மாலை மலர் | தேசியச்செய்திகள் |
- இனி ஒரே தொலைபேசி அழைப்பின் மூலம் ரெயில் டிக்கெட் முன்பதிவை ரத்து செய்யலாம்
- ஆந்திராவில் உல்லாச வாழ்க்கைக்காக செம்மரக் கடத்தலில் ஈடுபட்ட என்ஜினீயரிங் மாணவர்கள் கைது
- திருப்பதியில் பக்தர்கள் கூட்டம்: தரிசனத்துக்கு 15 மணி நேரம் காத்திருப்பு
- ஆந்திராவில் எம்.எல்.ஏ.க்கள் சம்பளம் ரூ.2 லட்சமாக உயருகிறது
- பிரதமர் மோடி இன்று காலை 11 மணிக்கு மன் கி பாத் நிகழ்ச்சி மூலம் வானொலியில் உரையாற்றுகிறார்
- பதன்கோட் தாக்குதல்: பாகிஸ்தான் விசாரணைக் குழுவினர் 5 பேர் இன்று இந்தியா வருகை
- பதவியேற்கும் நாளை அறிவிப்பதில் ஏன் தாமதம் காட்டுகிறீர்கள்: உமர் அப்துல்லா கேள்வி
- தெலுங்கானா பவனை முற்றுகையிட்டு ஜே.என்.யு மாணவர்கள் ஆர்ப்பாட்டம்
- அசாம் வளர்ச்சிக்கான புதிய சகாப்தத்தை உருவாக்குவோம்: தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பேச்சு
- உத்தரகாண்ட்டில் ஜனாதிபதி ஆட்சி?: மத்திய அமைச்சரவை அவரச கூட்டத்தில் முடிவு எட்டப்படவில்லை
- ஒரு சில சம்பவங்களை வைத்து இந்தியாவில் சகிப்புத்தன்மை குறைந்துவிட்டதாக சொல்ல முடியாது: வங்கதேச எழுத்தாளர்
- 468 ரெயில் பெட்டிகளில் பயோ-டாய்லட் நிறுவப்பட்டது: ரெயில் நிலையங்கள் அசுத்தமாவது குறைய வாய்ப்பு
- அம்பேத்கருக்கு நோபல் பரிசு வழங்க வேண்டும்: ராம் விலாஸ் பாஸ்வான் கோரிக்கை
- ஜம்மு காஷ்மீர் பி.டி.பி.-பா.ஜ.க. தலைவர்கள் கவர்னருடன் சந்திப்பு: ஆட்சியமைக்க உரிமை கோரினார் மெகபூபா
- பாடம் நடத்தாமல் ஓய்வறையில் அரட்டை: அரசு பள்ளி ஆசிரியர்கள் கூண்டோடு சஸ்பெண்ட்
- பேய் படங்கள் நோயை ஏற்படுத்துகிறது: சந்திரபாபு நாயுடு
- ஐதராபாத் பல்கலைக்கழக துணை வேந்தரை நீக்க வேண்டும்: ஜனாதிபதி பிரணாப்பிடம் யெச்சூரி வலியுறுத்தல்
- குஜராத்தில் 2011-12ம் ஆண்டில் 61 காவல் மரணங்கள்: மனித உரிமை ஆணையம் தகவல்
- கேரள சட்டசபை தேர்தல்: முதற்கட்டமாக 51 தொகுதி பா.ஜ.க. வேட்பாளர்கள் அறிவிப்பு
- என்கவுண்டரில் சுட்டுக் கொல்லப்பட்ட இஷ்ரத் ஜகான் தீவிரவாதி தான்: ஹெட்லி மீண்டும் திட்டவட்டம்
| இனி ஒரே தொலைபேசி அழைப்பின் மூலம் ரெயில் டிக்கெட் முன்பதிவை ரத்து செய்யலாம் Posted: 26 Mar 2016 10:51 PM PDT ரெயில் டிக்கெட் முன்பதிவை ரத்து செய்ய கடைசி நேரத்தில் கவுண்ட்டர்களை தேடிச் செல்லும் பொதுமக்களின் அலைச்சலை தவிர்க்கும் வகையில் இதற்கென புதிய தொலைபேசி சேவையை இந்திய ரெயில்வே அறிமுகப்படுத்தவுள்ளது. '139' என்ற எண்ணுக்கு போன்செய்து, முன்பதிவு செய்யப்பட்ட நமது பயணச்சீட்டு தொடர்பான தகவல்களை எதிர் முனையில் இருப்பவரிடம் |
| ஆந்திராவில் உல்லாச வாழ்க்கைக்காக செம்மரக் கடத்தலில் ஈடுபட்ட என்ஜினீயரிங் மாணவர்கள் கைது Posted: 26 Mar 2016 10:27 PM PDT ஆந்திர மாநிலம் கடப்பா மாவட்டம் ரெயில்வே கோடூர் அருகே போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது ஒரு விலை உயர்ந்த கார் வந்தது. அந்த காரை பின் தொடர்ந்து 2 ஆட்டோவும், முன்னால் 2 மோட்டார்சைக்கிளும் வந்து கொண்டு இருந்தது. சந்தேகம் அடைந்த போலீசார் அந்த காரை மடக்கி சோதனையிட்டனர். |
