மாலை மலர் | தேசியச்செய்திகள் |
- பிரதமர் மோடியை தொடர்ந்து மெழுகு சிலை மியூசியத்தில் கெஜ்ரிவாலும் இடம் பெறுகிறார்
- ஐதராபாத் ஐகோர்ட்டில் திருடிய வக்கீல் கைது
- காஷ்மீரில் புதிய அரசு அமைப்பது தொடர்பாக பிரதமர் மோடியை மெகபூபா முப்தி சந்தித்தார்
- மேற்கு வங்காளத்தில் ஒரு கிலோ அரிசி 2 ரூபாய்க்கு தரப்படும்: இடது சாரிகள் தேர்தல் வாக்குறுதி
- கேரள சட்டசபை தேர்தலில் பாரதீய ஜனதா வேட்பாளராக கிரிக்கெட் வீரர் ஸ்ரீசாந்த் போட்டி?
- திரிணாமுல் காங்கிரசார் லஞ்சம் வாங்கும் புதிய வீடியோ காட்சியால் சர்ச்சை: மம்தா பானர்ஜி அதிர்ச்சி
- சோலார் மோசடி வழக்கு: காங்கிரஸ் எம்.எல்.ஏ.வுக்கு ரூ.5 லட்சம் பணம் கொடுத்தேன் - சரிதாநாயர் பேட்டி
- கலாபவன்மணி மரணத்துக்கு சொத்து தகராறு காரணமா?: மாமனாரிடம் போலீசார் விசாரணை
- பாஸ்போர்ட்டை திரும்ப வழங்க கோரி மும்பை கோர்ட்டில் சஞ்சய் தத் மனு
- ரூ.11 லட்சத்து 25 ஆயிரம் மொய்ப்பணத்தை வறட்சியால் பாதித்த விவசாயிகளுக்கு வழங்கிய புதுமண தம்பதி
- சபரிமலையில் பங்குனி உத்திர திருவிழா: பம்பை ஆற்றில் அய்யப்ப சுவாமிக்கு ஆராட்டு நாளை நடக்கிறது
- 300 வகை மருந்துகள் தடைக்கு எதிரான இடைக்கால தடையை நீக்க வேண்டும்: டெல்லி ஐகோர்ட்டில் மத்திய அரசு கோரிக்கை
- கலால் வரி தொடர்பான நகை வியாபாரிகளின் கோரிக்கையை பரிசீலிக்க குழு: மத்திய அரசு அமைத்தது
- உத்தரகாண்ட்: ஜனாதிபதியுடன் பா.ஜனதா, காங்கிரஸ் குழுக்கள் தனித்தனியாக சந்திப்பு - மாநில அரசை கலைக்குமாறு பா.ஜனதா கோரிக்கை
- ரோஜாவை ஓராண்டு இடைநீக்கம் செய்ய புதிய சிபாரிசு: ஆந்திர சட்டசபை உரிமைக்குழு முடிவு
- மேற்கு வங்காளத்தில் யானை தாக்கி விவசாயி பலி
- சைபர் தாக்குதல்களுக்கு ஆங்கில மொழியே அதிகமாக பயன்படுத்தப்படுகின்றன - ஆய்வில் தகவல்
- மும்பையில் காரின் கதவு உள்பக்கமாக பூட்டியதால் சிறுவன் மூச்சுத்திணறி உயிரிழப்பு
- அசாம் மாநில ராஜ்யசபா தேர்தலில் காங்கிரஸ் கட்சி வேட்பாளர்கள் வெற்றி
- கேரளாவில் தேர்வு எழுதுவதற்கு முன்பு 10-ம் வகுப்பு மாணவிகள் 3 பேர் தற்கொலை முயற்சி
| பிரதமர் மோடியை தொடர்ந்து மெழுகு சிலை மியூசியத்தில் கெஜ்ரிவாலும் இடம் பெறுகிறார் Posted: 21 Mar 2016 11:30 PM PDT இங்கிலாந்து தலைநகர் லண்டனில் உலகப் புகழ்பெற்ற மேடம் தவுசட்சின் மெழுகு சிலை மியூசியம் உள்ளது. உலகின் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த பிரபல அரசியல் தலைவர்கள் மெழுகு சிலைகள் இந்த மியூசியத்தில் இடம் பெற் றுள்ளன. இந்த மியூசியத்தில் |
| ஐதராபாத் ஐகோர்ட்டில் திருடிய வக்கீல் கைது Posted: 21 Mar 2016 11:25 PM PDT ஐதராபாத் ஐகோர்ட்டில் முக்கிய புத்தகங்கள் மற்றும் கோப்புகள் மாயமான வண்ணம் இருந்தது. இதுகுறித்து 13–ம் எண் கோர்ட்டு வளாக பொறுப்பாளர் சஞ்சீவியய்யா போலீசில் புகார் செய்தார். சார்மினார் பகுதி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணையை |
