Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





ஈகரை தமிழ் களஞ்சியம்

ஈகரை தமிழ் களஞ்சியம்


விமான பயணிகளுக்கு மத்திய அரசு புது சலுகை ?

Posted: 17 Mar 2016 01:20 PM PDT

புதுடில்லி:'சர்வதேச விமானங்களில், உள்நாட்டுக்குள் உள்ள நகரங்களுக்குச் செல்லும் பயணிகள், தாங்கள் எடுத்து வரும் பொருட்கள் பற்றிய விவரங்களைத் தெரிவிக்கும் சுங்கத்துறை படிவத்தை பூர்த்தி செய்ய வேண்டாம்' என, மத்திய அரசு அறிவித்துள்ளது. 'வெளிநாடுகளுக்குச் செல்லும், சர்வதேச விமானங்களில் பயணிக்கும் பயணிகள், இந்தியாவுக்கு வரும் போது, தாங்கள் எடுத்து வரும் பொருட்கள் பற்றிய விவரங்களை, சுங்கத் துறையின் படிவத்தில் தெரிவிக்க வேண்டும்' என்ற நடைமுறை, 2015 முதல் அமல்படுத்தப்பட்டது.சர்வதேச விமானங்களில், உள்நாட்டு ...

வரலாற்றில் இன்று - மார்ச்

Posted: 17 Mar 2016 01:08 PM PDT

மினரல் வாட்டர் தயாரிக்குது செம்பு

Posted: 17 Mar 2016 01:07 PM PDT

- கேன் வாட்டர், மினரல் வாட்டர் என்று பணத்தைத் தண்ணீராக செலவு செய்யும் காலமிது. ஆனால், "வீட்டுக்கு ஒரு செம்புத் தகடு இருந்தாலே போதும்,அருமையான மினரல் வாட்டர் கிடைத்து விடும். மாசம் நூத்துக் கணக்கான ரூபாய் மிச்சமாகும்!" என்கிறார் இந்திரகுமார். இதையும் இவரே பரிசோதித்துப் பார்த்திருக்கிறார். "மைசூர்ல இருக்கற அஜய் நினைவு குடிநீர் நிறுவனத்தைச் சேர்ந்தவங்க, செம்புப் பாத்திரத்துல தண்ணியை வெச்சி ஒரு ஆராய்ச்சி நடத்தினாங்க. அதோட முடிவுல, 'செம்புப் பாத்திரத்தில் 24-மணி நேரம் குடிநீரை ...

சேலத்தில் கருணாநிதி, ஸ்டாலின் படத்துடன் 105 ஜோடி வெள்ளிக் கொலுசுகள் பறிமுதல்

Posted: 17 Mar 2016 01:04 PM PDT

- சேலம் தாதகாப்பட்டியில் திமுக பிரமுகர் ஒருவரது வீட்டில் வாக்காளர்களுக்கு கொடுக்க வெள்ளிக் கொலுசுகள் பதுக்கி வைத்திருப்பதாக நேற்று ரகசிய தகவல் கிடைத்தது. - இதையடுத்து, பறக்கும் படை அதிகாரி முருகானந்தம், எஸ்ஐ ராஜமாணிக்கம் உள்ளிட்டோரை கொண்ட பறக்கும் படையினர், சேலம் தாதகாப்பட்டி இந்திராநகர் 55-வது வார்டு திமுக துணைச் செயலாளர் கோபாலகிருஷ்ணன் (35) என்பவரது வீட்டில் சோதனை நடத்தினர். - உதயசூரியன் சின்னத்துடன் திமுக தலைவர் கருணாநிதி, அக் கட்சியின் பொருளாளர் ஸ்டாலின் ஆகியோரது படங்களுடன் தலா ஒரு ...

மாப்பிள்ளை விஜயகாந்த்... மாமியார் பிரேமலதா! - பின்னணி பேரங்கள்

Posted: 17 Mar 2016 01:03 PM PDT

"அ.தி.மு.க-வால் அசிங்கப்பட்டது போதும்!" - "தி.மு.க-தான் இறங்கி வரலை!"ப.திருமாவேலன், படங்கள்: சு.குமரேசன், சொ.பாலசுப்ரமணியன் ஓவியம்: ஜி.ராமமூர்த்தி ``இந்த விஜயகாந்த், இந்தத் தடவை தனியாகத்தான் நிற்பான்'' - நிறுத்தி நிதானமாக விஜயகாந்த் சொல்வதற்குள் குழப்பமும் கோக்குமாக்கும் நிறையவே நடந்து முடிந்துவிட்டன. ``காஞ்சிபுரம் வாருங்கள்... யாரோடு கூட்டணி என்பதைச் சொல்லப்போகிறேன்'' என்று அழைத்த விஜயகாந்த், கட்சிக்காரர்கள் காதுக்குள் கட்டெறும்பை விட்டு அனுப்பி வைத்தார். `தனியாகத்தான் நிற்பேன்' என்று ...

