Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Tamil News | Online Tamil News

Tamil News | Online Tamil News


இழுப்பு நாடகம் பார்ட்-2: நிறைவேறுமா, சொதப்புமா?

Posted: 21 Mar 2016 08:26 AM PDT

ஜெயலலிதா மீண்டும் ஆட்சிக்கு வரக்கூடாது என்பதில், தி.மு.க.,வைக் காட்டிலும், தெள்ளத் தெளிவாக விஜயகாந்த் இருப்பதை தெரிந்து தான், 'அவரோட இம்முறை கூட்டணி

அமைக்கலாம்' என, கருணாநிதி கூறியுள்ளார்.இதை சொன்னதுமே, 'அது சரிபட்டு வராது' என, பொருளாளர் ஸ்டாலின் முகத்தை சுளித்துள்ளார். அதன்பின், கட்சிக்கு ஏற்பட்டுள்ள நெருக்கடி குறித்து, கருணாநிதியே, ஸ்டாலினிடம் எடுத்துச் சொல்லி, புரிய வைத்தார்.
பின், விஜயகாந்தை கூட்டணியில் சேர்த்துக் கொள்வது என முடிவானது. மற்றவர்கள், விஜயகாந்திடம் பேசும்போது, அதை ஸ்டாலின் சொதப்பி விடக்கூடாது என்பதால், கூட்டணி பேசும் ...

விடைத்தாள் திருத்தும் பணி புறக்கணிப்பு: பிளஸ் 2 'ரிசல்ட்' தாமதமாகும் அபாயம்

Posted: 21 Mar 2016 10:40 AM PDT

விடைத்தாள் திருத்தும் பணிக்கு, தனியார் பள்ளி ஆசிரியர்கள் வர மறுப்பதால், 'ரிசல்ட்' வெளியாவதில் தாமதம் ஏற்படும் என, தெரிகிறது.பிளஸ் 2 பொதுத்தேர்வில், மொழி பாடங்கள் மற்றும் இரண்டு வகை முக்கிய பாடங்களுக்கு தேர்வுகளும் முடிந்துள்ளன. முதல் கட்ட மாக, 8.5 லட்சம் மாணவர்கள் எழுதிய மொழி பாடங்களின் விடைத்தாள்களை திருத்தும் பணி துவங்கி உள்ளது.அதனால், அரசு பள்ளி ஆசிரியர்கள் மட்டுமின்றி, தனியார் பள்ளி ஆசிரியர்களையும் இப்பணியில் ஈடுபடுத்த, தேர்வுத்துறை அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர். ஆனால், பெரும்பாலான தனியார் பள்ளிகள், தங்கள் ஆசிரியர்களை தேர்வு பணிக்கு ...

மந்திரிகளின் பி.ஏ.,க்கள் சொத்து விபரம் சேகரிப்பு

Posted: 21 Mar 2016 11:03 AM PDT

அமைச்சர்களைத் தொடர்ந்து, அவர்களிடம் பி.ஏ.,க்களாக இருந்தவர்களின் சொத்து விவரங்கள் சேகரிக்கும் பணி நடந்து வருகிறது. அ.தி.மு.க., அமைச்சர்களில் சிலர் அளவுக்கு அதிகமாக, சொத்துக்களை சேர்த்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இது தொடர்பாக, கட்சியின் தலைமைக்கு நிர்வாகிகள் பலர் புகார் மனுக்களை அனுப்பினர்.இதையடுத்து, அமைச்சர்களின் சொத்துக்கள் குறித்து, தனியார் ஏஜன்சி விசாரணை நடத்தியது. இதில், அவர்கள் செய்த முறைகேடுகள் தெரியவந்தன. அதன் காரணமாக, செல்வாக்கோடு வலம் வந்த, அமைச்சர்கள் சிலர் ஓரங்கட்டப்பட்டு உள்ளனர். இந்நிலையில், சில அமைச்சர்களை விட, ...

கட்டாய உரிமையாக்கியும், 60 லட்சம் பேருக்கு கல்விஎட்டாக்கனி

Posted: 21 Mar 2016 11:08 AM PDT

புதுடில்லி:'அனைவருக்கும் கல்வி வழங்கும் வகையில், கல்வியை அடிப்படை உரிமையாக அறிவித்து, ஆறு ஆண்டுகள் கடந்துள்ள நிலையிலும், நாடு முழுவதும், 60 லட்சத்துக்கும் மேற்பட்ட குழந்தைகளுக்கு கல்வி கிடைக்கவில்லை' என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது.

