மாலை மலர் | தேசியச்செய்திகள் |
- உ.பி.யில் ஜீப் மீது லாரி மோதிய விபத்தில் 11 பேர் பலி
- பாக்ராப்பேட்டை வனப்பகுதியில் செம்மரம் வெட்டியதாக 23 பேர் கைது
- திருப்பதியில் பக்தரிடம் திருட முயன்ற வாலிபரை கம்பத்தில் கட்டி வைத்து தாக்குதல்
- வாரணாசி ரவிதாஸ் கோயிலில் பிரதமர் மோடி வழிபாடு செய்தார்
- குருவாயூர் கோவிலில் யானைகள் ஓட்டப்பந்தயம் - பக்தர்கள் திரண்டு நின்று ரசித்தனர்
- டெல்லியில் குடிநீர் தட்டுப்பாடு: ஜாட் போராட்டக் குழுவினர் கைப்பற்றியிருந்த முக்கிய கால்வாயை ராணுவம் மீட்டது
- ஜனாதிபதி உரையுடன் பாராளுமன்ற பட்ஜெட் கூட்டம் நாளை தொடங்குகிறது
- ஆட்டோவில் பெண் தவறவிட்ட தங்க நகைகளை போலீசாரிடம் ஒப்படைத்த டிரைவரின் நேர்மை
- பிரதமருக்கு கருப்புக் கொடி காட்ட முயன்ற இளைஞர் காங்கிரசார் கைது
- பாகிஸ்தானில் இருந்து இந்தியா திரும்ப நடிகை ஷர்மிளா தாகூருக்கு அனுமதி மறுப்பு
- பெங்களூருவில் வசிக்கும் அனைவரும் கன்னடமொழி பேசும் நிலை உருவாக வேண்டும்: சித்தராமையா
- கட்சிரோலியில் ஆற்றில் படகு கவிழ்ந்து விபத்து: 27 பேர் மீட்பு - 3 பேர் மாயம்
- பல்கலைக்கழகங்களில் நாட்டை ஒன்றுபடுத்தும் கல்வியை போதிக்க வேண்டும்: குமாரசாமி
- பெங்களூருவில் சுற்றுப்புற விழிப்புணர்வு திருவிழா: மந்திரி ஆர்.வி.தேஷ்பாண்டே தொடங்கி வைத்தார்
- திராவகம் வீசியதால் குரங்கு பலி: போலீஸ் விசாரணை
- எல்.இ.டி பல்புகளால் 421 மில்லியன் யூனிட் மின்சாரத்தை சேமிக்கும் ஆந்திர பிரதேசம்
- நீதிபதிகள் நியமனம் தொடர்பான புதிய நடைமுறையை இறுதி செய்யுங்கள்: சட்ட அமைச்சகத்துக்கு பிரதமர் அலுவலகம் கடிதம்
- ஜாட் இனத்தவர் இடஒதுக்கீடு பிரச்சினை: வெங்கையா நாயுடு தலைமையில் கமிட்டி - மத்திய அரசு அறிவிப்பு
- டெல்லியில் முன்னாள் ராணுவ வீரர்கள் பேரணி
- சத்தீஷ்காரில் ஆடுகளை விற்று கழிவறை கட்டிய 104 வயது மூதாட்டி: மோடி பாராட்டு
| உ.பி.யில் ஜீப் மீது லாரி மோதிய விபத்தில் 11 பேர் பலி Posted: 21 Feb 2016 10:51 PM PST உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் உள்ள ஜான்சி நகரின் அருகே ஜீப்பும் லாரியும் நேருக்குநேர் மோதிக்கொண்ட விபத்தில் 11 பேர் பலியாகினர். மத்தியப்பிரதேசத்தில் உள்ள டாட்டியா பகுதியை சேர்ந்த சிலர் இங்குள்ள சிப்ரி பகுதி நெடுஞ்சாலை வழியாக நேற்றிரவு ஒரு ஜீப்பில் சென்று கொண்டிருந்தனர். அப்போது, எதிர்திசையில் வேகமாக வந்த ஒரு லாரி, |
| பாக்ராப்பேட்டை வனப்பகுதியில் செம்மரம் வெட்டியதாக 23 பேர் கைது Posted: 21 Feb 2016 10:48 PM PST திருப்பதி அருகே பாக்ராப்பேட்டை வனப்பகுதியில் இருந்து செம்மரங்களை வெட்டி வாகனங்களில் கடத்துவதாக பாக்ராப்பேட்டை போலீசாருக்கு தகவல்கள் வந்தன. அதன்பேரில் பாக்ராப்பேட்டை அருகே செம்மரம் வெட்டும் கூலித்தொழிலாளி ஒருவரை போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து 11 செம்மரக் கட்டைகளை போலீசார் பறிமுதல் செய்தனர். |
