Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Tamil Star

Tamil Star


கனேடியர் உள்ளிட்ட நால்வரை விடுவிக்குமாறு வேண்டுகோள்

Posted: 16 Feb 2016 06:41 PM PST

ஐக்கிய அரபு இராட்யத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ள கனேடியர் உள்ளிட்ட நான்கு பேரையும் உடனடியாக விடுவிக்குமாறு ஐக்கிய நாடுகளின் மனித உரிமை விவகார நிபுணர்களால் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது. இவர்கள் ஒன்றறை வருடங்களாக தடுத்து வைக்கப்பட்டுள்ளதுடன், அவர்கள் சித்திரவதைக்கும் உள்ளாக்கப்படுவதாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது. லிபிய வம்சாவளியைச் சேர்ந்த கனேடிய வர்த்தகரான சலீம் அலறாடி கை செய்யப்பட்டதுடன், அவர் மீது மூன்று பயங்கரவாதக் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டிருந்தது. எனினும் அது தொடர்பான வழகு விசாரணைகளில் அவர் குற்றமற்றவா என உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது. இந்த […]

The post கனேடியர் உள்ளிட்ட நால்வரை விடுவிக்குமாறு வேண்டுகோள் appeared first on Tamil.com.

This posting includes an audio/video/photo media file: Download Now

50 புதிய TTC பேருந்துகள் இன்று முதல் சேவையில்

Posted: 16 Feb 2016 04:24 PM PST

h

hரொரன்ரோவின் வீதிப் போக்குவத்துப் பாதைகள் ஊடாக 50 புதிய TTC பேருந்துகள் இன்று முதல் சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.

2015 ஆண்டு கழகத்தினால் அனுபமதியளிக்கப்பட்ட 95 மில்லியன் முதலீட்டு அனுமதியின் ஒரு பகுதியாவே இந்த பேருந்துகளின் சேவைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

இது தொடர்பில் இன்று செவ்வாய்கிழமை காலையில் நகர பிரா யோன் ரொறியும், TTC தலைவரும் ஊடகங்களுக்கு தகவல் வெளியிடுகையில், எவ்வாறு போக்குவரத்து முதலீடுகள் ரொரன்ரோ முழுவதிலும் உள்ள பேருந்து பாதைகளினுடான சேவையை விரிவு படுத்தும் என்பது தொடர்பில் விளக்கமளித்துள்ளனர்.

இன்றைய நிலவரப்படி , நகர் முழுவதும் புதிய பேருந்துகள் சேவையில் உள்ளன என்றும், உச்ச வேலை நேரங்களில் அவற்றின் சேவைகள் அதிகரிக்கப்பட்டுள்ளதுடன் இந்த வருடத்தின் இறுதியில் மேலும் பேருந்துகள் சேவைக்கு வரும் என்றும் நகர பிதா யோன் ரொறி தெரிவித்துள்ளார்.

h
உச்ச போக்குவரத்து நெரிசல் நேரங்களில் சன நெரிசல்களைக் குறைப்பதற்கு இந்த முதலீடு உதவும் என்று TTC தெரிவித்துள்ளது. அவ்வாறு போக்குவரத்து நெரிசலான பேருந்து பாதைகளுள் 25 Don Mills, 111 East Mall, மற்றும் 16 McCowan என்பன அடங்குவதாகவும் அது கூறியுள்ளது.

ஐந்து பேருந்து பாதைகளூடான போக்குவத்து சேவைகளின் சேவைகளை மேம்படுத்தும் வகையில் அவற்றின் அட்டவணைகள் திருத்தம் செய்யப்பட உள்ளதாகவும், வேறு ஏழு பேருந்து போக்குவரத்துப் பாதைகள் ஊடான சேவைகளை வாரம் முழுவதும் அதிகரிக்கப்பட உள்ளதாகவும் அது தெரிவித்துள்ளது.

ஆயிரக்கணக்கான ரொரன்ரோ வாசிகள் வேலை, பாடசாலை போன்றவற்றிற்கு சென்று வருவதற்கு நாளாந்தம் பேருந்து போக்குவரத்தையே பயன்படுத்துகின்றனர் என்பதைக் சுட்டிக்காட்டுவது முக்கியமானது என குறிப்பிட்டுள்ள TTC தலைவர் Josh Colle, அதனாலேயே இந்த பேருந்துத்துறைக்கு முதலீடுகள் செய்யப்படுவதாகவும் கூறியுள்ளார்.

அத்துன் இது ஆரம்ப நிலையிலேயே உள்ளது என்றும், இன்னும் இரண்டு மாதங்களில் கடுகதி பேருந்துகள் புதிய பேருந்து பாதைகளில் நகர் முழுவதும் சேவைக்கு வருவதைப் அனைவரும் பார்க்க உள்ளனர் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

The post 50 புதிய TTC பேருந்துகள் இன்று முதல் சேவையில் appeared first on Tamil.com.

