Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Tamil News | Online Tamil News

Tamil News | Online Tamil News


பண பட்டுவாடாவை தடுக்க கிடுக்கிப்பிடி:தேர்தல் கமிஷன் அதிரடி நடவடிக்கை

Posted: 17 Mar 2016 09:03 AM PDT

சட்டசபை தேர்தலில், பண பட்டுவாடாவை தடுக்க, வேட்பு மனு தாக்கல் துவங்கிய நாளில் இருந்து, சோதனைகளை அதிகரித்து, அரசியல் கட்சியினருக்கு, கிடுக்கிப்பிடி போட, தேர்தல் கமிஷன் முடிவு செய்துள்ளது.

பரிசு வினியோகம்:தமிழகத்தில் சமீபகாலமாக, சட்டசபை தேர்தல், லோக்சபா தேர்தல், உள்ளாட்சி தேர்தல் என, எந்த தேர்தலாக இருந்தாலும், வாக்காளர்களுக்கு பணம், பரிசுப் பொருள் வழங்குவது அதிகரித்து உள்ளது.எனவே, நடக்க உள்ள சட்டசபை தேர்தலில், தமிழக அரசியல் கட்சிகள், வாக்காளர்களுக்கு பணம், பரிசுப் பொருள், வேட்டி, சேலை, மதுபானம் போன்றவற்றை வழங்குவதை தடுக்க, பல்வேறு நடவடிக்கைகளை ...

கட்சிகள் நிபந்தனை:கடும் விரக்தியில் விஜயகாந்த்

Posted: 17 Mar 2016 09:12 AM PDT

தே.மு.தி.க.,வில் நியமிக்கப்பட்டுள்ள ஏழு பேர் குழு, கூட்டணி பேச்சுக்கு ஒத்துழைக்கவில்லை என்ற திடீர் சந்தேகத்தால், அவர்களை ஒதுக்கி வைக்க முடிவெடுத்துள்ள அக்கட்சி தலைவர் விஜயகாந்த், கட்சியினர் நெருக்கடியாலும் கடும் விரக்தியில் உள்ளதாக கூறப்படுகிறது.

சட்டசபை தேர்தலில், கூட்டணி அமைத்து போட்டியிடுவதற்காக, தி.மு.க., மக்கள் நலக் கூட்டணி மற்றும், பா.ஜ., உள்ளிட்ட கட்சிகளின் தலைவர்களை, விஜயகாந்த், மனைவி பிரேமலதா, மைத்துனர் சுதீஷ் உள்ளிட்டோர், தொடர்ச்சியாக சந்தித்து பேசி வந்தனர். தே.மு.தி.க., தரப்பில் வைக்கப்பட்ட நிபந்தனைகளை ஏற்க முடியாமல், கட்சி தலைவர்கள் ...

விஜய் மல்லையாவிடமிருந்து கடனை வசூலிக்க முடியுமா?ஏலத்துக்கு வந்த சொத்தை வாங்க யாரும் தயாரில்லை

Posted: 17 Mar 2016 09:46 AM PDT

புதுடில்லி;வங்கிக் கடன், 9,000 கோடி ரூபாயை வசூலிக்க, பிரபல தொழிலதிபர் விஜய்

மல்லையாவின், 'கிங்பிஷர்' விமான நிறுவனத்தின் தலைமை அலுவலகமான, கிங்பிஷர்
இல்லத்தை ஏலம் விடும் நடவடிக்கையை, பாரத ஸ்டேட் வங்கி துவங்கியது. மின்னணு முறையில் நடந்த இந்த ஏலத்தில், மல்லையாவின் சொத்தை வாங்க யாரும் முன்வரவில்லை.
கிங்பிஷர் விமான நிறுவனம், 'யுனைட்டெட் ஸ்பிரிட்ஸ்' மதுபான நிறுவனம் என பல நிறுவனங்களுக்கு அதிபராக உள்ள, கர்நாடகாவைச் சேர்ந்த பிரபல தொழிலதிபர் விஜய் மல்லையா, பல்வேறு வங்கிகளில், 9,000 கோடி ரூபாய் கடன் பெற்றுள்ளார்.
இந்த கடன்களை திருப்பி ...

தேவையற்ற ஆவணங்கள் அகற்றம்:'பளீச்' ஆனது பிரதமர் அலுவலகம்

Posted: 17 Mar 2016 09:47 AM PDT

புதுடில்லி:பிரதமர் அலுவலகத்தில், நீண்ட நாட்களாக தேங்கிக்கிடந்த, தேவையற்ற ஆவணங்களை அகற்றி, துாய்மை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. இதையடுத்து, பிரதமர் அலுவலகம், 15 நாட்களில், 'பளீச்' என மாறியது.