| திருப்பதியில் பக்தரிடம் திருட முயன்ற வாலிபரை கம்பத்தில் கட்டி வைத்து தாக்குதல் Posted: 21 Feb 2016 10:44 PM PST திருப்பதி திருமலையில் வராகசாமி தங்கும் விடுதிக்கு அருகில் உள்ள ஒரு தனியார் ஓட்டலில் பக்தர் ஒருவர் சாப்பிட்டு கொண்டிருந்தார். அப்போது அவரின் அருகில் சுமார் 30 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் வந்தார். அவர், கண்ணிமைக்கும் நேரத்தில் பக்தரின் சட்டை பாக்கெட்டில் இருந்த பணத்தை திருட முயன்றார். அதை பார்த்த பக்தர் திருடன்.. திருடன்.. எனக் கூச்சலிட்டு துரத்திச்சென்றார். |
| வாரணாசி ரவிதாஸ் கோயிலில் பிரதமர் மோடி வழிபாடு செய்தார் Posted: 21 Feb 2016 10:19 PM PST உத்தரப்பிரதேம் மாநிலம், வாரணாசியில் உள்ள கோவர்தன்பூரில் அமைந்துள்ள சாது ரவிதாஸ் கோயிலில் பிரதமர் நரேந்திர மோடி இன்று வழிபாடு செய்தார். முன்னதாக, நேற்றிரவு பாபத்பூரில் உள்ள லால் பகதூர் சாஸ்திரி விமான நிலையத்தில் பிரதமர் மோடிக்கு உ.பி. கவர்னர் ராம் நாயக், முதல் மந்திரி அகிலேஷ் யாதவ் சார்பில் மாநில மந்திரிகள், அரசு உயரதிகாரிகள் |
| குருவாயூர் கோவிலில் யானைகள் ஓட்டப்பந்தயம் - பக்தர்கள் திரண்டு நின்று ரசித்தனர் Posted: 21 Feb 2016 10:04 PM PST கேரள மாநிலம் குருவாயூரில் பிரசித்திப் பெற்ற கிருஷ்ணன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் வருடாந்திர விழா தொடங்கி நடந்து வருகிறது. இந்த விழாவையொட்டி தொடக்க நிகழ்ச்சியாக யானைகள் பங்கேற்ற ஓட்டப்பந்தயம் நடைபெற்றது. கோவில் அருகே நடந்த இந்த போட்டியில் பல்வேறு கோவில்களில் இருந்து 24 யானைகள் கலந்து கொண்டன. இந்த |
| Posted: 21 Feb 2016 09:59 PM PST ஜாட் இனத்தவர்களின் போராட்டத்தின் எதிரொலியாக டெல்லியில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. அரியானா மாநிலத்தில் உள்ள சோனேபட் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள முனக்கால்வாயில் இருந்துதான் நாட்டின் தலைநகரான டெல்லிக்கு தண்ணீர் கொண்டு வரப்படுகிறது. போராட்டம் காரணமாக அந்த கால்வாயில் இருந்து |
| ஜனாதிபதி உரையுடன் பாராளுமன்ற பட்ஜெட் கூட்டம் நாளை தொடங்குகிறது Posted: 21 Feb 2016 08:58 PM PST பாராளுமன்றத்தின் பட்ஜெட் கூட்டத் தொடர் நாளை (செவ்வாய்க்கிழமை) காலை கூடுகிறது. கூட்டத்தில் 25–ந்தேதி (வியாழக்கிழமை) ரெயில்வே பட்ஜெட்டை ரெயில் மந்திரி சுரேஷ்பிரபு தாக்கல் செய்கிறார். 29–ந்தேதி (திங்கட் கிழமை) 2016–2017ம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட் |
| ஆட்டோவில் பெண் தவறவிட்ட தங்க நகைகளை போலீசாரிடம் ஒப்படைத்த டிரைவரின் நேர்மை Posted: 21 Feb 2016 08:17 PM PST மராட்டிய மாநில தலைநகரான மும்பையில் நேற்று மாலை ஆட்டோவில் சென்ற பெண் பயணி தவறவிட்ட தங்க நகைகளை காவல் நிலையத்தில் ஒப்படைத்த ஆட்டோ டிரைவரின் நேர்மையை போலீசாரும் நகைகளின் உரிமையாளரும் வெகுவாக பாராட்டினர். மும்பை பைகுல்லா பகுதியில் வசிக்கும் சஞ்சனா குப்தா என்ற பெண் நேற்று மாலை ஒரு ஆட்டோவில் ஏறி போரிவாலி (கிழக்கு) ரெயில் |
| பிரதமருக்கு கருப்புக் கொடி காட்ட முயன்ற இளைஞர் காங்கிரசார் கைது Posted: 21 Feb 2016 07:51 PM PST பிரதமர் நரேந்திர மோடிக்கு கருப்புக் கொடி காட்ட முயன்றதாக இளைஞர் காங்கிரஸ் அமைப்பைச் சேர்ந்த 35 தொண்டர்களை கொல்கத்தா நகர போலீசார் கைது செய்துள்ளனர். |