நினைத்தாலே இனிக்கும் - வேளுக்குடி உ.வே.கிருஷ்ணன் சுவாமி

Posted: 17 Mar 2016 10:22 AM PDT





இயற்கை போய் செயற்கை வந்ததால்…

Posted: 17 Mar 2016 09:24 AM PDT

அம்மியில் அரைத்த சட்னி ருசி அதிகம் – மிக்ஸி வந்தது; ஆட்டு உரல் மாவு இட்லி ருசி அதிகம் – கிரைண்டர் வந்தது; உலையில் வைத்த சாதம் ருசி அதிகம் – குக்கர் வந்தது; விறகு அடுப்பு சமையல் ருசி அதிகம் – கேஸ் அடுப்பு வந்தது; வீட்டில் செய்த மசாலா ருசி அதிகம் – மசாலா பொடி வந்தது; பானையில் ஊற்றி வைத்த நீர் ருசி அதிகம் – பிரிட்ஜ் வந்தது; மண்ணில் விளையாட்டு மகிழ்ச்சி அதிகம் – வீடியோ கேம் வந்தது; பாட்டி சொன்ன கதையில் உயிர் இருந்தது – டி.வி. வந்தது. இயற்கையை நம்பியிருந்தால் இன்பமாய் ...

ஆறுதல் தரும் அதே நிலா…

Posted: 17 Mar 2016 09:08 AM PDT

- அம்மாவின் அன்பு அப்பாவின் பாசம் நண்பர்களின் நேசம் தாத்தா, பாட்டியின் அக்கறை பக்கத்துக்கு வீட்டு பார்வதியின் பார்வை என எல்லாவற்றையும் இழந்து விட்டு வெளிநாட்டுக்கு முதல் முதலாக பொருள் தேடி வந்தவனுக்கு… – சற்றே ஆறுதலாக இருக்கிறது இரவு நேரத்தில் தனது கிராமத்தை நினைவுப்படுத்தும் அதே நிலா!" – ——————— – கே. அற்புதராஜு நன்றி- விகடன்

என்னென்ன செய்தோம் இங்கு…

Posted: 17 Mar 2016 09:01 AM PDT

- என்னென்ன செய்தோம் இங்கு இதுவரை வாழ்விலே எங்கெங்கு போனோம் வந்தோம் விதி என்னும் பேரிலே காணாத துயரம் கண்ணிலே ஓயாத சலனம் நெஞ்சிலே இறைவா சில நேரம் எண்ணியது உண்டு உன்னை தேடி வந்ததும் உண்டு சன்னதியில் சலனம் வெல்லுமா இறைவா அன்பான புன்னைகை செய்வாய் அழகான பார்வையில் கொல்வாய் நீ என்பது நான் அல்லவா விடை சொல்கிறாய் கல்லாக இருப்பவன் நீயா கண்ணீரை துடைப்பவன் பொய்யா உள் நெஞ்சிலே உனை வாங்கினால் கரை சேர்க்கிறாய் வாழ்கையின் பொருள்தான் என்ன வாழ்ந்துதான் பார்த்தால் என்ன கதை சொல்கிறாய் பயம் ...

சென்னை அணியை வாங்கிய சன்னிலியோன்!

Posted: 17 Mar 2016 06:41 AM PDT

- பாலிவுட் சினிமாவில் கொடி நாட்டியுள்ள சன்னிலியோன், தமிழில் கால் பதிக்க, வடகறி படத்தில், ஒரு குத்துப்பாட்டுக்கு ஆடினார்; – ஆனால், அது ஒர்க் -அவுட் ஆகவில்லை. அதனால், தமிழகத்தில் அழுத்தமாக முத்திரை பதிக்க, தருணம் பார்த்திருந்தார். – சினிமாத்துறையினர் விளையாடும், நட்சத்திர கிரிக்கெட் போன்று, பி.சி.எல்., என்று பெயரிடப்பட்டுள்ள சின்னத்திரை நடிகர்கள் விளையாடும் கிரிக்கெட் போட்டி, விரைவில் சென்னையில் துவங்க இருப்பதை முன்னிட்டு, சென்னை சின்னத்திரை கிரிக்கெட் அணியை வாங்கி விட்டார் சன்னிலியோன். – அதற்கான ...

