Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Tamil Star

Tamil Star


சவுதியின் மனித உரிமை குறித்து கருத்தில் கொள்ளப்படும் – வெளிவிவகார அமைச்சு

Posted: 30 Mar 2016 09:51 PM PDT

canada_-saudiarbia-_03312016

canada_-saudiarbia-_03312016எதிர்கால உடன்படிக்கை குறித்த பேச்சுக்களின் போது சவுதி அரேபியாவின் மனித உரிமை நிலைமைகள் குறித்து கருத்தில் கொள்ளவுள்ளதாக கனேடிய வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.

கனடாவின் தலைநகர் ஒட்டாவாவில் சவுதி அரேபியா விருந்துபசாரம் ஒன்றை ஏற்பாடு செய்திருந்தது.

கனடாவிற்கான சவுதி அரேபிய தூதுவரால் ஏற்பாடு செய்யப்பட்ட அந்த விருந்துபசார நிகழ்வில் கனடாவின் வெளிவிவகார அமைச்சர் உள்ளிட்ட அதிகாரிகள் பங்கேற்றிருந்தனர்.

இதன் போதே எதிர்கால உடன்படிக்கை குறித்த பேச்சுக்களின் போது சவுதி அரேபியாவின் மனித உரிமை நிலைமைகள் குறித்து கருத்தில் கொள்ளவுள்ளதாக கனேடிய வெளிவிவகார அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

கனடாவின் முன்னாள் அரசான கென்சவேட்டிவ் அரசாங்கத்துடன் சவுதி அரேபியா ஏற்படுத்தியிருந்த 15 பில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியான உடன்படிக்கைக்கும் மதிப்பளிப்பதாக ஆளும் லிபரல் அரசாங்கம் உறுதியளித்துள்ளது.canada_-saudiarbia-_03312016

மேலும், சிரிய அகதிகளுக்கு உதவி வழக்குகின்றமை குறித்து கனடாவிற்கு சவுதி அரேபியா நன்றி தெரிவித்துள்ளது.

அதே வேளை, கனடாவினால் தற்போது முன்னெடுக்கப்படும் சிரிய அகதிகளை மீள்குடியேற்றும் திட்டத்திற்கு உதவும் வகையில் 31 ஆயிரம் அமெரிக்க டொலரை வளைகுடா ஒத்துழைப்பு பேரவையின் சார்பில் வழங்குவதாக உறுப்பு நாடுகளின் தூதுவர்கள் அறிவித்திருந்தமை குறிப்பிடதக்கது.

The post சவுதியின் மனித உரிமை குறித்து கருத்தில் கொள்ளப்படும் – வெளிவிவகார அமைச்சு appeared first on Tamil.com.

This posting includes an audio/video/photo media file: Download Now

அணு ஆயுதப் பயன்பாடு அற்ற உலகினை உருவாக்க வலியுறுத்தல்

Posted: 30 Mar 2016 10:18 AM PDT

Stephane_Dion_--_01042016

Stephane_Dion_--_01042016அணு ஆயுதப் பயன்பாடு அற்ற உலகினை உருவாக்க கனடா அழுத்தம் கொடுக்கவேண்டும் என அணுசக்திக்கு எதிரான செயற்பாட்டாளர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

சில நாடுகள் அணு ஆயுதப் பயன்பாட்டினை கைவிடத் தயாராக இல்லாத நிலையில், அனைத்துலக பாதுகாப்பினை கருத்தில் கொண்டு, உலகளாவிய ரீதியில் அணு ஆயுதப் பயன்பாட்டினை தடைசெய்வதற்கு முயற்சிப்பது தற்போதைக்கு சாத்தியமற்றது என இந்த மாத ஆரம்பத்தில் ஆற்றிய உரை ஒன்றில் வெளியுறவு அமைச்சர் ஸ்டீபன் டியோன் தெரிவித்திருந்தார்.

இதனை அடுத்து உலகளாவிய ரீதியில் அணு ஆயுதத்தினை தடை செய்யும் நடவடிக்கை தொடர்பில் கனேடிய வெளியுறவு அமைச்சர் அதிகளவு அக்கறையினை வெளிக்காட்டத் தவறியுள்ளதை அவரின் உரை காட்டுவதாக விமர்சனங்கள் எழுந்துள்ளன.Stephane_Dion_--_01042016

இவ்வாறான நிலையிலேயே அணு ஆயுதப் பயன்பாடு அற்ற உலகினை உருவாக்க கனடா அழுத்தம் கொடுக்கவேண்டும் என்ற கோரக்கையை அணுசக்திக்கு எதிரான செயற்பாட்டாளர்கள் முன்வைத்துள்ளனர்.

கனேடிய வெளியுறவு அமைச்சரின் குறித்த கூற்றினை நிராகரித்துள்ள அணு ஆயுத பயன்பாட்டுக்கு எதிரான அமைப்பு நிறைவேற்று இயக்குநர் ஒருவர், அதனை நடைமுறைப்படுத்துவதற்கு சிறந்த நேரம் என்று ஒரு நேரல் இல்லை எனவும், அதனை உடனடியாகவே ஆரம்பிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.

அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா தனது பதவிக்காலத்திலான கடைசி அணுசக்தி பாதுகாப்பு மாநாட்டினை நாளையும், நாளை மறுநாலும் வோஷிங்டனில் நடாத்த உள்ளார்.

