Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Tamil Star

Tamil Star


துப்பாக்கி முனையில் கொள்ளையிட்ட சந்தேக நபருக்கு காவல்த்துறை வலைவீச்சு

Posted: 16 Mar 2016 09:19 PM PDT

Thornhill_gas_station_-_02162016

Thornhill_gas_station_-_02162016Vaughan பகுதியில் அமைந்துள்ள எரிபொருள் நிரப்பு நிலையம் ஒன்றில் துப்பாக்கி முனையில் கொள்ளையிட்ட சந்தேக நபர் ஒருவரைத் தேடிவரும் யோர்க் பிராந்தியக் காவல்த்துறையினர், பாதுபாப்புப் கண்காணிப்புப் கருவியில் பதிவான ஒளிப்படத்தை வெளியிட்டுள்ளனர்.

கடந்த 15 ஆம் நாள் இரவு 7.30 மணியளவில் Dufferin மற்றும் Centre வீதிகள் அமைந்துள்ள பகுதியில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையம் ஒன்றிலேயே அந்த நபர் கொள்ளையில் ஈடுபட்டுள்ளார்.

குறித்த நபர் தனியாகவே அந்த எரிபொருள் நிரப்பு நிலையத்தினுள் நுளைந்ததாகவும், கையில் துப்பாக்கி மற்றும் பெரிய கத்தி ஒன்றை வைத்து பணமும் வெண்சுருட்டும் தருமாறு அங்கிருந்த பணியாளரை அச்சுறுத்தியதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனினும் இந்த சம்பவத்தில் அங்கு இருந்த பணியாளருக்கு காயங்கள் எதுவும் ஏற்படவில்லை.Thornhill_gas_station_-_02162016

இந்த நிலையிலேயே குறித்த நபரை அடையாளம் காணுவதற்காக கண்காணிப்புக் கருவியில் பதிவான அவரின் ஒளிப்படத்தையும், விபரணத்தையும் காவல்த்துறையினர் இன்று புதன்கிழமை வெளியிட்டுள்ளனர்.

அந்த நபர் 20இற்கும் 25இற்கும் இடைப்பட்ட வயதுடையவர் என்றும், ஏறத்தாழ 5 அடி 8 அங்குலம் உயரம் உடையவர் என்றும் அடையாளப்படுத்தியுள்ளதுடன், குறித்த கொள்ளைச் சம்பவத்தின் போது அவர் கறுப்பு நிற ஆடை அணிந்திருந்தாகவும், முகத்தின் ஒரு பகுதியை மறைத்து துணியால் கட்டியிருந்ததாகவும் விபரித்துள்ளனர்.

அதேவேளை இந்த கொள்ளைச் சம்பவத்தின் போது அந்த இடத்தில் காணப்பட்ட இளநிற நான்கு கதவு வாகனம் ஒன்றையும் காவல்த்துறையினர் தேடி வருகின்றனர்.

இது தொடர்பில் மேலும் தகவல்கள் தெரிவிக்க விரும்புபவர்கள் 1-866-876-5423, ext. 6631 என்ற இலக்கத்தில் காவல்த்துறையினரை அல்லது 1-800-222-8477 (TIPS) என்ற இலக்கத்தில் குற்றத் தடுப்புப் பிரிவினரைத் தொடர்புகொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.

The post துப்பாக்கி முனையில் கொள்ளையிட்ட சந்தேக நபருக்கு காவல்த்துறை வலைவீச்சு appeared first on Tamil.com.

This posting includes an audio/video/photo media file: Download Now

தவிர்க்க வேண்டிய 7 உணவுகள்!

Posted: 16 Mar 2016 06:48 PM PDT

k

kஆரோக்கியமான உணவுகள் என நினைத்துக்கொண்டு நீங்கள் சாப்பிடும் சில வகை உணவுகளிலும் பல கெடுதல்கள் உள்ளன என்பதை தெரிந்துகொள்ளுங்கள்.

கீழே கொடுக்கப்பட்டு 7 உணவுகளில் சில ஆரோக்கிய நன்மைகள் நிறைந்திருந்தாலும், அதனை சில காரணங்கள் கருதி நீங்கள் தவிர்க்க வேண்டியது அவசியம் அல்லது அளவோடு சாப்பிடலாம்.