இந்த வார சினி துளிகள்!

Posted: 17 Mar 2016 06:38 AM PDT


-
வடிவேலு மீண்டும் கதாநாயகனாக நடிக்கும்
புதிய படத்தின் கதை விவாதம் நடைபெற்று
வருகிறது.
--

வணக்கம் நண்பர்களே ==ஸ்ரீதர்

Posted: 17 Mar 2016 06:32 AM PDT

என் பெயர் ஸ்ரீதர்.
சொந்த ஊர் கும்பகோணம்
தற்சமயம் பணி நிமித்தம் வசிப்பது குவைத்.
பொழுது போக்கு பாடல்கள் கேட்பது,புத்தகம் வாசிப்பது.
தமிழ் மின்புத்தகங்கள் தேடியபோது அறிமுகமானது ஈகரை.
மற்றபடி வேறு எதுவும் இல்லை.

கண்பார்வை கிடைத்த பின்னரே திருமணம்!

Posted: 17 Mar 2016 06:27 AM PDT

- பாகுபலி மற்றும் குக்கு போன்ற தமிழ் மற்றும் மலையாள படங்களில் பாடல்கள் பாடிய, வைக்கம் விஜயலட்சுமிக்கு கண் பார்வை இல்லை. அவரிடம், 'நீங்கள் ஏன் இன்னும் திருமணம் செய்து கொள்ளவில்லை…' என்று கேட்ட போது, 'கடந்த, 28 ஆண்டுகளாக மேடை கச்சேரி செய்தும் கிடைக்காத புகழ், ஒரு சில சினிமா பாடல்கள் மூலம் கிடைத்துள்ளது. எனக்கு கண் பார்வை இல்லையே என, நான் ஒருபோதும் வருத்தப்பட்டதில்லை. ஆனாலும், அறுவை சிகிச்சைக்கு பின், பார்வை கிடைத்த பின், கண்டிப்பாக திருமணம் செய்வேன். அப்போது தானே, பிறர் உதவி ...

பல்சுவை – வாட்ஸ்அப் & மின்னஞ்சலில் வந்தவை

Posted: 17 Mar 2016 06:26 AM PDT


-

-

இந்தியா - பாகிஸ்தான் டி20 போட்டி: தேசிய கீதம் பாடுகிறார் அமிதாப் பச்சன்!

Posted: 17 Mar 2016 05:36 AM PDT

டி20 உலகக் கோப்பை போட்டியில் சனிக்கிழமை நடைபெறுகிற ஆட்டத்தில் பாகிஸ்தானை எதிர் கொள்கிறது இந்திய அணி. – இதுவரை ஒருநாள், டி20 உலகக்கோப்பைப் போட்டிகளில் இந்திய அணியுடன் மோதிய பாகிஸ்தான் அணி, ஒன்றில் கூட வெற்றி பெறாமல் அனைத்து ஆட்டங்களிலும் தோல்வியையே தழுவியுள்ளது. – சமீபத்தில் நிறைவடைந்த ஆசியக் கோப்பை கிரிக்கெட் போட்டியிலும் இந்தியாவிடம் தோற்றது. – எனவே அனைத்து தோல்விகளுக்கும் பதிலடி கொடுக்கும் முனைப்புடன் சனிக்கிழமை அன்று கொல்கத்தாவில் நடைபெறுகிற ஆட்டத்தில் இந்தியாவை எதிர்கொள்கிறது பாகிஸ்தான் ...

நானே கேள்வி… நானே பதில்! (விகடனில் படித்து ரசித்து)

Posted: 17 Mar 2016 03:29 AM PDT

மா.சுந்தரமூர்த்தி, செய்யார். காந்தி பிறந்திருக்காவிட்டால், இந்தியா எப்போது சுதந்திரம் பெற்றிருக்கும்? - - சற்றுத் தள்ளிப்போயிருக்கும், அவ்வளவுதான்! அப்படிப் பார்த்தால், தென் ஆப்பிரிக்கா வில் நிற வெறி இருந்ததால்தான் இந்தியாவுக்கு சுதந்திரம் கிடைத்தது என்றுகூடச் சொல்ல முடியும். ஆகவேதான் காந்திஜி ரயில் பெட்டியில் இருந்து கீழே தள்ளப்பட்டார். மோகன்தாஸ் கரம் சந்த் பிற்பாடு காந்திஜி ஆனது அந்த அசம்பாவிதத்துக்குப் பிறகுதானே -

