Tamil Star |
- 25,000ஆவது சிரிய அகதியும் கனடாவை வந்தடைந்தார்
- ஒன்ராறியோவில் தீ சம்பவம்: 9 குதிரைகள் பலி
- பனிச்சறுக்கு வாகன (snowmobile)விபத்தில் இரண்டு மகன்களை இழந்த தந்தை
- ஸ்காபரோவில் வீடு ஒன்றில் நபர் ஒருவரின் சடலம் கண்டுபிடிப்பு
- இரண்டு கத்திக்குத்துச் சம்பவம் தொடர்பில் காவல்த்துறையினர் விசாரணை
- பெற்றோர் மற்றும் பெற்ரோரின் பெற்றோரை கனடாவுக்கு அழைப்பதற்கான விண்ணப்பங்களின் எண்ணிக்கை அதிகரிப்பு
- பழங்குடியின பெண்கள் விவகாரம்: விசாரணைகளுக்கு உதவுவதாக ஒன்ராறியோ அரசாங்கம் அறிப்பு
| 25,000ஆவது சிரிய அகதியும் கனடாவை வந்தடைந்தார் Posted: 27 Feb 2016 10:00 PM PST
கடந்த நவம்பர் மாத்தில் இருந்து ஆரம்பிக்கப்பட் சிரிய அகதிகளுக்கான இந்த திட்டத்தில் கனடாவை வந்தடைந்தவர்களில் ஒரு குழுவினர் வரும் நாட்களில் எட்டு வெவ்வேறு மாநிலங்களுக்கு பிரித்து விடப்படவுள்ளனர். ஒரு வருடத்திற்கு முன்பு எதிர்கட்சியாக இருந்த போது அதிகமான சிரிய அகதிகளை கனடாவில் மீள்குடியமர்த்துவது தொடர் பில் லிபரல் அரசாங்கம் முதல்முதலாக உறுதியளித்திருந்தது. பின்னர் தமது தேர்தல் பிரசாரங்களிலும், வருட இறுதிக்குள் அதிகளவான சிரிய அகதிகளை கனடாவிற்கு அழைத்து வருவதாகவும் கூறியிருந்தது. எனினும் அகதிகளை அவ்வாறு அழைத்துவரும் லிபரல் அரசாங்கத்தின் அந்த இலக்கு இந்த மாத இறுதிவரைக்கும் பின்தள்ளப்பட்டது. இந்த நிலையில் 25,000 அகதிகள் தற்போது கனடாவை வந்தடைந்துள்ளனர். முதல் ஒரு வருடத்திற்கு அவர்களில் அரைவாசிக்கும் மேற்பட்டோரின் செலவுகளை தனியாக கனேடிய அரசாங்கமும், ஏனையவர்களின் செலவுகளை தனியாரும் மற்றும் தனியாரும் அரசாங்கமும் கூட்டாக இணைந்தும் கவனிக்கவுள்ளனர். அதேவேளை இந்த அகதிகள் 25,000 பேரையும் அரசாங்க உதவியுடன் மீள்குடியமர்த்துவதாக உறுதியளித்துள்ள லிபரல் அரசாங்கம், இந்த ஆண்டு முடிவுக்குள் அந்த இலக்கு எட்டப்படும் என்றும் கூறியுள்ளது. The post 25,000ஆவது சிரிய அகதியும் கனடாவை வந்தடைந்தார் appeared first on Tamil.com. This posting includes an audio/video/photo media file: Download Now |
| ஒன்ராறியோவில் தீ சம்பவம்: 9 குதிரைகள் பலி Posted: 27 Feb 2016 09:51 PM PST
கிழக்கு லண்டனில் இருந்து ஏறத்தாழ 65 கிலோமீற்றர் தூரத்தில் அமைந்துள்ள ஒன்ராறியோ, Otterville பகுதியில் Darkin Riding Stables குறித்திரை தொழுவத்தில் அதிகாலை 4 மணியளவில் இந்த தீச்சம்பவம் இடம்பெற்றதாக கூறப்பட்டுள்ளது. சம்வத்தை நேரில் பார்த்த நபர் ஒருவர் அது தொடர்பில் விபரிக்கையில், தீ பற்றிக்கொண்டதும் தொழுவத்தை நோக்கி விரைந்ததாகவும், ஆனால் தீ காரணமாக ஏற்பட்ட பெரும் புகையின் காரணமாக அந்த பகுதிக்கு தம்மால் செல்ல முடியாது போனதாகவும் தெரிவித்துள்ளார். அங்கு வளர்க்கப்பட்டு வந்த அந்த ஒன்பது குதிரைகளும் பிறந்தநாள் விழா உள்ளிட்ட விழாக்கள் போன்றவற்றிற்கு வாடகைக்கு விடப்படுவதாகவும் கூறுகின்றார். இந்த தீ சம்பவத்தால் 50,000 டொலர் மதிப்பான