Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Tamil News | Online Tamil News

Tamil News | Online Tamil News


ஆயுதங்களுக்கு அன்னிய தேசத்தை நாடிய காலம் மாறும்: உள்நாட்டு உற்பத்தியை ஊக்குவிக்க புது கொள்கை

Posted: 28 Mar 2016 09:31 AM PDT

பனாஜி;இந்திய ராணுவத்துக்கான ஆயுதங்களுக்கு, வெளிநாடுகளை சார்ந்திருக்கும் நிலையை மாற்றி, 'இந்தியாவில் தயாரிப்போம்' திட்டத்தின் கீழ், உள்நாட்டு உற்பத்தியாளர்களை ஊக்குவிக்கும் வகையில், புதிய ராணுவ கொள்முதல் கொள்கையை, ராணுவ அமைச்சர் மனோகர் பாரிக்கர், நேற்று வெளியிட்டார்.கோவா தலைநகர் பனாஜியில் இருந்து, 50 கி.மீ., துாரத்தில் உள்ள பெடுல் - நாக்ரி எனும் கிராமத்தில், ராணுவ கண்காட்சி, இன்று துவங்கி, நான்கு நாட்களுக்கு நடக்கிறது. 47 நாடுகளைச் சேர்ந்த, 1,000 நிறுவனங்கள் பங்கேற்கும் இந்த கண்காட்சியை, ராணுவ அமைச்சர் மனோகர் பாரிக்கர் நேற்று துவக்கி வைத்தார்; அதேபோல, ...

'குற்றத்தை ஆதரித்து பேசாதீர்!'கட்சிகளுக்கு கமிஷன் எச்சரிக்கை

Posted: 28 Mar 2016 10:15 AM PDT

'ஓட்டுக்கு பணம் வாங்கிக் கொள்ளுங்கள் என்பது போன்ற, குற்றத்தை ஆதரிக்கும் விதத்தில், யாரும் பேசக்கூடாது' என, தமிழக தலைமை தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி தெரிவித்தார். இதுகுறித்து, அவர் கூறியதாவது:சட்டசபை தேர்தலில், 100 சதவீதம் ஓட்டுப்பதிவு நடைபெறவேண்டும் என்பதற்காக, '100 சதவீதம் நேர்மை; 100 சதவீதம் ஓட்டு' என, விளம்பரம் செய்து வருகிறோம். ஓட்டுக்கு பணம் வாங்குவதும், பணம் கொடுப்பதும் குற்றம். எனவே, 'ஓட்டுக்கு பணம் வாங்கிக் கொள்ளுங்கள்' என்று, குற்றத்தை ஆதரித்து யாரும் பேசக்கூடாது.

தமிழகம் முழுவதும், வாக்காளர் சேவை மையங்களில், வண்ண புகைப்பட அடையாள ...

அரசியல்வாதிகள் கைங்கரியம்:ரூ.100 நோட்டுக்கு தட்டுப்பாடு!

Posted: 28 Mar 2016 10:22 AM PDT

சட்டசபை தேர்தலுக்கு, ஓட்டுக்கு பணம் கொடுப்பதற்காக, 100 ரூபாய் நோட்டுக்களை, வங்கிகளிலிருந்து பெறுவதில் அரசியல்வாதிகள் தீவிரம் காட்டுகின்றனர்.இதனால், பொதுமக்கள் அவதிக்குள்ளாகி உள்ளனர்.ஓட்டு கேட்டு வரும் கட்சி தொண்டர்கள், பிரசாரத்தின் போது ஆரத்தி எடுப்போர், குழந்தைக்கு பெயர் சூட்டுதல் என, அனைத்திற்கும், வேட்பாளர்கள் சார்பில்பணம் கொடுப்பர். இவற்றிற்கு, 100 ரூபாய் நோட்டுக்களே அதிகம் தேவைப்படும்.

அரசியல்வாதிகள், 100 ரூபாய் நோட்டு கட்டுக்களை, வங்கிகளிடமிருந்து பெற்று, இருப்பில் வைக்க ஆர்வம் காட்டுகின்றனர். பிரசாரம்துவங்குவதற்கு முன், இதில் ...

