Tamil News | Online Tamil News |
- இதயம் இனித்தது, கண்கள் பனித்தன-2
- தி.மு.க., விரிக்கும் வலையில் பா.ம.க.,சிக்குமா? கூட்டணிக்கு கருணாநிதி கடைசி முயற்சி
- ஓட்டுக்கு பணம் கொடுப்பதை தடுக்கபுது சட்டம்:மத்திய அரசுக்கு ஐகோர்ட் அதிரடி உத்தரவு
- மல்லையாவின் சொகுசு விமானம்:சேவை வரி பாக்கிக்காக ஏலம்
- பால் தாக்கரேவுக்கு குறி வைத்தது லஷ்கர் பயங்கரவாதி ஹெட்லி 'திடுக்' தகவல்
- ம.ந.கூட்டணியின் 2ம் கட்ட தலைவர்கள் கொதிப்பு
- ஐவர் அணியில் மாற்றம்: அ.தி.மு.க.,வில் பரபரப்பு
- பிரதமர் மோடி, சானியாவுக்கு 'டைம்' பத்திரிகையில் கவுரவம்
- ஜம்மு - காஷ்மீர் முதல்வராகிறார் மெஹபூபா:கட்சியின் சட்டசபை தலைவராக தேர்வு
- பிரஸல்ஸ் தாக்குதலில் மேலும் ஒரு பயங்கரவாதியா?
| இதயம் இனித்தது, கண்கள் பனித்தன-2 Posted: 24 Mar 2016 08:09 AM PDT நேற்று, தி.மு.க.,வில், 'இதயம் இனித்தது, கண்கள் பனித்தன' படத்தின் இரண்டாம் பாகம் ரிலீஸ் ஆனது. குடும்ப கதையான இதை, ஸ்டாலின் வட்டாரத்தினர் பேய் படம் என விமர்சிக்கின்றனர். படை பரிவாரங்களுடன், தி.மு.க.,வில் இருந்தும், கோபாலபுரத்தில் இருந்தும் நீக்கப்பட்டு, கடந்த ஜன., 30 அன்று பிறந்த நாளை கூட போதிய, கட் அவுட் இல்லாமல் கொண்டாட வேண்டிய கஷ்டத்திற்கு தள்ளப்பட்ட மு.க.அழகிரியை, அவர் மகள் கயல்விழியை அனுப்பி, சமரசப் பேச்சுக்கு ஏற்பாடு செய்தார் கருணாநிதி. அதன்படி நேற்று காலை, 11:00 மணி அளவில், தந்தை கருணாநிதியை, கோபாலபுரத்தில் சந்தித்தார். 'உடல் நலம் விசாரிக்க ... |
| தி.மு.க., விரிக்கும் வலையில் பா.ம.க.,சிக்குமா? கூட்டணிக்கு கருணாநிதி கடைசி முயற்சி Posted: 24 Mar 2016 09:51 AM PDT கூட்டணி சேர, தே.மு.தி.க., வராத நிலையில், தி.மு.க., தலைவர் கருணாநிதியின் கடைசி முயற்சியாக, பா.ம.க.,வுக்கு வலை விரிக்கப்பட்டு உள்ளது; பா.ம.க., சிக்குமா என்பது, அக்கட்சியின் முடிவில் உள்ளது. கடந்த, 2011 சட்டசபை தேர்தலில், தி.மு.க., கூட்டணியில் இணைந்து பா.ம.க., போட்டியிட்டது. ஆனால், மூன்று இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றது. தி.மு.க., 23ல் வெற்றி பெற்றது. அ.தி.மு.க., கூட்டணியில் இணைந்து போட்டியிட்ட, தே.மு.தி.க., இரண்டாவது பெரிய கட்சியாக உருவெடுத்ததால், எதிர்க்கட்சி அந்தஸ்தை, தி.மு.க., இழந்தது. இந்நிலையில், தோல்வி கூட்டணியில் நீடிக்க விரும்பாத, பா.ம.க., ... |
| ஓட்டுக்கு பணம் கொடுப்பதை தடுக்கபுது சட்டம்:மத்திய அரசுக்கு ஐகோர்ட் அதிரடி உத்தரவு Posted: 24 Mar 2016 10:35 AM PDT புதுடில்லி:தேர்தல்களில் வாக்காளர்களுக்கு லஞ்சம் கொடுத்து, ஓட்டுகளை விலைக்கு வாங்கும் அரசியல் கட்சிகளின் நடவடிக்கைகளை தடுக்க, கடுமையான சட்டம் இயற்றும்படி, மத்திய அரசுக்கு, டில்லி ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. தமிழகம், புதுச்சேரி, மேற்கு வங்கம் உள்ளிட்ட ஐந்து மாநிலங்களுக்கான சட்டசபை தேர்தல் நெருங்கி வருகிறது. இந்நிலையில், 1994 - 95ல் வந்த நன்கொடைகளுக்கு வருமான வரி செலுத்துவதிலிருந்து விலக்கு அளிக்கக் கோரி, டில்லி ஐகோர்ட்டில், காங்கிரஸ் சார்பில் தொடரப்பட்ட வழக்கில், டில்லி ஐகோர்ட் முக்கிய உத்தரவை பிறப்பித்துள்ளது. ... |
