!

Posted: 11 Apr 2016 10:54 AM PDT

சுற்றுலா கிளப்களின் பகீர் மோசடிகள்...! - இது கார்பரேட் சதுரங்கவேட்டை!! நம்மில் பலருக்கும் இது போன்ற ஒரு போன் நிச்சயம் வந்திருக்கும். எதிர் லைனில் இருக்கும் பெண், ''மொத்தமாக 3 லட்ச ரூபாயை எங்க ரிசார்ட்ல கட்டிடுங்க. அடுத்த 25 வருஷத்துக்கு நீங்க எப்போ வேணுமின்னாலும் எந்த வாடகையும் இல்லாம உங்க குடும்பத்தோட எங்க ரிசார்ட்ல வந்து தங்கலாம். தமிழ்நாடு முழுக்க 15 இடங்கள்ல எங்களுக்கு ரிச்சார்ட் இருக்கு'' என்று ஆசைவார்த்தை காட்டுவார்கள். அட, நல்ல திட்டமா இருக்கே என்று காதுகொடுத்து கேட்க ஆரம்பித்தோம் ...

எனது இலங்கைப் பயணம் .

Posted: 11 Apr 2016 10:48 AM PDT

எனது இலங்கைப் பயணம் ========================= சென்ற டிசம்பர்த் திங்கள் 23 ம் நாள் முதல் ஜனவரி - 2016 ம் திங்கள் 3 ம் நாள் வரையில் 10 நாட்களுக்கு இலங்கைப் பயணம் மேற்கொண்டேன் . இது ஒரு சுற்றுலா நோக்கில் மேற்கொண்ட பயணமாகும் . இந்தப் பயணத்தில் நான் , என் துணைவியார் , என் மாப்பிள்ளை , என் மகள் மற்றும் அவர்களுடையை ஒரே பையன் பிரணவ் ஆகிய ஐந்து பேரும் கலந்துகொண்டோம் . இது என்னுடைய இரண்டாவது விமானப் பயணம் ஆகும் . முதல் விமானப் பயணம் , சில ஆண்டுகளுக்கு முன்பு சென்னையிலிருந்து , புனே சென்றது ஆகும் . என்னுடைய ...

என்ன ஜூஸ் குடித்தால் என்ன பயன்?

Posted: 11 Apr 2016 10:33 AM PDT

சம்மர் ஸ்பெஷல்: எந்த பழம்... என்ன பலன்!

Posted: 11 Apr 2016 10:26 AM PDT

அவரா இவர் ??!! - நம்பமுடியாத அனந்த் அம்பானி

Posted: 11 Apr 2016 09:47 AM PDT

ரிலையன்ஸ் அதிபர் முகேஷ் அம்பானி - நீதா அம்பானியின் மூத்த மகன் அனந்த் அம்பானி 18 மாதங்களில் தனது உடல் எடையில் 108 கிலோ எடையை குறைத்து அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளார். ஐபிஎல் போட்டிகளில் மும்பை இந்தியன்ஸ் அணியின் ஆட்டத்தின் போது இவரை அனைவரும் பார்த்திருக்க முடியும். இவரை வைத்து கிண்டல் மீம்ஸ்களும் வலம் வரும். நாள்பட்ட ஆஸ்துமா நோயால் பாதிக்கப்பட்ட அவர், அந்நோய்க்காக எடுத்துக் கொண்டமருத்துவத்தின் பக்க விளைவு காரணமாக உடல் எடை அதிகப்படியாக அதிகரித்தது. இந்நிலையில் கடந்த 18 மாதங்களாக ...

தேசிய திரைப்பட விருதுகள்: பாகுபலி சிறந்த திரைப்படமாக தேர்வு!

