Tamil Star |
- பிரம்டனில் அதிகாலையில் கத்திக்குத்து
- அதிகாலையில் ஈற்ரோபிக்கோவில் விபத்து – இருவர் மருத்துவமனையில்
- உடலுக்கு வலு சேர்க்கும் வெள்ளை நிற காய்கறிகள்
- வாரத்தில் எத்தனை நாட்கள் காய்கறி சாப்பிட வேண்டும்?
| பிரம்டனில் அதிகாலையில் கத்திக்குத்து Posted: 21 Feb 2016 09:45 AM PST
Pefferlaw Circle இல் அமைந்துள்ள அந்த வீட்டில் இன்று அதிகாலை 12.30 மணியளவில் அந்த கத்திக்குத்துச் சம்பவம் இடம்பெற்றதாக கூறப்பட்டுள்ளது. எனினும் பாதிக்கப்பட்டவருக்கு உயிராபத்தான காயம் இல்லை என்றும் தெரிவிக்கப்படுகிறது. சம்பவம் தொடர்பில் தகவல் தெரிவித்த அவசர மருத்துவப் பிரிவினர், 23 வயதான ஆண் நபார் ஒருவர், நெஞ்சில் கத்திக்குத்துக் காயத்தினால் அவதிப்பட்ட நிலையில், உள்ளூர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என கூறியுள்ளனர். இந்த கத்திக்குத்தை அடுத்து இரண்டு நபர்கள் சம்பவ இடத்தில் இருந்து தப்பிச் சென்றுள்ளதாக காவல்த்துறையினர் தெரிவித்துள்ளனர். எனினும் சந்தேக நபர்கள் தொடர்பான தகவல்கள் எவையும் இதுவரையில் வெளியிடப்படவில்லை. இதேவேளை பீல் பிராந்தியத்திலும் ஒரு கத்திக்குத்துச் சம்பவம் இடத்பெற்றதாக பீல் பிராந்தியக் காவல்த்துறையினர் தெரிவித்துள்ளனர். மிசிசாகாவில் இடம்பெற்ற அந்த கத்திக்குத்துச் சம்பவம் தொடர்பில் ஒருவரை காவல்த்துறையினர் தடுத்து வைத்துள்ளனா என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. Acorn Place இல் உள்ள வீடு ஒன்றில் இந்த சம்பவம் இடம்பெற்றதாகவும், தகராற்றின் போது ஆண் நபர் ஒருவரின் கையில் காயம் ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது. இந்த சம்பவத்துடன் தொடர்புடைய 26 வயது பெண் ஒருவரை காவல்த்துறையினர் கைது செய்துள்ளனர். The post பிரம்டனில் அதிகாலையில் கத்திக்குத்து appeared first on Tamil.com. This posting includes an audio/video/photo media file: Download Now |
| அதிகாலையில் ஈற்ரோபிக்கோவில் விபத்து – இருவர் மருத்துவமனையில் Posted: 21 Feb 2016 09:36 AM PST
Queensway மற்றும் Kipling அவனியூப் பகுதியில் இன்று அதிகாலை 1.45 மணியவில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. சம்பவ இடத்தின் நிலவரம் குறித்து தெளிவாக அறிந்து கொள்ள முடியவில்லை எனினும், சம்பவத்தில் காயமடைந்த ஆண் ஒருவரும், பெண் ஒருவரும் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர் என்ற தகவலை காவல்த்துறையினர் மூலம் அறிய முடிகிறது. அதேவேளை தவறான முறையில் வாகனத்தை செலுத்திய குற்றச்சாட்டில் 25 வயது இளைஞன் ஒருவரை ரொரன்ரோ காவல்த்துறையினர் கைது செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. The post அதிகாலையில் ஈற்ரோபிக்கோவில் விபத்து – இருவர் மருத்துவமனையில் appeared first on Tamil.com. This posting includes an audio/video/photo media file: Download Now |
| உடலுக்கு வலு சேர்க்கும் வெள்ளை நிற காய்கறிகள் Posted: 21 Feb 2016 03:15 AM PST
