Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Tamil Star

Tamil Star


இரத்தத்தின் அளவை அதிகரிக்கும் அற்புத உணவுகள்!

Posted: 29 Feb 2016 11:27 PM PST

lk

oஉடலியக்கம் சீராக நடைபெறுவதற்கு இரத்தம் மிகவும் முக்கியமானது.

ஏனெனில் இரத்தம் தான் உடலின் அனைத்து பாகங்களுக்கு ஆக்ஸிஜனை கொண்டு செல்கிறது. உடலில் இரத்தத்தின் அளவு குறைந்தால், அனீமியா என்னும் இரத்த சோகை ஏற்படும்.

குறிப்பாக இரத்த சோகை ஆண்களை விட பெண்களுக்கு தான் (காரணம் கர்ப்பம் மற்றும் மாதவிடாய் சுழற்சி) அதிகம் ஏற்படும்.

ஆகவே உடலில் உள்ள இரத்தத்தின் அளவை பராமரிக்க வேண்டியது அவசியம்.

கருப்பு எள்ளு

இதில் இரும்புச்சத்து அதிகம் உள்ளது. இதனை உணவின் மேல் தூவி சாப்பிடலாம் அல்லது எள்ளு மிட்டாய் வாங்கியும் சாப்பிடலாம். இதனால் இரத்தத்தின் அளவை அதிகரிக்க முடியும்.lk

பேரிச்சம் பழம்

பேரிச்சம் பழத்தில் இரும்புச்சத்து, வைட்டமின் சி, வைட்டமின் பி காம்ப்ளக்ஸ் மற்றும் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் அதிகம் உள்ளது. எனவே தினமும் இரவில் 2-3 பேரிச்சம் பழத்தை பாலில் போட்டு சாப்பிட்டு வருவது நல்லது.m

ஆப்பிள்

ஆப்பிளில் கூட இரும்புச்சத்து உள்ளது. அதுமட்டுமின்றி, வைட்டமின்கள், கனிமச்சத்துக்கள் போன்றவையும் அதிகம் உள்ளது. அத்தகைய ஆப்பிளை சாப்பிட்டு வந்தால், இரத்த சோகை நீங்கும்.lk

உலர் திராட்சை

உலர் திராட்சையில் இரும்புச்சத்து, கால்சியம், பொட்டாசியம் மற்றும் இதர ஊட்டச்சத்துக்கள் உள்ளது. ஆகவே இதனை தினமும் மாலை நேரத்தில் தீனிகள் சாப்பிடும் நேரத்தில் சாப்பிட்டு வந்தால், உடலில் இரத்தத்தின் அளவை அதிகரிக்கலாம்.o

பீட்ரூட்

பீட்ரூட் சாப்பிட்டால், உடலில் இரத்த ஊறும் என்று சொல்வார்கள். ஏனெனில் பீட்ரூட்டில் ஃபோலிக் ஆசிட் மற்றும் பொட்டாசியம் அதிகம் உள்ளது.

மேலும் நார்ச்சத்தும் இதில் உள்ளது. எனவே பீட்ரூட்டை வாரம் ஒருமுறை தவறாமல் சாப்பிட்டு வந்தால், அதில் உள்ள ஊட்டச்சத்துக்கள் கிடைத்து, உடலும் ஆரோக்கியமாக இருக்கும்.

n

நெல்லிக்காய்

தினமும் ஒரு நெல்லிக்காய் சாப்பிட்டு வந்தால், உடலில் உள்ள நச்சுக்கள் வெளியேறுவதோடு, உடலில் இரத்தத்தின் அளவும் அதிகரிக்கும்.jhn

மாதுளை

மாதுளையில் இரும்புச்சத்து, புரோட்டீன் மற்றும் கால்சியம் அதிகம் உள்ளது. மேலும் இதில் மற்ற கனிமச்சத்துக்களும், விட்டமின்களும் நிறைந்துள்ளது. ஆகவே இவற்றை அன்றாடம் உட்கொண்டு வந்தால் ஹீமோகுளோபின் அளவு அதிகரித்து, இரத்த சோகை குணமாகும்.huy

The post இரத்தத்தின் அளவை அதிகரிக்கும் அற்புத உணவுகள்! appeared first on Tamil.com.

