Tamil News | Online Tamil News |
- பியூஸ் போன தமிழகம்
- விஜயகாந்த் அணியா... ம.ந.கூட்டணியா...கேள்வி! பஞ்ச பாண்டவர் அணியில் குழப்பம்
- அழகிரி எதிர்ப்பாளர்கள் கருணாநிதி எச்சரிக்கை
- வங்கி பணத்தை மோசடி செய்தோர்தப்ப முடியாது:அசாமில் பிரதமர் மோடி திட்டவட்டம்
- 234 தொகுதிகளிலும் இரட்டை இலை:த.மா.கா.,வுக்கு கதவடைப்பு?
- 170 தொகுதிகளில் போட்டியிட தி.மு.க., முடிவு! கூட்டணி கட்சிகளுக்கு 64 மட்டுமே
- தகவல் தொழில்நுட்பங்களை புகுத்தும் தேர்தல் கமிஷன்
- அ.தி.மு.க., நேர்காணலில் குழப்பம்:ஐவரணி 'உள்ளடி' வேலை காரணமா?
- ஸ்டாலின் வீட்டில் ரகசிய ஆலோசனை
| Posted: 27 Mar 2016 07:43 AM PDT 'அப்பாடா இப்போதாவது ஒருத்தர் உண்மையை போட்டு உடைத்தாரே!' என்ற நிம்மதி, திரைமறைவில் இருந்து ஆட்சி செய்யும் முதல்வராலும், 'டம்மி' அமைச்சர்களாலும் பாதிக்கப்பட்டவர்களிடம், உருவாகி உள்ளது. நேற்று முன்தினம், டில்லியில், சி.ஐ.ஐ., எனப்படும் இந்திய தொழில் துறை கூட்டமைப்பு நடத்திய, 'யங் இந்தியா' மாநாட்டில், மத்திய மின் துறை அமைச்சர் பீயுஷ் கோயல், '28 மாநில முதல்வர்களை சந்தித்துவிட்டேன்; தமிழக முதல்வரை மட்டும் சந்திக்கவே முடியவில்லை. பல முறை முயற்சி செய்த பின், அவரிடம் இருந்து, ஒரு தொலைபேசி அழைப்பு தான் வந்தது' என்று குமுறினார். தமிழகத்தில், முதல்வர், ... |
| விஜயகாந்த் அணியா... ம.ந.கூட்டணியா...கேள்வி! பஞ்ச பாண்டவர் அணியில் குழப்பம் Posted: 27 Mar 2016 11:05 AM PDT ஐந்து கட்சிகள் இடம்பெற்ற பஞ்ச பாண்டவர் அணியில் பெயர் குழப்பம் ஏற்பட்டுள்ளது. தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்த், முதல்வர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டு உள்ளதை அடுத்து இது 'விஜயகாந்த் அணியா... அல்லது மக்கள் நலக் கூட்டணியா...?' என்ற கேள்வி எழுந்துள்ளது. மக்கள் நலக் கூட்டணியும் தே.மு.தி.க.,வும் தேர்தல் உடன்பாடு செய்துள்ளன. அதன்படி விஜயகாந்த் முதல்வர் வேட்பாளர் என்றும் தே.மு.தி.க.,வுக்கு 124 தொகுதிகள் என்றும் அறிவிக்கப்பட்டது. மக்கள் நலக் கூட்டணிக்கு 110 தொகுதிகள் என முடிவானது.சென்னை கோயம்போட்டில் உள்ள தே.மு.தி.க., அலுவலகத்தில் நடந்த இந்நிகழ்ச்சியில் விஜயகாந்த், ... |
