Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Tamil News | Online Tamil News

Tamil News | Online Tamil News


ஊழியர்களுக்கு கட்டுப்பாடுஇஷ்டத்திற்கு 'லீவ்' எடுத்தால் சம்பளம் 'கட்'

Posted: 04 Feb 2016 07:15 AM PST

தமிழக அரசின் பணியாளர் நிர்வாக சீர்திருத்தத் துறை செயலர் டேவிதார், அனைத்து துறை செயலர்கள் மற்றும் துறை தலைவர்களுக்கு அனுப்பியுள்ள கடிதம்:

அரசு ஊழியர்கள் பணி செய்யாமல், அனுமதிக்கப்பட்ட விடுப்பு நாள் முடிந்த பின்னும், நீண்ட விடுப்பில் இருந்தால், அவர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டும். இப்பணியை, ஒழுங்கு நடவடிக்கை குழு விரைவாக மேற்கொள்ள வேண்டும். ஒழுங்கு நடவடிக்கை குழு நடவடிக்கை எடுக்கும் முன், சம்பந்தப்பட்ட ஊழியர் பணியில் சேர விரும்பினால், அவரை அனுமதிக்கலாம்.
ஆனால், ஒழுங்கு நடவடிக்கை தொடர்பான
விவரம், ...

முதல்வர் ஜெ., போட்டியிடும் தொகுதி எது?

Posted: 04 Feb 2016 08:34 AM PST

வரும் சட்டசபை தேர்தலில், முதல்வர் ஜெயலலிதா, எந்தத் தொகுதியில் போட்டியிடுவார் என்ற எதிர்பார்ப்பு, அனைத்து தரப்பினரிடமும் எழுந்துள்ளது.

இதுவரை, ஏழு சட்டசபை தேர்தலில் போட்டியிட்டு, ஆறு முறை வெற்றி பெற்றுள்ளார் அவர்.கடந்த, 2011 சட்டசபை தேர்தலின் போது, திருச்சி மாவட்டம், ஸ்ரீரங்கம் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார், முதல்வர் ஜெயலலிதா. அதன்பின், சொத்து குவிப்பு வழக்கில், பெங்களூரு தனி நீதிமன்றம் விதித்த தண்டனையால், அந்த தொகுதி எம்.எல்.ஏ., பதவி பறிபோனது. இதையடுத்து, சொத்து குவிப்பு வழக்கிலிருந்து, கர்நாடக உயர் நீதிமன்றத்தால் விடுவிக்கப்பட்டதை ...

சுப்ரீம் கோர்ட்டில் சோனியா, ராகுல் மனு

Posted: 04 Feb 2016 09:02 AM PST

புதுடில்லி:'நேஷனல் ஹெரால்டு' வழக்கில், நேரில் ஆஜராகும்படி, தங்களுக்கு அனுப்பப் பட்டுள்ள, சம்மனை ரத்து செய்யக்கோரி, காங்கிரஸ் தலைவர் சோனியா, துணைத் தலைவர் ராகுல் உள்ளிட்டோர், சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்துள்ளனர்.

'நேஷனல் ஹெரால்டு' பத்திரிகை நிறுவனத்தின் சொத்துகளை அபகரித்ததாக, காங்., தலைவர் சோனியா, துணைத் தலைவர் ராகுல் உள்ளிட்டோருக்கு எதிராக, பா.ஜ., மூத்த தலைவர் சுப்பிரமணியன் சாமி, 2012ல், வழக்கு தொடர்ந்தார்.இதை விசாரித்த டில்லி கோர்ட், நேரில் ஆஜராகும்படி சோனியா, ராகுல் உள்ளிட்டோருக்கு, சம்மன் அனுப்பியது.இதை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட ...

அ.தி.மு.க., ஆட்சிக்கு விடையளிக்க ஒரு நிமிடம் போதும்: கருணாநிதி

Posted: 04 Feb 2016 09:22 AM PST

சென்னை,: 'அ.தி.மு.க., ஆட்சியின் வேதனைகளுக்கு விடையளிக்க, வாக்கு சாவடியில் ஒரு நிமிடம் போதும்' என, தி.மு.க., தலைவர் கருணாநிதி கூறியுள்ளார்.