| திருப்பதியில் பக்தர்கள் கூட்டம்: தரிசனத்துக்கு 15 மணி நேரம் காத்திருப்பு Posted: 26 Mar 2016 10:11 PM PDT புனித வெள்ளி, சனி, ஞாயிறு என தொடர் விடுமுறை வந்ததால் திருப்பதி ஏழுமலையான் கோவிலில் பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருந்தது. சனிக்கிழமையான நேற்று கட்டுக்கடங்காமல் கூட்டம் காணப்பட்டது. வைகுண்டம் கியூ காம்ளக்சில் 31 கவுண்டர்களும் நிரம்பி கோவிலுக்கு வெளியே 3 கிலோ மீட்டர் தூரத்துக்கு பக்தர்கள் வரிசையில் நின்றனர். |
| ஆந்திராவில் எம்.எல்.ஏ.க்கள் சம்பளம் ரூ.2 லட்சமாக உயருகிறது Posted: 26 Mar 2016 09:54 PM PDT ஆந்திர சட்டசபையில் மொத்தம் 175 எம்.எல்.ஏ.க்கள் உள்ளனர். இவர்களுக்கு தற்போது மாத சம்பளமாக ரூ.96 ஆயிரம் வழங்கப்பட்டு வருகிறது. சம்பளத்தை உயர்த்துவது குறித்து பரிசீலினை செய்ய சபாநாயகர் கோடல சிவபிரசாத்ராவ் தலைமையில் ஒரு குழு அமைக்கப்பட்டது. |
| பிரதமர் மோடி இன்று காலை 11 மணிக்கு மன் கி பாத் நிகழ்ச்சி மூலம் வானொலியில் உரையாற்றுகிறார் Posted: 26 Mar 2016 09:25 PM PDT பிரதமர் நரேந்திர மோடி 'மன் கி பாத்' என்ற பெயரில் கடந்த ஆண்டு அக்டோபர் 3–ஆம் தேதியன்று வானொலியின் மூலம் நாட்டு மக்களுடன் முதன்முறையாக உரையாடினார். தொடர்ந்து ஒவ்வொரு மாதத்தின் இறுதி ஞாயிற்றுக்கிழமைகளில் வானொலி உரையாற்றி வருகிறார். |
| பதன்கோட் தாக்குதல்: பாகிஸ்தான் விசாரணைக் குழுவினர் 5 பேர் இன்று இந்தியா வருகை Posted: 26 Mar 2016 05:18 PM PDT பதன்கோட் விமானதள தாக்குதல் குறித்து விசாரணை நடத்துவதற்காக பாகிஸ்தானில் இருந்து 5 பேர் கொண்ட கூட்டு விசாரணைக் குழு இன்று இந்தியாவுக்கு வருகிறது. குஜராத் மாநிலம் பதன்கோட்டில் உள்ள |
| பதவியேற்கும் நாளை அறிவிப்பதில் ஏன் தாமதம் காட்டுகிறீர்கள்: உமர் அப்துல்லா கேள்வி Posted: 26 Mar 2016 05:05 PM PDT ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் முதல் மந்திரி முப்தி முகமது சயீத் மரணமடைந்த பின்னர், அவரது மகள் மெகபூபா முப்தி முதல்வராக பொறுப்பேற்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், ஆளும் மக்கள் ஜனநாயக கட்சி(பி.டி.பி.)-பா.ஜ.க. கூட்டணியில் ஒருமித்த கருத்து ஏற்படாததால் புதிய ஆட்சி அமைப்பதில் தேக்க நிலை நீடித்தது. |
| தெலுங்கானா பவனை முற்றுகையிட்டு ஜே.என்.யு மாணவர்கள் ஆர்ப்பாட்டம் Posted: 26 Mar 2016 02:54 PM PDT ஐதராபாத் பல்கலைக்கழக தலித் மாணவர் ரோகித் வெமுலா கடந்த ஜனவரி மாதம் 17-ம் தேதி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த விவகாரத்தில் நீண்ட நாட்களாக விடுப்பில் |