| பாகிஸ்தானில் இருந்து இந்தியா திரும்ப நடிகை ஷர்மிளா தாகூருக்கு அனுமதி மறுப்பு Posted: 21 Feb 2016 07:36 PM PST பழம்பெரும் இந்தி நடிகை ஷர்மிளா தாகூர் இலக்கிய விழாவில் பங்கேற்க 4 நாள் பயணமாக பாகிஸ்தான் சென்றார். தன்னுடைய பயணத்தை முடித்துக்கொண்டு லாகூரில் இருந்து வாகா எல்லை வழியாக இந்தியாவுக்கு ஷர்மிளா நேற்று செல்ல முயன்றார். அப்போது அவரை பாகிஸ்தான் குடியுரிமை அதிகாரிகள் தடுத்து நிறுத்தி சோதனை செய்தனர். ஷர்மிளாவிடம் பாகிஸ்தானில் தங்கி இருந்ததற்கான போலீஸ் அறிக்கை இ |
| பெங்களூருவில் வசிக்கும் அனைவரும் கன்னடமொழி பேசும் நிலை உருவாக வேண்டும்: சித்தராமையா Posted: 21 Feb 2016 07:06 PM PST பெங்களுருவில் ஆங்கில மொழியின் மோகம் அதிகரித்து விட்டதாகவும், பெங்களூருவில் வசிக்கும் அனைவரும் கன்னட மொழி பேசும் நிலை உருவாக வேண்டும் என்று முதல்-மந்திரி சித்தராமையா கூறினார். பெங்களூரு டவுன்ஹாலில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டு முதல்-மந்திரி சித்தராமையா பேசியதாவது:- கர்நாடகத்தின் ஆட்சி மொழியாக கன்னடம் இருக்கிறது. ஆனால் நம |
| கட்சிரோலியில் ஆற்றில் படகு கவிழ்ந்து விபத்து: 27 பேர் மீட்பு - 3 பேர் மாயம் Posted: 21 Feb 2016 06:56 PM PST கட்சிரோலி காலேஷ்வர் பி.எஸ். மகாதேவ்பூர் பகுதியில் பிராணத் என்ற ஆறு உள்ளது. இந்த ஆற்றின் இரு கரைகளை ஒட்டியும் 10-க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன. இங்குள்ள கிராமவாசிகள் ஆற்றின் மறுபக்கத்தில் உள்ள கிராமங்களுக்கு செல்லவேண்டும் எனில் படகுகளில் தான் செல்ல முடியும். இதற்காக ஆற்றின் இருபுறங்களிலும் படகுகள் நிறுத்தி |
| பல்கலைக்கழகங்களில் நாட்டை ஒன்றுபடுத்தும் கல்வியை போதிக்க வேண்டும்: குமாரசாமி Posted: 21 Feb 2016 06:38 PM PST ஆதிசுஞ்சனகிரியில் மடாதிபதி நிர்மலானந்தநாத சாமியின் முதலாம் ஆண்டு பட்டாபிஷேக விழாவையொட்டி, அறிவு மற்றும் அறிவியல் தொடர்பான கருத்தரங்கு நேற்று நடைபெற்றது. இதில் ஜனதாதளம்(எஸ்) கட்சியின் மாநில தலைவரும், முன்னாள் முதல்-மந்திரியுமான குமாரசாமி கலந்து கொண்டு பேசியதாவது:- சமுதாயத்தை உடைக்கும் பணியை யாரும் செய்யக்கூடாது. ஒவ்வொரு |
| பெங்களூருவில் சுற்றுப்புற விழிப்புணர்வு திருவிழா: மந்திரி ஆர்.வி.தேஷ்பாண்டே தொடங்கி வைத்தார் Posted: 21 Feb 2016 06:35 PM PST பெங்களூருவில், அதிகரித்து வரும் வாகனங்களினால் காற்று மற்றும் ஒலி அதிகளவில் மாசு அடைந்து சுற்றுச்சூழலுக்கு கேடு ஏற்படுகிறது. இதை கட்டுப்படுத்தும் வகையில் மாதந்தோறும் நகரின் முக்கிய சந்திப்புகளில் ஒரு நாள் மட்டும் வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்பட்டு 'சுற்றுப்புற விழிப்புணர்வு திருவிழா' நடைபெற்று வருகிறது. இந்த திருவிழா சமீபத்தில் எச்.எஸ்.ஆர். லே-அவுட் மற்றும் கமர்சியல் தெருவில் நடைபெற்றது. இந்த விழா பொதுமக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது. இதன் தொடர்ச்சியாக இந்த சுற்றுப்புற விழிப்புணர்வு திருவிழா பெங்களூரு எம்.ஜி.ரோட்டில் நடைபெற்றது. விழாவிற்கான ஏற்பாடுகளை பெங்க |
