Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





மாலை மலர் | தேசியச்செய்திகள்

மாலை மலர் | தேசியச்செய்திகள்


ஐதராபாத் அருகே திருமண கோஷ்டியினர் சென்ற வேன் கவிழ்ந்து விபத்து: 7 பேர் பலி

Posted: 30 Mar 2016 11:06 PM PDT

தெலுங்கானா மாநிலம் மெகபூப்நகர் மாவட்டம் உத்ராஜ் பல்லியைச் சேர்ந்தவர் ராமராஜு. இவருக்கும் தாசாராம் கிராமத்தை சேர்ந்த சிவலிலா என்ற பெண்ணுக்கும் நேற்று மணமகன் வீட்டில் திருமணம் நடந்தது. மணமகனின் பெற்றோர்கள் ஏற்கனவே உத்ராஜ்பல்லிக்கு சென்று விட்டனர்.

கெஜ்ரிவாலுக்கு தற்கொலை தாக்குதல் மிரட்டல்: வீடு, அலுவலகத்தில் பாதுகாப்பு அதிகரிப்பு

Posted: 30 Mar 2016 11:00 PM PDT

டெல்லி மாநில முதல்– மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் அதிகபட்ச பாதுகாப்பை ஏற்காமல் சாதாரணமாக அலுவலகத்துக்கு சென்று வருகிறார். முதல்வர் அலுவலத்திலும் அவர் அதிக பாதுகாப்புக்கு அனுமதி கொடுக்கவில்லை. இந்த நிலையில் நேற்று மாலை 4.30 மணிக்கு போலீஸ் கட்டுப்பாட்டுக்கு

பிரச்சினைகளை கண்டு ஓடாததற்காக பிரதமர் மோடி என்னை பாராட்டினார்: கிரிக்கெட் வீரர் ஸ்ரீசாந்த் பேட்டி

Posted: 30 Mar 2016 10:51 PM PDT

திருவனந்தபுரம் பா.ஜ.க. வேட்பாளராக கிரிக்கெட் வீரர் ஸ்ரீசாந்த் களம் இறக்கப்பட்டுள்ளார். கிரிக்கெட் பெட்டிங் முறைகேடுகளில் ஈடுபட்டதாக குற்றம் சாட்டப்பட்ட அவரை போட்டிகளில் விளையாட கூடாது என இந்திய கிரிக்கெட் வாரியம் தடை விதித்தது. ஆனால் டெல்லி கோர்ட்டு அவரை கடந்த ஆண்டு நிரபராதி என்று விடுதலை செய்தது.

பீகாரில் நாளை முதல் மதுவிலக்கு அமல்: நாங்கள் மது குடிக்க மாட்டோம் என உறுதிமொழி எடுத்த எல்.எல்.ஏ.க்கள்

Posted: 30 Mar 2016 10:50 PM PDT

பீகாரில் கடந்த ஆண்டு சட்டசபை தேர்தல் நடந்த போது ஐக்கிய ஜனதா தளம் மீண்டும் ஆட்சி அமைத்தால் மதுவிலக்கு அமல்படுத்தப்படும் என்று நிதீஷ்குமார் வாக்குறுதி கொடுத்திருந்தார். ஐக்கிய ஜனதா தளம் கூட்டணி வெற்றி பெற்று நிதீஷ்குமார் முதல்–மந்திரி பொறுப்பை ஏற்றதும் ஏப்ரல் 1–ந்தேதி முதல் மதுவிலக்கு அமல்படுத்தப்படும் என்று அறிவித்தார்.

திருப்பதி அன்னதான திட்டத்துக்கு ரூ.687 கோடி குவிந்தது

Posted: 30 Mar 2016 10:08 PM PDT

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வரும் பக்தர்களுக்கு இடைவிடாமல் அன்னதானம் வழங்கப்பட்டு வருகிறது. 1985–ம் ஆண்டு தினமும் 2 ஆயிரம் பேருக்கு என வழங்கப்பட்டு வந்த அன்னதானம் தற்போது சாதாரண நாட்களில் தினமும் 1.20 லட்சம்

கேரள கம்யூனிஸ்டு வேட்பாளர்கள் பட்டியல்: அச்சுதானந்தன்–நடிகர் முகேஷ் சட்டசபை தேர்தலில் போட்டி

Posted: 30 Mar 2016 09:46 PM PDT

கேரளாவில் வருகிற மே மாதம் 16–ந் தேதி சட்டசபைக்கு தேர்தல் நடைபெறுகிறது. இந்த தேர்தலில் ஆளும் கட்சியான காங்கிரஸ் கூட்டணிக்கும் எதிர்க்கட்சியாக கம்யூனிஸ்டு கட்சிகளுக்கும் இடையே நேரடி போட்டி ஏற்பட்டு உள்ளது.