ஆபாச இணையதளங்களுக்கு தடையா? ஆலோசனை அளிக்க அரசுக்கு அவகாசம்

Posted: 28 Mar 2016 10:49 AM PDT

புதுடில்லி:குழந்தைகளை வைத்து எடுக்கப்படும் ஆபாச படங்கள் இடம்பெறும் இணையதளங்களுக்கு தடை விதிப்பது தொடர்பாக ஆலோசனை அளிக்க, மத்திய அரசுக்கு, சுப்ரீம் கோர்ட், இரண்டு வார அவகாசம் தந்துள்ளது.ஆபாச இணையதளங்களுக்கு தடை விதிக்க வேண்டு மென்ற கோரிக்கை வலுத்ததை அடுத்து, மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டுமென, சுப்ரீம் கோர்ட் கருத்து தெரிவித்தது. இதையடுத்து, 857 ஆபாச இணையதளங்களுக்கு தடை விதிக்கப்பட்டது. ஆனால், இத்தடைக்கு, நாடு முழுவதும் கடும் எதிர்ப்பு கிளம்பியது. 'இது, பொதுமக்களின் படுக்கை அறைக்குள் நுழைந்து பார்க்கும் வேலை' என, பலதரப்பினர் கருத்து ...

தென் மாவட்ட தேர்தல் பொறுப்பாளர் கனிமொழி?

Posted: 28 Mar 2016 10:52 AM PDT

தென் மாவட்டங்களில், தேர்தல் பணிகளை கவனிக்க, கனிமொழியை பொறுப்பாளராக நியமிக்க, கருணாநிதி திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.தி.மு.க., தென் மண்டல அமைப்பு செயலராக நியமிக்கப்பட்டு, தென் மாவட்டங்களில் கட்சியின் தளபதியாக வலம் வந்தவர் மு.க.அழகிரி. அவர் கட்சியில் இருந்து நீக்கப்பட்டதும், தென் மாவட்டங்களில், கட்சியின் செயல்பாடுகள் வேகம் இல்லாமலேயே இருந்து வந்தன.

'நமக்கு நாமே':
'நமக்கு நாமே' திட்டம் உள்ளிட்ட பல்வேறு சுற்றுப் பயணங்களை கட்சியின் பொருளாளர் மு.க.ஸ்டாலின், தென் மாவட்டங்களில் மேற்கொண்டிருந்தாலும், அவரால், எதிர்பார்த்த அளவுக்கு, தென் ...

இந்திய விமானப்படை ரொம்ப 'வீக்'

Posted: 28 Mar 2016 10:55 AM PDT

வாஷிங்டன்:சீனா மற்றும் பாகிஸ்தானை ஒப்பிடும் போது, இந்திய விமானப்படை, பலம் குன்றி நெருக்கடிக்கு ஆளாகியிருப்பதாக, அமெரிக்க ராணுவ ஆய்வு நிபுணர் கூறியுள்ளார். இந்தியா உள்ளிட்ட தெற்காசிய நாடுகளுக்கான, ராணுவம் தொடர்பான ஆராய்ச்சி நிபுணரான, ஆஷ்லே டெலிஸ் கூறியதாவது:கடந்த, ௧௯௭௫ல் இருந்தே, சீனா, விமானப்படையை மிகப்பெரிய அளவில் நவீனப்படுத்தி வருகிறது.சமீபகாலமாக, பாகிஸ்தானும், தன் விமானப்படையில், நவீன விமானங்களை சேர்த்து வருகிறது. இவ்விரு நாடுகளையும் ஒப்பிடும் போது, இந்திய விமானப்படையின் பலம் குன்றியே உள்ளது. பழைய ரஷ்ய விமானங்கள் தான், அதிக அளவில், ...

உத்தரகண்ட் அரசை கலைக்க அவசரம் ஏன்? மோடிக்கு கருணாநிதி கேள்வி

Posted: 28 Mar 2016 10:57 AM PDT

சென்னை: 'அவசரம் அவசரமாக, 356வது சட்டப் பிரிவை பயன்படுத்தி, உத்தரகண்ட் மாநில அரசை கலைக்க வேண்டிய அவசியம் என்ன?' என, தி.மு.க., தலைவர் கருணாநிதி கேள்வி எழுப்பியுள்ளார். அவரது அறிக்கை:மத்திய அமைச்சரவை பரிந்துரைப்படி, உத்தரகண்ட் மாநிலத்தில், ஜனாதிபதி ஆட்சி அமல் செய்யப்பட்டுள்ளது. மார்ச், 18ல், விஜய் பகுகுணா தலைமையில், ஒன்பது எம்.எல்.ஏ.,க்கள் அரசுக்கு எதிராக போர்க்கொடி உயர்த்தி, நிதிநிலை அறிக்கை மீது ஓட்டெடுப்பு நடத்த வேண்டும் என, சட்டசபையில் வலியுறுத்தினர். இதை நிராகரித்த சபாநாயகர், குரல் ஓட்டெடுப்பு மூலம் நிதிநிலை அறிக்கை நிறைவேற்றப்பட்டதாக ...