Posted: 11 Apr 2016 09:43 AM PDT

தேசிய திரைப்பட விருதுகள்: பாகுபலி சிறந்த திரைப்படமாக தேர்வு! புதுடெல்லி: தேசிய திரைப்பட விருதுகள் இன்று அறிவிக்கப்பட்டு உள்ளது. அதில், சிறந்த திரைப்படத்துக்கான விருதை பாகுபலி திரைப்படம் தட்டிச் சென்றுள்ளது. 63வது தேசிய திரைப்பட விருதுகள் இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் சிறந்த படத்துக்கான விருதை பாகுபலி திரைப்படம் தட்டிச் சென்றுள்ளது. மேலும், இன்று அறிவிக்கப்பட்ட 2015ம் ஆண்டுக்கான தேசிய திரைப்பட விருதுகள் பட்டியலில், சிறந்த நடிகருக்கான விருதுக்கு அமிதாப் பச்சனும் சிறந்த நடிகைக்கான ...

தீவுத்திடல் அம்மாவுக்கு....

Posted: 11 Apr 2016 09:07 AM PDT

கொட்டும் மழையில் ராஜாஜி ...கட்டு மரத்தின் கதவைத்தான் தட்டி மதுக்கடை திறக்காதே ! ...தள்ளா வயதிலும் கேட்டாரே ! என்று சொல்லும் அம்மாவே ! ... ஏனோ இப்படி நடிக்கின்றாய் ? நன்று மதுக்கடை எல்லாமே ...நானே மூடுவேன் எனச்சொல்ல உன்னைத் தடுத்தது யாரம்மா ? ...உன்னால் முடியா இச்செயலை பின்னால் வந்த பீஹாரின் ...முதல்வன் செய்ததைப் பாரம்மா ! நத்தம் விஸ்வா சபையினிலே ...மதுக்கடை மூடல் இல்லையென சத்தம் போட்டு சொல்லுகையில் ...சகோதரி நீயும் ரசித்தாயே ! " மரணம் எல்லாம் மதுவாலே ! ...மதுவை விலக்கு ...

திண்டுக்கல் ‘சோலார்’ காருக்கு தேசிய விருது

Posted: 11 Apr 2016 08:36 AM PDT

- திண்டுக்கல் – திண்டுக்கல் எஸ்.எஸ்.எம்., பொறியியல் கல்லுாரி மாணவர்கள் கண்டுபிடித்த சோலார் காருக்கு சிறந்த கண்டுபிடிப்புக்கான தேசிய விருது கிடைத்துள்ளது. மத்தியம் பிரதேசம் போபாலில் 'இம்பீரியல் சொசைட்டி ஆப் இன்னோவேட்டிவ் இன்ஜினியர்ஸ்' அமைப்பின் சார்பில் தேசிய அளவிலான கார்பந்தய போட்டி கடந்த மார்ச் 25ல் நடந்தது. இதில் 'சோலார்' கார்கள் பங்கேற்றன. திண்டுக்கல் எஸ்.எஸ்.எம்., பொறியியல் கல்லுாரி ஆட்டோ மொபைல்துறை மாணவர்கள் கண்டுபிடித்த 'சோலார் கார்' பங்கேற்றது. 40 கி.மீ., வேகம்: இந்த ...

எப்படி இருக்கும் புது ஆண்டு!

Posted: 11 Apr 2016 08:22 AM PDT

ஏப்.,14 தமிழ் புத்தாண்டு தமிழ் ஆண்டுகள் மொத்தம், 60; அவ்வகையில், 1956ல் பிறந்த இந்த துர்முகி ஆண்டு, 60 ஆண்டுகளுக்கு பின், மீண்டும் பிறக்கிறது. ஒரு காலத்தில், மனிதர்களில் பெரும்பாலானோர், 120 ஆண்டுகள் தீர்க்காயுளுடன் வாழ்ந்தனர். இதை அடிப்படையாகக் கொண்டே, சூரிய தசை 6 ஆண்டுகள், சந்திர தசை 10 ஆண்டுகள், செவ்வாய் தசை 7 ஆண்டுகள், ராகு தசை 18 ஆண்டுகள், குரு தசை 16 ஆண்டுகள், சனி தசை 19 ஆண்டுகள், புதன் தசை 17 ஆண்டுகள், கேது 7 ஆண்டுகள், சுக்கிர தசை 20 ஆண்டுகள் என, ஜோதிடத்தில் ...