சாண்ட்விச்

காலை உணவாக நாம் சாண்ட்விச்சினை சாப்பிடுகிறோம், ஆனால் அவற்றில் சேர்க்கப்படும் முட்டை மற்றும் இறைச்சிகள் உடலுக்கு தீங்கு விளைவிக்கின்றன.

சாண்ட்விச் தயாரிக்கப்படும்போது அதில் பயன்படுத்தப்படும் சேர்க்கையூட்டிகளில் அதிக கொழுப்பு மற்றும் குறைவான ஊட்டச்சத்துக்களே உள்ளன, பெரும்பாலும் வெள்ளை ரொட்டியில் தான் சாண்ட்விச் தயாரிக்கப்படுகிறது, இதனால் நார்ச்சத்து சரியான முறையில் கிடைப்பதில்லை.

மேலும் பதப்படுத்தப்பட்ட இறைச்சியில் தயார் செய்யப்பட்ட சாண்ட்விச்சினை நீங்கள் காலை உணவாக தினந்தோறும் சாப்பிட்டால், புற்றுநோய் எளிதில் தாக்கும் என மருத்துவ நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.hj

சூப்

சூப் வகைகள் ஆரோக்கியமான உணவு என்பதில் மாற்றுக்கருத்து இல்லை. அதேவேளையில் சூப்புகளில் அளவுக்கு அதிகமாக உள்ள உப்புகள் உடலுக்கு தீங்கு என்று மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர்.

குறிப்பாக கேன்களில் அடைக்கப்பட்டு விற்கப்படும் சூப்புகளில் உப்பின் அளவு மிகுதியாக இருக்கும். இதனை பருகுவதால் ரத்த அழுத்தம் அதிகரிக்க கூடும்.p

ஸ்மூத்திஸ்

பால் மற்றும் ஐஸ்கிரீமை கலந்து பரிமாறப்படும் ஒரு வகை பழச்சாறு ஸ்மூத்திஸ் எனப்படுகிறது.

இது உடலுக்கு ஆரோக்கியம் அளிக்கக்கூடியது தான். ஆனால் அதில் சேர்க்கப்படும் சக்கரையின் காரணமாக நமது உடலில் கலோரிகள் அதிகரிக்கக்கூடும்.

பால், தயிர், பாதம் ஆகியவை சேர்க்கப்படுவதால் அதில் உள்ள கலோரிகள் உடலுக்கு கடத்தப்படும். மேலும் தொடர்ந்து இவைகளை அருத்துவது பற்களில் எனாமலை(Enamel) பாதிக்கும்.k

வெள்ளை தானியங்கள்

மில்களில் அரைக்கும்போது இந்த உணவுகளின் வெளி தவிடு மற்றும் உள்ளிருக்கும் கிருமிகள் ஆகியவை நீக்கப்படுகின்றன.

மீதமிருக்கும் தானியத்தில் கார்போஹைட்ரேட் மிகுதியாக இருக்கும். இந்த தானியங்களை நாம் உட்கொள்வதால் ரத்த அழுத்தம் எளிதில் அதிகரிக்கக்கூடும். எனவே வெள்ளை தானியங்களான அரிசி, வெள்ளை பாஸ்தா போன்றவைகளுக்கு பதிலாக கோதுமை, சிவப்பு நிற அரிசி ஆகியவைகளை உணவுகளில் சேர்ப்பது நலம்.oi

பாப்கார்ன்

ஆரோக்கியமான சிற்றுண்டி என்றால் அது பாப்கார்ன் தான், மேலும் பாப்கார்ன் என்பது முழு தானியங்கள் என்பதால் இதில் குறைவான கலோரிகளே உள்ளன.

ஆனால், சில பாப்கார்ன், இனிப்பு மற்றும் வெண்ணெய் கலக்கப்பட்ட சிற்றுண்டியாக தயார் செய்யப்படும், இதனை நீங்கள் அன்றாட சிற்றுண்டியாக சாப்பிட்டு வந்தால் கண்டிப்பாக கலோரி அதிகமாகும்.iu

வெள்ளை சொக்லேட்

வெள்ளை சொக்லேட்டில் கொக்கோ அதிக அளவில் உள்ளன. இதில் உள்ள பிளேவனாய்டுகள் திசுக்கள் சேதமடைவதில் இருந்து பாதுகாக்கிறது, அதுமட்டுமின்றி மூளை மற்றும் இதயத்திற்கு நல்லது.

