Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Tamil Star

Tamil Star


மிசிசாகா கத்திக்குத்துச் சம்பவத்தில் 19 வயது இளைஞன் பலி

Posted: 06 Mar 2016 08:27 AM PST

stabbing_in_Mississauga_-_04062016

stabbing_in_Mississauga_-_04062016மிசிசாகாவில் இடம்பெற்ற கத்திக்குத்துச் சம்பவம் ஒன்றில் காயமடைந்த 19 வயது இளைஞன் மருத்துவமனையில் உயிரிழந்து விட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

நேற்று சனிக்கிழமை பிற்பகல் அளவில் குறித்த கத்திக்குத்துச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

நெடுஞ்சாலை 403 மற்றும் Confederation Parkway பகுதிக்கு வடக்கே, Harrowsmith Drive பகுதியில் பிற்பகல் 2.21 மணியளவில் கத்திக்குத்துக்கு இலக்கான அந்த இளைஞனைக் கண்டுபிடித்திருந்ததாக காவல்த்துறையினர் தெரிவித்துள்ளனர்.

பின்னர் அவர் மருத்துவமனைக்கு அழைத்து சென்றிருந்த நிலையில் பிற்பகல் 3.31 மணியளவில் உயிரிழந்து விட்டதாக அவசர மருத்துவப் பிரிவினர் தெரிவித்துள்ளனர்.stabbing_in_Mississauga_-_04062016

இதேவேளை இவர் கண்டுபிடிக்கப்பட்ட இடத்திற்கும், கத்திக்குத்துச் சம்பவம் இடம்பெற்ற இடத்திற்கும் இடையில் குறைந்தது 2 கிலோமிற்றர் தூரம் இருக்கும் என காவல்த்துறையினர் கூறியுள்ளனர்.

இந்த சம்பவம் தொடர்பில் காவல்த்துறையினர் ஆண் சந்தேக நபர் ஒருவரைத் தேடி வருகின்றனர்.

The post மிசிசாகா கத்திக்குத்துச் சம்பவத்தில் 19 வயது இளைஞன் பலி appeared first on Tamil.com.

This posting includes an audio/video/photo media file: Download Now

ஐ.நா அமைதி காப்பு பணியின் போது பாலியல் குற்றம் புரிந்ததாக கனேடிய காவல்த்துறையினர் இருவர் மீது குற்றச்சாட்டு

Posted: 06 Mar 2016 02:08 AM PST

United_Nations_headquarters_in_New_York_-_03062016

United_Nations_headquarters_in_New_York_-_03062016ஐ.நா அமைதி காப்பு செயற்திட்டத்தின் கீழ் பணியாற்றிய கனேடிய காவல்த்துறையினர் இருவர் மீது பாலியல் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது.

ஐக்கிய நாடுகளின் சபையின் அமைதி காப்பு திட்டத்தின் கீழ் கடந்த ஆண்டு வெளிநாடுகளில் கடமையாற்றியபோதே அந்த இரண்டு கனேடிய உத்தியோகத்தர்களும் குற்றச் செயலில் ஈடுபட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

நேற்று முன்தினம் வெளியிட்ட அறிக்கை ஒன்றிலேயே இவை குறித்து தகவல் வெளியிடப்பட்டுள்ளது்.

குறித்த அந்த காவல்துறை உத்தியோகத்தர்களில் ஒருவர் வெளிநாட்டில் கடமையில் ஈடுபட்டிருந்த போது குழந்தை ஒன்றுக்கு தந்தையாகியமை குறித்து அவர்மீது 55 நாட்கள் விசாரணை மேற்கொள்ளப்பட்டதுடன், குறி்த்த அந்த நாட்டில் இருந்து அவர் மீள அழைக்கப்பட்டு பணியிடை நீக்கம் செய்யப்பட்டதாகவும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

இரண்டாவது உத்தியோகத்தர் மீதான குற்றச்சாட்டுகள் குறித்து தற்போதும் விசாரணைகள் இடம்பெற்று வருவதாகவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்ட போதிலும், அது தொடர்பிலான மேலதிக விபரங்கள் எதனையும் வெளியிடவில்லை.United_Nations_headquarters_in_New_York_-_03062016

41 பெரியவர்களும், 22 சிறியோரும் ஐ.நா அமைதி காப்பு படையில் உள்ளோரின் குற்றச் செயல்களால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

ஐ.நா அமைதி காப்பு படையில் உள்ளவர்களின் இவ்வாறன பாலியல் குற்றச் செயல்கள் தொடர்பில், ஐ.நா செயலாளர் நாயகம் கவலை கொண்டுள்ளதாகவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

The post ஐ.நா அமைதி காப்பு பணியின் போது பாலியல் குற்றம் புரிந்ததாக கனேடிய காவல்த்துறையினர் இருவர் மீது குற்றச்சாட்டு appeared first on Tamil.com.

This posting includes an audio/video/photo media file: Download Now



Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™