காலம் கனியும் வள்ளுவமும் வாழும்…

Posted: 11 Apr 2016 07:44 AM PDT

- அருள் அகற்றி இருள் பெருக்கிய பொருளே இன்பமெனும் மருள் நிறை மனத்தார் மத்தியில் – செல்லுமோ? – குறள் கூறும் அறநெறிக் கருத்துகள் அத்தனையும் தெருளாளர் அறிவில் சேருமோ? – பெண்ணாசை மண்ணாசை பொருளாசை இம்மாசுகளை எண்ணங்கொண்டு அறிவு மழுங்கிப் பாழாகும் – இவ்வுலகில் நெறி நிறைக் கருத்துகள் அன்று வள்ளுவன் சொல் வார்த்தைகள் பாறையான மனங்களில் வாழுமோ? – வழி மாறி தடம்புரண்டு செல்லும் புல்லர் கூட்டத்தில் நல்வழி செப்பும் வள்ளுவம் வாழ்வது எப்படி? – திரட்டி வள்ளுவர் செப்பும் நல்வார்த்தைகள் ஏறுமோ செவிட்டுக் கள்ளர் ...

துங்கா நதி தீரத்தில்…

Posted: 11 Apr 2016 07:35 AM PDT

அது -அம்பிகை அருளாட்சி புரியும் சக்தி பீடம்! அந்த சக்தி பீடத்தில் – அம்பிகையின் சந்நிதியில் – நள்ளிரவைக் கடந்துவிட்ட நிலையிலும்கூட, அம்பிகையின் சந்நிதியில் அமர்ந்திருந்த அந்த மகான், தம்மை மறந்த நிலையில் பூஜையில் லயித்திருந்தார். அவருடைய கண்களில் கருணையும், கனிவும் நிரம்பி இருந்தாலும்கூட, மெல்லியதாக ஒரு கலக்கமும் இழையோடி இருந்தது. அவர் தவத்திலும், யோகத்திலும் எல்லையற்ற சாதனைகளைப் புரிந்தவர். தவவலிமையும், யோக ஸித்தியும் ஒருசேரப் பெற்றிருந்த அந்த மகான், நாளின் பெரும் பகுதி அம்பிகையின் ...

விருத்தாசலத்தில் பிரச்சாரம்: எண்ணிலடங்கா திட்டங்களை செயல்படுத்தியதாக ஜெயலலிதா பேச்சு

Posted: 11 Apr 2016 07:23 AM PDT

விருத்தாசலம்: விருத்தாசலத்தில் இன்று நடைபெற்ற பிரச்சார பொதுக்கூட்டத்தில் அ.தி.மு.க. மற்றும் தோழமைக் கட்சி வேட்பாளர்களை ஆதரித்து முதலமைச்சர் ஜெயலலிதா பேசினார். அவர் பேசியதாவது:- தமிழக மக்களுக்காக எண்ணிலடங்காத திட்டங்களை எனது தலையிலான அரசு நிறைவேற்றி உள்ளது. நான் அளித்த தேர்தல் வாக்குறுதிகளின்படி திட்டங்களை செயல்படுத்தி உள்ளேன். நான் சொன்னதை செய்தேன். அதற்கும் மேலாக சொல்லாத பலவற்றையும் செய்தேன். மீண்டும் ஆட்சிக்கு வந்தால் இன்னும் அதிகமான திட்டங்களை செயல்படுத்துவேன். சமூக பாதுகாப்பு திட்டங்களை ...

கோஹினூர் வைரத்தை மீட்க இயலாது: மத்திய அரசு

Posted: 11 Apr 2016 07:17 AM PDT

- புதுடில்லி : பிரிட்டன் சொத்தாக மாறிய இந்தியாவின் கோஹினுார் வைரத்தை மீ்ண்டும் இந்தியாவுக்கு திரும்பக் கொண்டு வர இயலாது என மத்திய அரசு தெரிவித்துள்ளது. 104 கேரட் கொண்ட கோஹினுார் வைரம், இந்திய சுரங்கத்தில் சுமார் 800 ஆண்டுகளுக்கு முன் தோண்டி எடுக்கப்பட்டது. இவ்வைரம் காகதீய ராஜவம்சத்தினருக்கு சொந்தமானது. அதன்பின் பல ஆக்கிரமிப்பாளர்களிடம் கைமாறிய வைரம், தற்போது இங்கிலாந்து அரசியின் சொத்தாக , லண்டன் டவரில் பொதுமக்களின் பார்வைக்காக வைக்கப் பட்டுள்ளது. இதுகுறித்து சுப்ரீம் கோர்ட்டில் ...