ஆனால் ஒவ்வொரு காய்கறிகளிலும் நார்ச்சத்துகள், தாது உப்புகள், விட்டமின்கள் நிறைந்துள்ளன. காலிபிளவர் * காலிபிளவரில் விட்டமின் கே, மற்றும் ஒமேகா 3 சத்துக்கள் உள்ளன. இதை தினமும் உணவில் சேர்த்துக் கொண்டால் நீரிழிவு நோயை கட்டுப்படுத்தும். * இதில் நார்ச்சத்து காணப்படுவதால் ஜீரண சக்தியை அதிகரிக்கிறது. வயிறுக்கு இதமளித்து வயிறு தொடர்புடைய நோய்களை குணமாக்குகிறது. அல்சர் மற்றும் குடல் புற்றுநோயையும் கட்டுப்படுத்துகிறது. * இது சூட்டை தணிக்கும் தன்மையுடையது, மூலத்தை கட்டுப்படுத்துகிறது, மலச்சிக்கலைப் போக்கும். * பாஸ்பரஸ் அதிகம் இருப்பதால் வாயுத் தொந்தரவிலிருந்து பாதுகாக்கிறது, அத்துடன் உடல் எடையை அதிகரிக்காமல் கட்டுக்கோப்புடன் இருக்க உதவுகிறது. * இந்தப் பூவில் கண்பார்வைக்குத் தேவையான கரோட்டின் சத்து அதிகம் உள்ளது. இதனை அடிக்கடி உணவில் சேர்த்துக் கொண்டால் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும் என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். தேங்காய் பால் * மாங்கனீசு அதிகளவு காணப்படுவதால் நீரிழிவு நோய் வராமல் பாதுகாக்கிறது. * காப்பர் மற்றும் வைட்டமின் சி, சருமம் மற்றும் இரத்தக் குழாய்களை நெகிழ்வுத் தன்மையுடைன் மீள் திறனுடன் வைத்திருக்கும். இத்தகைய காப்பர் தேங்காய் பாலில் அதிகம் நிறைந்துள்ளது. * ஒரு கப் தேங்காய் பாலில், உடம்புக்கு அன்றாடம் தேவைப்படும் இரும்புச்சத்தில் 25 சதவீதம் கிடைத்துவிடுகிறது. * பொட்டாசியம் உடம்பில் உள்ள இரத்தக் கொதிப்பின் அளவை குறைக்க உதவும். இத்தகைய பொட்டாசியம் தேங்காய் பாலில் அதிகம் உள்ளது. பூண்டு * பூண்டை பாலில் போட்டுக் காய்ச்சி அருந்தி வந்தால் இரத்த அழுத்தம், மாரடைப்பு வராது. * வெள்ளையணுத்திறனின் செயல்பாடுகளை அதிகரிக்கச் செய்கிறது, ஊளைச் சதையைக் கரைக்கும். * கொலஸ்ட்ரால் குறைக்க, நச்சுக்களை போக்க, இதய நலனை காக்க என பல வகைகளில் நன்மை விளைவிக்கிறது. * ரத்த அழுத்தம் அதிகமாக உள்ளவர்கள், தினமும் இரவு படுக்க செல்லும் போது பூண்டை பசும்பாலில் கொதிக்க வைத்து, பிறகு பூண்டுடன் பாலை குடித்து வந்தால் ரத்த அழுத்தம் குறையும். * எண்ணெயில் பொரித்த தின்பண்டங்களை அதிகமாகச் சாப்பிட நேர்ந்தால், உடனே இரண்டு பச்சைப் பூண்டுப் பற்களை எடுத்து சிறிது சிறிதாகக் கடித்து சாப்பிட செரிமானத்தன்மை ஏற்படும்.
முட்டைக்கோஸ் * கண் பார்வைக் கோளாறுகளைப் போக்கும். கண் பார்வை நரம்புகளை சீராக இயங்கச் செய்யும். இதில் உள்ள வைட்டமின் ஏ சத்து கண் பார்வைக்கு சிறந்தது. * மூல நோயின் பாதிப்பைக் குறைக்கும். அஜீரணத்தால் உண்டாகும் வயிற்றுவலியை நீக்கும்.பெண்களுக்கு மெனோபாஸ் காலங்களில் உண்டாகும் கால்சியம், பாஸ்பரஸ் இழப்பை முட்டைகோஸ் ஈடுசெய்யும். * நரம்புகளுக்கு வலு கொடுக்கும். நரம்புத் தளர்ச்சியைப் போக்கும். * தொற்று நோய்கள் ஏற்படாமல் தடுக்கும். உடலுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும். * முட்டைக்கோஸை நீரில் போட்டு சிறிது நேரம் ஊறவைத்து அந்த நீரைக் கொண்டு முகம் கழுவினால் வறட்சியான சருமம் பளபளப்படையும்.