பதான்கோட் தாக்குதலுக்கும் மசூத் அசாருக்கும் தொடர்பு இல்லை: பாகிஸ்தான் விசாரணை குழு

Posted: 30 Mar 2016 09:29 PM PDT

பஞ்சாப் மாநிலம் பதான்கோட் விமானப்படை தளத்தில் கடந்த ஜனவரி மாதம் 2–ந்தேதி பாகிஸ்தான் தீவிரவாதிகள் புகுந்து தாக்குதல் நடத்தினார்கள். பாகிஸ்தானில் செயல்படும் ஜெய்ஷ் – இ – முகமது இயக்கத் தலைவன் மசூத் அசார் உத்தரவின் பேரில் இந்த நாசவேலை நடந்ததாக தேசிய புலனாய்வு அமைப்பு கண்டுபிடித்தது. இதைத் தொடர்ந்து அந்த இயக்க

காணாமல் போனதாக கூறப்பட்ட தாஜ்மகால் கலசம் பழுதுபார்ப்பதற்காக இறக்கப்பட்டது: தொல்லியல் துறை விளக்கம்

Posted: 30 Mar 2016 08:32 PM PDT

டெல்லி அருகே ஆக்ராவில் கட்டப்பட்டு உள்ள உலக புகழ்பெற்ற தாஜ்மகாலில் தற்போது பழுதுபார்த்தல் மற்றும் பராமரிப்பு பணிகள் நடந்து வருகிறது. இந்தநிலையில் தாஜ்மகாலை சுற்றியுள்ள 4 ஸ்தூபிகளில் ஒரு ஸ்தூபியின் உச்சியில் இருந்த கலசம் காணாமல் போய் இருந்தது.

தேர்தல் பறக்கும் படை சோதனையில் 5 மாநிலங்களில் இதுவரை ரூ.32 கோடி பறிமுதல்

Posted: 30 Mar 2016 08:03 PM PDT

தமிழ்நாடு, மேற்கு வங்காளம், அசாம், கேரளா மற்றும் பாண்டிச்சேரி ஆகிய 5 மாநிலங்களில் சட்டசபை தேர்தல் ஏப்ரல் 4 முதல் மே 16 வரை நடைபெறும் என தேர்தல் கமிஷன் கடந்த 4-ந்தேதி அறிவித்தது. தேர்தல் அறிவிக்கப்பட்ட 5 மாநிலங்களிலும் வாக்காளர்களுக்கு அரசியல்

அகமத்நகர் சிங்னாபூர் கோவிலுக்குள் பெண்களும் நுழைய அனுமதிக்கப்பட வேண்டும்: மும்பை ஐகோர்ட்டு உத்தரவு

Posted: 30 Mar 2016 07:56 PM PDT

அகமத்நகர் மாவட்டம் சிங்னாபூரில் புகழ்பெற்ற சனீஸ்வரர் கோவில் உள்ளது. பாரம்பரியமிக்க இந்த கோவிலுக்குள் நுழைய பெண்கள் அனுமதிக்கப்படுவதில்லை. இந்த நிலையில் சமீபத்தில் பெண் ஒருவர் தடையை மீறி சனீஸ்வரர் கோவிலின் கருவறைக்குள் நுழைந்து பரபரப்பை

மகாராஷ்டிரா சதன் ஊழல் வழக்கு: சகன்புஜ்பால், குடும்பத்தினர் மீது குற்றப்பத்திரிகை தாக்கல்

Posted: 30 Mar 2016 07:44 PM PDT

மகாராஷ்டிரா சதன் ஊழல் வழக்கில் சகன்புஜ்பால் மற்றும் அவரது குடும்பத்தினர் மீது 11 ஆயிரத்து 150 பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிகையை மும்பை செசன்சு கோர்ட்டில் அமலாக்கப்பிரிவினர் தாக்கல் செய்தனர்.