டொனால்டிரம்ப் தேர்தலில் வெற்றிபெறுவதே உலகம் எதிர்கொள்ளும் 10 முக்கிய ஆபத்துக்களில் ஒன்று

Posted: 17 Mar 2016 01:28 AM PDT

அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் குடியரசுக்கட்சி சார்பில் போட்டியிடுவார் என எதிர்பார்க்கப்படும் டொனால்டிரம்ப் தேர்தலில் வெற்றிபெறுவதே உலகம் எதிர்கொள்ளும் 10 முக்கிய ஆபத்துக்களில் ஓன்றாக காணப்படுவதாக பொருளாதார புலனாய்வு பிரிவு என்ற சர்வதேச ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது. அவர் வெற்றிபெற்றால் உலகபொருளாதாரத்தில் குழப்பத்தை ஏற்படுத்துவார்,அமெரிக்காவில் பொருளதார மற்றும் பாதுகாப்பு நெருக்கடிகள் உருவாவதற்கு காரணமாக அமைவார் என அந்த அமைப்பு தெரிவித்துள்ளது. பிரிட்டன் ஐரோப்பிய ஓன்றியத்திலிருந்து ...

திருமந்திரம் விளக்கப்படங்கள்

Posted: 17 Mar 2016 01:07 AM PDT

திருமந்திரம் நந்தியின் சீடரான சுந்தரநாதர் கயிலாசத்திளிருந்து புறப்பட்டு தமிழகம்வந்து திருவாவடுதுறையில் இறந்து கிடந்த மூலன் உடலில் புகுந்து திருமூலர் என்ற பெயரில் மூவாயிரம் பாடல்களை தமிழில் தான் எழுதினார். அதுவே திருமந்திரம் எனப்படுகிறது. கடவுளைப்பற்றிய பல ரகசியங்கள் திருமந்திரத்தில் பொதிந்து கிடக்கிறது.தமிழ் தெரிந்தவர்கள் மட்டுமே திருமந்திரம் பயில வாய்ப்பு பெற்றவர்கள்   அதனால்தானோ  என்னவோ திருமூலர்  தமிழில்  திருமந்திரத்தை  எழுதி  உள்ளார் திருமந்திரத்திற்குப் பண்டைக்காலத்தில் உரை எழுதப்படவில்லை. ...

விமான பயணிகளுக்கு மத்திய அரசு புது சலுகை

Posted: 16 Mar 2016 11:51 PM PDT

- புதுடில்லி: 'சர்வதேச விமானங்களில், உள்நாட்டுக்குள் உள்ள நகரங்களுக்குச் செல்லும் பயணிகள், தாங்கள் எடுத்து வரும் பொருட்கள் பற்றிய விவரங்களைத் தெரிவிக்கும் சுங்கத்துறை படிவத்தை பூர்த்தி செய்ய வேண்டாம்' என, மத்திய அரசு அறிவித்துள்ளது. - 'வெளிநாடுகளுக்குச் செல்லும், சர்வதேச விமானங்களில் பயணிக்கும் பயணிகள், இந்தியாவுக்கு வரும் போது, தாங்கள் எடுத்து வரும் பொருட்கள் பற்றிய விவரங்களை, சுங்கத் துறையின் படிவத்தில் தெரிவிக்க வேண்டும்' என்ற நடைமுறை, 2015 முதல் அமல்படுத்தப்பட்டது.சர்வதேச விமானங்களில், ...

அரசியல் கார்ட்டூன் (தொடர் பதிவு)

Posted: 16 Mar 2016 11:42 PM PDT


-

-

-
நன்றி- தினமலர்

உலகக் கோப்பை டி20: (தொடர் பதிவு)

