Tamil Star |
- இணைத் தாக்குதலை எதிர்கொண்ட ஒட்டாவா மருத்துவமனை
- ஆரோக்கிய உணவுகளில் ஒளிந்திருக்கும் ஆபத்துகள்
- அதிகாலையில் இரு வேறு கத்திக்குத்துச் சம்பவங்கள் – ஒருவர் தடுத்து வைப்பு
- வீதி விபத்துக்களில் மாத்திரம் 300 பேர் பலி
- ஐ.எஸ் இல் இணய முயன்ற கியூபெக் நபர் கைது
| இணைத் தாக்குதலை எதிர்கொண்ட ஒட்டாவா மருத்துவமனை Posted: 13 Mar 2016 11:12 PM PDT
மருத்துவமனை நிர்வாகம் இது தொடர்பில் நேற்று சனிக்கிழமை தகவல் வெளியிட்டுள்ளது. நான்கு மருத்துவமனைகளின் 9,800 கணனிகள் இந்த இணையத் தாக்குதலை எதிர்கொண்டிருந்தன என்றும் அது தெரிவித்திருந்தது. ஆனால் நோயாளிகளின் தகவல்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்படவில்லை என்றும் மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது. The post இணைத் தாக்குதலை எதிர்கொண்ட ஒட்டாவா மருத்துவமனை appeared first on Tamil.com. This posting includes an audio/video/photo media file: Download Now |
| ஆரோக்கிய உணவுகளில் ஒளிந்திருக்கும் ஆபத்துகள் Posted: 13 Mar 2016 06:50 PM PDT
ஆரோக்கியமான உணவுகள் என நாம் நினைக்கும் அந்த உணவுகளே நமக்கு பிரச்சனைகளை ஏற்படுத்தினால்? ஆம், நாம் உட்கொள்ளும் சில ஆரோக்கியமான உணவுகளில் கூட சிறு, சிறு குறைகள் இருக்கத்தான் செய்கின்றன. பாதாம் பால் பாதாம் பால் அருந்துவது உடலுக்கு நல்லது தானே என்று நீங்கள் நினைக்கலாம். பாதாம் பாலில் ஏராளமான சத்துக்கள் அடங்கியுள்ளன என்பது உண்மை தான். ஆனால் பெரும்பாலான பாதாம்பாலில் கடற்பாசியில் இருந்து எடுக்கப்பட்ட Carrageenan என்ற பொருள் கலக்கப்படுகின்றன. இது செரிமான பிரச்சனையை ஏற்படுத்தும் என மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர். கிரீன் டீ காபி, டீ, அருந்துவது தான் உடலுக்கு கேடு, கிரீன் டீ அருந்துவது உடலுக்கு நல்லதுதான் என நீங்கள் கூறலாம். கிரீன் டீயில் புற்றுநோயை கட்டுப்படுத்தக்கூடிய பொருட்கள் அடங்கியுள்ளன என்பது மறுப்பதற்கு இல்லை. ஆனால் கீரின் டீயில் உள்ள காபின்கள் ஒரு சிலருக்கு வயிற்று பிரச்சனையை ஏற்படுத்தும். காய்கறிகள் ப்ராக்கோலி, காலிப்ஃபிளவர், கீரைகள் போன்றவை சிறந்த சத்துகள் நிறைந்தவை. அன்றாட உணவுகளில் தவிர்க்க கூடாதும் ஆகும். எனினும் இந்த காய்கறிகளில் எளிதில் ஜீரணமாகாத Raffinose என்ற சர்க்கரை அடங்கியுள்ளது. இது வாயு தொல்லையை ஏற்படுத்தும். இதற்கு சிறந்த வழி அந்த காய்கறிகளை வேக வைத்து சாப்பிடுவதுதான். காய்ந்த பழங்கள் தீரட்சை, பேரித்தம் பழம் உள்ளிட்ட பழங்களில் ஏராளமான சக்கரை நிறைந்துள்ளன. இந்த பழங்கள் காய்ந்த பின்னர் அவற்றில் உள்ள சர்க்கரையின் அளவு மேலும் அதிகரிக்கும் எனவே காய்ந்த பழங்களை உட்கொள்ளுவதால் குடலில் சர்க்கரை அதிகமாக சேரும். இதனால் வாயு தொல்லை ஏற்படும். ஆப்பிள் ஆப்பிளை தினமும் உண்பது நோய் ஏற்படாமல் தடுக்க உதவும் என்று கூறுவர். ஆனால் ஆப்பிளை எதனுடன் உண்ணுகிறோம் என்பது மிக முக்கியம் ஆப்பிளை தனியாக சாப்பிடுவதே சிறந்தது. உணவுடன் ஆப்பிளை உட்கொள்ளுவது வீக்கத்தை