நாட்டில், 6 - 14 வயது வரைஉள்ள குழந்தைகள் அனைவருக்கும் கட்டாய, இலவச கல்வியை அளிக்கும் வகையில், கல்வியை அடிப்படை உரிமையாக அறிவிக்கும், கல்வி உரிமை சட்டம், 2010ல் அமல்படுத்தப்பட்டது. இதன் மூலம், கல்வியை அடிப்படை உரிமையாக அறிவித்துள்ள, 135 நாடுகளில், இந்தியாவும் சேர்ந்தது.இந்த சட்டத்தின் செயல்பாடுகள் குறித்து, கல்வி ...

இடஒதுக்கீடு கொள்கையில் மாற்றமில்லை:பிரதமர் நரேந்திர மோடி திட்டவட்டம்

Posted: 21 Mar 2016 11:16 AM PDT

புதுடில்லி;''தலித்துகளுக்கான இடஒதுக்கீட்டுக் கொள்கையில் எந்த மாற்றமும் செய்யப்பட மாட்டாது. இந்த உரிமையை எவராலும் பறிக்கவும் முடியாது,'' என, பிரதமர் நரேந்திர மோடி, திட்டவட்டமாக தெரிவித்தார்.டில்லியில் உள்ள அலிபூர் சாலையில், அம்பேத்கர் நினைவு இல்லத்துக்கான அடிக்கல்லை நாட்டிய, பிரதமர் நரேந்திர மோடி, அம்பேத்கர் நினைவு விரிவுரை ஆற்றினார்; அப்போது அவர் பேசியதாவது:பா.ஜ., ஆட்சிக்கு வந்தால், இடஒதுக்கீடு கொள்கை ரத்து செய்யப்படும் எனக் கூறுவர். முன்பு, வாஜ்பாய் பிரதமரான போதும், அதுபோலத் தான் கூறினர். அவரது ஆட்சிகாலத்தில், அதுபோல எதுவும் ...

தேர்தலில் போட்டியிட எம்.எல்.ஏ.,க்களுக்கு மீண்டும் வாய்ப்பு கிடைக்குமா?

Posted: 21 Mar 2016 11:29 AM PDT

அ.தி.மு.க.,வில், தற்போதைய எம்.எல்.ஏ.,க்களுக்கு மீண்டும் தேர்தலில் நிற்க வாய்ப்பு கிடைக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது. முதல்வர் ஜெயலலிதா நடத்திய நேற்றைய நேர்காணலில், அவர்களில் பலருக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை; புதுமுகங்கள் மட்டுமே பங்கேற்றனர். இது, தற்போதைய எம்.எல்.ஏ.,க்களுக்கு பீதியை ஏற்படுத்தி உள்ளது. அ.தி.மு.க., சார்பில், தேர்தலில் போட்டியிட விரும்புவோரிடமிருந்து, விருப்ப மனுக்கள் வாங்கும் பணி, ஜன., 20ல் துவக்கப்பட்டு, பிப்., 6ல் நிறைவு பெற்றது. தமிழகத்தில் உள்ள, 234 சட்டசபை தொகுதிகளுக்கும், 17 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர், விருப்ப மனு கொடுத்தனர். அவர்களில் ...

விஜயகாந்த், பிரேமலதா மீது விமர்சனம்:பேச்சாளர்களுக்கு ஜெ., திடீர் தடை

Posted: 21 Mar 2016 11:48 AM PDT

தே.மு.தி.க., மற்றும் அக்கட்சி தலைமை குறித்து பேச, அ.தி.மு.க.,வினருக்கும், அக்கட்சி பேச்சாளர்களுக்கும், முதல்வர் ஜெயலலிதா தடை விதித்துள்ளதாக தகவல்கள் வெளியாகிஉள்ளன. கடந்த, 2011ம் ஆண்டு சட்டசபை தேர்தலில், அ.தி.மு.க.,வுடன் கூட்டணி அமைத்து, தே.மு.தி.க., போட்டியிட்டது. இதில், 29 தொகுதிகளில், அக்கட்சி வெற்றி பெற்றதுடன், தி.மு.க.,விடம் இருந்த, எதிர்க்கட்சி அந்தஸ்தையும் தட்டிப் பறித்தது. அடுத்த சில மாதங்களிலேயே, அ.தி.மு.க., கூட்டணியில் இருந்து தே.மு.தி.க., கழற்றி விடப்பட்டது. இதைத்தொடர்ந்து, அ.தி.மு.க., - தே.மு.தி.க.,வினர் இடையே கடும் மோதல் ஏற்பட்டது. தே.மு.தி.க.,வில் இருந்து, ...

