Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Tamil News | Online Tamil News

Tamil News | Online Tamil News


உ.பி.,யில் முதல்வர் வேட்பாளர் யார்? முடிவெடுக்க முடியாமல் தவிக்கும் பா.ஜ.,

Posted: 07 Feb 2016 07:33 AM PST

லக்னோ:உ.பி.,யில், அடுத்தாண்டு நடக்கவுள்ள சட்டசபைத் தேர்தலை எதிர்கொள்ளத் தயாராகி வரும் பா.ஜ., முதல்வர் வேட்பாளரை தேர்வு செய்ய முடியாமல் குழப்பத்தில் சிக்கித் தவித்து வருகிறது.பீஹாரில், சமீபத்தில் நடந்த சட்டசபைத் தேர்தலில், முதல்வர் வேட்பாளரை அறிவிக்காமல் களமிறங்கிய பா.ஜ., படுதோல்வியை சந்திக்க நேரிட்டது. அந்த நிலை மீண்டும் ஏற்படக்கூடாது எனக் கருதிய பா.ஜ., தலைவர்கள், இந்தாண்டு சட்டசபைத் தேர்தல் நடக்கவுள்ள அசாம் மாநிலத்தில், முதல்வர் வேட்பாளராக, மத்திய அமைச்சர் சர்பானந்தா சோனாவல் பெயரை, சிறிதும் தாமதிக்காமல் அறிவித்துள்ளனர்.

மத்தியில், ...

எத்தனை நாள் 'லீவு' எடுத்தார் மோடி? வெட்டி கேள்விகளால் திணறும் பி.எம்.ஓ.

Posted: 07 Feb 2016 07:44 AM PST

புதுடில்லி:அரசு அதிகாரிகள் மற்றும் அரசியல்வாதிகளின் பொறுப்புணர்வை அதிகரிக்கச் செய்யும் நோக்கில் இயற்றப்பட்ட தகவல் உரிமைச் சட்டத்தின் கீழ், பிரதமர் நரேந்திர மோடி தொடர்பாக, கேட்கப்படும் முக்கியத்துவமற்ற கேள்விகளுக்கு பதில் அளிக்க முடியாமல், பிரதமர் அலுவலகம் திணறி வருகிறது. பி.எம்.ஓ., எனப்படும், பிரதமர் அலுவலகத்திடம், ஆர்.டி.ஐ., எனப்படும், தகவல் உரிமைச் சட்டத்தின் கீழ் எழுப்பப்பட்ட சில கேள்விகள்: *பிரதமர் மோடி பயன்படுத்தும், 'இன்டர்நெட்' இணைப்பு வேகம் என்ன?*மோடி, தன்னை பிரதமர் அல்ல என்றும், பிரதான ...

அமெரிக்கா, ஐ.நா., எதிர்ப்புகளை வட கொரியா கண்டுகொள்ளவில்லை: செயற்கைக்கோளை விண்ணில் நிலைநிறுத்தியது

Posted: 07 Feb 2016 08:07 AM PST

சியோல்:ஏற்கனவே கடந்த மாதம், 6ம் தேதி, அணுகுண்டு சோதனை நடத்தியதற்காக, உலக நாடுகள் மற்றும் ஐ.நா.,வின் கடும் கண்டனத்திற்கு ஆளாகியுள்ள வட கொரியா, அதைப் பற்றி கொஞ்சமும் கவலைப்படாமல், நேற்று, ராக்கெட்டை செலுத்தி, செயற்கைக்கோள் ஒன்றை, விண்ணில் நிலை நிறுத்தியுள்ளது.இதை அறிந்த, அதன் எதிரி நாடுகளான, அமெரிக்கா, ஜப்பான் மற்றும் தென் கொரியா, 'உடனடியாக, ஐ.நா., சபையை கூட்டி, வட கொரியா மீது பொருளாதார தடை விதிக்க வேண்டும்' என,வலியுறுத்தியுள்ளன.எனினும், தன் நீண்ட கால எதிரி நாடான அமெரிக்காவை, பேச்சுக்கான மேஜைக்கு கொண்டு வருவதற்கான முயற்சியாக இந்த ராக்கெட் ஏவுதலை கருதியுள்ள ...