எதிரி சொத்து சட்ட திருத்தம் உள்ளிட்ட 2 சட்டங்களுக்கு மத்திய மந்திரிசபை ஒப்புதல்

Posted: 30 Mar 2016 07:19 PM PDT

பிரதமர் நரேந்திர மோடி வெளிநாடு சென்றிருப்பதால், மத்திய உள்துறை மந்திரி ராஜ்நாத்சிங் தலைமையில் மத்திய மந்திரிசபை கூட்டம் நேற்று நடைபெற்றது. அதில், ஜனாதிபதி ஆட்சி நடைபெறும் உத்தரகாண்ட் மாநிலத்தில், ஏப்ரல் 1-ந் தேதிக்கு பிறகு, அரசின் செலவினங்களுக்கு அரசு

இன்று நடைபெற இருந்த உத்தரகாண்ட் சட்டசபை ஓட்டெடுப்புக்கு ஐகோர்ட்டு தடை

Posted: 30 Mar 2016 07:06 PM PDT

உத்தரகாண்ட் சட்டசபையில் இன்று நடைபெறுவதாக இருந்த ஓட்டெடுப்புக்கு ஐகோர்ட்டு இடைக்கால தடை விதித்தது. உத்தரகாண்ட் மாநிலத்தில் காங்கிரஸ் தலைமையிலான ஆட்சி நடந்து வந்தது. முதல்-மந்திரியாக ஹரிஷ் ராவத் பதவி வகித்து வந்தார். 70

சாலை விபத்தில் சிக்குபவர்களை காப்பாற்றுவோரை பாதுகாக்க மத்திய அரசு வகுத்த வழிமுறைகள்: சுப்ரீம் கோர்ட்டு ஒப்புதல்

Posted: 30 Mar 2016 07:02 PM PDT

சாலை விபத்தில் சிக்குகிறவர்களை காப்பாற்றப்போய் பலரும் பல்வேறு இடையூறுகளை சந்திக்க வேண்டியது வருகிறது. கோர்ட்டு, போலீஸ் என பல நடவடிக்கைகளையும், தொல்லைகளையும் எதிர்கொள்ள வேண்டி வருகிறது. இதனால் சிலர் சாலை விபத்துகள் நடக்கிறபோது, கண்டு

சொத்துக்குவிப்பு மேல்முறையீடு வழக்கு: ஜெயலலிதா தரப்பு வக்கீல் இன்று வாதத்தை தொடங்குகிறார்

Posted: 30 Mar 2016 04:15 PM PDT

சொத்துக்குவிப்பு வழக்கில் 9-வது நாளான நேற்று கர்நாடகா அரசு வக்கீல் பி.வி.ஆச்சார்யா தனது வாதங்களை முடித்துக்கொண்டார். விசாரணை இன்றும் தொடரும் என்று நீதிபதிகள் தெரிவித்தனர். சொத்துக்குவிப்பு வழக்கில் முதல்-அமைச்சர் ஜெயலலிதா உள்ளிட்ட 4 பேரை கர்நாடக ஐகோர்ட்டு விடுதலை செய்ததை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு மனுக்களின் மீதான விசாரணை சுப்ரீம் கோர்ட்டில் நீதிபதிகள் பினாகி சந்திரகோஷ் மற்றும் அமிதவ ராய்

கார், மோட்டார் சைக்கிள்களுக்கான இன்சூரன்ஸ் கட்டணம் உயர்வு

Posted: 30 Mar 2016 03:54 PM PDT

கார்கள் மற்றும் மோட்டார் சைக்கிள்களுக்கான இன்சூரன்ஸ் கட்டணம் 40 சதவீதம் வரை அதிகரிக்கப்பட்டுள்ளது. இந்திய சாலைகளில் இயக்கப்படும் அனைத்து வாகனங்களும் மூன்றாம் நபர் காப்பீடு செய்திருக்க வேண்டியது கட்டாயம் ஆகும். இந்த இன்சூரன்ஸ் கட்டணம், விபத்து இழப்பீடுகளின் எண்ணிக்கை, இழப்பு சதவீதம் ஆகியவற்றின் அடிப்படையில் ஆண்டுதோறும் இந்திய காப்பீடு ஒழுங்குமுறை ஆணையத்தால் (ஐ.ஆர்.டி.ஏ.) மாற்றி அமைக்கப்படுகிறது.