| மல்லையாவின் சொகுசு விமானம்:சேவை வரி பாக்கிக்காக ஏலம் Posted: 24 Mar 2016 10:37 AM PDT மும்பை:'கிங்பிஷர் ஏர்லைன்ஸ்' நிறுவனம் நிலுவை வைத்துள்ள, 600 கோடி ரூபாய் சேவை வரியை வசூலிக்க, அதன் உரிமையாளரான விஜய் மல்லையா பயன்படுத்திய, சொகுசு விமானத்தை ஏலத்தில் விடுகிறது, சேவை வரித் துறை. எஸ்.பி.ஐ., உட்பட, 17 வங்கிகளுக்கு, 9,000 கோடி ரூபாய் கடன் பாக்கி வைத்துள்ளதாக குற்றம் சாட்டப்பட்ட, தொழில் அதிபர் விஜய் மல்லையா, தற்போது பிரிட்டனின் லண்டன் நகருக்கு தப்பி சென்று விட்டார்.இதற்கிடையே, அவருக்கு எதிராக பல்வேறு வழக்குகள், நாட்டின் பல்வேறு கோர்ட்களில் நடந்து வருகின்றன.'சேவை வரியாக, இருந்து வசூலித்த, 56 கோடி ரூபாயை செலுத்தவில்லை' என, கிங்பிஷர் ... |
| பால் தாக்கரேவுக்கு குறி வைத்தது லஷ்கர் பயங்கரவாதி ஹெட்லி 'திடுக்' தகவல் Posted: 24 Mar 2016 10:45 AM PDT மும்பை:''சிவசேனா கட்சியின், மறைந்த தலைவர் பால் தாக்கரேயை கொலை செய்ய, லஷ்கர் - இ - தொய்பா திட்டம் தீட்டியது. ஆனால், அதற்காக அனுப்பி வைக்கப்பட்ட நபர், போலீசாரால் கைது செய்யப்பட்டான்,'' என, பாகிஸ்தான் பயங்கரவாதி டேவிட் ஹெட்லி தெரிவித்தான். மும்பை தாக்குதல் வழக்கில், அமெரிக்க சிறையில் அடைக்கப்பட்டுள்ள பாகிஸ்தான் பயங்கரவாதி, டேவிட் ஹெட்லி, அப்ரூவராக மாறி, மும்பை கோர்ட்டில், 'வீடியோ கான்பரன்ஸ்' மூலம் வாக்குமூலம் அளித்துள்ளான். அவனிடம், இந்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள பயங்கரவாதி, அபு ஜிண்டாதரப்பு வழக்கறிஞர், அப்துல் வகாப் கான், ... |
| ம.ந.கூட்டணியின் 2ம் கட்ட தலைவர்கள் கொதிப்பு Posted: 24 Mar 2016 11:22 AM PDT 'தே.மு.தி.க.,விடம், மக்கள் நலக் கூட்டணி சரணாகதி அடைந்து விட்டது. இதற்கு, பின்னணி என்ன?' என, அக்கூட்டணிக் கட்சிகளின், இரண்டாம் கட்டத் தலைவர்கள் அதிருப்தி வெளியிட்டு உள்ளனர்.தே.மு.தி.க.,வுடன் - மக்கள் நலக் கூட்டணி ஏற்படுத்திக் கொண்ட தொகுதி உடன்பாடு, எவ்வித கட்டுப்பாடும் இல்லாமல், 'முதல்வர் வேட்பாளராக அறிவிக்க வேண்டும்' என்ற, விஜயகாந்தின் ஒற்றை நிபந்தனையை மட்டும் ஏற்றுக் கொண்டுள்ளது என, குற்றம்சாட்டுகின்றனர். இதுகுறித்து, மக்கள் நலக் கூட்டணியில் உள்ள, ம.தி.மு.க., - மார்க்சிஸ்ட், - ... |