தேர்தல் பந்தயத்தில் முந்தும் குதிரை எது?

Posted: 28 Mar 2016 10:59 AM PDT

தேர்தல் களத்தில், ஐந்து அணிகள் மோதுவது உறுதியாகி உள்ள நிலையில், அதில் வெற்றிக் கோட்டை நோக்கி முந்திச் செல்லும் அணி, எதுவாக இருக்கும் என்ற விவாதம் கிளம்பி உள்ளது.தற்போதைய கணக்குபடி, சட்ட சபை தேர்தலில், ஐந்துமுனை போட்டி ஏற்படுவதற்கு வாய்ப்புகள் அதிகரித்து உள்ளன. ஜெயலலிதா தலைமையில், அ.தி.மு.க., முதல் அணியாகவும், கருணாநிதி தலைமையில், தி.மு.க., -- -காங்., கூட்டணி இரண்டாவது அணியாகவும், தே.மு.தி.க.,- - மக்கள் நலக் கூட்டணி இணைந்துள்ள விஜயகாந்த் அணி, மூன்றாவது அணியாகவும் களத்தில் நிற்கின்றன.

தனித்தனி அணிகள்:
இந்த மூன்று முக்கிய அணிகள் தவிர்த்து, பா.ஜ., ...

அ.தி.மு.க.,வை திரைமறைவில் ஆட்டுவிக்க உருவானது புது அணி: ஐவர் அணியில் குழப்பத்தை ஏற்படுத்தியதன் பின்னணி

Posted: 28 Mar 2016 11:08 AM PDT

அ.தி.மு.க.,வில், முதல்வர் ஜெயலலிதாவுக்கு அடுத்த நிலையில் இருந்த, ஐவர் அணியில் குழப்பத்தை ஏற்படுத்தியதன் பின்னணி வெளிச்சத்துக்கு வந்துள்ளது. ஐவர் அணியில் இருந்து, மூவரை வீழ்த்திய அந்த அணி, அ.தி.மு.க.,வை திரைமறைவில் இருந்து ஆட்டுவிக்கும் சக்தியாக உருவெடுத்துள்ளதாகக் கூறப்படுகிறது.மூத்த அமைச்சர்களான ஓ.பன்னீர்செல்வம், நத்தம் விஸ்வநாதன், வைத்திலிங்கம், எடப்பாடி பழனிசாமி மற்றும் பழனியப்பன் ஆகியோரைக் கொண்ட, ஐவர் அணி தான், கட்சி மற்றும் ஆட்சியில் முக்கிய முடிவுகளை எடுக்க, முதல்வர் ஜெயலலிதாவுக்கு உறுதுணையாக இருந்தது. தேர்தல் நெருங்கும் நேரத்தில், இந்த ...

பெல்ஜியத்தில் மாயமான சென்னை இளைஞர் பலி

Posted: 28 Mar 2016 12:12 PM PDT

புதுடில்லி : பெல்ஜியம் தலைநகர் பிரஸல்சில், விமான நிலையத்திலும், மெட்ரோ ரயில் நிலையங்களிலும், சமீபத்தில், ஐ.எஸ்., பயங்கரவாதிகள் தற்கொலைப்படை தாக்குதல் நடத்தினர். இதில், 35 பேர் கொல்லப்பட்டனர்.இந்த குண்டுவெடிப்புக்கு பின், ராகவேந்திர கணேஷ், 31, என்ற கம்ப்யூட்டர் இன்ஜினியர், மாயமானதாக தகவல் வெளியானது.சென்னையைப் பூர்வீகமாகக் கொண்ட ராகவேந்திராவின் குடும்பத்தினர், மும்பையில் வசித்து வருகின்றனர். ராகவேந்திரா, 'இன்போசிஸ்' நிறுவனத்தின் சார்பில், பெல்ஜியத்தில் பணியாற்றுவதற்காக சென்றார்.மாயமான அவரை தேடும் பணி நடப்பதாக, வெளியுறவு அமைச்சக அதிகாரிகள் ...



Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™