This posting includes an audio/video/photo media file: Download Now

சென் மைக்கல் மருத்துவமனையின் அவசர மருத்துவப் பிரிவு மூடப்பட்டுள்ளது

Posted: 16 Feb 2016 08:21 AM PST

ரொரன்ரோ டவுன்ரவுன் சென் மைக்கல் மருத்துவமனையில் அவசர மருத்துவப் பிரிவு மறு அறிவித்தல் வரை மூடப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அவசர மருத்துவப் பிரிவுப் பகுதியிலுள் வெள்ளம் ஏற்பட்டதன் காரணமாகவே அதனை மூட வேண்டிய நிலைமை ஏற்பட்டதாக கூறப்பட்டுள்ளது. மருத்துவமனையின் பிரதான நீர் வழங்கல் குழாயியில் வெடிப்பு ஏற்பட்டதனால் இந்த வெள்ள நிலைமை ஏற்பட்டுள்ளதாகவும், அதனால் அவசர மருத்துவ பிரிவு இயங்க முடியாது போயுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மருத்துவமனையின் மேல் மாடியில் அமைந்துள்ள அந்த பிரதான நீர் வழங்கல் குழாய் இன்று […]

The post சென் மைக்கல் மருத்துவமனையின் அவசர மருத்துவப் பிரிவு மூடப்பட்டுள்ளது appeared first on Tamil.com.

This posting includes an audio/video/photo media file: Download Now

பிரம்டனில் விபத்து – ஒருவர் பலி

Posted: 16 Feb 2016 08:12 AM PST

Countryside_crash_-_20160216

Countryside_crash_-_20160216பிரம்டன் பகுதியில் இரண்டு வாகனங்கள் மோதிக்கொண்ட விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

Countryside Drive மற்றும் Sunny Meadow Boulevard இற்கு அருகில் நேற்று இரவு 10 மணியளவில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

ரக் ரக வாகனம் ஒன்றும், கார் ஒன்றும் அந்த விபத்தில் சம்பந்தப்பட்டுள்ளன.

விபத்தில் உயிரிழந்த நபர் 18 வயதுடைய ஆண் என்றும், சம்பவ இடத்திலேயே அவர் உயிரிழந்து விட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் அவர் பிரம்டனைச் சேர்ந்தவர் என்று அடையாளம் காணப்பட்டுள்ளது.

எனினும் உயிரிழந்தவர் தொடர்பில் மேலதிக தகவல்கள் எதனையும் காவல்த்துறையினர் வெளியிடவில்லை.Countryside_crash_-_20160216

அதேவேளை ரக் ரக வாகனத்தை செலுத்தி வந்தவரும் விபத்தினால் பாதிக்கப்பட்டிருந்தார் என்றும், அவருக்கு ஏற்பட்டிருந்த காயங்களுக்கு சிகிச்சையளிப்பதற்காக அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனினும் அவருக்கு சிறிய காயங்களே ஏற்பட்டிருந்தன என்றும் கூறப்பட்டுள்ளது.

இந்த விபத்துக்கு வானிலையே காரணம் என நம்புவதாக விசாரணையாளர்கள் தெரிவித்துள்ளனர்.

The post பிரம்டனில் விபத்து – ஒருவர் பலி appeared first on Tamil.com.

This posting includes an audio/video/photo media file: Download Now

கொக்கோ வெண்ணெய் சாப்பிட்டால் ஆரோக்கியமா?

Posted: 16 Feb 2016 07:33 AM PST

juy

juyவெண்ணெய் மற்றும் கொக்கோ பற்றி அறிந்திருக்கிற அளவுக்கு கொக்கோ வெண்ணெய் பற்றி அறிந்திருக்க வாய்ப்பில்லை.

கொக்கோ வெண்ணெய்யை அதிகமாக சொக்லேட், அழகு பொருட்கள் மற்றும் சில மருந்துப்பொருட்களில் பயன்படுத்தப்படுகின்றன.

தோல் பராமரிப்பு, நோயெதிர்ப்பு சக்தி, வயதான காலத்தில் ஏற்படும் பிரச்சனைகள் போன்றவற்றிலிருந்து பாதுகாக்கிறது.

மேலும், விட்டமின் கே மற்றும் விட்டமின் இ போன்றவையும் அடங்கியுள்ளன.

கொக்கோ பீன்ஸில் இருந்து கொக்கோ வெண்ணெய் தயாரிக்கப்படுகிறது, எனவே இதன் சுவை, மணம் இரண்டும் கொக்கோ பீன்ஸினை போன்றே இருக்கும்.juy

 

மருத்துவ பயன்கள்

கொக்கோ வெண்ணெய்யை சமையலுக்கு பயன்படுத்தலாம், ஆனால் இதில் அதிக கலோரி இருப்பதால் உடல் எடையை குறைக்க நினைப்பவர்கள் தவிர்ப்பது நல்லது.

அதிக அளவில் ஆன்டி ஆக்ஸிடண்ட்களான oleic acid, palmitic acid மற்றும் stearic acid இருப்பதால், இவை Radicals - களை உடல் முழுவதும் உருவாக்குகிறது.