கருணாநிதியின் கூட்டணி ஆசை: கட்சிகள் கிண்டல்

Posted: 21 Mar 2016 11:52 AM PDT

தி.மு.க., கூட்டணிக்கு தே.மு.தி.க., வருவதற்கான பேச்சு தொடர்ந்து நடந்து வருவதாக தி.மு.க., தலைவர் கருணாநிதி நேற்று கூறினார். இதைத் தொடர்ந்து, அவரது கருத்தை, பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் கிண்டல் செய்துள்ளனர். தே.மு.தி.க., தங்கள் கூட்டணிக்கு கொண்டு வர வேண்டும் என, தமிழகத்தின் பிரதான கட்சிகளான தி.மு.க., - பா.ஜ., ஆகியவை தொடர்ந்து பேச்சு நடத்தி வந்தன. இதல் மக்கள் நலக் கூட்டணியும் சேர்ந்து கொண்டது.

தனித்து போட்டி:
இக்கட்சிகளின் தலைவர்கள், விஜயகாந்திடம் கூட்டணி தொடர்பாக பலமுறை பேசியும் அவர், யாருக்கும் பிடிகொடுக்காததோடு, தனித்து போட்டி என, ...

ஒரே நாளில் ரூ.4.79 கோடி பறிமுதல்!

Posted: 21 Mar 2016 11:56 AM PDT

சென்னை: தமிழகத்தில், 18ம் தேதி மட்டும், உரிய ஆவணங்கள் இல்லாமல் எடுத்து செல்லப்பட்ட, 4.79 கோடி ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது.துாத்துக்குடி மாவட்டத்தில், தேர்தல் விதிமுறைகளை மீறி, எந்தவித ஆவணமும் இல்லாமல், வாகனத்தில் எடுத்து செல்லப்பட்ட, 74.50 லட்சம் ரூபாயை, பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர். மதுரை, ஜெய்ஹிந்த்புரம், பாரதியார் சாலையை சேர்ந்த வினோத் என்பவர், இப்பணத்தை எடுத்து சென்றார். பறிமுதல் செய்யப்பட்ட பணம், கோவில்பட்டி சார் கருவூலத்தில் செலுத்தப்பட்டுள்ளது. இத்தொகை குறித்து, தேர்தல் நடத்தும் அலுவலர் விசாரித்து வருகிறார்.அதேபோல, திருநெல்வேலி ...

நீதிபதிகள் நியமன நெறிமுறைகள்: பிரதமர் ஒப்புதலுக்கு அனுப்பிவைப்பு

Posted: 21 Mar 2016 01:59 PM PDT

புதுடில்லி:சுப்ரீம் கோர்ட் மற்றும் ஐகோர்ட்டுகளுக்கு நீதிபதிகள் நியமனம் தொடர்பாக வகுக்கப்பட்ட நெறிமுறைகள், பிரதமரின் ஒப்புதலுக்காக, பிரதமர் அலுவலகத்துக்கு அனுப்பிவைக்கப்பட்டு உள்ளன.சுப்ரீம் கோர்ட் மற்றும் ஐகோர்ட்டுகளுக்கு நீதிபதிகளை நியமனம் செய்வதற்கு, நீதிபதிகள் நியமன ஆணையம் அமைக்க, மத்திய அரசு சட்டம் இயற்றியது. இந்த சட்டத்தை ரத்து செய்த சுப்ரீம் கோர்ட், தற்போது நடைமுறையில் உள்ள, 'கொலீஜியம்' முறையை மேம்படுத்த, நியமன நெறிமுறைகளை வகுக்க உத்தரவிட்டது.அதன்படி, மாநில அரசுகள் மற்றும் ஐகோர்ட்டுகளை கலந்தாலோசித்த மத்திய அரசு, நீதிபதிகள் நியமன ...



Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™