Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





மாலை மலர் | தேசியச்செய்திகள்

மாலை மலர் | தேசியச்செய்திகள்


கர்நாடகாவில் மின்சாரம் இல்லாததால் மந்திரியை திட்டிய வியாபாரி கைது

Posted: 29 Feb 2016 11:10 PM PST

கர்நாடகாவில் மந்திரியை போனில் திட்டியதாக வியாபாரி ஒருவர் கைது செய்யப்பட்டார். அந்த வியாபாரியின் பெயர் கிரிதர் ரெய்னி. மங்களூர் மாவட்டம் கல்லதாலுகாவில் உள்ள பெல்போரா கிராமத்தைச் சேர்ந்தவர். வியாபாரியான இவர் கிராமத்தில் சரியாக மின்சார விநியோகம் செய்யப்படவில்லை. அடிக்கடி மின்வெட்டு எற்பட்டது. இதனால் ஆவேசம்

ஜவகர்லால் நேரு பல்கலைக்கழக மாணவர்களுக்கு ஆதரவாக களமிறங்கும் அமெரிக்க மாணவர்கள்

Posted: 29 Feb 2016 10:44 PM PST

ஐதராபாத் பல்கலைக்கழக மாணவர் ரோகித் வெமுலாவின் தற்கொலையை அடுத்து அரசுக்கு எதிராக கிளர்ந்தெழுந்த டெல்லி ஜவகர்லால் நேரு பல்கலைக்கழக மாணவர் சங்கத் தலைவர் கன்னையா குமாருக்கு ஆதரவாக அமெரிக்காவின் நியூயார்க் நகரில் உள்ள பிரபல பல்கலைக்கழகங்களில் பயின்றுவரும் மாணவர்கள் ஆதரவு குரல் எழுப்பியுள்ளனர்.

கார்த்தி சிதம்பரம் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி பாராளுமன்றத்தில் அ.தி.மு.க., எம்.பி.க்கள் அமளி - ஒத்திவைப்பு

Posted: 29 Feb 2016 10:19 PM PST

மத்திய முன்னாள் நிதி மந்திரி சிதம்பரத்தின் மகனான கார்த்தி சிதம்பரம் வெளிநாடுகளில் செய்துள்ள தொழில் முதலீடுகள் குறித்து இன்று பாராளுமன்ற மக்களவையில் சில குற்றச்சாட்டுகளை சுமத்திய அ.தி.மு.க., எம்.பி.க்கள் அவர்மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி அமளியில் ஈடுபட்டனர்.

காஷ்மீரில் தீ விபத்து: ஒரே குடும்பத்தில் 4 பேர் கருகி பலி

Posted: 29 Feb 2016 09:30 PM PST

காஷ்மீர் மாநிலம் தோடா மாவட்டத்தில் பாக்வா கிராமத்தில் அப்துல் ரஷீத் என்பவரது வீட்டில் இன்று அதிகாலை 2 மணிக்கு தீ விபத்து ஏற்பட்டது. இதில் வீட்டில் தூங்கிக் கொண்டு இருந்த அப்துல் ரஷீத், அவரது 6 மாத பெண்

திருச்சூர் போலீஸ் ஐ.ஜி.யின் அரசு காரை ஓட்டிய பிளஸ்–1 மாணவர்: வாட்ஸ்–அப்பில் வெளியான வீடியோவால் பரபரப்பு

Posted: 29 Feb 2016 09:22 PM PST

கேரளாவில் கடந்த சில நாட்களாக போலீசார் மற்றும் அரசியல் பிரமுகர்களின் செல்போனில் ஒரு வீடியோ காட்சி வேகமாக பரவியது. அதில், கேரள அரசு சின்னம் பொருத்தப்பட்ட போலீஸ் வாகனம் ஒன்றை மாணவர் ஒருவர் வேகமாக ஓட்டிச்செல்வதும், போலீஸ் அதிகாரி இருக்க

சந்திரபாபுநாயுடு அரசு மீது நம்பிக்கையில்லா தீர்மானம்: ஜெகன்மோகன் ரெட்டி முடிவு

Posted: 29 Feb 2016 09:20 PM PST

ஆந்திராவில் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் 6 பேர் சமீபத்தில் அக்கட்சியில் இருந்து விலகி தெலுங்கு தேசம் கட்சியில் இணைந்தனர். இதனால் சட்டசபையில் 67 எம்.எல்.ஏ.க்கள் கொண்ட ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியின் பலம் 61 ஆக குறைந்தது.