| Posted: 26 Mar 2016 02:04 PM PDT 126 உறுப்பினர்களை கொண்ட அசாம் சட்டசபைக்கு அடுத்த மாதம் 4 மற்றும் 11-ந்தேதிகளில் 2 கட்டமாக தேர்தல் நடக்கிறது. அங்கு முதல் முறையாக ஆட்சியமைக்கும் நோக்கில், மாநில கட்சிகளான அசாம் கண பரிஷத், போடோலாந்து மக்கள் முன்னணி போன்ற கட்சிகளுடன் கூட்டணி அமைத்து பா.ஜனதா கட்சி தேர்தலை சந்திக்கிறது. |
| உத்தரகாண்ட்டில் ஜனாதிபதி ஆட்சி?: மத்திய அமைச்சரவை அவரச கூட்டத்தில் முடிவு எட்டப்படவில்லை Posted: 26 Mar 2016 12:30 PM PDT உத்தரகாண்ட் மாநிலத்தில் ஹரிஷ் ராவத் தலைமையிலான காங்கிரஸ் ஆட்சி நடந்து வருகிறது. 70 உறுப்பினர்களை கொண்ட உத்தரகாண்ட் சட்டசபையில் காங்கிரசுக்கு 36 எம்.எல்.ஏ.க்களும், பா.ஜனதாவுக்கு 28 எம்.எல்.ஏ.க்களும், முற்போக்கு ஜனநாயக முன்னணிக்கு 6 எம்.எல்.ஏ.க்களும் உள்ளனர். காங்கிரசுக்கு முற்போக்கு ஜனநாயக முன்னணி ஆதரவளித்து |
| Posted: 26 Mar 2016 10:15 AM PDT இந்தியாவில் நடந்த சில மோசமான சம்பவங்களை அடிப்படையாக வைத்து சகிப்புத்தன்மை குறைந்துவிட்டதாக சொல்ல முடியாது என வங்கதேச எழுத்தாளர் தஸ்லிமா நஸ்ரின் கருத்து தெரிவித்துள்ளார். தஸ்லிமா நஸ்ரின் டெல்லியில் 'சி.ஐ.ஐ. யங் இந்தியா' நடத்திய நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு பேசியவை பின்வருமாறு:- |
| 468 ரெயில் பெட்டிகளில் பயோ-டாய்லட் நிறுவப்பட்டது: ரெயில் நிலையங்கள் அசுத்தமாவது குறைய வாய்ப்பு Posted: 26 Mar 2016 08:48 AM PDT மனிதக்கழிவுகள் தண்டவாளங்களில் கிடப்பதால் ரெயில் நிலையங்கள் அசுத்தமாக காட்சியளிப்பதுடன் தண்டவாளங்களும் அரிக்கப்பட்டு நாசமடைகின்றன. இதனை தடுப்பதற்காக ரெயில் பெட்டிகளில் தற்போதுள்ள வழக்கமான கழிவறைகளுக்கு பதிலாக சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படுத்தாத பயோ-டாய்லட்டுகளை நிறுவப்பட்டு வருகிறது. |
| அம்பேத்கருக்கு நோபல் பரிசு வழங்க வேண்டும்: ராம் விலாஸ் பாஸ்வான் கோரிக்கை Posted: 26 Mar 2016 08:17 AM PDT மத்திய மந்திரியும், லோக் ஜனசக்தி கட்சி நிறுவனருமான ராம் விலாஸ் பாஸ்வான் மும்பையில் இன்று நடந்த 'இந்திய தலித் வர்த்தக மற்றும் தொழில் கூட்டமைப்பு' மாநாட்டில் கலந்து கொண்டு பேசியவை பின்வருமாறு:- தலித் தொழில் முனைவோர்கள் ஊக்குவிக்கப்பட வேண்டும். ஒரு தலித் தொழில் முனைவோர் உருவாக்கப்பட்டால் 10 தலித்துகளுக்கு அதன் |
| ஜம்மு காஷ்மீர் பி.டி.பி.-பா.ஜ.க. தலைவர்கள் கவர்னருடன் சந்திப்பு: ஆட்சியமைக்க உரிமை கோரினார் மெகபூபா Posted: 26 Mar 2016 05:13 AM PDT ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் முதல் மந்திரி முப்தி முகமது சயீத் மரணமடைந்த பின்னர், அவரது மகள் மெகபூபா முப்தி முதல்வராக பொறுப்பேற்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், ஆளும் மக்கள் ஜனநாயக கட்சி(பி.டி.பி.)-பா.ஜ.க. கூட்டணியில் ஒருமித்த கருத்து ஏற்படாமல் இழுபறி நீடித்ததால் கவர்னர் ஆட்சி அமல்படுத்தப்பட்டது. |