| அழகிரி எதிர்ப்பாளர்கள் கருணாநிதி எச்சரிக்கை Posted: 27 Mar 2016 11:16 AM PDT சென்னை:அழகிரி எதிர்ப்பாளர்களுக்கு கருணாநிதி எச்சரிக்கை விடுத்துள்ளார்.கடந்த லோக்சபா தேர்தல் முடிந்ததும், தி.மு.க.,வுக்கு எதிராக கருத்து தெரிவித்த மு.க.அழகிரி, கட்சியில் இருந்து நீக்கப்பட்டார். ஒரு கட்டத்தில் கருணாநிதி, 'அழகிரி எனக்கு மகனே இல்லை' என, ஆவேசமாக அறிவித்தார்.சமீபத்தில் அமைந்த காங்., - தி.மு.க., கூட்டணியையும் அழகிரி கடுமையாக விமர்சித்தார். இதற்கும் கருணாநிதி கடும் கண்டனம் தெரிவித்தார்.இந்நிலையில், கடந்த மாதம் கோபாலபுரம் வந்த அழகிரி, தன் தாய் தயாளுவை ... |
| வங்கி பணத்தை மோசடி செய்தோர்தப்ப முடியாது:அசாமில் பிரதமர் மோடி திட்டவட்டம் Posted: 27 Mar 2016 12:08 PM PDT ரங்கபாரா:''வசதி படைத்தவர்கள், வங்கி பணத்தை சுருட்டி விட்டு தப்பிச் செல்ல, முந்தைய காங்கிரஸ் அரசு அனுமதித்தது. ஆனால், அப்படிபட்டவர்கள் தப்பிச் செல்ல, என் அரசு அனுமதிக்காது,'' என, பிரதமர் நரேந்திர மோடி கூறினார். எஸ்.பி.ஐ., உட்பட, 17 வங்கிகளுக்கு, 9,000 கோடி ரூபாய் கடன் பாக்கி வைத்து உள்ளதாக குற்றம் சாட்டப்பட்ட, தொழில் அதிபர் விஜய் மல்லையா, பிரிட்டன் தலைநகர் லண்டனுக்கு தப்பிச் சென்று விட்டார்.அவருக்கு எதிராக, பல்வேறு கோர்ட்டுகளில் வழக்குகள் நடைபெற்று வருகின்றன. விஜய் மல்லையா தப்பிச் செல்வதை ... |
| 234 தொகுதிகளிலும் இரட்டை இலை:த.மா.கா.,வுக்கு கதவடைப்பு? Posted: 27 Mar 2016 12:31 PM PDT கூட்டணியின் சிறிய கட்சி வேட்பாளர்களை, இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட வைத்து, 234 சட்டசபை தொகுதிகளிலும், அ.தி.மு.க., வேட்பாளர்களை, களம் இறக்குவது குறித்து, அ.தி.மு.க., ஆலோசித்து வருவது, தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியினரிடம், கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.கடந்த, 2014 லோக்சபா தேர்தலில், அ.தி.மு.க., தனித்து போட்டியிட்டு, 37 தொகுதிகளை கைப்பற்றி சாதனை படைத்தது. அதேபோல், சட்டசபை தேர்தலிலும் களம் இறங்கும் என, எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், தி.மு.க., தலைமையில் பலமான கூட்டணி அமைந்தால், தனித்து போட்டியிட ... |
| 170 தொகுதிகளில் போட்டியிட தி.மு.க., முடிவு! கூட்டணி கட்சிகளுக்கு 64 மட்டுமே Posted: 27 Mar 2016 12:35 PM PDT தி.மு.க., கூட்டணியில், காங்கிரஸ், இந்திய யூனியன் முஸ்லிம் லீக், மனிதநேய மக்கள் கட்சி, எஸ்.டி.பி.ஐ., உட்பட சில கட்சிகள் உள்ளன. இவற்றில், இந்திய யூனியன் முஸ்லிம் லீக், மனிதநேய மக்கள் கட்சிக்கு, தலா, ஐந்து இடங்கள் என, 10 இடங்கள் ஒதுக்கப்பட்டுவிட்டன. அதிக இடங்கள்:புதிய தமிழகம் கட்சியுடன், பேச்சு நடந்து வருகிறது. எஸ்.டி.பி.ஐ., கட்சிக்கும் இடம் ஒதுக்கப்பட வேண்டும். இந்தக் கட்சிகளை தவிர, வேறு கட்சிகள் எதுவும், தி.மு.க., கூட்டணிக்கு வருவதாக தெரிய வில்லை. தே.மு.தி.க., வராமல் போனதால், அதிக இடங்களில் போட்டியிட, தி.மு.க.,வுக்கு வாய்ப்பு ... |