சத்தீஸ்கர் - தெலுங்கானா மாநில எல்லைப்பகுதியில் துப்பாக்கிச் சண்டை: 8 மாவோயிஸ்ட்கள் கொல்லப்பட்டனர்

Posted: 29 Feb 2016 09:09 PM PST

சத்தீஸ்கர் - தெலுங்கானா மாநிலங்களுக்கிடையிலான வனப்பகுதியில் மாவோயிஸ்ட்களின் நடமாட்டம் காணப்படுவதாக கிடைத்த ரகசிய தகவலையடுத்து, அந்த காட்டுப்பகுதியை பாதுகாப்பு படையினர் நேற்றிரவு சுற்றிவளைத்தனர். காட்டுக்குள் மறைந்திருந்த மாவோயிஸ்ட்கள் அவர்களை நோக்கி துப்பாக்கிகளால் சுட்டனர்.

களியக்காவிளை–திருவனந்தபுரம் இடையே 6 வழிச்சாலை: வாகன போக்குவரத்தை உம்மன்சாண்டி தொடங்கி வைத்தார்

Posted: 29 Feb 2016 09:01 PM PST

கன்னியாகுமரியில் இருந்து திருவனந்தபுரம் வரை 6 வழிச்சாலை அமைக்க மத்திய அரசு முடிவு செய்தது. இதற்கான பணிகள் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பே தொடங்கியது. இதில் திருவனந்தபுரம், கரமனை முதல் களியக்காவிளை வரையிலான 6 வழிச்சாலைக்கு ரூ.286 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது.

அதிகாரிகள் மிரட்டலால் வியாபாரி தற்கொலை: கேரளாவில் பெட்ரோல் விற்பனை நிலையங்கள், கடைகள் அடைப்பு

Posted: 29 Feb 2016 08:34 PM PST

கேரளாவில் கடந்த சில வாரங்களுக்கு முன்பு பெட்ரோல் பங்க் உரிமையாளர் ஒருவர் மர்ம நபர்களால் கொலை செய்யப்பட்டார். இதற்கு கண்டனம் தெரிவித்தும், கொலையாளிகளை உடனே கைது செய்யக்கோரியும் கேரளாவில் உள்ள அனைத்து பெட்ரோல் விற்பனை

கன்னையா குமார் மீதான ஜாமீன் விசாரணை நாளை ஒத்திவைப்பு

Posted: 29 Feb 2016 08:33 PM PST

டெல்லி ஜவகர்லால் நேரு பல்கலைக் கழகத்தில் பாராளுமன்ற தாக்குதல் குற்றவாளி அப்சல்குரு நினைவு தினம் கடைப்பிடிக்கப்பட்டது. அப்போது இந்தியாவுக்கு எதிராக மாணவர்கள் கோஷம் எழுப்பினார்கள். இதையடுத்து பேரணியை வழி நடத்திச் சென்ற மாணவர் சங்க தலைவர் கன்னையா கைது

குடிநீர் பாட்டிலுக்கு அதிக கட்டணம்: தியேட்டருக்கு ரூ.5 லட்சம் அபராதம்

Posted: 29 Feb 2016 07:02 PM PST

ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்தவர் மனோஜ்குமார். சில ஆண்டுகளுக்கு முன் மும்பை வந்திருந்த இவர் ஒரு தியேட்டருக்கு சினிமா பார்க்க சென்றிருந்தார். தியேட்டரில் குடிநீர் பாட்டில் வாங்கினார். 14 ரூபாய் மதிப்புள்ள அந்த பாட்டிலுக்கு அவரிடம் இருந்து ரூ.30 வசூலிக்கப்பட்டது.

சொன்னதை செய்கிறது மோடி அரசு: பட்ஜெட்டுக்கு பட்னாவிஸ் வரவேற்பு

Posted: 29 Feb 2016 06:53 PM PST

மத்திய நிதி மந்திரி அருண் ஜெட்லி பொது பட்ஜெட்டை நேற்று பாராளுமன்றத்தில் தாக்கல் செய்து வைத்து பேசினார். பட்ஜெட்டில் கிராமப்புற மேம்பாடு மற்றும் விவசாயத்துக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டு உள்ளது. இதற்கு முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் வரவேற்பு தெரிவித்துள்ளார். இது தொடர்பாக டுவிட்டரில் கருத்து

சித்தராமையாவிடம் இருக்கும் கைக்கெடிகாரம் எனது வீட்டில் திருடப்பட்டதா? டாக்டர் சுதாகர் ஷெட்டி பரபரப்பு பேட்டி

Posted: 29 Feb 2016 06:35 PM PST

பெங்களூருவில் போலீஸ் கமிஷனர் என்.எஸ்.மேகரிக்கை டாக்டர் சுதாகர் ஷெட்டி நேற்று திடீரென்று சந்தித்து பேசினார். முதல்-மந்திரி சித்தராமையாவிடம் இருக்கும் கைக்கெடிகாரம் தனது வீட்டில் திருடப்பட்டதா? என்பது குறித்து அவர் பரபரப்பு பேட்டி அளித்துள்ளார்.