| காஷ்மீரில் புதிய அரசு அமைப்பது தொடர்பாக பிரதமர் மோடியை மெகபூபா முப்தி சந்தித்தார் Posted: 21 Mar 2016 11:20 PM PDT ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் புதிய அரசு அமைப்பது தொடர்பாக நிலவிவரும் முட்டுக்கட்டையை அகற்றவும், காஷ்மீர் மாநில சட்டசபைக்கு மீண்டும் தேர்தல் நடத்தப்படுவதை தடுக்ககவும் தீர்மானித்த மெகபூபா முப்தி, இன்று காலை புதுடெல்லியில் பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து ஆலோசனை நடத்தினார். |
| மேற்கு வங்காளத்தில் ஒரு கிலோ அரிசி 2 ரூபாய்க்கு தரப்படும்: இடது சாரிகள் தேர்தல் வாக்குறுதி Posted: 21 Mar 2016 11:07 PM PDT மேற்கு வங்க மாநில சட்டசபை தேர்தலில் மீண்டும் வெற்றி பெற்று ஆட்சியை பிடிக்க வேண்டும் என்பதில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி தீவிரமாக உள்ளது. இதற்காக இடது சாரிகள் காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி அமைத்துள்ளனர். |
| கேரள சட்டசபை தேர்தலில் பாரதீய ஜனதா வேட்பாளராக கிரிக்கெட் வீரர் ஸ்ரீசாந்த் போட்டி? Posted: 21 Mar 2016 11:00 PM PDT கேரள சட்டசபை தேர்தலும் தமிழகத்தை போல வருகிற மே 16–ந் தேதி நடக்க இருக்கிறது. கேரளாவில் எப்போதும் காங்கிரஸ் மற்றும் கம்யூனிஸ்டு கட்சிகளுக்கு இடையில் தான் போட்டி இருக்கும். அங்கு சட்டசபை தேர்தல் நடந்த நாள் முதல் மாறிமாறி இந்த இரு கூட்டணி கட்சிகள் தான் ஆட்சியில் இருந்து வருகிறார்கள். |
| திரிணாமுல் காங்கிரசார் லஞ்சம் வாங்கும் புதிய வீடியோ காட்சியால் சர்ச்சை: மம்தா பானர்ஜி அதிர்ச்சி Posted: 21 Mar 2016 10:41 PM PDT மேற்குவங்க மாநிலத்தில் 6 கட்டமாக தேர்தல் நடைபெற உள்ளது. அங்கு ஆளும் திரிணாமுல் காங்கிரஸ், பா.ஜ.க., இடது சாரிகள் – காங்கிரஸ் கூட்டணி இடையே மும்முனைப் போட்டி ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் கடந்த 14–ந் தேதி திரிணாமுல் காங்கிரசை சேர்ந்த மந்திரிகள், எம்.பி.க்கள் லஞ்சம் வாங்கிய வீடியோ காட்சிகள் வெளியானது. |
| சோலார் மோசடி வழக்கு: காங்கிரஸ் எம்.எல்.ஏ.வுக்கு ரூ.5 லட்சம் பணம் கொடுத்தேன் - சரிதாநாயர் பேட்டி Posted: 21 Mar 2016 09:54 PM PDT கேரளாவில் சோலார் பேனல் அமைத்து தருவதாக கூறி மோசடியில் ஈடுபட்டதாக பெண் தொழில் அதிபர் சரிதாநாயர் கைது செய்யப்பட்டார். இந்த மோசடியில் முதல்–மந்திரி உம்மன் சாண்டிக்கும், அவரது அலுவலக உதவியாளர்கள் மற்றும் மந்திரி சபை சகாக்களுக்கும் தொடர்பு இருப்பதாக சரிதாநாயர் குற்றம் சாட்டினார். |
| கலாபவன்மணி மரணத்துக்கு சொத்து தகராறு காரணமா?: மாமனாரிடம் போலீசார் விசாரணை Posted: 21 Mar 2016 09:50 PM PDT நடிகர் கலாபவன்மணி மரணத்தில் தொடர்ந்து மர்மம் நீடிக்கிறது. அவரது உடலில் பூச்சிக்கொல்லி மருந்து உள்பட 3 வகையான ரசாயன பொருட்கள் கலந்ததால் கல்லீரல் பாதிக்கப்பட்டு அவர் மரணமடைந்தது பிரேத பரிசோதனை அறிக்கையில் தெரியவந்து உள்ளது. |