ஏற்படுத்தும் என்று மருத்துவர்கள் கூறுகின்றனர். சோளம் சோளத்தில் வைட்டமின் சி, பாஸ்பரஸ், மற்றும் மெக்னீசியம் ஆகியவைகள் அதிகமாக உள்ளன. எனினும் இவற்றை அளவுடனேயே உட்கொள்ளவேண்டும். சோளத்தில் உள்ள செல்லுலோஸ் என்ற நார்ப்பொருள் எளிதில் ஜீரணமாகாது என்பதால் சில இடர்பாடு ஏற்படக்கூடும். சிவப்பு இறைச்சி மாட்டுக்கறி, பன்றிக்கறி உள்ளிட்டவைகள் சிவப்பு இறைச்சி என்று அழைக்கப்படுகின்றன. இவற்றில் கொழுப்பு அதிகமாக உள்ளது. இத்தகைய கொழுப்புகள் ப்ரோட்டீன் மற்றும் கார்போஹைத்ரேட்டை விட அதிக நேரம் ஜீரணமாகாமல் வயிற்றில் இருக்கும். சில நேரங்களில் அந்த கொழுப்பு நமது குடலுக்கு செல்வதால் வயிறு வீங்கியது போல் தோன்றும். எனவே எந்த உணவாக இருந்தாலும் சரி, அதனை சரியான முறையில் உட்கொள்வதுதான் நமது உடல் நிலையை சீராகவைத்திருக்கும். The post ஆரோக்கிய உணவுகளில் ஒளிந்திருக்கும் ஆபத்துகள் appeared first on Tamil.com. This posting includes an audio/video/photo media file: Download Now |
| அதிகாலையில் இரு வேறு கத்திக்குத்துச் சம்பவங்கள் – ஒருவர் தடுத்து வைப்பு Posted: 13 Mar 2016 09:17 AM PDT
Bloor வீதி மற்றும் Madison Avenue பகுதியில் அதிகாலை 3.15 மணியளவில் இந்த சண்டை தொடங்கியதாக காவல்த்துறையினர் தகவல் வெளியிட்டுள்ளனர். இரண்டு நபர்கள் கத்திக்குத்துக் காயங்களுடன் ஆபத்தான நிலையில் மருத்தவமனைக்கு கொண்டு செல்லப்பட்டிருந்தனர் என்றும், மூன்றாவது நபருக்கு சிறிய காயம் ஏற்பட்டிருந்தது என்றும் அவசர மருத்துவப் பிரிவினர் தெரிவித்துள்ளனர். இந்த கத்திக்குத்துச் சம்பவம் தொடர்பில் யாருக்கேனும் தகவல் தெரிந்தால் காவல்த்துறையினரை அல்லது குற்றத் தடுப்புப் பிரிவினரை தொடர்புகொள்ளுமாறும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. இதேவேளை Roncesvalles Village பகுதியிலும் இன்று அதிகாலை 4 மணியளவில் கத்திக்குத்துச் சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. இந்த கத்திக்குத்துச் சம்பவத்தில் ஆண் நபர் ஒருவர் காயமடைந்துள்ள நிலையில், கத்திக்குத்தை மேற்கொண்டதாக சந்தேகிக்கப்படும் பெண் ஒருவர் தடுத்து வைக்கப்பட்டுள்ளார். The post அதிகாலையில் இரு வேறு கத்திக்குத்துச் சம்பவங்கள் – ஒருவர் தடுத்து வைப்பு appeared first on Tamil.com. This posting includes an audio/video/photo media file: Download Now |
| வீதி விபத்துக்களில் மாத்திரம் 300 பேர் பலி Posted: 13 Mar 2016 09:10 AM PDT
260 பாரதூரமான வீதி விபத்துக்கள் இடம்பெற்றுள்ளதாகவும், அவற்றில் 299 பேர் உயிரிழந்துள்ளதாகவும் தெரியவருகிறது. அதேவேளை இந்த உயிரிழப்புகளுக்கு காரணமான விபத்துக்களில் அனேகமானவை தவிர்க்கப்பட்டிருக்க கூடியவை என ஒன்ராறியோ மாகாண நெடுஞ்சாலை பாதுகாப்பு காவல்த்துறை அதிகாரிகளுள் ஒருவர் தெரிவித்துள்ளார். இனிமேலும் நெடுஞ்சாலைகளில் எவரும் உயிரிழப்பதனை காண தாம் விரும்பவில்லை என்றும் அவர் கருத்துக் கூறியுள்ளார். கடந்த ஆண்டு இடம்பெற்ற விபத்துக்களின் தரவு ஒன்றையும் அவர் வெளியிட்டிருந்தார். அதில், 1. விதிமுறைகளுக்கு முரணாக வாகனத்தினை செலுத்திச் சென்றமையல் 69 உயிரிழப்புக்கள். 