This posting includes an audio/video/photo media file: Download Now

ஆரோக்கியம் தரும் நார்ச்சத்து!

Posted: 29 Feb 2016 11:17 PM PST

jk

jkநார்ச்சத்து உடலுக்கு இன்றியமையாத சத்துக்களில் ஒன்றாகும்.

புற்றுநோய், நீரிழிவு நோய், உடல் பருமன் போன்ற பிரச்சனைகளில் இருந்து விடுபட நார்ச்சத்து அவசியமாகும்.

மேலும், மனிதனின் செரிமான செயல்முறைகளுக்கு நார்ச்சத்து முக்கிய பங்காற்றுகிறது.

நார்ச்சத்து அளிக்கும் நன்மைகள்!

மலச்சிக்கல் பிரச்சனை மற்றும் தீவிர சுகாதார பிரச்சனைகளுக்கு நிவாரணம் அளிக்கிறது.

கொழுப்பினை குறைக்க உதவுவதால் இதய நோய்களில் இருந்து பாதுகாக்கிறது.

நீரிழிவு நோயாளிகள் நார்ச்சத்து உணவுகளை உட்கொள்ளும்போது, குளுகோஸின் அளவு அதிகரிக்கிறது.

எனவே நீரிழிவு நோயிலிருந்து பாதுகாக்கிறது.

நார்ச்சத்து நிறைந்த உணவுகளை உட்கொள்ளும் போது, உடல் எடை விரைவில் குணமடைகிறது, ஆனால் பசிஎடுக்காமல் இருக்கையில் நார்ச்சத்து உணவுகளை சாப்பிட வேண்டாம்.jk

குடலில் உள்ள நச்சுக்களை வெளியேற்றுகிறது, பெண்கள் ஒரு நாளைக்கு 25 முதல் 30 கிராம் வரை நார்ச்சத்து எடுத்துக்கொள்வது நல்லது, ஏனெனில் இவை மார்பக புற்றுநோய், பெருங்குடல் புற்றுநோய் போன்றவற்றில் இருந்து பாதுகாக்கிறது.

நார்ச்சத்து கிடைக்கும் உணவுகள்

கீரைவகைகள், பழவகைகள், வாழைப்பூ, வாழைத்தண்டு, புடலங்காய், முருங்கைக்காய், வெங்காயத்தண்டு, பீன்ஸ், பலாக்காய், பலாப்பழ விதை, பயறுவகைகள், ஓட்ஸ்,ப்ராக்கோலி போன்றவைகளில் நார்ச்சத்து அதிகம் உள்ளது.

The post ஆரோக்கியம் தரும் நார்ச்சத்து! appeared first on Tamil.com.

This posting includes an audio/video/photo media file: Download Now

Danforth கொள்ளைச் சம்பவம் தொடர்பில் ஐவர் கைது!

Posted: 29 Feb 2016 05:17 PM PST

uy

uyDanforth பகுதியில் கடந்த வாரம் இடம்பெற்ற கொள்ளைச் சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் என்று சந்தேகிக்கப்படும் ஐவரைக் காவல்த்தறையினர் கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்டவர்களுள் 18 வயது ஆண் ஒருவரும், பதின்ம வயதினர் நால்வரும் அடங்குகின்றனர். இவர்களுள் ஒருவர் பெண் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை இவர்களைக் கைதுசெய்யவதற்காக நடாத்திய தேடுதல் நடவடிக்கையின் போது, இரண்டு கைத்துப்பாக்கிகள், போதைப் பொருட்கள், பணம், களவாடப்பட்ட பொருட்கள் என்பனவும் கண்டுபிடிக்கப்பட்டதாக காவல்த்துறையினர் தெரிவித்துள்ளனர்.

இதனை அடுத்து கைது செய்யப்பட்ட ரொரன்ரோவைச் சேர்ந்த 18 வயது நபர் மீது 17 குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டுள்ளதுடன், இன்று பிற்பகல் அளவில் அவரை நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட இருப்பதாகவும் கூறப்பட்டிருந்தது.