சொத்துக்களை இழந்துள்ளதாகவும், அவற்றில் பெரும்பாலானவை உபகரணங்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒன்ராறியோவில் இந்த வருடத்தில் ஏற்பட்டிருந்த தீ சம்பவங்களினால் குதிரைகள் பலியான மூன்றாவது சம்பவம் இது என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இவ்வாறு குதிரைகள் பலியான சம்பவங்கள் தெற்கு ஒன்ராநியோவில் உள்ள குதிரைப் பந்தைய சமூகத்தினருக்கு பெரும் இழப்பு என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. The post ஒன்ராறியோவில் தீ சம்பவம்: 9 குதிரைகள் பலி appeared first on Tamil.com. This posting includes an audio/video/photo media file: Download Now |
| பனிச்சறுக்கு வாகன (snowmobile)விபத்தில் இரண்டு மகன்களை இழந்த தந்தை Posted: 27 Feb 2016 09:46 PM PST
இந்த வாரத்தின் ஆரம்பத்தில் பனிச்சறுக்கு வாகனத்தில் (snowmobile) பனிச்சறுக்கு விளையாட்டில் ஈடுபட்டிருந்த அவரின் 26 வயது மகன் Justin Petersen விபத்துக்குள்ளாகி உயிரிழந்துள்ளார். இதற்கு முன்னராக அவரின் மற்றொரு மகனான Steven Petersenனும் கடந்த வருடம் இவ்வாறு பனிச்சறுக்கு வாகன விபத்தில் உயிரிழந்து விட்டதாக தெரிவித்துள்ள அவர்களின் தந்தை Ivan Petersen இனி ஒரு போதும் தாம் பனிச்சறுக்க வாகனத்தை பாவிக்கப்போவதில்லை என்று கூறியுள்ளார். கடந்த செவ்வாய்கிழமை உயிரிழந்த இளைய மகனுக்கு கடந்த கோடை காலத்தில் திருமணமாகியிருந்தது என்றும், எதிர்வரும் கோடை காலத்தின்போது தமது பேரப்பிள்ளையின் வரவை தாம் அனைவரும் எதிர்பார்த்துள்ள நிலையில் தமது மகன் உயிரிழந்து விட்டதாகவும் உயிரிழந்தவரின் பெற்றோர் உருக்கமாக தெரிவித்துள்ளனர். The post பனிச்சறுக்கு வாகன (snowmobile)விபத்தில் இரண்டு மகன்களை இழந்த தந்தை appeared first on Tamil.com. This posting includes an audio/video/photo media file: Download Now |
| ஸ்காபரோவில் வீடு ஒன்றில் நபர் ஒருவரின் சடலம் கண்டுபிடிப்பு Posted: 27 Feb 2016 06:07 PM PST
இன்று சனிக்கிழமை ஸ்காபரோ நகரின் Clairlea குடியிருப்புப் பகுதியில் உள்ள வீடு ஒன்றில் குறித்த சடலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இன்று பிற்பகல் 1.15 மணியளவில் சம்பவம் இடத்திற்கு அதிகாரிகள் வரவழைக்கப்பட்டுள்ளனர். தற்போது இந்த மரணம் தொடர்பில் புலனாய்வு அதிகாரிகள் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். இது தொடர்பில் மேலதிக தகவல்கள் எவையும் இன்னமும் வெளியாகவில்லை. The post ஸ்காபரோவில் வீடு ஒன்றில் நபர் ஒருவரின் சடலம் கண்டுபிடிப்பு appeared first on Tamil.com. This posting includes an audio/video/photo media file: Download Now |
| இரண்டு கத்திக்குத்துச் சம்பவம் தொடர்பில் காவல்த்துறையினர் விசாரணை Posted: 27 Feb 2016 06:04 PM PST