பெங்களூரில் பிரியாமணி திருமண நிச்சயதார்த்தம்

Posted: 11 Apr 2016 07:04 AM PDT

- நடிகை பிரியாமணியும் மும்பையைச் சேர்ந்த தொழிலதிபர் முஸ்தபா ராஜ் என்பவரும் காதலித்து வருகின்றனர். இவர்கள் திருமண நிச்சயதார்த்தம் வரும் 29ஆம் தேதி நடக்கிறது. "கிரிக்கெட் நிகழ்ச்சி ஒன்றில் நானும் முஸ்தபாவும் சந்தித்துப் பேசினோம். முதலில் நண்பர்களாக இருந்தோம். பிறகு காதலர்களானோம். எங்கள் பெற்றோர் காதலை ஏற்றுக்கொண்டனர். இந்த ஆண்டு இறுதியில் எங்கள் திருமணத்தை நடத்த ஏற்பாடு நடக்கிறது. "29ஆம் தேதி பெங்களூரில் நிச்சயதார்த்தம் நடக்கிறது. திருமணத்துக்குப் பிறகும் நடிப்பேன்," என்று ...

வேடிக்கையான புகைப்படங்கள் (சிரிக்க மேலும் சிந்திக்க),,,

Posted: 11 Apr 2016 07:00 AM PDT



மே 19ல் பார்ப்போம். யார் அந்த நல்ல காவலன்?

Posted: 11 Apr 2016 06:55 AM PDT

ஒரு ஊரில் உள்ள விவசாயிகள் ஓர் ஆட்டுப்பட்டி வைத்திருந்தனர். அதைக்கண்டு அங்குவந்த ஒரு ஓநாய் அந்த ஆடுகளை கொன்று திங்க ஆரம்பித்தன. - அதைக்கண்ட விவசாயிகள் அந்த ஓநாயை விரட்டி துரத்தினர். ஓநாயை விவசாயிகள் விரட்டிய நேரம் ஆட்டுப்பட்டியின் ஆடுகளை அங்கு வந்த நரி கொன்று தின்ன ஆரம்பித்தது. - இதை கேள்விபட்ட விவசாயிகள் துரத்தி வந்த ஓநாயை விட்டுவிட்டு ஆட்டுப்பட்டிக்கு வந்து நரியை விரட்டி துரத்த ஆரம்பித்தனர். - நன்கு பசியாரிய நரியும் விவசாயிகளிடம் பிடிபடாமல் ஓடியது. விவசாயிகள் நரியை ...

தொடத் தொடத் தொல்காப்பியம்(424)

Posted: 11 Apr 2016 06:20 AM PDT

தொடத் தொடத் தொல்காப்பியம் (1)    - முனைவர் சு.சௌந்தரபாண்டியன்                   எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி   சென்னை-33  தொல்காப்பியத்தின் முதல் நூற்பாவில்,                                                                                    " எழுத்தெனப் படுப   அகரமுதல்  னகர இறுவாய்   முப்பஃது என்ப "        எனக் காண்கிறோம்.                                இதில்  இரண்டு நுட்பங்கள் உள்ளன.                             1) முப்பது எழுத்துக்களைக் கணக்கிடும்போது, ...