ஆனால் டார்க் சொல்லேட்டில் தான் ஆரோக்கியமான பிளேவனாய்டுகள்(Flavanoids) உள்ளன, மேலும் வெள்ளை சொக்லேட்டில் அதிகமான சர்க்கரை மற்றும் 7.7 கிராம் மற்றும் மற்றும் 14.5 கிராம் சர்க்கரை மற்றும் 132 கலோரி உள்ளன.

எனவே வெள்ளை சொக்லேட்டில் அதிகமாக சாப்பிடுவதை தவிர்க்கவும்.hg

சோடா

உடலில் சக்கரையின் அளவு அதிகரித்து விடும் என்பதற்காக நம்மில் பலரும் காபி, டீ போன்றவற்றில் சக்கரை சேர்ப்பதை தவிர்ப்போது.

ஆனால் நாம் அருந்தும் குளிர்பானங்கள், சோடா போன்றவற்றில் இதனை பார்ப்பதற்கு கோட்டை விட்டு விடுகிறோம்.

நாம் அருந்தும் 330 மில்லி குளிர்பானத்தில் 7 ஸ்பூன் சக்கரை உள்ளது. எனவே அவற்றை மிகுதியாக அருந்தும்போது தேவையில்லாத கலோரிகளை உடலுக்குள் சேர்த்துகொள்கிறோம்.

இதனால் உடல் எடை அதிகரிப்பு, நீரிழிவு, இதய நோய் போன்றவை ஏற்படக்கூடும்.

io

The post தவிர்க்க வேண்டிய 7 உணவுகள்! appeared first on Tamil.com.

This posting includes an audio/video/photo media file: Download Now

பருவ பெண்கள் அழகுடன் ஜொலிக்க என்னென்ன சாப்பிடலாம்?

Posted: 16 Mar 2016 01:17 PM PDT

uy

uyவளரும் இளம் பெண்கள் தாங்கள் எடுத்துக்கொள்ளும் உணவினை பொறுத்து அழகாக ஜொலிக்கலாம் என்பதில் எவ்வித மாற்றுக்கருத்தும் இல்லை.

ஏனெனில் பழங்கள், காய்கறிகளை அதிகளவில் எடுத்துக்கொண்டால் அதில் நிறைந்துள்ள இயற்கை சத்துக்கள் உங்கள் உடம்பில் உள்ள திசுக்களை வளர்ச்சிடைய செய்து, தோல்களின் பளபளப்புக்கு உதவுகின்றன.

என்ன சாப்பிடலாம்?

10 முதல் 12 வயதின் முற்பகுதியில் உள்ள வளர் இளம் பெண்கள் தினமும் 260 முதல் 320 கிராம் வரையிலும், 13 முதல் 15 வயது வரையில் உள்ளவர்கள் மற்றும் 16 முதல் 18 வயதின் பிற்பகுதியில் உள்ளவர்கள் தினமும் 290 முதல் 350 கிராம் வரையிலும் தானியங்கள், தினை, சாமை உணவு வகைகளை எடுத்துக் கொள்ளவேண்டும்.uy

புரோட்டின் நிறைந்த பயறுகள், காய்கள், அவரை வகைகளை 10 முதல் 12 வயதின் முற்பகுதியில் உள்ள வளர் இளம் பெண்கள் தினமும் 30 முதல் 70 கிராம் வரையும், 13 முதல் 18 வயது வரையில் உள்ளவர்கள் தினமும் 50 முதல் 70 கிராம் வரையும் எடுத்துக் கொள்ள வேண்டும்.

புரோட்டினுக்கு மாற்று உணவாக அசைவத்தில் கறி, மீன் மற்றும் முட்டை இவற்றில் ஏதேனும் ஒன்றை தினமும் 30 முதல் 60 கிராம் வரை எடுத்துக் கொள்ள வேண்டும்.