Posted: 16 Mar 2016 11:14 PM PDT

அரசியல்வாதிக்கு சாபம் விட்ட த்ரிஷா

Posted: 16 Mar 2016 11:07 PM PDT

- உத்தரகாண்ட் மாநிலத்தில் சட்டம்–ஒழுங்கு கெட்டு விட்டதாகக் கூறி ஆளும் காங்கிரஸ் அரசை எதிர்த்து, எதிர்க்கட்சியான பா.ஜ.க. ஆர்ப்பாட்டம் நடத்தியது. - அப்போது ஏற்பட்ட தள்ளு முள்ளுவில் சக்திமான் என்ற போலீஸ் குதிரையின் கால் உடைந்தது. இந்தச் சம்பவத்திற்கு கடும் எதிர்ப்பை த்ரிஷா தெரிவித்துள்ளார். - பா.ஜ.க. எம்.எல்.ஏ. கணேஷ் ஜோஷி கம்பால் தாக்கியதில் குதிரையின் கால் உடைந்ததாக வீடியோ காட்சிகள் இணையத்திலும் செய்தியிலும் வெளியாகின. - அந்த வீடியோவில் குதிரையை கணேஷ் ஜோஷி கம்பால் கடுமையாக ...

தற்கொலை செய்து கொள்ள நினைப்பவரை ஏன் நம்மால் காப்பாற்ற முடிவதில்லை ?

Posted: 16 Mar 2016 11:02 PM PDT


-
சின்னத்திரை நட்சத்திரம் சாய் பிரசாந்தின்
தற்கொலைச் செய்தி தந்த அதிர்ச்சியிலிருந்து
நாம் மீண்டு வருவதற்குள் இன்னொரு சின்னத்
திரை நிகழ்ச்சித்தொகுப்பாளினி கே. நிரோஷாவின்
தற்கொலை மேலும் நம்மை அதிர்ச்சிக்குள்ளாக்கி
இருக்கிறது.
-

ஓம் கணநாதா கஜானனா!

Posted: 16 Mar 2016 10:53 PM PDT

- ஓம் கணநாதா ஓம் கணநாதா ஓம் கணநாதா கஜானனா ஸ்ரீ கணநாதா ஸ்ரீ கணநாதா ஸ்ரீ கணநாதா கஜானனா அன்னை பார்வதி அகிலத்துக் கீந்த அழகுப் புதல்வா கஜானனா எந்தை சிவனின் அன்புக் குகந்த அருமைப் புதல்வா கஜானனா ஓம் கணநாதா ஓம் கணநாதா ஓம் கணநாதா கஜானனா ஸ்ரீ கணநாதா ஸ்ரீ கணநாதா ஸ்ரீ கணநாதா கஜானனா வேண்டும் வரங்களை வேண்டும் விதமாய்த் தந்தருள்பவனே கஜானனா வேண்டி மிக வருந்தி அழைப்பவருக்கு விரைந்தருள்பவனே கஜானனா ஓம் கணநாதா ஓம் கணநாதா ஓம் கணநாதா கஜானனா ஸ்ரீ கணநாதா ஸ்ரீ கணநாதா ஸ்ரீ கணநாதா கஜானனா பாலும் ...

பொது அறிவு தகவல்கள் (பல்சுவை) - தொடர் பதிவு

Posted: 16 Mar 2016 10:51 PM PDT


-
–
ஜன்னலின் வெளிப்புறத்தில் துளசி, கற்பூரவல்லி
போன்ற மூலிகை செடிகளை வளர்க்கலாம்.
இதனால் வீட்டில் விஷ ஜந்துகள் நடமாட்டம்
குறையும்
–

மொரீஷியஸ் இல் 7 நாட்கள் ! by Krishnaamma :)

Posted: 16 Mar 2016 10:13 PM PDT

மெட்ராஸ் தொடர் மழையினால்  நான் என்னுடைய இந்த ட்ரிப் பற்றிய தொடர் கட்டுரை - பயணக்கட்டுரை  எழுதுவதை தள்ளிப்போட்டிருந்தேன்...........இன்று தொடங்கலாம் என்று நினைத்து ஆரம்பிக்கிறேன்..........முதலில் மொரீஷியஸ்ன்   ஒரு அற்புதமான போட்டோ    நம் தளத்தில் இருந்து, என்னுடைய பல கதைகள், மற்றும்  இந்த ட்ரிப் (போடோவுடன்) வேறு ஒரு தளத்தில் பார்த்தேன், மற்றும் பலருடைய பதிவுகளையும் அங்கே பார்த்தேன் ..........அது யார் என்று எனக்குத் தெரியலை, ரொம்ப shocking  ஆகவும் வருத்தமாகவும் போச்சு எனக்கு.............அதனால் ...

கிருஷ்ணா கிருஷ்ணா கோவிந்தா!