| திராவகம் வீசியதால் குரங்கு பலி: போலீஸ் விசாரணை Posted: 21 Feb 2016 06:35 PM PST மும்பை பாண்டுப் துல்சேட் பாடா பகுதியில் உள்ள குடியிருப்புகளில் குரங்குகள் புகுந்து பொதுமக்களை தொந்தரவு செய்து வருகின்றன. இந்தநிலையில் நேற்று முன்தினம் குரங்கு ஒன்று உடல் வெந்த நிலையில் அந்த பகுதியில் நடமாடி வருவதாக விலங்குகள் நல அமைப்பினருக்கு தகவல் கிடைத்தது. இதனை தொடர்ந்து 10-க்கும் மேற்பட்ட ஊழியர்கள் |
| எல்.இ.டி பல்புகளால் 421 மில்லியன் யூனிட் மின்சாரத்தை சேமிக்கும் ஆந்திர பிரதேசம் Posted: 21 Feb 2016 06:29 PM PST ஆந்திர பிரதேச மாநிலத்தில் எல்.இ.டி. பல்புகளை பயன்படுத்த மக்களிடம் தொடர்ந்து வலியுறுத்தப்பட்டு வந்தது. அங்குள்ள 13 மாவட்டங்களில் 4 மாவட்டங்களில் எல்.இ.டி பல்புகளை அரசு புழக்கத்திற்கு கொண்டு வந்தது. இதன் பயனாக, சென்ற ஆண்டில் 421 மில்லியன் யூனிட் மின்சாரத்தை |
| Posted: 21 Feb 2016 05:28 PM PST உயர் கோர்ட்டுகளில் நீதிபதிகளை நியமனம் செய்யும் புதிய நடைமுறையை மாநில அரசுகள் மற்றும் ஐகோர்ட்டுகளை கலந்து ஆலோசித்து எடுக்கும்படி மத்திய அரசை சுப்ரீம் கோர்ட்டு கடந்த ஆண்டு கேட்டுக் கொண்டது. சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி மற்றும் கொலீஜியம் உறுப்பினர்கள் இந்த நடைமுறையை தயாரிப்பதற்கான கூட்டத்துக்கு அழைக்கப்பட்டனர். |
| ஜாட் இனத்தவர் இடஒதுக்கீடு பிரச்சினை: வெங்கையா நாயுடு தலைமையில் கமிட்டி - மத்திய அரசு அறிவிப்பு Posted: 21 Feb 2016 05:07 PM PST அரியானா மாநிலத்தில் கணிசமாக வாழும் 'ஜாட்' இன மக்கள் தங்களை இதர பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் சேர்த்து இட ஒதுக்கீடு வழங்கக்கோரி தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகிறார்கள். இதனையடுத்து ஜாட் இனத்தலைவர்கள் அடங்கிய குழுவினர் நேற்று டெல்லியில் உள்துறை |
| டெல்லியில் முன்னாள் ராணுவ வீரர்கள் பேரணி Posted: 21 Feb 2016 04:51 PM PST டெல்லி நேரு பல்கலைக்கழக மாணவர்கள் பாராளுமன்ற தாக்குதல் தீவிரவாதி அப்சல் குருவின் நினைவு தினத்தை அனுசரித்து, கோஷங்களை எழுப்பிய சம்பவம் நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதுதொடர்பாக பல்கலைக்கழக மாணவர் தலைவர் கன்னையா குமார் கைது செய்யப்பட்டு உள்ளார். |
| சத்தீஷ்காரில் ஆடுகளை விற்று கழிவறை கட்டிய 104 வயது மூதாட்டி: மோடி பாராட்டு Posted: 21 Feb 2016 04:07 PM PST சத்தீஷ்கார் மாநிலத்தில் கிராமப்புறங்களுக்கு நகர்ப்புற வசதிகளை அளிக்கிற திட்டத்தை தொடங்கி வைக்க சென்ற பிரதமர் நரேந்திர மோடி, அங்கு குன்வர்ராய் என்ற 104 வயது மூதாட்டி, தனது ஆடுகளை விற்று கழிவறை கட்டி இருப்பதை மனமார பாராட்டினார். |
| You are subscribed to email updates from மாலை மலர் | தேசியச்செய்திகள். To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States | |