தோலில் ஏற்பட்டுள்ள சுருக்கங்கள், வயதான தோற்றத்தில் ஏற்படும் தடிப்புகள் போன்றவற்றிற்கு இந்த கொக்கோ வெண்ணெய்யை சாப்பிட்டால் தோல் பளபளப்பாகும்.

மேலும், இதில் உள்ள ஆன்டி ஆக்ஸிடண்ட்கள், வெளியிடங்களுக்கு நாம் செல்லும்போது ஏற்படும் சுற்றுச்சூழலால் தோல்களில் ஏற்படும் பாதிப்புகளிலிருந்து தடுக்கிறது.

தலைமுடி உதிர்தல், பொடுகு தொல்லை போன்ற பிரச்சனைகளுக்கு தீர்வு தருகிறது.

சொரியாஸிஸ், தோல் அலர்ஜி, அரிப்பு, தோல் தடிப்பு உள்ள இடங்களில் கொக்கோ வெண்ணெய்யை தடவினால் நிவாரணம் கிடைக்கும்.

குறிப்பு

கொக்கோ வெண்ணெய் அதிக கொழுப்பு நிறைந்த ஒன்றாகும், எனவே இதனை அதிகம் சாப்பிட்டால் உடற்பருமன் அதிகரிக்கும், அதுமட்டுமின்றி இதய நோயாளிக இதனை தவிர்ப்பது முக்கியமான ஒன்றாகும்.5

The post கொக்கோ வெண்ணெய் சாப்பிட்டால் ஆரோக்கியமா? appeared first on Tamil.com.

This posting includes an audio/video/photo media file: Download Now

நல்ல உடல் பலத்தோடு இருக்க இந்த உணவுகளை சாப்பிடுங்கள்!

Posted: 16 Feb 2016 07:30 AM PST

4

jmநாள் முழுவதும் நல்ல பலத்தோடு சுறுசுறுப்பாக இயங்க வேண்டுமெனில் ஆரோக்கியமான உணவுகளை சாப்பிட வேண்டியது அவசியம்.

நம்மால் சுறுசுறுப்பாக இயங்க முடியாமல் இருப்பதற்கு முதல் காரணம் ஹீமோகுளோபின் குறைவு தான்.

உடலின் பாகங்கள் சுறுசுறுப்பாக இயங்கமுடிவதில்லை, உடல் களைப்பு அடைகிறது, இதனால் களைப்பு நீங்கி பலம் கொடுக்கும் உணவுகளை உண்ண வேண்டும்.

பேரீச்சம்பழம்

பேரீச்சம்பழத்தில் இரும்புசத்து அதிகம் உள்ளது. எந்த காரணத்தினால் உடல் இளைத்து இருந்தாலும் பேரீச்சம்பழத்தை முறையாக உணவோடு சேர்த்து எடுத்துக்கொண்டால் மெலிந்த உடல் தேறும். களைப்பு நீங்கும், தாது விருத்தியும் பலமும் உண்டாகும்.h

முருங்கை

முருங்கையை நறுக்கி மிளகு ரசத்தில் போட்டு கொதிக்க வைத்து உணவுடன் சேர்த்துச் சாப்பிட்டு வந்தால் கை கால்கள் உடல் அசதிகள் நீங்கும். உடலில் பலமும் ஏறும்.

உடலைத் தேற்றும் நல்ல உணவாகும்.3

அருகம்புல்

அருகம்புல்லை வேரோடு பறித்து சுத்தம் செய்து சிறிது தண்ணீர் சேர்த்து அம்மியில் வைத்து மை போல அரைத்து சம அளவு வெண்ணெய் கலந்து காலை மாலை என நீண்ட நாட்கள் சாப்பிட்டு வர உடலில் பலம் ஏறும்.jm

வெந்தயக்கீரை

வெந்தயக்கீரையை அடிக்கடி சமைத்து சாப்பிடுவது நல்லது. உடலுக்கு பலத்தைக் கொடுக்கும். கண் சம்பந்தமான கோளாறுகள் நீங்கும். பார்வை தெளிவடையும். சொரி சிறங்கை அகற்றும் மேலும் அஜீரணத்தை போக்கும்.4

வேப்பம்பூ

வேப்பம்பூ , நிலவேம்பு ஒரு அவின்ஸ், எடுத்து இரண்டையும் நன்றாக நசுக்கி அதில் 1 டம்ளர் கொதிக்கும் நீரை ஊற்றி வைத்துவிட்டு இரண்டு மணி நேரத்திற்கு பிறகு வடிகட்டி வேளைக்கு 2 அவுன்ஸ் வீதம் சாப்பிட்டு வர பலவீனங்களும் காய்ச்சலுக்கு பின் உண்டாகும் பலவீனங்களும் சரியாகிவிடும்.rt

The post நல்ல உடல் பலத்தோடு இருக்க இந்த உணவுகளை சாப்பிடுங்கள்! appeared first on Tamil.com.

This posting includes an audio/video/photo media file: Download Now



Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™