| தகவல் தொழில்நுட்பங்களை புகுத்தும் தேர்தல் கமிஷன் Posted: 27 Mar 2016 12:37 PM PDT தேர்தல் நடத்தை விதிகளை அமல்படுத்தவும், தேர்தலுக்கான ஏற்பாடுகளை செய்யவும், மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தவும், தகவல் தொழில்நுட்பத்தை, அதிக அளவில் பயன்படுத்தும்படி, மாநில தலைமை தேர்தல் அதிகாரிகளுக்கு, தேர்தல் கமிஷன் உத்தரவிட்டுள்ளது. தனிப்பெயர்:அதன்படி, தேர்தல் கமிஷன் பல்வேறு, 'மொபைல் ஆப்'களை உருவாக்கி உள்ளது. பல பணிகளை, 'ஆன்லைன்' மூலம் செயல்படுத்துகிறது. இவற்றுக்கு, தனி பெயர் சூட்டப் பட்டுள்ளது. அவற்றின் விவரம்:சமாதான்: பொது மக்கள் தேர்தல் தொடர்பான ... |
| அ.தி.மு.க., நேர்காணலில் குழப்பம்:ஐவரணி 'உள்ளடி' வேலை காரணமா? Posted: 27 Mar 2016 12:43 PM PDT அ.தி.மு.க.,வில், நேர்காணலுக்கு அழைக்கப்பட்டவர்களில், பெரும்பாலானோர் ஓரம் கட்டப்பட்ட அமைச்சர்களின் ஆதரவாளர்களாக இருப்பதால், கட்சித் தொண்டர்கள் மற்றும் நிர்வாகிகள் மத்தியில், ஒரு விதமான குழப்பம் உருவாகி உள்ளது. ஐவரணியினர் மற்றும் மா.செ.,க்களின் உள்ளடி வேலைகளே இதற்கு காரணம் என்றும் கூறுகின்றனர்.அ.தி.மு.க.,வில், இம்மாதம், 21ம் தேதி முதல், நேர்காணல் நடந்து வருகிறது. ஒவ்வொரு தொகுதிக்கும், இரண்டு அல்லது மூன்று பேர் அழைக்கப்படுகின்றனர். சில தொகுதிகளுக்கு ஒருவர் மட்டுமே அழைக்கப்பட்டுள்ளார். நேர்காணலுக்கு அழைக்கப்பட்ட பலர், ... |
| ஸ்டாலின் வீட்டில் ரகசிய ஆலோசனை Posted: 27 Mar 2016 12:49 PM PDT தே.மு.தி.க., எம்.எல்.ஏ., க்கள் 3 பேர், நேற்று முன்தினம் தி.மு.க., பொருளாளர் ஸ்டாலின் வீட்டில் சந்தித்து, ரகசிய ஆலோசனை நடத்தியதாக, கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன.சென்னை ஆழ்வார்பேட்டை சித்தரஞ்சன் சாலையில் உள்ள ஸ்டாலின் வீட்டில், நேற்று முன்தினம் இரவில் தே.மு.தி.க., - எம்.எல்.ஏ.,க்கள் மூன்று பேர் வந்தனர் என்றும், அவர்கள் ஸ்டாலினை ரகசியமாக சந்தித்து பேசிவிட்டு சென்றதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. , இது குறித்து, தி.மு.க., ... |
| You are subscribed to email updates from Dinamalar.com |மார்ச் 28,2016. To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States | |