அவரது அறிக்கை:அ.தி.மு.க., சாதனைகளை கூற, 36 நாட்கள் தேவைப்படும் என,முதல்வர் ஜெயலலிதா கூறியுள்ளார்; உண்மை தான். அ.தி.மு.க., ஆட்சியில் என்ன சாதனை செய்யப்பட்டது என்பதை, யோசித்து தானே சொல்ல முடியும்!அது பற்றி யோசிக்க,36 நாட்கள் போதாது என்றால், அவரது ஆட்சியில் மக்கள் படும் வேதனைகளை சொல்ல, 365 நாட்களும் போதாது. ஆனால், இந்த சாதனைகளுக்கெல்லாம் தகுந்த விடையளிக்க, ஓட்டுச்சாவடியில் ஒரு நிமிடம் போதும்.இவ்வாறு கருணாநிதி ...

பஞ்சாயத்துகளில் மகளிருக்கான இடஒதுக்கீடு 50 சதவீதமாக...உயர்கிறது!

Posted: 04 Feb 2016 10:07 AM PST

புதுடில்லி: 'பார்லிமென்ட் மற்றும் சட்டசபைகளில் பெண்களுக்கு 33 சதவீத இட ஒதுக்கீடு வழங்க வேண்டும்' என்ற கோரிக்கை வலுத்து வரும் நிலையில், பஞ்சாயத்து தேர்தல்களில் பெண்களுக்கான இட ஒதுக்கீட்டை 33 சதவீதத்தில் இருந்து 50 சதவீதமாக உயர்த்த, பட்ஜெட் கூட்டத் தொடரில் சட்டம் இயற்றப்பட உள்ளது.

அத்துடன் வரும் 25ல் ரயில்வே பட்ஜெட்டும், 29ல் பொது பட்ஜெட்டும் பார்லிமென்டில் தாக்கல் செய்யப்படுகிறது.பஞ்சாயத்துராஜ் சட்டம் குறித்த இரண்டு நாள் மாநாடு டில்லியில் நேற்று துவங்கியது. இதில் பஞ்சாயத்து அமைப்புகளில் பெண்களுக்கான இட ஒதுக்கீட்டை அதிகரிப்பது குறித்து ...

'கெய்ல்' குழாய் திட்ட அனுமதி சீராய்வு மனு தாக்கல் செய்ய தமிழக அரசு முடிவு

Posted: 04 Feb 2016 10:23 AM PST

சென்னை: 'கெய்ல் நிறுவனத்தின், இயற்கை எரிவாயு குழாய் பதிக்கும் திட்டத்தை தடை செய்ய முடியாது' என, சுப்ரீம் கோர்ட் அளித்த தீர்ப்பிற்கு எதிராக, சீராய்வு மனு தாக்கல் செய்ய, தமிழக அரசு முடிவு செய்துள்ளது.

கேரளா மாநிலம்,கொச்சியில் இருந்து, கோவை, திருப்பூர்,ஈரோடு, நாமக்கல், சேலம், கிருஷ்ணகிரி, தர்மபுரி மாவட்டங்கள் வழியாக, பெங்களூருக்கு, பிரமாண்ட குழாய்கள் மூலம், இயற்கை எரி வாயுவை கொண்டு செல்லும் திட்டத்தை, 2012ல், 'கெய்ல்' நிறுவனம் துவக்கியது.
* குழாய் அமைக்கப்படும் விவசாய நிலத்தில், குழாயில் இருந்து இருபுறமும், தலா, 6 மீ., வரை, விவசாயப் பணிகள் ...

டி.என்.பி.எஸ்.சி., உறுப்பினர் நியமனம்: தமிழக அரசு பதிலளிக்க 'நோட்டீஸ்'

Posted: 04 Feb 2016 10:25 AM PST

சென்னை: டி.என்.பி.எஸ்.சி.,க்கு, 11 உறுப்பினர்களை நியமித்து, தமிழக அரசு, ஜன., 31ல் அரசாணை பிறப்பித்தது.