குறித்த அந்த இரண்டு நாள் மாநாட்டில் கனடாவின் சார்பில் பிரதமர் ஜஸ்டின் ரூடோ கலந்துகொள்ளவுள்ளமை குறிப்பிடத்தக்கது

The post அணு ஆயுதப் பயன்பாடு அற்ற உலகினை உருவாக்க வலியுறுத்தல் appeared first on Tamil.com.

This posting includes an audio/video/photo media file: Download Now

ஸ்காபரோ கோல்டன் மைல் குடியிருப்பு பகுதியில் தீ சம்பவங்கள்

Posted: 30 Mar 2016 10:09 AM PDT

Golden_Mile_-_03302016

Golden_Mile_-_03302016ஸ்காபரோ பகுதியில் இன்று அதிகாலை இடம்பெற்ற சில தீச் சம்பவங்கள் தொடர்பில் காவல்த்துறையினர் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

ஸ்காபரோ கோல்டன் மைல் குடியிருப்பு பகுதியில் வைக்கப்பட்டுள்ள குப்பை சேகரிக்கும் தொட்டிகளில் இனம் தெரியா நபர்கள் தீயை மூட்டிச் சென்றுள்ளனர் என கூறப்படுகிறது.

விக்டோரியா பார்க் மற்றும் எக்ளிங்டன் அவனியூவிற்கு அருகே, கிரேக்டன் ட்ரைவ் பகுதியில் அமைந்துள்ள சில இடங்களில் இன்று அதிகாலை 3.15 அளவில் இந்த தீச் சம்பவம் அவதானிக்கப்பட்டுள்ளது.Golden_Mile_-_03302016

எனினும் இந்த தீச் சம்பவங்களால் எவருக்கும் காயங்கள் எதுவும் ஏற்படவில்லை என்று ரொரன்ரோ காவல்த்துறையினர் தெரிவித்துள்ளனர்.

எனினும் குறித்த தீ மூட்டல் சம்பவம் தொடர்பில விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக தெரிவித்துள்ளனர்.

The post ஸ்காபரோ கோல்டன் மைல் குடியிருப்பு பகுதியில் தீ சம்பவங்கள் appeared first on Tamil.com.

This posting includes an audio/video/photo media file: Download Now

பொருளாதாரக் கொள்கைகளை விரிவுபடுத்த வேண்டிய தேவை ஜி 20 அமைப்பிற்கு உள்ளது – முன்னாள் பிரதமர்

Posted: 30 Mar 2016 09:48 AM PDT

Paul_Martin_-_03302016

Paul_Martin_-_03302016நோய்கள் மற்றும் அதிகரிக்கும் அகதிகள் எண்ணிக்கை என்பவற்றுடன் போராடி வரும் ஐக்கிய நாடுகளின் முகவர் அமைப்புக்களுக்கு உதவும் வகையில் தனது பொருளாதாரக் கொள்கைகளை விரிவுபடுத்த வேண்டிய தேவை ஜி 20 அமைப்பிற்கு உள்ளதாக கனடாவின் முன்னாள் பிரதமர் போல் மார்ட்டின் (Paul Martin) தெரிவித்துள்ளார்.

நேற்று செவ்வாய்கிழமை இரவு ஒட்டாவாவில் இடம்பெற்ற நிகழ்வொன்றின் போதே அவர் இந்த பரிந்துரையை முன்வைத்துள்ளார்.

தற்போது உலகில் மிகவும் முக்கியமான நெருக்கடிகள் தொடர்பில் உலக சுகாதார நிறுவனம், உலக உணவுத் திட்டம் மற்றும் அகதிகளுக்கான உயர் ஸ்தானிகரகம் என்பன மக்களுக்கு உதவ வேண்டி உள்ளமை மற்றும் அதற்கான நிதி தேவைப்பாடு தொடர்பிலும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

உலக அளவில் தற்போது 60 மில்லியன் மக்கள் இடம்பெயர்ந்துள்ளனர் என்றும் அவர்களுக்கான உதவி தேவைப்பாடு மற்றும் உதவி வழங்கும் நடவடிக்கை தொடர்பிலும் அவர் விளக்கமளித்துள்ளார்.Paul_Martin_-_03302016

அத்துடன் ஆபிரிக்க நாடுகளில் ஏற்பட்ட ஈபோலா நோய்க்கு எதிரான நடவடிக்கைகளை கையாள்வதில் ஏற்பட்ட குறைபாடுகள் தொடர்பிலும் போல் மார்ட்டின் சுட்டிக்காட்டியுள்ளார்.

2008 ஆம் ஆண்டில் இருந்து உலக நாடுகள் பொருளாதார நெருக்கடிகளை எதிர்கொண்டு வரும் நிலையில், தற்போது பயங்கரவாதம், நோய் பரவல், பருவநிலை மாற்றம், உணவுப் பாதுகாப்பு, மக்கள் குடிபெயர்வு போன்ற அச்சுறுத்தல்களையும் உலகம் எதிகொண்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

1990 களின் பிற்பகுதியில் போல் மார்ட்டின் கனடாவின் நிதி அமைச்சராக இருந்த போது ஜி20 ஐ பின்னிற்று வழிநடத்துபவர்களில் ஒருவராக இருந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

The post பொருளாதாரக் கொள்கைகளை விரிவுபடுத்த வேண்டிய தேவை ஜி 20 அமைப்பிற்கு உள்ளது – முன்னாள் பிரதமர் appeared first on Tamil.com.

This posting includes an audio/video/photo media file: Download Now



Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™