முதல் கத்திக்குத்துச் சம்பவம் Warden அவனியூவிற்கு அருகில் Danforth அவனியூவில் அமைந்துள்ள மதுபான விற்பனை நிலையத்திற்கு அருகில் அதிகாலை 2.15 மணியளவில் இடம்பெற்றுள்ளது. இதில் நபர் ஒருவர் கழுத்தில் கத்திக்குத்துக்கு ஆளானதாகவும், அப்போது அவருக்கு சம்வ இடத்தில் மருத்துவ சிகிச்சை வழங்க முற்பட்ட போது அதனை அவர் மறுத்துவிட்டார் என்றும், ஆனால் அதன் பின்னர் தாமாகவே மருத்துவமனைக்கு சென்றுள்ளார் என்றும் கூறப்படுகிறது. இந்த சம்பவம் தொடர்பி்ல் இரண்டு வெள்ளையின சந்தேக நபர்களைத் தேடி வருவதாக காவல்த்துறையினர் தெரிவித்துள்ளனர். மற்றைய கத்திக்குத்துச் சம்பவம் 2.30 மணியளவில் விக்ரோரியா பூங்கா அவனியூ மற்றும் சென்.கிளேயர் அவனியூவில் அமைந்துள்ள மது விற்பனை நிலைய பகுதியில் இடம்பெற்றுள்ளது. எனினும் இந்த சம்பவம் தொடர்பில் சந்தேக நபரின் விபரம் எதுவும் வெளியிடப்பட்வில்லை. The post இரண்டு கத்திக்குத்துச் சம்பவம் தொடர்பில் காவல்த்துறையினர் விசாரணை appeared first on Tamil.com. This posting includes an audio/video/photo media file: Download Now |
| பெற்றோர் மற்றும் பெற்ரோரின் பெற்றோரை கனடாவுக்கு அழைப்பதற்கான விண்ணப்பங்களின் எண்ணிக்கை அதிகரிப்பு Posted: 27 Feb 2016 07:10 AM PST
கடந்த இரண்டு ஆண்டுகளிலும் ஆண்டுக்கு 5,000 விண்ணப்பங்களே ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ள நிலையிலேயே லிபரல் அரசாங்கம் அந்த எண்ணிக்கையை 10,000 ஆக அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. தற்போது ஆட்சிக்கு வந்துள்ள லிபரல் அரசாங்கம் கடந்த தேர்தலின் போது இந்த எண்ணிக்கை அதிகரிக்கப்படும் என்று ஏற்கனவே உறுதியளித்திருந்தமை குறிப்பிடத்தக்கது. ஸ்ரிபன் ஹாபர் தலைமையிலான முன்னைய அரசாங்கம் ஆண்டுக்கு 5,000 பேரை மாத்திரமே உள்வாங்க முடியும் என நிர்ணயம் வகுத்திருந்ததுடன், இதற்காக பல்வேறு வரைமுறைகளையும் விதித்திருந்தது. அத்துடன் இவ்வாறான திட்டத்தில பல்வேறு சிக்கல்கள் காணப்படுவதாகவும் தெரிவித்திருந்த முன்னைய பழமைவாதக் கட்சி அரசாங்கம், கடந்த 2011ஆம ஆண்டில் அதனை முற்றாக நிறுத்தியிருந்தது. 2014ஆம் ஆண்டில் அந்த திட்டம் மீண்டும் நடைமுறைக்கு வந்த போதிலும், பெற்றோரை அழைக்க விரும்பும் ஒருவர் கொண்டிருக்க வேண்டிய பொருளாதார தகுதி நிலை, அவரை பராமரிப்பதற்காக கால எல்லை என்பன அதிகரிக்கப்பட்டன. இதனால் முன்னைய அரசாங்கம் இந்த விவகாரம் தொடர்பில் பல சர்ச்சைகளைச் சந்தித்து வந்திருந்தது. The post பெற்றோர் மற்றும் பெற்ரோரின் பெற்றோரை கனடாவுக்கு அழைப்பதற்கான விண்ணப்பங்களின் எண்ணிக்கை அதிகரிப்பு appeared first on Tamil.com. This posting includes an audio/video/photo media file: Download Now |
| பழங்குடியின பெண்கள் விவகாரம்: விசாரணைகளுக்கு உதவுவதாக ஒன்ராறியோ அரசாங்கம் அறிப்பு Posted: 27 Feb 2016 06:41 AM PST