இவன் ஒரு கட்சி இவன் நிழல் ஒரு கட்சி

Posted: 11 Apr 2016 05:25 AM PDT

அம்மா தாயே! பாரத தேவி! அரசியல் என்பது மணியாரம்! அம்மம் மாஉன் பிள்ளைகள் கையில் அதில்தான் எத்தனை அலங்கோலம் - சும்மா இருப்பவ னெல்லாம் நாட்டில் சொந்தக் கட்சி தொடங்குகிறார் சிம்மா சனத்தில் ஏறுவதற்கு சிரசா சனங்கள் பழகுகிறான் - விற்பதற்கென்றே கட்சியை தொடங்கும் வேடிக்கை இங்கு வாடிக்கை முற்பகல் பிற்பகல் கட்சித் தாவல்கள் முடிவில் லாத கேளிக்கை! - நிற்கும் இவனொரு கட்சிக்குள் இவன் நிழலோ வேறோரு கட்சிக்குள்! கற்கும் பாடம் தினசரி மாறும் காசுக்கேற்ற விகிதத்தில் ...

அ.தி.மு.க., கூட்டணிக்கு பல கட்சிகள் 'டாட்டா'

Posted: 11 Apr 2016 02:50 AM PDT

அ.தி.மு.க., கூட்டணிக்கு பல கட்சிகள் 'டாட்டா'............ வேகமாக வெளியேறும் தலைவர்கள்............... சென்னை;அ.தி.மு.க., கூட்டணிக்கு ஆதரவு எனக்கூறி, வேகமாக போயஸ் தோட்டத்துக்கு சென்ற, சிறிய கட்சித் தலைவர்கள் பலர், கூட்டணியில் இருந்து வேகமாக வெளியேறி வருகின்றனர். வரும் சட்டசபை தேர்தலுக்காக, அ.தி.மு.க., கூட்டணியில் இணைய சிறிய கட்சிகள் பலவும் ஆர்வம் காட்டின. நேரடியாக, அக்கட்சியின் பொதுச் செயலர் ஜெயலலிதாவை சந்தித்து, ஆதரவு தெரிவித்ததுடன், தங்களுக்கு, 'சீட்' ஒதுக்கவும் வேண்டினர். தொடர்ந்து, ...

உக்ரைனில் இந்திய மாணவர்கள் 2 பேர் குத்திக் கொலை

Posted: 11 Apr 2016 02:42 AM PDT

புது தில்லி: உக்ரைன் நாட்டில், கீவ் பகுதியில் இந்தியாவைச் சேர்ந்த 3 மாணவர்கள் தாக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உக்ரைனின் மேற்கு பகுதியில் உள்ள உழ்கோரோட் மருத்துவ கல்லூரியில் நேற்று மூன்று மாணவர்கள் தாக்கப்பட்டுள்ளனர். இதில் முசாபர் நகரை சேர்ந்த பிரனாவ் ஷைன்டில்யா, காசிபாத் மாவட்டத்தைச் சேர்ந்த அன்குர் சிங் ஆகிய இருவரும் மர்ம நபர்களால் குத்திக் கொலை செய்யப் பட்டுள்ளனர். அக்ராவைச் சேர்ந்த இந்திரஜீத் சிங் சவுகான் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை ...

குன்றிமணி - பாலகுமாரன்

Posted: 10 Apr 2016 11:00 PM PDT

தமிழகத்தின் தலைசிறந்த குலங்களான சோழ, சேர, பாண்டியர் வலுவிழந்த வேளையிலே விஜயநகர பேரரசின் கீழ் தமிழகத்தை நாயக்க மன்னர்கள் ஆட்சி செய்தனர். மதுரையிலிருந்து திருமலை நாயக்கர் ஆண்டுகொண்டிருந்த காலம். தமிழகக் கோயில்கள் பலவற்றிற்கு விண்ணுயர கோபுரங்கள் கட்டப்பட்ட காலம். அந்த காலப்பின்னணியில் சுசீந்திரம் கோயிலில் சுற்றுச்சுவரும் மண்டபமும் கட்டப்பட்டது தொடர்பான கதைதான் குன்றிமணி. பதிவிறக்க சுட்டி குன்றிமணி என்றும் அன்புடன் செல்லா

சிந்தனை செய் மனமே……!!!

