Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Tamil Star

Tamil Star


ஆற்றினுள் பாய்ந்த கார்: மீட்கப்பட்ட முதியவர் மருத்துவமனையில்

Posted: 21 Mar 2016 07:37 PM PDT

yu

yuமிசிசாகாவில் உள்ள ஆற்றினுள் (Credit River) கார் ஒன்று பாய்ந்து விபத்துக்குள்ளான நிலையில், ஆற்றில் விழுந்த மூதாட்டி ஒருவர் மீட்கப்பட்டு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார்.

அவர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட போது அசைவற்று இருந்தார் என தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில், அவரின் தற்போதைய நிலைமை குறித்த தகவல்கள் எவையும் வெளியிடப்படவில்லை.

இன்று திங்கட்கிழமை பிற்பகல் இந்த சம்பவம் இடம்பெற்றதை அடுத்து, தகவல் அறிந்த மீட்புப் படையினர் சம்பவ இடத்திற்கு உடனடியாக விரைந்திருந்தாக தெரிவிக்கப்படுகிறது.

பிற்பகல் 4.15 மணியளவில் Lake Shore Boulevard மற்றும் மிசிசாகா வீதி அருகில் குறித்த விபத்தைப் பார்த்த ஒருவரே தகவல் வழங்கியிருந்தாகவும் அவசர மீட்புப் படையினர் கூறியுள்ளனர்.yu

சம்பவ இடத்திற்கு அருகில் இருந்த ஓய்வு விடுதியில் இருந்த பலரும் கார் ஒன்று ஆற்றில் மூழ்குவதைக் கண்டிருந்தனர் என்றும், குறித்த விடுதியில் பணியாற்றும் ஒருவர் 911 இற்கு தகவல் வழங்கியிருந்தார் என்றும் கூறப்படுகிறது.

The post ஆற்றினுள் பாய்ந்த கார்: மீட்கப்பட்ட முதியவர் மருத்துவமனையில் appeared first on Tamil.com.

This posting includes an audio/video/photo media file: Download Now

பாதசாரியை மோதிய வாகனத்தின் சாரதி தப்பி ஓட்டம்

Posted: 21 Mar 2016 10:37 AM PDT

struck_pedestrian_-_03212016

struck_pedestrian_-_03212016பாதசாரி ஒருவரை வாகனத்தால் மோதிவிட்டு தப்பி ஓடிவிட்ட வாகன சாரதி ஒருவரை காவல்த்துறையினர் தேடி வருகி்ன்றனர்.

இன்று அதிகாலை ரொரன்ரோவின் ஷெயர்போர்ன் வீதி மற்றும் பூலர் வீதி பகுதியில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக ரொரன்ரோ காவல்த்துறையினர் தெரிவித்துள்ளனர்.

இன்று அதிகாலை நான்கு மணியளவில் நீல நிற கார் ஒன்றே பாதசாரியை மோதியதாக சந்தேகிக்கப்படுவதாகவும், குறித்த அந்த கார் ஷெயர்போர்ன் வீதியில் தெற்கு நோக்கி தப்பிச் சென்றமை அவதானிக்கப்பட்டுள்ளதாகவும் விசாரணை அதிகாரிகள் தகவல் வெளியிட்டுள்ளனர்.struck_pedestrian_-_03212016

விபத்தில் பாதிக்கப்பட்ட பாதசாரியின் தற்போதய உடல்நிலை மற்றும் அவரது பெயர் விபரங்கள் குறித்த தகவல்கள் எவையும் உடனடியாக கிடைக்கப்பெறவில்லை.

The post பாதசாரியை மோதிய வாகனத்தின் சாரதி தப்பி ஓட்டம் appeared first on Tamil.com.

This posting includes an audio/video/photo media file: Download Now

கனடா பாலின சமத்துவத்துக்கு நீண்ட தூரம் பயணிக்க வேண்டியுள்ளது – புதிய சனநாயக கட்சி

Posted: 21 Mar 2016 09:37 AM PDT

Sheila_Malcolmson_-_03202016

Sheila_Malcolmson_-_03202016பாலின சமத்துவத்தினை முழுமையாக ஏற்படுத்துவதற்கு இன்னமும் நீண்டதூரம் பயணத்தை கனடா மேற்கொள்ள வேண்டியுள்ளதாக புதிய சனநாயக கட்சி தெரிவித்துள்ளது.

ஐக்கிய நாடுகள் ஆணையகத்தில் இடம்பெற்றுவரும் பெண்கள் உரிமை தொடர்பிலான கூட்டத்தொடரின் முதல் வார நிகழ்வுகளில் பங்கேற்ற பின்னர் கருத்து வெளியிட்ட போதே புதிய சனநாயக கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஷீலா மல்கொம்சன்(Sheila Malcolmson) இவ்வாறு கூறியுள்ளார்.