திருநங்கையருக்கு வருது பாதுகாப்பு: மோசமாக நடத்துபவர்களுக்கு சிறை

Posted: 07 Feb 2016 08:34 AM PST

புதுடில்லி:மூன்றாம் பாலினமாக அங்கீகரிக்கப்பட்டுள்ள திருநங்கையருக்கு சலுகைகளை அள்ளித் தரும், திருநங்கையர் சட்ட மசோதா - 2015, விரைவில் நிறைவேற உள்ளது. மத்திய சமூக நீதித்துறை ஏற்பாட்டின் படி, புதிய சலுகைகளுடன் தயாராகியுள்ள திருநங்கையர் வரைவு மசோதா, அனைத்து துறைகளின் ஒப்புதலையும் பெற்றுள்ளது. இம்மசோதா, இன்னும் சில நாட்களில் சட்ட அமைச்சகத்திற்கு அனுப்பி, வரும் பட்ஜெட் கூட்டத்தொடர் பார்லிமென்டில் தாக்கலாகி நிறைவேற்றப்பட உள்ளது.அதன் பின், திருநங்கையரை கேலி, கிண்டல் செய்பவர்கள், மோசமாக நடத்துபவர்களுக்கு சிறை தண்டனை கிடைக்கும்.அதற்கு வசதியாக, ...

மருத்துவ படிப்பில் சேர பொது நுழைவு தேர்வு?

Posted: 07 Feb 2016 09:39 AM PST

புதுடில்லி:தேசிய அளவில் பொது மருத்துவ நுழைவுத் தேர்வு நடத்தும் திட்டத்துக்கு மத்திய சுகாதாரத்துறை ஒப்புதல் அளித்துள்ளது. ஐ.எம்.சி., எனப்படும் இந்திய மருத்துவ கவுன்சில் மருத்துவ கல்வியை கட்டுப்படுத்தும் அமைப்பாக செயல்படுகிறது. மருத்துவ கல்லுாரிகளில் சேர தேசிய அளவில் பொது மருத்துவ நுழைவுத் தேர்வு நடத்தும் திட்டத்தை ஐ.எம்.சி., முன்வைத்துள்ளது.இத்திட்டத்துக்கு மத்திய சுகாதாரத்துறை ஒப்புதல் வழங்கி உள்ளது. இதுபற்றி பிற அமைச்சகங்களின் கருத்துகளை பெறுவதற்காக சுகாதாரத்துறை அமைச்சர் ஜே.பி.நட்டா சுற்றறிக்கை அனுப்பி உள்ளார். விரிவான ...

சொந்த தொகுதியில் போட்டியிட அமைச்சர்கள் பலர் கலக்கம்: எட்டிப் பார்க்காததால் மக்கள் கவிழ்த்து விடுவரோ என பீதி

Posted: 07 Feb 2016 09:40 AM PST

தொகுதி மக்களை எட்டிப் பார்க்காதது உட்பட, பல பிரச்னைகள் சூழ்ந்து நிற்பதால், தமிழக அமைச்சர்கள் பலர், இம்முறை சொந்தத் தொகுதியில் போட்டியிடும் விஷயத்தில் கலக்கம் அடைந்துள்ளனர். மக்கள் கவிழ்த்து விடலாம் என்ற அச்சத்தில், தொகுதி மாறவும் விரும்புகின்றனர். இருப்பினும், அதை எப்படி கட்சித் தலைமையிடம் சொல்வது என, புரியாமல் தவிக்கின்றனர். தமிழக அமைச்சரவையில், முதல்வர் ஜெயலலிதா தலைமையில், 28 அமைச்சர்கள் உள்ளனர். இவர்கள் அனைவரும், வரும் தேர்தலில் எப்படியாவது, 'சீட்' பெற்று விட வேண்டும் என்ற முனைப்புடன் உள்ளனர். அதேநேரத்தில், 2011 சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்ற ...

'நேஷனல் ஹெரால்டு' வழக்கு: சோனியா, ராகுலுக்கு தொடர்பு இல்லை - காங்., இணையதளத்தில் விளக்கம்

Posted: 07 Feb 2016 09:42 AM PST

புதுடில்லி:'நேஷனல் ஹெரால்டு' பத்திரிகை நிறுவனம் தொடர்பாக காங்கிரஸ் தலைவர் சோனியா, துணை தலைவர் ராகுல் மீது வழக்கு தொடரப்பட்ட நிலையில், இந்த விவகாரம் குறித்து, காங்கிரஸ் இணையதளத்தில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. 'நேஷனல் ஹெரால்டு பத்திரிகையை நடத்தும் அசோசியேட்டட் ஜர்னல் நிறுவனத்துக்கு, காங்., கட்சி 90 கோடி ரூபாய் கடன் அளித்தது. இந்த நிறுவனத்தின் பங்குகளை, சோனியா, ராகுல் இயக்குனர்களாகஇருக்கும், யங் இந்தியா நிறுவனம் விலைக்கு வாங்கியது; இவற்றில் முறைகேடு நடந்துள்ளது' என, பா.ஜ., மூத்த தலைவர் சுப்பிரமணியன் சாமி வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு, ...

தமிழக - இலங்கை மீனவர்கள் விரைவில் மீண்டும் பேச்சு?