Posted: 10 Apr 2016 10:34 PM PDT

அந்தக் கிராமத்தில் ஒரு ஏழை விவசாயி இருந்தான். அவனுக்கு பக்கத்து வீட்டில் ஒரு வேட்டைக்காரன் இருந்தான். வேட்டைக்காரனிடம் அவன் வேட்டைக்கு பயன்படுத்தும் வேட்டை நாய்கள் சில இருந்தன. வேட்டைக்காரனின் நாய்கள் அடிக்கடி வேலி தாண்டி சென்று விவசாயியின் ஆட்டுக்குட்டிகளை துரத்துவதும் கடித்து குதறுவதும் இருந்தன. இதனால் கலக்கமுற்ற விவசாயி தன் அண்டை வீட்டுக்காரனான வேட்டைக்காரனை சந்தித்து "அப்பா… உன் நாய்களை கொஞ்சம் பார்த்துக்கொள். அவை அடிக்கடி என் பகுதிக்கு வந்து ஆடுகளை தாக்குகின்றன. காயப்படுத்துகின்றன" ...

பிரிவு – ஒரு பக்க கதை

Posted: 10 Apr 2016 10:29 PM PDT

- இந்திரன் ஓய்வு பெறுகிறார். பிரிவு உபசார விழாவிற்கு வந்த கம்பெனி சேர்மன், ''உங்களுக்கு என்ன வேணும்? தயங்காம கேளுங்க!'' என்றார். முப்பது ஆண்டுகள் கடும் உழைப்பை கம்பெனிக்காக அர்ப்பணித்தவர் இந்திரன். சின்ன அளவில் துவங்கிய அந்த நிறுவனம் பத்து கிளைகள் பரப்பி வளர பெரிதும் உதவியவர். கம்பெனியைச் சுற்றி வளர்ந்த மரங்கள், தோட்டம், புல்வெளி… எல்லாமே இவர் உருவாக்கியவை. அவர் கேட்டால் எதையும் கொடுக்க அந்த நிறுவனம் ரெடி. வேலையில்லாத மகன், இளம் வயதிலேயே கணவனை இழந்து தனிக்கட்டையாய் நிற்கும் ...

“வள்ளுவம்வாழ்வதெங்கே…?” – அமுதா

Posted: 10 Apr 2016 09:33 PM PDT

- வாழ வழிதான் உனக்கில்லையா…? வழி காட்டத்தான் ஆளில்லையா…? வாலிபனே உனக்கு நினைவில்லையா…? வான்புகழ் வள்ளுவம் நமதில்லையா…? – அறத்துப் பால் எனும் பகுதிக்குள்ளே… அகிலத்தை அறிவாய் அலையாமலே…! ஆழ்ந்து படித்தால் அதை நீயே… அமைதி காண்பாய் அகவீட்டுக்குள்ளே…! – வாய்ப்பு இல்லையென்ற வருத்தம் எதற்கு…? வேலையில்லை என்ற வேதனை எதற்கு…? பொருட் பாலை உணர்ந்து படி நீயே… பொறுப்பால் உயர்வாய் நொடிக்குள்ளே…! – இல்லறம் போற்ற இன்பத்துப் பால் இருக்கு… எடுத்துப்பார் அதையும் நீ மெதுவாக…! இந்த பூமி சுற்றும் ...

சகாயம் தொடங்கிய 'நம்பிக்கை இல்லம்'....! - ஆதரவற்ற பிள்ளைகளை அரவணைத்த நாமக்கல்

Posted: 10 Apr 2016 09:30 PM PDT

- நாமக்கல் மக்களின் மனிதநேயத்திற்கு இதைவிட சிறந்த சான்று இருக்க முடியாது. 'நம்பிக்கை இல்லம்' என்ற பெயரில், ஆதரவற்ற குழந்தைகளுக்காக சகாயம் ஐ.ஏ.எஸ் திறந்த கட்டடத்தின் ஒவ்வொரு செங்கல்லிலும் மனிதநேயம் நிரம்பி வழிகிறது. - நாமக்கல் கலெக்டராக சகாயம் இருந்த சமயத்தில், ஆதரவற்ற குழந்தைகளுக்காக உதயமான சிறிய யோசனை, இன்று ஆலமரமாக கிளைபரப்பி வளர்ந்து நிற்கிறது. மோகனூர் செல்லும் வழியில் உள்ள விவசாய கிராமம் லத்துவாடி. இந்தக் கிராமத்தில், ஐம்பது சென்ட் நிலத்தில் நம்பிக்கை இல்லம் கட்டப்பட்டுள்ளது. ...