காரில் ஹெல்மெட் அணியாமல் சென்றதாக கூறி பா.ஜனதா பிரமுகருக்கு அபராத ரசீது அனுப்பிய போலீசார்

Posted: 29 Feb 2016 06:22 PM PST

பெங்களூரு மல்லேசுவரத்தில் வசித்து வருபவர் பிரகாஷ். பா.ஜனதா பிரமுகரான இவருக்கு பெங்களூரு மாநகர போக்குவரத்து போலீசாரிடம் இருந்து அபராதம் கட்டும்படி ரசீது ஒன்று நேற்று முன்தினம் வந்தது. அந்த ரசீதை பார்த்து அவர் அதிர்ச்சி அடைந்தார். காரணம், அந்த ரசீதுவில்

வேலைவாய்ப்பை பெருக்க மத்திய பட்ஜெட் தவறிவிட்டது: காங்கிரஸ் உள்பட தலைவர்கள் கருத்து

Posted: 29 Feb 2016 05:23 PM PST

நிதி மந்திரி அருண் ஜெட்லி நேற்று பாராளுமன்றத்தில் தாக்கல் செய்த மத்திய பட்ஜெட், வேலைவாய்ப்பை பெருக்க தவறிவிட்டதாக காங்கிரஸ் கட்சி கூறியுள்ளது. பட்ஜெட் குறித்து கட்சித் தலைவர்கள் வெளியிட்ட கருத்துகள் வருமாறு:-

ஆதார் திட்டத்துக்கு சட்டப்பூர்வ அந்தஸ்து: மத்திய அரசு மசோதா கொண்டு வருகிறது

Posted: 29 Feb 2016 05:16 PM PST

'ஆதார்' திட்டத்துக்கு சட்டப்பூர்வ அந்தஸ்து அளிப்பதன் மூலம், அரசு மானியம், உரிய மக்களுக்கு கிடைக்கச் செய்வோம் என்று மத்திய பட்ஜெட்டில் கூறப்பட்டுள்ளது. பின்னர், பட்ஜெட்டின் முக்கிய அம்சங்கள் குறித்து மத்திய நிதி மந்திரி அருண் ஜெட்லி நிருபர்களுக்கு பேட்டி அளித்தபோது, இதுபற்றியும் குறிப்பிட்டார்.

மத்திய பட்ஜெட்டுக்கு பா.ஜனதா மூத்த தலைவர் அத்வானி பாராட்டு

Posted: 29 Feb 2016 05:02 PM PST

மத்திய பட்ஜெட்டுக்கு பா.ஜனதா மூத்த தலைவர் அத்வானி பாராட்டு தெரிவித்து உள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், 'பாராளுமன்றத்தில் நிறைய பட்ஜெட்டுகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளதை நான் பார்த்திருக்கிறேன். அந்தவகையில் இன்று (நேற்று) அருண் ஜெட்லி

பக்தர்கள் காணிக்கையாக வழங்கிய 3,700 கிலோ தங்கம் வங்கிகளில் டெபாசிட்: திருமலை-திருப்பதி தேவஸ்தானம் முடிவு

Posted: 29 Feb 2016 04:52 PM PST

திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு சாமி தரிசனம் செய்ய வரும் பக்தர்கள் பணம் மற்றும் தங்கம், வெள்ளி ஆகியவற்றை காணிக்கையாக வழங்கி வருகின்றனர். உண்டியல்களில் இருந்து பெறப்படும் காணிக்கை தொகை அவ்வப்போது எண்ணப்பட்டு அரசு வங்கிகளில் டெபாசிட் செய்யப்படுகிறது. அதேபோல், தங்கமும் அரசு வங்கிகளில் டெபாசிட் செய்யப்பட்டு வருகிறது.

டெல்லி போலீஸ் கமிஷனராக அலோக் குமார் வர்மா பதவி ஏற்பு

Posted: 29 Feb 2016 04:38 PM PST

டெல்லி போலீஸ் கமிஷனராக பணியாற்றி வந்த பி.எஸ்.பஸ்சி ஓய்வு பெற்றார். இதைத்தொடர்ந்து புதிய கமிஷனராக அலோக் குமார் வர்மா நேற்று பதவியேற்றார். 1979-ம் ஆண்டு பிரிவு ஐ.பி.எஸ். அதிகாரியான இவர், டெல்லி திகார் சிறையின் இயக்குனராக பதவி வகித்து வந்தார்.

ஜே.என்.யு விவகாரம்: உமர் காலித், அனிர்பன் ஆகியோரது போலீஸ் காவல் மேலும் ஒருநாள் நீட்டிப்பு

Posted: 29 Feb 2016 04:16 PM PST

டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் தீவிரவாதி அப்சல் குரு நினைவு தினம் கொண்டாடியது தொடர்பாக, பல்கலைக்கழக மாணவர் தலைவர் கன்னையா குமார் தேச துரோக வழக்கில் கைது செய்யப்பட்டு திகார் சிறையில் அடைக்கப்பட்டு உள்ளார்.


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™