இந்த விவகாரம் தொடர்பில் கனேடிய மத்திய மற்றும் மாகாண அமைச்சர்கள், பழங்குடியின தலைவர்கள், பாதிக்கப்பட்ட குடும்பத்தினரிடையே இரண்டு நாள் கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளது. இந்த கலந்துரையாடலைத் தொடர்ந்து கருத்து வெளியிட்டபோது ஒன்ராறியோ மாகாண பழங்குடியின விவகார அமைச்சர் கரோலின் பெனெட் இதனைத் தெரிவித்துள்ளார். காணாமல் போன மற்றும் கொல்லப்பட்ட பழங்குடியின பெண்கள் தொடர்பிலான விசாரணைகள் ஆரம்பமாகுமிடத்து, அந்த விசாரணைகளுக்கு காவல்த்துறை, கல்வி, சிறுவர் பராமரிப்பு உள்ளிட்ட மாகாண அதிகாரங்களுக்கு உட்பட்ட ஒத்துளைப்புகள் வழங்கப்படும் என அவர் உறுதியளித்துள்ளார். மாகாணத்தின் துறைசார் பிரிவுகளில் இருந்து குறித்த இந்த விசாரணைகளுக்கு தேவையான அனைத்துவித தகவல்களையும் பகிர்ந்து கொள்ள மாகாண அரசு இணங்கியுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார். நீண்டகாலமாக பல்வேறு சர்ச்சைகளைச் எதிர்கொண்டு வரும் பழங்குடி மக்களின் இந்த விவகாரம் தொடர்பிலான விசாரணைகளை முன்னெடுக்க மத்திய அரசாங்கம் உறுதியளித்துள்ளமை ஒரு முக்கிய முன்னேற்றம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். The post பழங்குடியின பெண்கள் விவகாரம்: விசாரணைகளுக்கு உதவுவதாக ஒன்ராறியோ அரசாங்கம் அறிப்பு appeared first on Tamil.com. This posting includes an audio/video/photo media file: Download Now |
| You are subscribed to email updates from Tamil.com. To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States | |

25,000ஆவது சிரிய அகதி சனிக்கிழமை இரவு கனடாவை வந்தடைந்த நிலையில், அகதிகளை மீள்குடியேற்றும் லிபரல் அரசாங்கத்தின் மிகப்பெரிய திட்டத்தின் முதல் கட்டம் நிறைவுக்கு வந்துள்ளது.
ஒன்ராறியோவின் லண்டன் பகுதியில் உள்ள குதிரைத் தொழுவம் ஒன்று தீப்பற்றிக்கொண்ட சம்பவத்தில் அங்கிருந்த 9 குதிரைகளும் பலியானதாக அந்த மாநில காவல்த்துறையினர் தெரிவித்துள்ளனர்.
ஒட்டாவா பகுதியைச் சேர்ந்த நபர் ஒருவர் பனிச்சறுக்கு வாகன (snowmobile)விபத்தில் தமது இரண்டு மகன்களை இழந்துள்ள நிலையில், குறித்த பனிச்சறுக்கு வாகனத்தை தாம் இனி ஒரு போதும் பாவிக்க மாட்டேன் என Ivan Petersen தெரிவித்துள்ளார்.
ஸ்காபரோ பகுதியில் உள்ள வீடு ஒன்றில் நபர் ஒருவரின் சடலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
ரொரன்ரோவின் கிழக்கில் நேற்று இடம்பெற்ற இரண்டு கத்திக்குத்துச் சம்பவம் தொடர்பில் காவல்த்துறையினர் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
கனடாவை வந்தடைந்தவர்கள் அவர்களின் பெற்றோர் மற்றும் பெற்ரோரின் பெற்றோரை கனடாவுக்கு அழைப்பதற்கான விண்ணப்பங்களின் எண்ணிக்கையை தற்போதைய அரசாங்கம் அதிகரித்துள்ளது. அவ்வாறான விண்ணப்பங்கள 10,000 ஆக அதித்துள்ளதாக நேற்று வெள்ளிக்கிழமை தெரிவித்த குடிவரவு அமைச்சர் John McCallum, இந்த ஆண்டில் இருந்து இது நடப்பிற்கு வருவதாகவும், ஒவ்வாறு ஆண்டும் இந்த எண்ணிக்கை பின்பற்றப்படும் என்றும் தகவல் வெளியிட்டுள்ளார்.
காணாமல் போன மற்றும் கொல்லப்பட்ட பழங்குடியின பெண்கள் தொடர்பில் முன்னெடுக்கப்படும் விசாரணை நடவடிக்கைகளுக்கு உதவுவதாக ஒன்ராறியோ மாகாண அரசாங்கம் அறிவித்துள்ளது.