| பாடம் நடத்தாமல் ஓய்வறையில் அரட்டை: அரசு பள்ளி ஆசிரியர்கள் கூண்டோடு சஸ்பெண்ட் Posted: 26 Mar 2016 04:23 AM PDT மாணவர்களுக்கு பாடம் நடத்த வேண்டிய நேரத்தில் பாடம் நடத்தாமல் ஓய்வறையில் அமர்ந்து பேசிக்கொண்டிருந்த அரசுப் பள்ளி ஆசிரியர்கள் அனைவரும் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். ஜம்மு காஷ்மீர் மாநிலம் ஸ்ரீநகர் அருகே உள்ள பெமினா பகுதியில் அரசு உயர்நிலைப் பள்ளி உள்ளது. இந்த பள்ளிக்கு நேற்று பள்ளிக்கல்வி |
| பேய் படங்கள் நோயை ஏற்படுத்துகிறது: சந்திரபாபு நாயுடு Posted: 26 Mar 2016 03:43 AM PDT ஆந்திர முதல்–மந்திரி சந்திரபாபு நாயுடுவின் அண்ணன் ராமமூர்த்தி நாயுடு மகன் நடிகர் நாரா ரோகித். இவர் ''ராஜா செய் வேஸ்டே'' (ராஜா கையை வச்சா) என்ற தெலுங்கு படத்தில் கதாநாயகனாக நடிக்கிறார். படத்தில் என்.டி.ராமராவ் பேரன் நந்தமுரி தாரக் ரத்னா வில்லனாக நடிக்கிறார். |
| ஐதராபாத் பல்கலைக்கழக துணை வேந்தரை நீக்க வேண்டும்: ஜனாதிபதி பிரணாப்பிடம் யெச்சூரி வலியுறுத்தல் Posted: 26 Mar 2016 03:31 AM PDT மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரி, டெல்லியில் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியை சந்தித்து ஒரு மனு கொடுத்தார். அதில், மத்திய மனித வள மேம்பாட்டுத்துறை இந்து ராஷ்ட்டிர மேம்பாட்டு துறையாக மாறாது என்பதை உறுதி செய்ய வேண்டும் என்றும், இந்த விஷயத்தில் ஜனாதிபதி தலையிட வேண்டும் என்றும் |
| குஜராத்தில் 2011-12ம் ஆண்டில் 61 காவல் மரணங்கள்: மனித உரிமை ஆணையம் தகவல் Posted: 26 Mar 2016 02:45 AM PDT குஜராத் மாநிலத்தில் கடந்த 2011-12ம் ஆண்டில் 61 பேர் காவல் நிலையம் மற்றும் நீதிமன்றங்களில் விசாரணைக் காவலில் இருக்கும்போது மரணம் அடைந்திருப்பதாக மனித உரிமை ஆணையம் தெரிவித்துள்ளது. சட்டசபையில் மனித உரிமை ஆணையம் தாக்கல் செய்த ஆண்டறிக்கையில் இத்தகவல் வெளியாகி உள்ளது. அந்த அறிக்கையில் மேலும் கூறியிருப்பதாவது:- குஜராத்தில் 2011-12ம் ஆண்டில் போலீஸ் காவலில் 8 பேர் மரணம் அடைந்துள்ளனர். 53 பேர் நீதிமன்றக் காவலில் இருக்கும்போது |
| கேரள சட்டசபை தேர்தல்: முதற்கட்டமாக 51 தொகுதி பா.ஜ.க. வேட்பாளர்கள் அறிவிப்பு Posted: 26 Mar 2016 02:03 AM PDT கேரளாவில் இதுவரை காங்கிரஸ் மற்றும் கம்யூனிஸ்டு கூட்டணியே மாறி, மாறி ஆட்சி அமைத்து வருகின்றன. தற்போது மத்தியில் ஆட்சி நடத்தும் பாரதீய ஜனதா இதுவரை கேரள சட்டசபைக்குள் நுழைந்ததே இல்லை. இதனால் இந்த சட்டசபை தேர்தலில் கேரளாவில் எப்படியாவது கணிசமான |
| என்கவுண்டரில் சுட்டுக் கொல்லப்பட்ட இஷ்ரத் ஜகான் தீவிரவாதி தான்: ஹெட்லி மீண்டும் திட்டவட்டம் Posted: 26 Mar 2016 12:30 AM PDT மும்பையில் நடந்த தாக்குதலில் தொடர்புடையதாக லஷ்கர் – இ – தொய்பா தீவிரவாதி டேவிட் ஹெட்லி அமெரிக்காவில் கைது செய்யப்பட்டார். பாகிஸ்தானை சேர்ந்த இவருக்கு அமெரிக்க கோர்ட்டு 35 ஆண்டு சிறை தண்டனை விதித்தது. |
| You are subscribed to email updates from மாலை மலர் | தேசியச்செய்திகள். To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States | |