Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Tamil Star

Tamil Star


வாகன விபத்து – சாரதி மருத்துவமனையில்

Posted: 06 Feb 2016 10:12 AM PST

crashes_into_building_in_the_Junction_-_02062016

crashes_into_building_in_the_Junction_-_02062016இன்று சனிக்கிழமை அதிகாலை இடம்பெற்ற வாகன விபத்தில் காயமடைந்த ஒருவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர் விபத்துடன் சம்ந்தப்பட்ட வாகனத்தின் சாரதி என தெரிவிக்கப்படுகிறது.

டன்டாஸ் வீதி மற்றும் Watkinson அவனியூக்கு அருகில் அதிகாலை 5 மணியளவில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

விபத்தில் சம்பந்தப்பட்ட வாகனம் குறிப்பிட்ட அந்த இடத்தில் உள்ள சந்திப்பு பகுதியில் இருந்த கட்டடத்தின் முன்னால் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.crashes_into_building_in_the_Junction_-_02062016

விபத்துக் குறித்து காவல்த்துறையினர் விசாரணைகளை நடாத்தி வருகின்றனர்.

விபத்தில் வாகனம் மற்றும் கட்டத்திற்கு ஏற்பட்ட சேத விபரம் குறித்து தகவல்கள் வெளியாகவில்லை.

The post வாகன விபத்து – சாரதி மருத்துவமனையில் appeared first on Tamil.com.

This posting includes an audio/video/photo media file: Download Now

அகதிகள் விடயத்தில் கனடா ஏனைய நாடுகளுக்கு முன்னுதாரணம் – அமைச்சர் ஜோன் மக்கலம்

Posted: 06 Feb 2016 10:07 AM PST

John_McCallum_-canada_Immigration_Minister_-_12152016

John_McCallum_-canada_Immigration_Minister_-_12152016சிரிய நாட்டு அகதிகளை வரவேற்கும் கனடாவின் நடவடிக்கைகள் உலக நாடுகளின் கவனத்தை ஈர்த்துள்ளதாக கனேடிய குடிவரவுத்துறை அமைச்சர் ஜோன் மக்கலம் தெரிவித்துள்ளார்.

25,000 சிரிய அகதிகளை கடாவினுள் அழைத்து வந்து அவர்களுக்கு அடைக்கலம் வழங்கும் கனடாவின் நடவடிக்கைகள் ஏனைய நாடுகளுக்கு முன்னுதாரணமாக அமைந்துள்ளது எனவும் குடிவரவுத்துறை அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

சிரிய அகதிகளுக்காக அனைத்துலக நிதி சேகரிப்பு முயற்சிகள் இடம்பெற்று வருகின்றதையும் அவர் சுட்டிக்காட்டியுள்ளர்.

கனடாவை வந்தடைந்துள்ள சிரிய அகதிகளுக்கான நிதியினை சேகரிக்கும் கனேடிய அரசாங்கத்தின் நடவடிக்கையில் பல்வேறு தனியார் நிறுவனங்களும் இணைந்துகொண்டு பணியாற்றி வருவதாகவும் அவர் கூறியுள்ளார்.

இதேவேளை கனடா சார்பில் இலண்டன் மாநாட்டில் கலந்துகொண்டுள்ள அனைத்துலக அபிவிருத்தி அமைச்சர், நாட்டை விட்டு வெளியேறிய மில்லியன் கணக்கான அகதிகளுக்கு கல்வி மற்றும் வேலை வாய்ப்பினை ஏற்படுத்திக் கொடுப்பது தொடர்பிலும் கலந்துரையாடுவார் என தெரிவிக்கப்படுகிறது.John_McCallum_-canada_Immigration_Minister_-_12152016

ஐ.எஸ் அமைப்பின் நடவடிக்கைகளை முடக்குவது குறித்தும், அதிகள் வெளியேற்றத்தினை கட்டுப்படுத்தும் பொருட்டு உள்நாட்டு மோதல்களை முடிவுக்கு கொண்டுவருவது தொடர்பிலும் நாடுகளின் தலைவர்கள் ஆராய்வார்கள் எனவும் கூறப்படுகிறது.

போர் காரணமாக இடம்பெயர்ந்துள்ள மில்லியன் கணக்கான மக்கள் குறித்து 70 நாடுகள் கலந்துகொள்ளும் மாநாட்டில் கனடாவும் கலந்துகொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

சிரிய அகதிகளின் மனிதாபிமான உதவித் தேவைகளுக்காக சுமார் 12.5 பில்லியன் டொலர்களை திரட்டும் நோக்கத்துடன் இந்த லண்டன் மாநாடு நடாத்தப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

The post அகதிகள் விடயத்தில் கனடா ஏனைய நாடுகளுக்கு முன்னுதாரணம் – அமைச்சர் ஜோன் மக்கலம் appeared first on Tamil.com.

This posting includes an audio/video/photo media file: Download Now



Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™