நரேந்திர மோடி, பிரதமராக பதவியேற்றதிலிருந்தே, சுகாதாரத்துக்கு அதிக முக்கியத்துவம் அளித்து வருகிறார். நாடு முழுவதும் உள்ள பொது இடங்களை துாய்மையாக மாற்றும் நோக்கத்தில், 'துாய்மை இந்தியா' திட்டத்தை மோடி, துவக்கினார்.
இந்த நிலையில், 'டில்லியில் பிரதமர்
அலுவலகத்தில், நீண்ட நாட்களாக குப்பையாக தேங்கி கிடக்கும் தேவையற்ற ஆவணங்களையும், பொருட்கள், ...

ஏதாவது திருப்பம் ஏற்படுமா என தமிழக கட்சிகள் காத்திருப்பு:கூட்டணி பேச்சுவார்த்தை முடக்கம் தொடர்கிறது

Posted: 17 Mar 2016 10:51 AM PDT

தமிழக சட்டசபை தேர்தல் தொடர்பான கூட்டணி பேச்சு வார்த்தையில் முடக்கம் தொடருவதால், ஏதாவது திடீர் திருப்பம் ஏற்படுமா என, தமிழக அரசியல் கட்சிகள் காத்திருக்கின்றன.

தமிழக சட்டசபை தேர்தல், மே, 16ல் நடக்கிறது; இதற்கான வேட்புமனு தாக்கல், ஏப்ரல், 22ல், துவங்குகிறது. வேட்பு மனுத்தாக்கலுக்கு, இன்னும், ஒரு மாத இடைவெளி இருந்தாலும், அனைத்து கட்சியினரும் இப்போதே, தேர்தலுக்கு தங்களை தயார்படுத்தும் பணியில் உள்ளனர்.
அனைத்து பிரதான அரசியல் கட்சிகளும், தேர்தலில் போட்டியிட விரும்புவோரிடம் இருந்து விருப்ப மனுக்களை பெற்று, நேர்காணலையும் முடித்து விட்டன; ...

அறிவிப்போடு நின்ற 'அம்மா' ஆம்புலன்ஸ் திட்டம்

Posted: 17 Mar 2016 11:10 AM PDT

கால்நடைகள் மற்றும் வளர்ப்பு பிராணிகளுக்கான, 'அம்மா' ஆம்புலன்ஸ் திட்டம் செயல்படுத்தப்படவில்லை. இதனால், விவசாயிகளும், செல்லப் பிராணிகள் வளர்ப்போரும் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.

ஆபத்து கால அவசர சிகிச்சைக்கான, '108' ஆம்புலன்ஸ் சேவை மூலம், மாநிலத்தின் மூலை, மூடுக்கு களில் உள்ள மக்கள் பெரிதும் பயனடைந்து வருகின்றனர்.அதுபோல், 'கிராமப் பகுதிகளில் உள்ள கால்நடைகள் மற்றும் வளர்ப்பு பிராணிகளுக்கு அவசர கால சிகிச்சைக்காக, ஆம்புலன்ஸ் சேவை துவக்கப்படும்' என, 2015, செப்டம்பரில், முதல்வர் ஜெயலலிதா அறிவித்தார்.
இந்த திட்டத்தை, கால்நடை பராமரிப்புத்துறை கீழ் ...

இணையத்தில் செல்வாக்கானவர் பட்டியலில் மீண்டும் மோடி

Posted: 17 Mar 2016 11:33 AM PDT

புதுடில்லி:இணையத்தில் செல்வாக்கானவர்கள் பட்டியலில், தொடர்ந்து இரண்டாவது ஆண்டாக இடம் பிடித்திருக்கிறார், பிரதமர் நரேந்திர மோடி.

'டுவிட்டர், பேஸ்புக்' போன்ற சமூக வலைதளங்களை அதிகம் பயன்படுத்தும் தலைவர்கள் பட்டியலை, அமெரிக்காவின், 'டைம்' பத்திரிகை வெளியிட்டுள்ளது. இந்த பட்டியலில் இடம் பெற்றுள்ள தலைவர்கள் எவருக்கும், அவர்கள் எத்தனையாவது இடத்தில் உள்ளனர் என்ற,'ரேங்க்' எதுவும் குறிப்பிடப்பட வில்லை.
இந்த பட்டியலில், பிரதமர் நரேந்திர மோடி, தொடர்ந்து இரண்டாவது ஆண்டாக இடம் பிடித்துள்ளார். அவருடன், அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிட உள்ள, ...