இந்த அரசாணையை எதிர்த்து, சமூக நீதிக்கான வழக்கறிஞர் பேரவை தலைவரும், பா.ம.க., செய்தி தொடர்பாளருமான கே.பாலு, உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு:
அரசு பணியாளர் தேர்வாணையம் என்பது, அரசியல் சாசனத்தின் கீழ் ஏற்படுத்தப்பட்ட அமைப்பு. அரசு பணிகளுக்கு, நேர்மையான முறையில் ஆட்களைதேர்வு செய்வதற்காக துவங்கப்பட்ட இந்த அமைப்பு, சுதந்திரமாகச் செயல்பட வேண்டும்.
நியமிக்கப்பட்ட உறுப்பினர்களில் பெரும்பாலானோர் ஆளுங்கட்சியைச் ...

40 சதவீத தொகையைசெலவழிக்காத ராணுவம்

Posted: 04 Feb 2016 10:59 AM PST

புதுடில்லி: இந்த மாத இறுதியில், பார்லிமென்டில் தாக்கல் செய்யப்பட உள்ள மத்திய பட்ஜெட்டில், ராணுவத்திற்கு பல ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்கப்படும் என எதிர்பார்க்கப்படும் நிலையில், நடப்பு நிதியாண்டிற்காக ஒதுக்கப்பட்ட நிதியில், 40 சதவீத தொகையான, 37 ஆயிரம் கோடி ரூபாயை, பாதுகாப்புத்துறை செலவழிக்காமல் வைத்துள்ள தகவல் வெளியாகிஉள்ளது.

* நடப்பு நிதியாண்டிற்காக, கடந்த பட்ஜெட்டில்,
93 ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்கப்பட்ட நிலையில், 45 சதவீத நிதி மட்டுமே பயன்படுத்தப்பட்டுள்ளது; 40 சதவீதம், இன்னும் ...

இன்று விடுதலை ஆவாரா 'விக்கிலீக்ஸ்' அசாஞ்ச்?

Posted: 04 Feb 2016 11:39 AM PST

லண்டன் : பல நாடுகளின் ரகசிய கோப்புகளை அம்பலப்படுத்திய, 'விக்கிலீக்ஸ்' நிறுவனர் ஜுலியன் அசாஞ்ச், துாதரக சிறைவாசத்தில் இருந்து விடுதலை ஆவாரா, இல்லையா என்பது இன்று தெரிந்து விடும்.
சுவீடனைச் சேர்ந்தவர், ஜூலியன் அசாஞ்ச்; இவர், விக்கிலீக்ஸ் என்ற பெயரில் செயல்படும், ஊடக இணையதளத்தின் நிறுவனர். அமெரிக்கா, இந்தியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளின் லட்சக்கணக்கான ரகசிய கோப்புகளை, இந்த இணையதளத்தில் வெளியிட்டு, பரபரப்பை ஏற்படுத்தியவர்.அதற்காக, இவரை கைது செய்ய, அமெரிக்க அரசு, பல வகையில் முயன்று வருகிறது. மேலும், பாலியல் பலாத்கார குற்றச்சாட்டுகள் ...

பொருள் உற்பத்தியில் முன்னணி சீனாவுக்கு அமெரிக்கா செக் :12 நாடுகளுடன் இணைந்து பிரம்மாண்ட வர்த்தக ஒப்பந்தம்

Posted: 04 Feb 2016 12:02 PM PST

ஆக்லாந்து:பசிபிக் கடல் பகுதியில் அமைந்துள்ள, 12 நாடுகளை உள்ளடக்கிய, உலகின் மிகப் பெரிய பன்னாட்டு வர்த்தக ஒப்பந்தமாகக் கருதப்படும், 'டிரான்ஸ் பசிபிக் பார்ட்னர்ஷிப்' எனப்படும், டி.பி.பி., ஒப்பந்தம், நியூசிலாந்து நாட்டின் ஆக்லாந்து நகரில் நேற்று கையெழுத்தானது. உலகம் முழுவதும் பரவியுள்ள, சீனாவின் பொருள் மற்றும் முதலீட்டு சந்தைகளை தகர்க்க வேண்டும் என்ற, அமெரிக்காவின் விருப்பத்தின் படி இந்த ஒப்பந்தம் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

பொருளாதாரம் வளர்ச்சி அடையும்!* ஒப்பந்தத்தில் கையொப்பம் இட்டுள்ள நாடுகளுக்கு இடையே, தடையற்ற, வரிகள் அதிகம் இல்லாத, ...



Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™