ஆண்களுக்கும் பெண்களுக்கும் இடையேயான சமத்துவத்தினை உருவாக்குவது தொடர்பில் உலக நாடுகள் கனடாவுக்கு கற்றுக் கொடுக்க வேண்டிய விடயங்கள் நிறையவே உள்ளதாகவும், பெண் சமத்துவம் பேணப்படும் நாடுகளின் வரிசையில் கனடா இன்னமும் 30ஆவது இடத்திலேயே உள்ளதனையும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.Sheila_Malcolmson_-_03202016

அத்துடன் பாலின சமத்துவ விடயத்தில் கனடா சிறந்த முறையில் செயற்படவில்லை என்பதனையே இது தெளிவாக எடுத்துக் காட்டுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

சமத்துவ விடயத்தில் ஸாம்பியா, சொல்வேனியா ஆகிய நாடுகளே கனடாவினை விடவும் அதிக தராதரத்தில் உள்ள நிலையில்,கனடாவின் தராதரம் குறைவாகவே காணப்படுவதாகவும் அவர் அதிருப்தி வெளியிட்டுள்ளார்.

குறி்த்த சில நாடுகளில் காணப்படும் நிலையான கொள்கை நிலைப்பாடுகளே, அந்த நாடுகளில் பாலின சமத்துவ முன்னேற்றத்திற்கும் காரணமாக அமைந்துள்ளதனை தன்னால் அறி்ந்துகொள்ள முடிந்ததாகவும் அவர் விபரித்துள்ளார்.

குறிப்பாக பாலின சமத்துவத்தில் முதலாவது நிலையில் பட்டியலிடப்பட்டுள்ள ஐஸ்லாந்து போன்ற நாடுகளில், குடும்ப வன்முறைகள் நிகழவும் போது அங்கு பாதிக்கப்பட்டவரை தவிர்த்து, பாதிப்பினை ஏற்படுத்தியவரே வீட்டிலிருந்து வெளியேற்றப்படுவதனையும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

அதற்கு மாறாக கனடாவில் பாதிக்கப்பட்ட பெண்களையும், சிறுவர்களையும் பாதுகாப்பதற்கென தங்குமிடங்களை அமைப்பதிலேயே நாம் அதிக நேரத்தினை செலவிடுவதாகவும் அவர் குறை கூறியுள்ளார்.

அதேவேளை கனடாவின் அரசியலிலும் பெண் சமத்துவம் மேம்படுத்தப்பட வேண்டும் எனவும், அரசியலில் பெண்களின் எண்ணிக்கை அதிகரிக்ப்பட வேண்டும் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

The post கனடா பாலின சமத்துவத்துக்கு நீண்ட தூரம் பயணிக்க வேண்டியுள்ளது – புதிய சனநாயக கட்சி appeared first on Tamil.com.

This posting includes an audio/video/photo media file: Download Now

மார்க்கம் பகுதியில் சடலம் மீட்பு: விசாரணைகளில் காவல்த்துறையினர்

Posted: 21 Mar 2016 09:24 AM PDT

York_Regional_Police_-_02242016

York_Regional_Police_-_02242016மார்க்கம் பகுதியில் உள்ள வீடொன்றில் இருந்து ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

பேவியூ அவனியூ மற்றும் ஸ்டீல்ஸ் அவனியூ பகுதியில், லோறலீஃவ்(Laureleaf) வீதியில் அமைந்துள்ள வீடு ஒன்றிலிருந்து நேற்று மாலை 6.30 அளவில் குறித்த அந்த சடலம் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தகவல் கிடைத்ததை அடுத்து, சம்பவ இடத்துக்கு விரைந்த யோர்க் பிராந்திய காவல்த்துறையினரும், மரண விசாரணை அதிகாரிகளும் குறித்த அந்த சடலத்தினை மீட்டுள்ளனர்.

இந்த சம்பவம் நேற்று இரவு இடம்பெற்றிருந்த நிலையில், அது தொடர்பில் ஒருவரை கைது செய்துள்ளதாக காவல்த்துறையினர் தெரிவித்துள்ளனர்.

அத்துடன் மேலும் ஒருவரிடம் இது தொடர்பில் விசாரணை நடாத்தி வருவதாகவும் அவர்கள் தகவல் வெளியிட்டுள்ளனர்.York_Regional_Police_-_02242016

அதேவேளை சடலமாக மீட்கப்பட்ட நபர் தொடர்பிலான மேலதிக விபரங்கள் எவையும் உடனடியாக அதிகாரிகளால் வெளியிடப்படவில்லை.

குறித்த சடலம் கட்டுமானப் பணிகள் நடைபெற்று வரும் வீடு ஒன்றில் இருந்து மீட்கப்பட்டுள்ள நிலையில், அந்த மரணம் சந்தேகத்திற்கு இடமானதாக வகைப்படுத்தப்பட்டுள்ளது.

குறித்த இந்த சம்பவம் தொடர்பில் மேலதிக தகவல் அறிந்தோர் தம்மைத் தொடர்புகொள்ளுமாறு காவல்த்துறையினர் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

The post மார்க்கம் பகுதியில் சடலம் மீட்பு: விசாரணைகளில் காவல்த்துறையினர் appeared first on Tamil.com.

This posting includes an audio/video/photo media file: Download Now



Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™