| பாஸ்போர்ட்டை திரும்ப வழங்க கோரி மும்பை கோர்ட்டில் சஞ்சய் தத் மனு Posted: 21 Mar 2016 09:11 PM PDT மும்பை சங்கிலி தொடர் குண்டுவெடிப்பு வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட இந்தி நடிகர் சஞ்சய் தத், நன்னடத்தை காரணமாக சமீபத்தில் விடுதலை செய்யப்பட்டார். |
| ரூ.11 லட்சத்து 25 ஆயிரம் மொய்ப்பணத்தை வறட்சியால் பாதித்த விவசாயிகளுக்கு வழங்கிய புதுமண தம்பதி Posted: 21 Mar 2016 09:03 PM PDT திருமண விழாவில் கிடைத்த ரூ.11 லட்சத்து 25 ஆயிரம் மொய்ப்பணத்தை புதுமணத்தம்பதியினர் வறட்சியால் பாதித்த விவசாயிகளுக்கு வழங்கிய நெகிழ்ச்சி சம்பவம் நவிமும்பையில் நடந்துள்ளது. தானேயை சேர்ந்தவர் தேவேந்திரா. அதே பகுதியை சேர்ந்தவர் ரோஷினி. |
| சபரிமலையில் பங்குனி உத்திர திருவிழா: பம்பை ஆற்றில் அய்யப்ப சுவாமிக்கு ஆராட்டு நாளை நடக்கிறது Posted: 21 Mar 2016 07:42 PM PDT சபரிமலை அய்யப்பன் கோவிலில் பங்குனி உத்திர திருவிழா கடந்த 14-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழா நாட்களில் தினமும் அதிகாலை 4.30 மணிக்கு நடை திறக்கப்பட்டு, நெய் அபிஷேகம் உள்பட வழக்கமான பூஜைகளுடன், உ |
| Posted: 21 Mar 2016 05:22 PM PDT விக்ஸ் ஆக்ஷன் 500, சாரிடான், அஸ்காரில் உள்ளிட்ட 300 வகையான மருந்துகளை விற்பதற்கு தடை விதித்து கடந்த 10-ந் தேதி மத்திய அரசு அறிவிக்கை வெளியிட்டது. அதை எதிர்த்து, அந்த மருந்துகளை தயாரிக்கும் 30 மருந்து நிறுவனங்கள், டெல்லி ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தன. அதை |
| கலால் வரி தொடர்பான நகை வியாபாரிகளின் கோரிக்கையை பரிசீலிக்க குழு: மத்திய அரசு அமைத்தது Posted: 21 Mar 2016 04:39 PM PDT மத்திய பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட 1 சதவீத கலால் வரி விதிப்பை திரும்ப பெறக்கோரி நாடு முழுவதும் உள்ள தங்க நகை வியாபாரிகள், கைவினை கலைஞர்கள் கடந்த சில வாரங்களாக கடையடைப்பு போராட்டம் நடத்தி வந்தனர். அவர்களது கோரிக்கை பரிசீலிக்கப்படும் என மத்திய அரசு உறுதியளித்தது. |
| Posted: 21 Mar 2016 04:11 PM PDT உத்தரகாண்ட் மாநிலத்தில் ஹரிஷ் ராவத் தலைமையிலான காங்கிரஸ் அரசு நடைபெற்று வருகிறது. 70 உறுப்பினர்களைக் கொண்ட சட்டசபையில், அக்கட்சிக்கு 36 எம்.எல்.ஏ.க்களும், கூட்டணி கட்சிக்கு 6 எம்.எல்.ஏ.க்களும், பா.ஜனதாவுக்கு 28 எம்.எல்.ஏ.க்களும் இருந்தனர். |
| ரோஜாவை ஓராண்டு இடைநீக்கம் செய்ய புதிய சிபாரிசு: ஆந்திர சட்டசபை உரிமைக்குழு முடிவு Posted: 21 Mar 2016 03:25 PM PDT ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் எம்.எல்.ஏ.வான நடிகை ரோஜா, கடந்த ஆண்டு ஆந்திர சட்டசபையில் முதல்-மந்திரி சந்திரபாபு நாயுடு மற்றும் தெலுங்கு தேச எம்.எல்.ஏ.க்களை அவதூறாக பேசியதாக சபாநாயகர் சிவபிரசாத் ராவ் அவரை ஓராண்டுக்கு இடைநீக்கம் செய்தார். |