சைவ உணவு மட்டுமே உட்கொள்பவர்கள் அதற்கு பதிலாக, முந்திரி போன்ற பருப்பு வகைகள் மற்றும் நிலக்கடலை போன்ற எண்ணெய் வித்துகளை எடுத்துக் கொள்ள வேண்டும். இவற்றை 30 முதல் 50 கிராம் வரை சேர்த்துக் கொள்ள வேண்டும்.

பால் மற்றும் பால் பொருட்களும் புரோட்டின் கிடைக்க உதவும். விட்டமின்கள், நார்ச்சத்துகள் நிறைந்துள்ள காய்கறிகள் சத்தான உணவு என்ற அடிப்படையில் 5 பிரிவுகளாக பிரிக்கப்படுகின்றன.

1. பச்சை இலை காய்கறிகள்

2. வேரில் விளைபவை. கேரட், பீட்ருட், முள்ளங்கி, வெங்காயம் ஆகியவற்றை இதற்கு உதாரணமாக கூறலாம்.

3. கிழங்குகள், தானியங்களுக்கு ஓரளவு மாற்றாக இவை அமைகின்றன.

4. காய்கறிகள். நார்ச்சத்து மிகுந்த வெள்ளரி போன்றவற்றை இதற்கு உதாரணமாக கூறலாம்.

5. காய்கறிகள், பீன்ஸ், பயறு வகைகளை இதற்கு உதாரணமாக கூறலாம். 10 முதல் 12 வயதின் முற்பகுதியில் உள்ள வளர் இளம்பெண்கள் பச்சை இலை காய்கறிகள் 100 கிராமும், வேரில் விளையும் மற்றும் கிழங்கு வகைகளை 25 கிராமும்,தானியங்கள் மற்றும் காய்கறிகளை 50 கிராமும் தினமும் எடுத்துக் கொள்ள வேண்டும்.

மொத்தத்தில், 175 கிராம் எடுத்துக் கொள்ளவேண்டும். இந்த உணவு முறையை வளர் இளம் பெண்கள் பின்பற்றினால் உடல் ஆரோக்கியமாக இருப்பதோடு மட்டுமல்லாமல், அழகாகவும் ஜொலிக்கலாம்.

The post பருவ பெண்கள் அழகுடன் ஜொலிக்க என்னென்ன சாப்பிடலாம்? appeared first on Tamil.com.

This posting includes an audio/video/photo media file: Download Now

பிரதான நீர்க்குழாய் வெடிப்பு: குடியிருப்பாளர்கள் வெளியேற்றம்

Posted: 16 Mar 2016 10:08 AM PDT

Brampton_apartments_-_03162016

Brampton_apartments_-_03162016பிரதான நீர் விநியோகக் குழாயில் வெடிப்பு ஏற்பட்டதன் காரணமாக பிரம்டனில் உள்ள அடுக்குமாடிக் குடியிருப்பு ஒன்றில் இருந்தவர்கள் வெளியேற்றப்பட்டனர்.

இன்று புதன்கிழமை அதிகாலை 2.30 மணியளவில் குழாய் வெடித்தாகவும், பிரம்ரனின் 91 and 81 George Street South பகுதியில் உள்ள குடியிருப்பாளர் பாதிக்கப்பட்டனர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நீர்குழாய் வெடித்ததனால் வெளியேறிய நீர் அந்த பகுதியில் வெள்ளக் காடாகவுள்ளது என்றும் கூறப்படுகிறது.

இந்த நிலையிலேயே குறித்த நீர்குழாய் வெடிப்பின் கட்டமைப்புச் சேதம் குறித்து ஆராய்வதற்காக அந்த மூன்று மாடிக் கட்ட்தில் வசிக்கும் நபர்கள் வெளியேறுமாறு நிர்ப்பந்திக்கப்பட்டனர்.Brampton_apartments_-_03162016

The post பிரதான நீர்க்குழாய் வெடிப்பு: குடியிருப்பாளர்கள் வெளியேற்றம் appeared first on Tamil.com.