Posted: 07 Feb 2016 09:47 AM PST

வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜின் இலங்கை பயணத்தைத் தொடர்ந்து, தமிழகம் - இலங்கை மீனவர் பிதிநிதிகளின் பேச்சு, விரைவில் நடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.மீன் பிடித்தல் தொடர்பாக, தமிழகம் - இலங்கை மீனவர்களிடையே, 30 ஆண்டுகளுக்கும் மேலாக பிரச்னை நீடித்து வருகிறது. இதற்கு தீர்வு காணும் விதமாக, அதிகாரிகள் முன்னிலையில், இரு நாட்டு மீனவ பிரதிநிதிகளும் சந்தித்த, மூன்று கட்ட பேச்சு நடந்தன.'பாக்., நீரிணைப்பகுதியில், ஆண்டுக்கு, 90 நாட்கள் மீன் பிடிக்க அனுமதி தர வேண்டும்' என்ற கோரிக்கையை, இலங்கை மீனவர்கள் ஏற்காததால், பேச்சில் முன்னேற்றம் ...

கூட்டணி விவகாரம்: கருணாநிதி - ஸ்டாலின் மல்லுக்கட்டு

Posted: 07 Feb 2016 09:53 AM PST

சட்டசபை தேர்தல் கூட்டணி விவகாரத்தில், கருணாநிதிக்கும், ஸ்டாலினுக்கும் இடையே மல்லுக்கட்டு நடப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

தமிழக சட்டசபை தேர்தல் களம் சூடுபிடிக்கத் துவங்கி உள்ளது. அதனால், கூட்டணி அமைப்பதற்காக, தமிழகத்தின் பிரதான கட்சிகளான, தி.மு.க., மற்றும் அ.தி.மு.க.,வில் ரகசிய பேச்சுகள் துவங்கி உள்ளன. அ.தி.மு.க.,வைப் பொறுத்தவரை, அக்கட்சியின் தலைமை என்ன நினைக்கிறதோ, அதை ஏற்றுக் கொள்வோர் மட்டுமே கூட்டணி பேச்சில் பங்கேற்க முடியும்.ஆனால், தி.மு.க.,வில் அப்படியில்லை. கூட்டணி சேரும் கட்சிகள், தொகுதிகளை நிறைய கேட்டு, கடைசி வரை பலம் பார்ப்பது ...

தங்கும் விடுதிகளை ஆக்கிரமித்த அதிகாரிகள்: கும்பகோணத்தில் வாடகை 3 மடங்கு உயர்வு

Posted: 07 Feb 2016 11:24 AM PST

தஞ்சாவூர்: மகாமகத்தை முன்னிட்டு, கும்பகோணம் அதன் சுற்றுப் பகுதிகளில் உள்ள தங்கும் விடுதிகளில், 50 சதவீத அறைகளை அரசு அதிகாரிகளே ஆக்கிரமித்துள்ளதால், விடுதிகளில் வாடகை, மூன்று மடங்காக உயர்ந்துள்ளது.தஞ்சை மாவட்டம், கும்பகோணத்தில் வரும், 13 முதல், 22ம் தேதி வரை, 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடக்கும், மகாமக பெருவிழா நடக்க உள்ளது. நாடு முழுவதும் இருந்து, 40 லட்சம் பக்தர்கள் புனித நீராடுவர் என, எதிர்பார்க்கப்படுகிறது.கும்பகோணத்தைச் சுற்றியுள்ள, 100க்கும் மேற்பட்ட தங்கும் விடுதிகளில், 5,000க்கும் மேற்பட்ட அறைகள் உள்ளன. இவற்றில், மகாமகத்திற்கு வரவிருக்கும் உயர் ...

சீருடைகளில் மாற்றம் தேவை; பெண் போலீசார் எதிர்பார்ப்பு

Posted: 07 Feb 2016 02:40 PM PST

புதுடில்லி : 'மத்திய துணை ராணுவப் படையில், கான்ஸ்டபிள் பதவிகளில், 33 சதவீதம், பெண்களுக்கு ஒதுக்கப்படும்' என, மத்திய அரசு தெரிவித்துள்ளது; இதை மாநில அரசுகளும் பின்பற்ற வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளது.

இந்நிலையில், பெண் போலீசாக பணியாற்றி வருபவர்களிடம், பணியில் அவர்கள் சந்திக்கும் பிரச்னைகள் குறித்து ஆய்வு நடத்தப்பட்டது. இந்த ஆய்வறிக்கை, சமீபத்தில், அரியானா மாநிலம், குர்கானில் நடந்த, பெண் போலீஸ் தேசிய மாநாட்டில் சமர்பிக்கப்பட்டது; அதில் கூறப்பட்டுள்ளதாவது:
பணியில் இருக்கும் போது, இயற்கை உபாதைகளை கழிக்க தனியிடம் இல்லாததால், ...



Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™