கைது செய்யப்பட்ட 15 வயதுச் ஆண்கள் மூவர், மற்றும் 17 வயதுப் பெண் ஒருவர் மீதும் கொள்ளையில் ஈடுபட்டது, துப்பாக்கி வைத்திருந்தது, போதைப் பொருள் வைத்திருந்தது ஆகிய குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டுள்ளது.

இவர்கள் நால்வரையும் இளையோர் குற்றவியல் நீதிச் சட்டத்திற்கு உட்படுத்தப்படுவது தொடர்பில் ஆராய்ந்து வரும் நிலையில், அவர்கள் தற்போது தடுத்து வைக்கப்பட்டுள்ளனர் என்றும், எனினும் அவர்களும் இன்று நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படுவர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post Danforth கொள்ளைச் சம்பவம் தொடர்பில் ஐவர் கைது! appeared first on Tamil.com.

This posting includes an audio/video/photo media file: Download Now

ஒரே வாரத்தில் வின்னிப்பெக்கில் இரண்டாவது மோசமான தீச்சம்பவம்!

Posted: 29 Feb 2016 01:07 PM PST

7y

7yவின்னிப்பெக்கில் நேற்று இடம்பெற்ற மிக மோசமான தீப் பரவல் சம்பவத்தில் மூவர் உயிரிழந்துள்ளனர். கடந்த ஒரே வாரத்தில் விநிபெக்கில் இடம்பெற்ற இரண்டாவது மோசமான தீச்சம்பவம் இது என தெரிவிக்கப்பட்டுள்ளது. நேற்றைய தீச்சம்பவம் வின்னிப்பெக்கின் சென்ரினியல் குடியிருப்பு பகுதியில் நேற்று அதிகாலை இடம்பெற்றதாகவும், சம்பவம் தொடர்பில் அந்த பிராந்திய தீப்பரவல் குற்றவியல் விசாரணைப் பிரிவினர் விசாரணைகளை முன்னெடுத்து வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

தகவல் அறிந்து அதிகாலை 2.30 அளவில் சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்பு படையினர், தீப்பிடித்து எரிந்துகொண்ருந்த வீட்டில் இருந்து நான்கு பேரை மீட்டிருந்தனர். எனினும் அவர்களில் இருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்து விட்டதுடன், ஏனைய இருவரும் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதக்கப்பட்டனர் என அதிகாரிகள் தகவல் வெளியிட்டுள்ளனர். பின்னர் மருத்துவமனையில் அனுமதக்கப்பட்ட இருவரில், 49 வயதான ஆண் ஒருவர் சிறிது நேரத்தின் பின்னர் சிகிச்சைகள் பலனின்றி உயிரழந்து விட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது. உயிரிழந்த ஏனைய இருவரும், 20 மற்றும் 21 வயதான பெண்கள் எனவும் கூறப்பட்டுள்ளது.7y

தீப் பரவல் ஏற்பட்ட இடத்தில் இருந்து பத்து பேர் காயங்கள் எவையும் இன்றி பாதுகாப்பாக மீட்கப்பட்டதாகவும், இவர்களை மீட்கும் நடவடிக்கையில் ஈடுபட்ட தீயணைப்பு படை வீரர்கள் இருவரும் காயமடைந்தனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும் அந்த தீயணைப்புப் படையினர் இருவருக்கும் உயிருக்கு ஆபத்து இல்லை என கூறப்படுகிறது.

The post ஒரே வாரத்தில் வின்னிப்பெக்கில் இரண்டாவது மோசமான தீச்சம்பவம்! appeared first on Tamil.com.

This posting includes an audio/video/photo media file: Download Now

ஸ்காபரோவில் உள்ள பாலத்தில் மோதி கார் விபத்து

Posted: 29 Feb 2016 12:11 PM PST

j

jஸ்காபரோவின் Town Centreஇற்கு அருகில் உள்ள பாலத்துடன் கார் ஒன்று மோதி விபத்துக்குள்ளானதில் காயமடைந்த நான்கு பேர் மருதுவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த சம்பவம் நேற்று ஞாயிற்றுக்கிழமை இரவு 8.20 மணியளவில் McCowan வீதி மற்றும் Progress Avenueஇல் இடம்பெற்றுள்ளத.