The post உடலுக்கு வலு சேர்க்கும் வெள்ளை நிற காய்கறிகள் appeared first on Tamil.com. This posting includes an audio/video/photo media file: Download Now |
| வாரத்தில் எத்தனை நாட்கள் காய்கறி சாப்பிட வேண்டும்? Posted: 21 Feb 2016 03:09 AM PST
வாரத்தில் 5 நாட்களுக்கு நாம் எடுத்துக்கொள்ளும் உணவில் காய்கறிகளை அதிகளவில் சேர்த்துக்கொண்டால் உடலில் விஷத்தன்மை ஏற்படுத்தும் ரசாயனங்களை குறைக்கலாம் என கொரிய விஞ்ஞானிகள் நடத்திய ஆராய்ச்சியில் தெரியவந்துள்ளளது. எனவே காய்கறிகளை அதிக அளவில் உணவில் சேர்த்துக்கொள்ளுங்கள், இதயம் காக்கும் நூற்கோல் நூற்கோல் சாலட்டில் சேர்க்கக்கூடிய ஒரு சிறப்பான காய்கறி. அதிலும் முக்கியமாக இந்த நூற்கோல் இதயத்திற்கு ஆரோக்கியத்தைத் தரக்கூடிய ஒரு வேர்க் காய்கறி. இதில் ஆன்டி- ஆக்ஸிடன்ட்டுகள் அதிகமான அளவில் அடங்கியுள்ளன. நோய் எதிர்ப்புச் சக்தியளிக்கும் வெங்காயம் வெங்காயத்தில் ஆன்டி – பாக்டீரியஸ் மற்றும் நோய் எதிர்ப்பு அழற்சிப் பொருள் அதிகம் நிறைந்துள்ளதால், அவை நோய்த்தொற்றுகளை எதிர்த்துப் போராடும். மேலும் இதில் ஜிங் (Zinc) உள்ளதால், ஆண்களின் ஹார்மோன்களின் செயல்பாடுகளை அதிகரிக்கும்.
இருமல் போக்கும் இஞ்சி இஞ்சியில் செரிமான நொதிகள் நிறைந்திருப்பதால் அவை அசிடிட்டி பிரச்சனை உள்ளவர்களுக்கு மிகவும் சிறந்தது. குறிப்பாக இருமல், சளி மற்றும் தொண்டையில் தொற்று உள்ளவர்களுக்கு இஞ்சி நல்ல நிவாரணத்தைக் கொடுக்கும்.
சருமம் காக்கும் கேரட் கேரட் சாப்பிட்டால் கண்களுக்கு மிகவும் நல்லது. ஏனெனில் இதில் கண்களுக்கு ஆரோக்கியத்தைத் தரும் விட்டமின் ஏ அதிகம் உள்ளது. மேலும் இதனை நாள்தோறும் சாப்பிட்டால், சருமம் பொலிவாக இருக்கும். சர்க்கரை நோய் போக்கும் முள்ளங்கி நீரிழிவு நோயாளிகளுக்கு முள்ளங்கி ஒரு சிறப்பான உணவுப் பொருள். ஏனென்றால் இதில் கிளைசீமிக் இன்டெக்ஸ் மிகவும் குறைவாக உள்ளது. மேலும் இதில் பொட்டாசியம் அதிக அளவில் நிறைந்துள்ளதால் இரத்த அழுத்தத்தைச் சீராக வைக்கும். நரம்புப் பிரச்சனை தீர்க்கும் சேனைக்கிழங்கு சேனைக்கிழங்கில் கார்போஹைட்ரேட் அதிகம் நிறைந்துள்ளது. மேலும் இதில் விட்டமின் – பி காம்ப்ளக்ஸ் அதிகம் இருப்பதால், அவை நரம்புகளை ஆரோக்கியமாக வைத்துக்கொள்ள உதவியாக இருக்கும். ஆற்றல் அதிகரிக்கும் சர்க்கரை வள்ளிக்கிழங்கு சர்க்கரை வள்ளிக்கிழங்கில் உடலுக்கு வேண்டிய ஆற்றல் அதிகம் இருப்பதோடு உருளைக்கிழங்கைவிடக் குறைவாகவே ஸ்டார்ச்சானது உள்ளது. மேலும் இதில் விட்டமின் பி காம்ப்ளக்ஸ் அதிகம் இருப்பதால், இன்சுலின் சுரப்பைச் சீராக வைக்கும். The post வாரத்தில் எத்தனை நாட்கள் காய்கறி சாப்பிட வேண்டும்? appeared first on Tamil.com. This posting includes an audio/video/photo media file: Download Now |
| You are subscribed to email updates from Tamil.com. To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States | |

பிரம்ரன் பகுதியில் உள்ள வீடு ஒன்றில் நடைபெற்ற விருந்துபசார நிகழ்வில் கத்திக்குத்துச் சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.
ஈற்ரோபிக்கோ பகுதியில் வாகனத்தால் மோதுண்ட இருவர் படுகாயமடைந்து நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இன்றைய காலகட்டத்தில் துரித உணவுகளின் பக்கம் ஈர்க்கப்பட்டு பெரும்பாலும் காய்கறிகள், பழங்கள் சாப்பிடுவதே கிடையாது.



காய்கறிகளில் உயிர்ச்சத்துக்களும், ஊட்டச்சத்துகளும் அடங்கியுள்ளன.