This posting includes an audio/video/photo media file: Download Now

பிரிட்டிஸ் கொலம்பியாவுக்கு பனிச் சரிவு எச்சரிக்கை

Posted: 16 Mar 2016 08:58 AM PDT

avalanche_danger_-_03162016

avalanche_danger_-_03162016பிரிட்டிஸ் கொலம்பியாவில் பனிச் சரிவுகள் ஏற்படக்கூடிய சாத்தியக்கூறுகள் காணப்படுவதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

அங்கு கடந்த இரண்டு நாட்களில் பனிச்சறுக்கில் ஈடுபட்ட நான்கு பேர் உயரிழந்துள்ள நிலையிலேயே இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

பிரிட்டிஸ் கொலம்பியாவில் அல்பேர்ட்டா எல்லையில் ஏற்பட்ட பனிச்சரிவில் சிக்கி அல்பேர்ட்டாவைச் சேர்ந்த இரண்டு பேர் உட்பட, மூவர் உயிரிழந்துள்ளனர்.

இந்த உயிரிழப்புக்கள் கடந்த திங்கட்கிழமை இடம்பெற்றுள்ளது.

பனிச்சரிவினுள் மூடுண்ட அல்பேட்டாவைச் சேர்ந்த அந்த இருவரையும் வெளியே கொண்டு வந்து அவர்களுக்கு உயிர்காப்பு முதலுதவிகளை வழங்கிய போதிலும் முயற்சி பயனளிக்காத நிலையில் இருவரும் உயிரிழந்தனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.avalanche_danger_-_03162016

உயிரிழந்த இந்த இருவருடன் மேலும் ஐவர் பனிச்சரிவில் சிக்கியிருந்தனர் என்றும், எனினும் அந்த ஐந்து பேரும் அதிஸ்வசமாக உயிர் தப்பியுள்ளனர் எனவும் கூறப்படுகிறது.

குறித்த அந்த ஏழு பேரும் மிகவும் அனுபவம் வாய்ந்த பனிச்சறுக்கு வீரர்கள் என கனேடிய மத்திய காவல்த்துறையினர் தகவல் வெளியிட்டுள்ள போதிலும், அவர்களின் பெயர் விபரங்கள் எவற்றையும் அவர்கள் வெளியிடவில்லை.

இதேவேளை இந்த சம்பவம் இடம்பெற்று சில மணி நேரங்களின் பின்னர், மவுண்ட் மக்கீ பகுதியிலும் இடம்பெற்ற பனிச்சரிவிலும் 45 வயதான ஒருவர் சிக்குண்டுள்ளார்.

இவ்வாறு கடந்த நாட்களி்ல் ஏற்பட்ட உயிரிழப்புக்களை அடுத்து பனிச்சரிவு எச்சரிக்கையினைப் பிறப்பித்துள்ள கனேடிய பனிச்சரிவு அவதானிப்பு திணைக்களம், இவ்வாறான பனிச்சரிவுகளும் உயிரிழப்புக்களும் மார்ச் மாதத்திலேயே அதிகம் இடம்பெறுவதாக கூறியுள்ளது.

The post பிரிட்டிஸ் கொலம்பியாவுக்கு பனிச் சரிவு எச்சரிக்கை appeared first on Tamil.com.

This posting includes an audio/video/photo media file: Download Now

மார்க்கம் பகுதியில் தீ சம்பவம்: ஆறு பேர் மருத்துவமனையில்

Posted: 16 Mar 2016 08:50 AM PDT

House_fire_-_03162016

House_fire_-_03162016நேற்று மாலை மார்க்கம் பகுதியில் அமைந்துள்ள வீடு ஒன்று தீக்கிரையான சம்பவத்தில் பாதிக்கப்பட்ட ஆறு பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். சம்பவ இடத்திலிருந்து இரண்டு ஆண்கள், ஒரு பெண் ம்றறும் மூன்று சிறுவர்கள் என ஆறு பேர் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதனை காவல்த்துறையினர் உறுதிப்படுத்தியுள்ளனர்.