– காதல் மீது விழுந்த இதயம் – ஈரோடு இறைவன

Posted: 10 Apr 2016 09:16 PM PDT


-
அந்த
பட்டாம் பூச்சியின்
சிறகு
என்னை
கவர்கிறது
உன்
இமைப் போல்
இமைப்பதால்!
–

சித்திரை உழவு… பத்தரை மாற்று தங்கம்

Posted: 10 Apr 2016 08:20 PM PDT

- சித்திரை உழவு… பத்தரை மாற்று தங்கம் என்பது பழமொழி. ஏப்., மே மாதங்களில் 15 சதவீத கோடை மழை கிடைக்கிறது. மழை பெய்யும் போது நிலத்தின் சரிவிற்கு குறுக்காக 25க்கு 30 செ.மீ., உழவு செய்யும் போது மழைநீர் வழிந்தோடாமல் நிலத்திலேயே சேமிக்கப்படுகிறது. இதனால் மண் அரிமானம் தடுக்கப்பட்டு வளமான மேல் மண் பாதுகாக்கப்படுகிறது. கோடை உழவு செய்வதால் மண்ணின் மேற்பரப்பில் மழைநீர் சேமிக்கப்படுகிறது. போதுமான காற்றோட்டம் கிடைப்பதால் நுண்ணுயிர்களின் எண்ணிக்கை அதிகரிக்கிறது. மண்ணில் உள்ள ரசாயன உரம், ...

மல்லையா விவகாரம்:வங்கிகளுக்கு அசோசேம் யோசனை

Posted: 10 Apr 2016 08:10 PM PDT

புது தில்லி – வங்கிகளிடம் இருந்து ரூ.9,000 கோடி கடன் பெற்ற விஜய் மல்லையாவிடம் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்று இந்திய வர்த்தகம் மற்றும் தொழில் துறை கூட்டமைப்பு (அசோசேம்) அறிவுறுத்தியுள்ளது. கிங்ஃபிஷர் விமான நிறுவனத்தின் உரிமையாளரான விஜய் மல்லையா மீது பொதுத் துறை வங்கிகளின் கூட்டமைப்பு சார்பில் கடந்த பிப்ரவரி மாதம் வழக்கு தொடரப்பட்டது. இதனிடையே, தான் வாங்கிய ரூ.9,000 கோடி கடன் தொகையில் ரூ. 4,000 கோடியை வரும் செப்டம்பர் மாதத்தில் திருப்பிச் செலுத்துவதாக மல்லையா கடந்த வாரம் தெரிவித்திருந்தார். இந்த ...

பிரிட்டன் அரசி பிறந்தநாள்: ரூ.9,500 கோடி “செலவு’!

Posted: 10 Apr 2016 08:09 PM PDT

- பிரிட்டன் அரசியின் 90-ஆவது பிறந்த நாள் கொண்டாட்டங்களுக்காக அந்நாட்டு மக்கள் செலவிடும் தொகை சுமார் ரூ.9,500 கோடியைத் (100 கோடி பவுண்டு) தாண்டும் என்பது ஆய்வின் மூலமாக தெரியவந்துள்ளது. பிரிட்டன் அரசி எலிஸபெத்தின் உண்மையான பிறந்த தினம் ஏப்ரல் 21-ஆம் தேதியும், அதிகாரப்பூர்வ பிறந்த தினம் ஜூன் 11-ஆம் தேதியும் பிரிட்டன் முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது. அரசியின் பிறந்த நாள் கொண்டாட்டம் தொடர்பாக, நாடு முழுவதிலும் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. பிரிட்டன் அரசி பிறந்த நாள் விழாவுக்காக ...


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™