Posted: 16 Mar 2016 10:06 PM PDT

- கிருஷ்ணா கிருஷ்ணா கோவிந்தா கோகுல கிருஷ்ணா கோவிந்தா பக்த வத்ஸலா கோவிந்தா பாண்டு ரங்கா கோவிந்தா! தேவகி நந்தன கோவிந்தா தேவர்கள் ரட்சக கோவிந்தா மாதவ தேவா கோவிந்தா யாதவ தீபா கோவிந்தா! ராதா மாதவ கோவிந்தா பாமா ருக்மிணி கோவிந்தா கோபியர் லோலா கோவிந்தா கோபால கிருஷ்ணா கோவிந்தா! கோவிந்தா ஹரி கோவிந்தா கோவிந்தா ஹரி கோவிந்தா கோவிந்தா ஹரி கோவிந்தா கோவிந்தா ஹரி கோவிந்தா! –கவிநயா

சிவபெருமானுக்கு சம்பந்தமுடைய நால்வர்

Posted: 16 Mar 2016 10:02 PM PDT

- சின்னஞ்சிறு குழந்தைகளைப் பிள்ளை என்று அழைப்பார்கள். விநாயகப்பெருமான் சிவபெருமானுக்குப் பிள்ளை என்பதால் "ஆர்' என்பதைச் சேர்த்து இவர் "பிள்ளையார்' என்று போற்றி வணங்குகிறோம். இலக்கியங்களில் பிள்ளையார் என்று நால்வரைப் போற்றுகிறார்கள். விநாயகர் ஈசனின் முதல்பிள்ளை என்பதால் "மூத்த பிள்ளையார்' ஆனார். முருகப் பெருமானை இளையபிள்ளை என்பதால் "இளைய பிள்ளையார்' என்று அழைக்கப்படுகிறார். சீர்காழியில் அவதரித்த ஞான சம்பந்தருக்கு "காழிப்பிள்ளையார்' என்று பெயர். சேய்ஞலூரில் பிறந்த சண்டிகேஸ்வரரை ...

பெண்களுக்கு மதிப்பு அளிப்பதை வீட்டிலிருந்தே தொடங்க வேண்டும்! - லத்திகா சரண்

Posted: 16 Mar 2016 09:45 PM PDT

- தமிழ்நாட்டின் முதல் பெண் டி.ஜி.பி லத்திகா சரண் ( ஓய்வு) எப்போதுமே கம்பீரம்தான். பணியிலிருந்து ஓய்வு பெற்றுவிட்டாலும், அந்த கண்டிப்பும் கறாரும் இன்னும் அப்படியே உள்ளது. திருச்சியில் மகளிர் தின நிகழ்ச்சி ஒன்றுக்காக வந்திருந்த அவர் நமக்கு அளித்த பேட்டி இது... 1976 ல் I.P.S அதிகாரியாக பதவியை ஏற்றீர்கள், தமிழ்நாட்டுடைய முதல் பெண் டி.ஜி.பி நீங்கள், முதன் முதலில் போலீஸ் உடை அணியும்போது எப்படி உணர்ந்தீர்கள்... மற்றவர்களின் பார்வை எப்படி? எனக்கு ஆண்களுக்கான உடையை அணிவது ஒன்றும் முதன்முறை ...

மனதில் உறுதி இருந்தால், ஊனம் ஒரு தடையல்ல

Posted: 16 Mar 2016 08:45 PM PDT

மனதில் உறுதி இருந்தால், ஊனம் ஒரு தடையல்ல; எப்படிப்பட்ட ஊனமாக இருந்தாலும், அதையும் தாண்டிவந்து சாதனை படைக்க முடியும் என்பதை இந்த உலகுக்குச் சொல்கிறார்கள் இந்த வெற்றியாளர்கள். - திருநெல்வேலியை சேர்ந்த கே.ஆர்.ராஜா, தமிழகத்தை சேர்ந்த ஜஸ்டின் ஜேசுதாஸ், கேரளா எர்ணாகுளத்தை சேர்ந்த அஞ்சன் சதீஷ், புதுடெல்லியை சேர்ந்த ஆங்குர் தர்மா, புதுடெல்லியை சேர்ந்த ஹெச்.பி.எஸ். அலுவாலியா ஆகிய ஐந்து பேருமே தங்களுடைய குறையக் குறையாகப் பார்க்காமல், துயரங்களை எதிர்கொண்டு, சவால்களை ஏற்று இந்த இடத்திற்கு வந்திருக்கிறார்கள். -


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™