Tamil Star |
- காணாமல் போன 2 வயது சிறுவனின் சடலம் கண்டுபிடிப்பு
- உடலில் வறட்சியை ஏற்படுத்தும் உணவுகள்!
- துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் பலி
- துப்பாக்கியுடன் நடமாடிய நபர் பொதுமக்களால் மடக்கிப் பிடிக்கப்பட்டார்
| காணாமல் போன 2 வயது சிறுவனின் சடலம் கண்டுபிடிப்பு Posted: 26 Mar 2016 08:50 PM PDT
எனினும் குறித்த சிறுவனின் மரணத்தில் சதிச் செயல் ஏதும் இடம்பெற்றமைக்கான அறிகுறிகள் எவையும் இல்லை என காவல்த்துறையினர் தெரிவித்துள்ளனர். எனினும் சிறுவனின் மரணம் தொடர்பில் அதிகாரிகள் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். இதேவேளை தமது மகனை மீட்பதற்காக தகவல்களை அறிந்தோர் தமக்கு தெரியப்படுத்தி உதவுமாறு காணாமல் போன சிறுவனின் பெற்றோர் கடந்த வியாழக்கிழமை வேண்டுகோள் விடுத்திருந்தனர். அத்துடன் தமது மகன் தமது வீட்டு வளவினை விட்டு வெளியே சென்றிருக்க வாய்ப்புகள் இல்லை எனவும், அவ்வாறு யாராவது தமது மகனை அழைத்துச் சென்றிருந்தால், தயவு செய்து அவரை மறுபடியும் தம்மிடம் ஒப்படைக்குமாறும் அவர்கள் கோரிக்கை விடுத்திருந்தனர். எனினும் சிறுவன் காணாமல் போனமை தொடர்பில் தேடுதல்களுடன் விசாரணைகளையும் மேற்கொண்டுவரும் காவல்த்துறையினர், இந்த சம்பவத்தில் சதிச் செயல்கள் தொடர்பு பட்டிருக்க கூடும் என்ற சந்கேத்தினை மறுக்கவில்லை என்ற போதிலும், அந்த கோணத்தில் தாம் விசாரணைகளை முன்னெடுக்கவில்லை என்று தெரிவித்திருந்தனர். குறித்த அந்த சிறுவன் கடத்தப்பட்டமைக்கான தகவல்கள் எவையும் தமக்கு கிடைக்காத நிலையில், கடத்தல் மீட்பு எச்சரிக்கையினையும் தாம் பிறப்பிக்கவில்லை என்றும் அவர்கள் கூறியிருந்தமை குறிப்பிடத்தக்கது. The post காணாமல் போன 2 வயது சிறுவனின் சடலம் கண்டுபிடிப்பு appeared first on Tamil.com. This posting includes an audio/video/photo media file: Download Now |
| உடலில் வறட்சியை ஏற்படுத்தும் உணவுகள்! Posted: 26 Mar 2016 06:55 PM PDT
அதுவும், கோடைகாலங்களில் காரமான உணவுளை எடுத்துக்கொண்டால், உங்கள் உடல் வளர்ச்சியடைந்து விபரீதங்களை சந்திக்க நேரிடும். சோடாக்கள் ஜிம் செல்வோர் தாகத்தைத் தணிப்பதற்கு அதிகம் எடுக்கும் ஓர் பானம் தான் சோடாக்கள். ல் உடல் ஆற்றலை அதிகரிக்கும் பானம் என்று சொல்லி விற்கப்படும் இந்த பானத்தை அதிகம் குடிப்பதால் உடல் வறட்சி தான் உண்டாகும். ஏனெனில் இதில் உள்ள அதிகப்படியான சர்க்கரை, குடலில் ஆஸ்மாடிக் அழுத்தத்தை அதிகரித்து, உடலில் நீர் இழப்பை ஏற்படுத்தும். கார்போஹைட்ரேட் உணவுகள் எடையைக் குறைக்க நினைப்போர் கார்போஹைட்ரேட் குறைவாக உள்ள உணவுகளைத் தான் அதிகம் உண்போம். ஆனால் இப்படி கார்போஹைட்ரேட் குறைவான டயட்டை அதிகம் மேற்கொண்டால் உடல் வறட்சி தான் ஏற்படும். ஏனெனில் கார்போஹைட்ரேட் குறைவான உணவுகளில் பொட்டாசியம் அதிகம் இருக்கும். இது நீர் இழப்பை உண்டாக்கும். எனவே நீங்கள் கார்போஹைட்ரேட் குறைவான உணவுகளை அதிகம் எடுப்பவராயின், குடிக்கும் நீரின் அளவை அதிகரிக்க வேண்டும். புரோட்டின் உணவுகள் உடல் வறட்சியை ஏற்படுத்தும் விடயங்களில் புரோட்டின் உணவுகளை அதிகமான அளவில் எடுப்பதும் ஒன்று. எப்போதும் நாம் எடுக்கும் கார்போஹைட்ரேட்டிற்கு இணையான அளவில் தான் புரோட்டீனை எடுக்க வேண்டும். இல்லாவிட்டால், அது உடல் வறட்சியை அதிகரிக்கும். குறிப்பாக புரோட்டின் பானங்களை அதிகம் குடிப்பதை கட்டாயம் தவிர்க்க வேண்டும். அப்படி குடித்தாலும், குடிக்கும் நீரின் அளவை இரட்டிப்பாக்க வேண்டும். காபி காபியும் சிறுநீர் பெருக்கியாகும். அளவுக்கு அதிகமாக காபி குடித்தால், அதனால் உடலில் இருந்து நீர் வெளியேறி, உடல் வறட்சி, தலைவலி போன்றவை ஏற்படும். எனவே ஒரு நாளைக்கு 1-2 கப் காபிக்கு மேல் குடிக்காதீர்கள். உப்பு மற்றும் கார உணவுகள் அதிகப்படியான சோடியம் உடலில் தக்கவைக்கப்படும் நீரின் அளவில் இடையூறை உண்டாக்கி, உடல் வறட்சியை ஏற்படுத்தும். எனவே உப்புள்ள உணவுகளை அதிகமாக எடுப்பதைத் தவிர்த்திடுங்கள். இல்லாவிட்டால் கடுமையான விளைவை சந்திக்க நேரிடும். அதுபோன்று கார உணவுகளையும் தவிருங்கள். The post உடலில் வறட்சியை ஏற்படுத்தும் உணவுகள்! appeared first on Tamil.com. This posting includes an audio/video/photo media file: Download Now |
| துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் பலி Posted: 26 Mar 2016 02:44 PM PDT
வீடு ஒன்றில் நடைபெற்ற விருந்துபசார நிகழ்வின் போதே இந்த துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் இடம்பெற்றதாக தெரிவிக்கப்படுகிறது. விக்ரோரியா பூங்கா மற்றும் சென். கிளேயர் அவனியூ அருகில் உள்ள வீடு ஒன்றில் துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளதாக தங்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதை அடுத்து அதிகாலை 2.30 மணியளவில் தாம் சம்பவ இடத்திற்கு பிரசன்னமாகியிருந்ததாக காவல்த்தறையினர் தெரிவித்துள்ளனர். துப்பாக்கிச் சூட்டுக்கு ஆளான நபர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்து விட்டதாக கூறப்பட்டுள்ளது. சம்பவ இடத்தில் இருந்த சாட்சியங்களிடம் விசாரணை நடாத்துவதற்காக சம்பவ இடத்திற்கு TTC பேருந்து ஒன்றும் வரைவழைக்கப்பட்டிருந்தது. அதேவேளை இந்த துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் தொடர்பில் எவரும் கைது செய்யப்படவில்லை. அத்துடன், சந்தேக நபர் தொடர்பிலான தகவல்கள் எவையும் இதுவரையில் வெளியிடப்படவில்லை. காவல்த்துறையினர் விசாரணைகளை தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றனர். The post துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் பலி appeared first on Tamil.com. This posting includes an audio/video/photo media file: Download Now |
| துப்பாக்கியுடன் நடமாடிய நபர் பொதுமக்களால் மடக்கிப் பிடிக்கப்பட்டார் Posted: 26 Mar 2016 02:43 PM PDT
குறித்த நபரிடம் துப்பாக்கி இருப்பதை அவதானித்த வேறு நபர்கள், குறித்த அந்த நபரை மடக்கி நிலத்தில் வீழ்த்தி தடுத்து வைத்திருந்ததாகவும், மற்றையவர் காவல்த்துறையினரை அழைத்ததாகவும் கூறப்படுகிறது. அங்கு விரைந்திருந்த ரொரன்ரோ காவல்த்துறையினர், குறித்த அந்த சந்தேக நபரை கைது செய்துள்ளதுடன், அவர் மீது 16 குற்றச்சாட்டுகளையும் பதிவு செய்துள்ளனர். இதேவேளை கைது செய்யப்பட்டவர் ரொரன்ரோவைச் சேர்ந்த 29 வயதான லைபன் ட்ஜுல்(Liban Douale) என்பவர் என இனம்காணப்பட்டுள்ளது. கைது செய்யப்பட்டபோது அவரிடம் இருந்த துப்பாக்கி, ரவைகளுடன் சுடுவதற்கு தயாரான நிலையிலேயே காணப்பட்டதாக காவல்த்துறையினர் தெரிவித்துள்ளனர்.அத்துடன் கைது செய்யப்பட்ட அந்த நபர் மீது கொள்ளை, சட்டவிரோத ஆயுத பயன்பாடு, கொலை அச்சுறுத்தல் உள்ளிட்ட குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளனர். The post துப்பாக்கியுடன் நடமாடிய நபர் பொதுமக்களால் மடக்கிப் பிடிக்கப்பட்டார் appeared first on Tamil.com. This posting includes an audio/video/photo media file: Download Now |
| You are subscribed to email updates from Tamil.com. To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States | |

மனிற்ரோபாவில் காணாமல் போன 2 வயதுச் சிறுவனை நூற்றுக்கணக்கானவர்கள் தேடி வந்த நிலையில், சிறுவன் சடலமாக கண்டுபிடிக்கப்பட்டு மீட்கப்பட்டுள்ளது.
நாம் எடுத்துக்கொள்ளும் சிலவகை உணவுகளால் நம் உடலில் இருந்து நீர் அதிகளவில் வெளியேறுகிறது.




ரொரன்ரோவின் கிழக்குப் பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிப் பிரயோகத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
ஆயுதத்துடன் சந்தேகத்திற்கிடமான முறையில் நடமாடிய ரொரன்ரோ நபர் ஒருவர் பொதுமக்களால் மடக்கிப் பிடிக்கப்பட்டு காவல்த்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ள சம்பவம் ஒன்று கடந்த செவ்வாய்கிழமை இடம்பெற்றுள்ளது. அதிகாலை இரண்டு மணியளவில் Bloor Street West மற்றும் Lansdowne Avenue பகுதியில் வைத்து குறித்த நபர் பொதுமக்களினால் பிடிக்கப்பட்டார்.