2. அதி வேகமாக வாகனத்தினை செலுத்திச சென்றமையால் 61 உயிரிழப்புக்கள். 3. ஆசனப்பட்டி அணியாமையால் 51 உயிரிழப்புக்கள். 4.போதைப்பொருள் மற்றும் மதுபோதை காரணமாக 45 உயிரிழப்புக்கள். - ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை சுவீடனில் கையாளப்படும் வீதி பாதுகாப்பு நடைமுறை ஒன்றினை கனடாவிலும் நடைமுறைப்படுத்தி, வீதி விபத்துக்களை முற்றாக தவிர்க்கும் முயற்சிகளை பராசூட் கனடா எனப்படும் நிறுவனம் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது. The post வீதி விபத்துக்களில் மாத்திரம் 300 பேர் பலி appeared first on Tamil.com. This posting includes an audio/video/photo media file: Download Now |
| ஐ.எஸ் இல் இணய முயன்ற கியூபெக் நபர் கைது Posted: 13 Mar 2016 09:02 AM PDT
28 வயதான இஸ்மெயில் ஹபீப் என்பவரே காவல்த்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளதுடன், அவர் மீது குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டு மொன்றியல் நீதிமன்றில் முற்படுத்தப்பட்டுள்ளார். ஒட்டாவா பகுதியில் வேறு ஒரு குற்றச்சாட்டு தொடர்பில் இந்த நபர் கைது செய்யப்பட்டு விசாரணைகளுக்கு உட்படுத்தப்பட்டிருந்த போதே, இந்த விடயம் வெளிச்சத்திற்கு வந்துள்ளதாக அரத தரப்பு வழக்குரைஞர் தெரிவித்துள்ளார். குடும்பத் தகராறு ஒன்றில் ஈடுபட்டு தாக்குதல் நடாத்திய குற்றச்சாட்டின் பேரிலேயே அவர் மீதான விசாரணைகளை காவல்த்துறையினர் ஆரம்பித்ததாகவும், அதன்போது அவர் போலியான ஆவணங்களை வைத்திருந்தமை கண்டுபிடிக்கப்பட்டதாகவும் அவர் தகவல் வெளியிட்டுள்ளார். இத்தகைய பயங்கரவாத செயற்பாடுகளில் ஈடுபடுவதற்காக நாட்டினை விட்டு வெளியேறுவதை குற்றச்செயலாக கருதும் சட்டம் கடந்த 2013ஆம் ஆண்டில் குற்றவியல் சட்டத்தில் இணைத்துக் கொள்ளப்பட்டதாகவும், இந்த குற்றச்சாட்டின்கீழ் கைதாகும் ஒருவருக்கு பத்து ஆண்டுகள் வரையில் சிறைத்தண்டனை விதிக்கப்பட முடியும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். கைதான அந்த நபரின் பிணை கோரிக்கையை நீதிமன்றம் ஏற்க மறுத்துள்ளது. பயங்கரவாதம் தொடர்பிலான குற்றச்சாட்டு என்ற காரணத்தினால் பிணைக் கோரிக்கையினை நீதிபதி நிராகரித்துள்ளார் என்பதுடன், அவர் மீதான அடுத்த கட்ட நீதிமன்ற விசாரணயினை எதிர்வரும் திங்கட்கிழமைக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. The post ஐ.எஸ் இல் இணய முயன்ற கியூபெக் நபர் கைது appeared first on Tamil.com. This posting includes an audio/video/photo media file: Download Now |
| You are subscribed to email updates from Tamil.com. To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States | |

தமது மருத்துவமனை கடந்த வாரத்தில் இணைத் தாக்குதலை எதிர்கொண்டதாக ஒட்டாவா மருத்துவமனை தெரிவித்துள்ளது.
உடல் நலமுடனும் வளமுடனும் இருக்க வேண்டும் என்பதற்காக ஆரோக்கியமான உணவுகளை நாம் தேடி தேடி உண்டு வருகிறோம்.