| மேற்கு வங்காளத்தில் யானை தாக்கி விவசாயி பலி Posted: 21 Mar 2016 01:52 PM PDT மேற்கு வங்காள மாநிலம் பர்த்வான் மாவட்டத்தில் உள்ள கஷ்பூரில் நேற்று காலை வயல்வெளியில் 2 விவசாயிகள் வயல் வேலையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது 5 யானைகள் ஒரு கும்பலாக அங்கு வந்தன. வயல் வேலை செய்து கொண்டிருந்த இருவரையும் துரத்தின. இதில் |
| சைபர் தாக்குதல்களுக்கு ஆங்கில மொழியே அதிகமாக பயன்படுத்தப்படுகின்றன - ஆய்வில் தகவல் Posted: 21 Mar 2016 11:42 AM PDT சென்ற ஆண்டில் சைபர் தாக்குதல்கள் எவ்வாறு இருந்தது என ஜப்பானின் பிரபல சைபர் பாதுகாப்பு நிறுவனமான டிரெண்ட் மைக்ரோ ஒரு ஆய்வு முடிவை வெளியிட்டுள்ளது. அதில், ஸ்பாம் மெசேஜ்களை அனுப்ப ஆங்கில மொழியே அதிகம் பயன்படுத்தப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதற்கு |
| மும்பையில் காரின் கதவு உள்பக்கமாக பூட்டியதால் சிறுவன் மூச்சுத்திணறி உயிரிழப்பு Posted: 21 Mar 2016 10:24 AM PDT மும்பை தாமோதர் பார்க் பகுதியில் பெற்றோருடன் வசித்து வந்த சிறுவன் குர்பான் ரகீம் (வயது 5). இவரது தந்தை தென்மும்பையில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் தணிக்கையாளராக பணியாற்றி வருகிறார். சிறுவன் குர்பான் ரகீம் மதியம் வீட்டருகே விளையாடி கொண்டு இருந்தான். |
| அசாம் மாநில ராஜ்யசபா தேர்தலில் காங்கிரஸ் கட்சி வேட்பாளர்கள் வெற்றி Posted: 21 Mar 2016 09:41 AM PDT அசாம் மாநிலத்தில் மாநிலங்களவை உறுப்பினர்களுக்கான தேர்தலில் ஆளும் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த இரண்டு வேட்பாளர்களும் வெற்றி பெற்றுள்ளனர். அசாம் மாநிலத்தில் இருந்து மாநிலங்களவைக்கு காங்கிரஸ் சார்பில் தேர்வு செய்யப்பட்ட நஸ்னின் பரூக் மற்றும் பங்கஜ் போரா ஆகியோர் அடுத்த மாதம் ஓய்வு பெற உள்ள நிலையில், காலியாகும் அந்த |
| கேரளாவில் தேர்வு எழுதுவதற்கு முன்பு 10-ம் வகுப்பு மாணவிகள் 3 பேர் தற்கொலை முயற்சி Posted: 21 Mar 2016 08:06 AM PDT கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில், தேர்வு எழுதுவதற்கு சில மணி நேரங்களுக்கு முன்பாக 10-ம் வகுப்பு மாணவிகள் 3 பேர் ஆற்றில் குதித்து தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடலுக்கு அருகில் உள்ள பாலம் ஒன்றில் இருந்து தண்ணீரில் குதித்து அவர்கள் தற்கொலைக்கு முயன்றுள்ளனர். அவர்களை உள்ளூர் மீனவர்கள் காப்பாற்றினர். |
| You are subscribed to email updates from மாலை மலர் | தேசியச்செய்திகள். To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States | |