| ஐவர் அணியில் மாற்றம்: அ.தி.மு.க.,வில் பரபரப்பு Posted: 24 Mar 2016 11:36 AM PDT அ.தி.மு.க., சார்பில் கூட்டணி கட்சிகளுடன் நடந்த பேச்சுவார்த்தையில், நால்வர் அணியில், இருவர் பங்கேற்காதது, கட்சியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.அ.தி.மு.க.,வில் அமைச்சர்கள் பன்னீர்செல்வம், நத்தம் விஸ்வநாதன், வைத்திலிங்கம், எடப்பாடி பழனிச்சாமி, பழனியப்பன், ஆகியோர் கொண்ட ஐவரணி, செல்வாக்கோடு திகழ்ந்தது. பல்வேறு குற்றச்சாட்டுகள் அடிப்படையில், அமைச்சர்கள் பன்னீர்செல்வம், நத்தம் விஸ்வநாதன், பழனியப்பன், ஆகியோர் ஓரம் கட்டப்பட்டனர். ஆலோசனைக் கூட்டம்:கடந்த, 13ம் தேதி, அ.தி.மு.க., கூட்டணி கட்சிகளுடனான பேச்சை ... |
| பிரதமர் மோடி, சானியாவுக்கு 'டைம்' பத்திரிகையில் கவுரவம் Posted: 24 Mar 2016 12:04 PM PDT நியூயார்க்:பிரதமர் நரேந்திர மோடி, டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சா, பாலிவுட் நடிகை பிரியங்கா சோப்ரா உள்ளிட்டோர், 'டைம்' பத்திரிகையின், செல்வாக்கு பெற்றோர் பட்டியலுக்கான போட்டியில் இடம் பிடித்துள்ளனர். அமெரிக்காவில் இருந்து வெளியாகும், பிரபல பத்திரிகையான, 'டைம் மேகசின்' ஆண்டு தோறும் உலக அளவில் செல்வாக்கு பெற்ற தலைவர்கள், பிரபலங்கள், 100 பேர் பட்டியலை வெளியிட்டு வருகிறது. இதற்காக, 127 பேர் அடங்கிய முதல்கட்ட போட்டியாளர்கள்பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது. இதில் ... |
| ஜம்மு - காஷ்மீர் முதல்வராகிறார் மெஹபூபா:கட்சியின் சட்டசபை தலைவராக தேர்வு Posted: 24 Mar 2016 12:42 PM PDT ஸ்ரீநகர்:ஜம்மு - காஷ்மீர் மாநிலத்தின், முதல் பெண் முதல்வராக, மக்கள் ஜனநாயக கட்சித் தலைவர் மெஹபூபா முப்தி, 56, பதவியேற்பது உறுதியாகியுள்ளது. கட்சியின் சட்டசபை தலைவராக, அவர் நேற்று தேர்வு செய்யப்பட்டார். பிரதமருடன் பேச்சு:ஜம்மு - காஷ்மீர் மாநிலத்தில், பி.டி.பி., எனப்படும் மக்கள் ஜனநாயகக் கட்சி, பா.ஜ., கூட்டணி அரசின் முதல்வராக இருந்த பி.டி.பி., தலைவர் முப்தி முகமது சயீத், கடந்த ஜனவரியில் மரணடைந்தார்.அதைத் தொடர்ந்து, கூட்டணி அரசு தொடர்வது குறித்து, ... |
| பிரஸல்ஸ் தாக்குதலில் மேலும் ஒரு பயங்கரவாதியா? Posted: 24 Mar 2016 02:02 PM PDT
பிரஸல்ஸ் : பிரஸல்ஸ் பயங்கரவாத தாக்குதல் சம்பவத்தில், மற்றொரு பயங்கரவாதி சம்பந்தப்பட்டு இருப்பது தெரியவந்துள்ளது. ஐரோப்பிய நாடான பெல்ஜியத்தின் தலைநகர் பிரஸல்ஸில், விமான நிலையம் மற்றும் மெட்ரோ ரயில் நிலையங்களில், சமீபத்தில் நடத்தப்பட்ட தற்கொலைப் படை தாக்குதல்களில், 31 பேர் பலியாகினர்; 300க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். இந்த சம்பவம் தொடர்பாக, போலீசார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர். ஏற்கனவே, இப்ராஹிம், காலத் பக்ரோய் என்ற சகோதரர்கள், மனித வெடிகுண்டு களாக இந்த தாக்குதலை நடத்தியது தெரியவந்தது. அதன்பின், நஜிம் லச்ரோய் என்ற ... |
| You are subscribed to email updates from Dinamalar.com |மார்ச் 25,2016. To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States | |