பொது இடங்களில் பேனர்கள் கூடாது! அரசு நடவடிக்கை எடுக்க ஐகோர்ட் உத்தரவு

Posted: 17 Mar 2016 11:41 AM PDT

சென்னை : 'பொது இடங்களில் விளம்பரங்கள், பேனர்கள், போர்டுகளை, அரசியல் கட்சிகளும், மற்றவர்களும் வைப்பதை தடுக்க வேண்டும்' என, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது.
கண்காணிக்க உத்தரவு :
சென்னையைச் சேர்ந்த வழக்கறிஞர் ராஜேந்திரன் தாக்கல் செய்த மனுவில், 'இயற்கை வளங்களான, மலை, குன்றுகளில் அரசியல் கட்சிகளின் சின்னங்கள், மத குறியீடுகளை வரைகின்றனர். அவற்றை நீக்கி, சுத்தப்படுத்த வேண்டும்' என, கூறப்பட்டது.
பின், 'இவ்வழக்கில், உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு பின்பற்றப்படவில்லை' என, நீதிமன்ற அவமதிப்பு மனு தாக்கல் ...

கண்கட்டும் வித்தைகருணாநிதி கண்டனம்

Posted: 17 Mar 2016 11:52 AM PDT

சென்னை:'மதுவிலக்கு கொண்டு வருவோம் என, தேர்தல் அறிக்கையில் அறிவித்தால், அது, பாமர மக்களை ஏமாற்றுவதற்கு செய்யப்படும், கண்கட்டும் வித்தையாக தான் இருக்கும்' என, தி.மு.க., தலைவர் கருணாநிதி கூறியுள்ளார்.

அவரது அறிக்கை:அ.தி.மு.க., தன் தேர்தல்
அறிக்கையில், தாங்கள் மீண்டும் ஆட்சிக்கு வந்தால், மதுவிலக்கை கொண்டு வரப்போவதாக அறிவிக்க இருக்கிறது. ஐந்தாண்டுகளில் செய்ய மனம் வராததை, தேர்தல்அறிக்கையில் ஊரை ஏமாற்றச் செய்ய உள்ளனர்.
சட்டசபையில், 'மதுவிலக்கு கொள்கையை மத்திய அரசு, நாடு முழுவதும் கொண்டு வந்தால், நாங்கள் ஆதரிக்கிறோம்' என, அமைச்சர் நத்தம் ...

நடிகர் கார்த்திக் கடத்தப்பட்டாரா

Posted: 17 Mar 2016 12:30 PM PDT

தேர்தலுக்கு தேர்தல், நடிகர் கார்த்திக்கின் அரசியல் காமெடி அரங்கேறுவது வழக்கம். பார்வர்டு பிளாக் கட்சியில் இருந்து வெளியேறி, நாடாளும் மக்கள் கட்சியை கார்த்திக் துவக்கிய பின், 2014 லோக்சபா தேர்தலில், தமிழக காங்கிரசுடன் கூட்டணி அமைத்தார்.

இந்த தேர்தலில், தி.மு.க., - காங்., கூட்டணி உறுதியானதால், தி.மு.க., கூட்டணிக்கு அவரை இழுக்கும் முயற்சியில், படத் தயாரிப்பாளர் ஒருவர் ஈடுபட்டார். கடந்த ஒரு மாதமாக, இரு தரப்பிலும் பேச்சு நடந்தது. 20 தொகுதிகளை
கார்த்திக் கேட்டுள்ளார்; தி.மு.க., சம்மதிக்க வில்லை.
பின், 10 தொகுதி கேட்டதற்கும், தி.மு.க., உடன்படவில்லை. ...

இருக்கை மாற்றம் எதற்காக?பா.ஜ.,வில் திடீர் பரபரப்பு

Posted: 17 Mar 2016 03:10 PM PDT

புதுடில்லி : பா.ஜ., பார்லிமென்ட் குழு கூட்டத்தில், இதுவரை கடைபிடிக்கப்பட்டு வந்த, இருக்கைகள் ஏற்பாட்டில், புதிய மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
டில்லி அரசியல் வட்டாரங்கள் கூறியதாவது: பார்லிமென்ட் கூட்டத் தொடர் நடக்கும் நேரங்களில், ஒவ்வொரு கட்சியும், தங்களது எம்.பி.,க்கள் பங்கேற்கும், பார்லிமென்ட் குழு கூட்டத்தை நடத்துவதுண்டு. எம்.பி.,க்களுக்கு, அறிவுரை அல்லது முக்கிய தகவல்களை கூறுவதற்காக, இதுபோன்ற கூட்டங்கள் நடத்தப்படும். சமீபத்தில், பா.ஜ., பார்லிமென்ட் குழு கூட்டம் நடந்தது. இதில், முக்கியமான சில மாற்றங்கள் ...



Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™