அசாம் சட்டப்பேரவை முதற்கட்ட தேர்தல்: 6 சதவீதம் வேட்பாளர்கள் குற்றப்பின்னணி உள்ளவர்கள்

Posted: 30 Mar 2016 03:26 PM PDT

தமிழகம், புதுச்சேரி, கேரளம், மேற்கு வங்கம், அசாம் ஆகிய 5 மாநில சட்டப்பேரவைகளுக்கு வரும் ஏப்ரல் மாதம் 4ஆம் தேதி முதல் மே மாதம் 16ஆம் தேதி வரை பலகட்டங்களாகத் தேர்தல்கள் நடைபெறவுள்ளது. அசாம் மாநிலத்தில் முதற்கட்டமாக மொத்தமுள்ள 126 தொகுதிகளில் 65 இடங்களுக்கு வாக்குப்பதிவு நடைபெறுகிறது. அசாம் மாநில முதல்-மந்திரி

விமானத்தில் திரிசூலத்துடன் பயணித்த பெண் சாமியார் ராதே மா மீது மும்பை போலீசார் வழக்குப் பதிவு

Posted: 30 Mar 2016 03:02 PM PDT

மும்பை போரிவிலி பகுதியில் ஆசிரமம் நடத்தி வரும் பெண் சாமியார் ராதே மா. கவர்ச்சிகரமான தோற்றத்துடன் ஒரு நடிகையைப் போல பெண் சாமியார் ராதே மா வளம் வருகிறார். 46 வயதான இவர் மீது பல்வேறு சர்ச்சைகள் எழுந்து வந்தன. கவர்ச்சிகரமான ஆடை அணிவது, பக்தர்களை கட்டிப்பிடிப்பது உள்ளிட்ட சர்ச்சைகள் அதில் சில. இந்நிலையில், விமானத்தில் திரிசூலத்துடன் பயணம் செய்ததாக ராதே மா மீது எழுந்த குற்றச்சாட்டில் அவர் மீது மும்பை போலீசார் வழக்கு பதிவு

ஜல்லிக்கட்டுக்கு தடை கோரிய விவகாரம்: விலங்குகள் நலவாரியத்துக்கு மத்திய அரசு நோட்டீசு

Posted: 30 Mar 2016 02:36 PM PDT

அரசின் அனுமதி இன்றி ஜல்லிக்கட்டுக்கு தடை கோரி கோர்ட்டுக்கு போனது ஏன்? என்பது குறித்து விளக்கம் அளிக்குமாறு விலங்குகள் நலவாரியத்துக்கு மத்திய அரசு நோட்டீசு அனுப்பி உள்ளது. தமிழர்களின் வீரவிளையாட்டான ஜல்லிக்கட்டு போட்டிக்கு சுப்ரீம் கோர்ட்டு தடை விதித்து இருந்தது. பல்வேறு தரப்பினர் கோரிக்கை விடுத்ததை தொடர்ந்து ஜல்லிக்கட்டு நடத்த கடந்த ஜனவரி மாதம் மத்திய அரசு அனுமதி வழங்கியது. இது தொடர்பான அறிவிக்கையை மத்திய வனத்துறை மற்றும் சுற்றுச்சூழல் அமைச்சகம் வெளியிட்டது.

பதான்கோட் தாக்குதல் தன்னுடைய மண்ணிலிருந்து நடத்தப்பட்டதை பாகிஸ்தான் ஒப்புக்கொண்டது: ராஜ்நாத் சிங்

Posted: 30 Mar 2016 11:25 AM PDT

பதான்கோட் தீவிரவாத தாக்குதல் தன்னுடைய மண்ணில் இருந்து நிகழ்த்தப்பட்டதை முதல் முறையாக பாகிஸ்தான் ஒப்புக் கொண்டுள்ளது என்று மத்திய உள்துறை மந்திரி ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார். அஸ்ஸாம் மாநிலத்தில் நடைபெற்ற தேர்தல் பரப்புரையின் போது இதனை அவர் கூறினார். இது தொடர்பாக மேலும் ராஜ்நாத் சிங் பேசியதாவது:- இந்தியாவில் நடைபெறும் தீவிரவாத தாக்குதலுக்கு தங்கள் நாடு


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™