சம்பவம் தொடர்பில் தகவல்வெளியிட்டுள்ள ரொரன்ரோக் காவல்த்துறையினர், விபத்தின் போது வாகனத்தில் ஐந்து பேர் இருந்தனர் என்றும், அவர்களில் நான்கு பேர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர் என்றும் தெரிவித்துள்ளனர்.

விபத்தில் வாகனம் கட்டுப்பாட்டை இழந்தமைக்கான காணம் இன்னமும் கண்டறியப்படவில்லை.

விபத்தை அடுத்து McCowan வீதிப் பகுதியில் உள்ள Progress அவனியூ விசாரணைக்காக இன்று திங்கட்கிழமை அதிகாலை வரையில் மூடப்பட்டிருந்தாக காவல்த்தறையினர் தெரிவித்திருந்தனர்.

The post ஸ்காபரோவில் உள்ள பாலத்தில் மோதி கார் விபத்து appeared first on Tamil.com.

This posting includes an audio/video/photo media file: Download Now

ரொரன்ரோ, ஹமில்ட்டன் மற்றும் ரொரன்ரோ பெரும்பாக பகுதிகளுக்கு பனிப்புயல் எச்சரிக்கை

Posted: 29 Feb 2016 12:03 PM PST

h

hரொரன்ரோ, ஹமில்ட்டன் மற்றும் ரொரன்ரோ பெரும்பாக பகுதிகளுக்கு கனேடிய சுற்றுச் சூழல் திணைக்களத்தினால் பனிப் புயல் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்த பருவகாலத்தில் மிகவும் அதிகளவான வெப்பநிலை நேற்று பதிவான நிலையில், அதற்கு எதிர்மாறாக மோசமான பனிப்பொழிவு எதிர்வரும் நாட்களில் ஏற்படும் என எதிர்வுகூறப்பட்டுள்ளது.

ஒன்ராறியோவின் தென் பிராந்தியங்களில் நாளை மோசமான பனிப்புயல் ஏற்படும் எனவும், ரொரன்ரோ, ஹமில்ட்டன், ஹல்ட்டன், பீல், யோர்க், டூர்ஹாம் பிராந்தியங்களில் கடுமையான பனிப்பொழிவு ஏற்படும் எனவும் கனேடிய சுற்றுச் சூழல் திணைக்களம் முன்னுரைத்துள்ளது.h

அமெரிக்காவின் டெக்சாஸ் பகுதியில் இன்றைய நாள் உருவாகியுள்ள தாளமுக்க நிலை, ஒன்ராறியோவின் தென் பிராந்தியங்களை நோக்கி நாளை நகர்வதாக தெரிவிக்கப்படுகிறது. அதன் விளைவாக நாளை இரவு ஒன்ராறியோவின் குறிப்பிடப்பட்ட பிரதேசங்களில் கடுமையான பனிப்பொழிவு ஏற்படும் எனவும், சில இடங்களில் பனிப்பொழிவின் அளவு 15 இலிருந்து 30 சென்ரிமீட்டர் வரையில் பதிவாக கூடும் எனவும் சுற்றுச் சூழல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

அத்துடன் உறை மழை ஏற்படுவதற்கும், பனிக் கட்டிகள் வீழ்வதற்கும் வாய்ப்புகள் உள்ளதாகவும் தெரிவித்துள்ள அதிகாரிகள், இதனால் வீதிப் போக்குவரத்து பாதிப்படையக் கூடும் எனவும் எச்சரித்துள்ளனர். அத்துடன் வாகன ஓட்டிகள் அவதானமாக வாகனங்களைச் செலுத்தச் செல்லுமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

The post ரொரன்ரோ, ஹமில்ட்டன் மற்றும் ரொரன்ரோ பெரும்பாக பகுதிகளுக்கு பனிப்புயல் எச்சரிக்கை appeared first on Tamil.com.

This posting includes an audio/video/photo media file: Download Now



Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™