காயமடைந்த ஆண்களில் ஒருவர் காவல்த்துறை உத்தியோகத்தர் எனவும், சுவாச பிரச்சினை காரணமாக அவர் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்ட நிலையில், மற்றைய ஆண் மோசமான காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

மக்கவுன் வீதி மற்றும் ஸ்டீல்ஸ் அவனியூ பகுதியில், டக்ளஸ் ஹெக் ட்ரைவில் அமைந்துள்ள வீடு ஒன்றில் நேற்று மாலை ஐந்து மணியளிவில் இந்த தீப்பரவல் சம்பவம் இடம்பெற்றுள்ளதாகவும், அத்துடன் அந்த வீட்டில் வெடிப்புச் சம்பவமும் இடம்பெற்றதாகவும் ஆரம்ப கட்ட விசாரணைகளில் இருந்து தெரிய வந்துள்ளது. இந்த தீச் சம்பவத்தினால் பாரிய அளவிலான கரும்புகை மூட்டம் ஏற்பட்டிருந்ததாக அந்த பகுதியைச் சூழவுள்ளவர்கள் தெரிவித்துள்ளனர்.House_fire_-_03162016

சம்பவ இடத்துக்கு விரைந்த மார்க்கம் தீயணைப்பு படையினர்,தீப் பரவரை கட்டுப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டதுடன், பாதுகாப்புக் காரணம் கருதி அருகிலு்ளள வீடுகளில் இருந்தவர்களை வெளியேற்றியிருந்தனர்.

The post மார்க்கம் பகுதியில் தீ சம்பவம்: ஆறு பேர் மருத்துவமனையில் appeared first on Tamil.com.

This posting includes an audio/video/photo media file: Download Now

வெங்காயம் சாப்பிட்டால் இவ்வளவு நன்மைகளா?

Posted: 16 Mar 2016 01:44 AM PDT

po

poஉடலுக்கு ஆரோக்கியம் தரும் வெங்காயத்தை கொண்டு பல்வேறு உணவுகள் தயார் செய்து சாப்பிடலாம்.

வெங்காய சாம்பார், வெங்காய வடகம், வெங்காயச் சட்னி, வெங்காயப் பச்சடி என பல்வேறு வகைகள் உள்ளன.

வெங்காய பச்சடி

வெங்காயத்தைக் குறுக குறுக அறிஞ்சு, அதில் மோர் விட்டுக் கலந்து கொஞ்சம் உப்பு, மிளகு சீரகம் போட்டு தாளிச்சிட்டா வெங்காயப் பச்சடி தயார்.

பகல் உணவில் இதனை சேர்த்து சாப்பிடலாம்.po

பயன்கள்

பொதுவாக வெங்காயம் நச்சுக்கிருமிக் கொல்லியாக உடம்பை மெலிதாக்க குரலை இனிமையாக்கி, விஷக்கடி, குழிப்புண்களைக் கட்டுப்படுத்த பித்தம் தணிய, மூளை சுறுசுறுப்பாக, கால் கை வலிப்பு நோய் நீங்க, கொழுப்புச் சத்தை கரைக்க, வயிற்றுக் கட்டிகளை நீக்க எனப் பல வகையிலும் பயன்படும்.

பக்கவாதம், இரத்தக்குழாய் அடைப்பு நோய்க்கு பச்சை வெங்காயம் முழு பலன் தருவதாக சமீபத்தில் கிங்ஜார்ஜீ மருத்துவக்கல்லூரி ஆராய்ச்சியின் மூலம் தெரியவந்துள்ளது.

அதுமட்டுமல்ல, புகை, பிடிப்பதால் ஏற்படும் நிகோடின் என்னும் நஞ்சினை முறித்து நுரையீரலுக்கும் இதயத்திற்கும் வலிமையை தருகிறது.

இதில் மற்றுமொரு உண்மையாக ரோமானிய நாட்டில் இடைமெலிந்திருக்க பெண்கள் வெங்காயத்தைப் பயன்படுத்துவதாக தெரியவந்துள்ளது.

குறிப்பு

தீவிர இரத்த சோகை இருப்பவர்கள் மட்டும் அதிகளவு வெங்காயத்தை சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும்.kj

The post வெங்காயம் சாப்பிட்டால் இவ்வளவு நன்மைகளா? appeared first on Tamil.com.

This posting includes an audio/video/photo media file: Download Now



Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™