Tamil News | Online Tamil News |
- குவியும் அடுக்கடுக்கான புகார் மனுக்கள் அமைச்சர்கள் மீது தலைமை அதிர்ச்சி
- கனிமொழியை கண்காணிக்க உத்தரவு, உளவுத்துறை அறிக்கையால் நடவடிக்கை
- தமிழக அரசு போக்குவரத்து கழகங்களின் மொத்த நஷ்டம்... ரூ.3,000 கோடி பஸ் பாஸ் வழங்கிய வகையில் அரசு பாக்கி ரூ.1,600 கோடி
- சூரிய சக்தி மின்சாரம் 'தமிழகத்தின் கொள்கை தவறானது'
- சொட்டு தண்ணீரையும் வீணாக்காதீங்க! விவசாயிகளுக்கு மோடி 'அட்வைஸ்'
- சிரியாவில் அமலாகியுள்ள சண்டை நிறுத்தம்...நீடிக்குமா? பலமுனை தாக்குதலால் அமைதி நிலவுவதில் சிக்கல்
- ஸ்மிருதி பேச்சு: மாயாவதிக்கு அவல் உ.பி., தேர்தலை கலக்க அதிரடி திட்டம்
- 'எல்லாத்துக்கும் பணம் வாங்கும் அமைச்சர்':'வாட்ஸ் ஆப்'பில் வாக்குமூலம்
- விஜயகாந்தின் மூன்று முக ஆட்டத்தால் அரசியல் கட்சிகள்... எரிச்சல்!
- தடை பட்டியலில் மசூத் அசார் ஐ.நா.,விடம் இந்தியா வலியுறுத்தல்
- சமத்து மாணவர்களுக்கு பரிசு மத்திய அமைச்சர் அறிவிப்பு
| குவியும் அடுக்கடுக்கான புகார் மனுக்கள் அமைச்சர்கள் மீது தலைமை அதிர்ச்சி Posted: 27 Feb 2016 06:25 AM PST அ.தி.மு.க., தொண்டர்கள் மற்றும் நிர்வாகிகள், அமைச்சர்கள் மீது அடுக்கடுக்கான புகார் மனுக்களை அனுப்பி வருவது, கட்சி தலைமைக்கு அதிர்ச்சியையும், அமைச்சர்களிடம் கலக்கத்தையும் ஏற்படுத்தி உள்ளது. அ.தி.மு.க.,வில் 'ஒன் மேன் ஆர்மி'யாக, முதல்வர் ஜெயலலிதா செயல்பட்டு வருகிறார். அவரை தவிர, கட்சியினர் யார் மீது புகார் வந்தாலும், அவர்கள் மீது நடவடிக்கை எடுத்து வருகிறார். சாதாரண கிளை செயலர் முதல், மாநில நிர்வாகிகள் வரை யாரும், முதல்வரின் நடவடிக்கையில் இருந்து தப்புவதில்லை. பாரபட்சமின்றி நடவடிக்கை மேற்கொள்வதால், கட்சியில் தவறு செய்வோர் மீது, அனைத்து தரப்பினரும், ... |
| கனிமொழியை கண்காணிக்க உத்தரவு, உளவுத்துறை அறிக்கையால் நடவடிக்கை Posted: 27 Feb 2016 06:27 AM PST தி.மு.க., மகளிர் அணி செயலர் கனிமொழியின் நடவடிக்கைகளை கூர்ந்து கவனிக்க, கட்சினருக்கும்; உளவுத் துறையினருக்கும் ஆட்சி மேலிடத்தில் இருப்பவர்கள் உத்தரவிட்டுள்ளதாக தகவல் பரவி உள்ளது. கடந்த தி.மு.க., ஆட்சி காலத் தில், 'சென்னை சங்கமம்' நிகழ்ச்சி மூலம், தமிழகம் முழுவதும், பரபரப்பாக பேசப்பட்ட கனிமொழி, தன் மீதான வழக்கு பிரச்னைகளுக்குப் பின், அமைதியானார். வழக்கில் இருந்து ஜாமினில் வெளி வந்ததும், கொஞ்ச நாட்கள் அமைதியாக இருந்தவர், மீண்டும் தீவிர அரசியலில் இறங்கினார். மீண்டும், ராஜ்ய சபா எம்.பி., யானார். தொடர்ச்சியாக, கட்சியின் மகளிர் அணி செயலராக ... |
| Posted: 27 Feb 2016 06:36 AM PST தமிழகத்தில் அரசின் சார்பில் வழங்கப்படும் இலவச பஸ் பாஸ்க்கு, போக்குவரத்து கழகங்களுக்கு அரசு, 1,600 கோடி ரூபாய் நிலுவை வைத்துள்ளது. இதனால், போக்குவரத்து கழகங்கள், 3,000 கோடி ரூபாய் நஷ்டத்தை சந்தித்து வருகின்றன. அரசால் அறிவிக்கப்படும் திட்டங்களுக்கான செலவினத் தொகையை, போக்குவரத்து கழகங்களுக்கு உடனுக்குடன் வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.தமிழக அரசு போக்குவரத்து கழகங்கள் மூலம், எம்.பி., --- எம்.எல்.ஏ.,க்கள், சுதந்திர போராட்ட தியாகிகள், தமிழறிஞர்கள், மொழிப்போர் தியாகிகள், புற்று நோயாளிகள், நாடகக் கலைஞர்கள், எய்ட்ஸ் ... |
| சூரிய சக்தி மின்சாரம் 'தமிழகத்தின் கொள்கை தவறானது' Posted: 27 Feb 2016 07:59 AM PST சென்னை: 'தமிழக அரசின் சூரிய சக்தி மின் கொள்கை தவறானது. அதை மாற்றி அமைக்க வேண்டியது அவசியம்' என, அத்துறையில் ஈடுபட்டுள்ளவர்கள் தெரிவித்துள்ளனர். தமிழக வர்த்தக சங்கம் சார்பில், 'தொழில் துறை தடைக்கற்களை தகர்ப்பது எப்படி?' என்ற தலைப்பில், சென்னையில் நேற்று கருத்தரங்கம் நடந்தது. சூரிய சக்தி மின் நிறுவனங்கள் சார்பில், 'சோல்கர் சோலார்' நிறுவனத்தின் மேலாண் இயக்குனரும், அகில இந்திய உற்பத்தியாளர் சங்க பொதுச் செயலருமான கே.இ.ரகுநாதன் பேசியதாவது:'எனக்கு அமைச்சரை தெரியும், அதிகாரியை தெரியும் அவர்களிடமிருந்து உதவி கிடைக்கும்' எனக்கூறி, இத்துறையை ... |
| சொட்டு தண்ணீரையும் வீணாக்காதீங்க! விவசாயிகளுக்கு மோடி 'அட்வைஸ்' Posted: 27 Feb 2016 08:14 AM PST பெலகாவி :நாம் வீணாக்கக் கூடாது; குறைவான தண்ணீரை பயன்படுத்தி, அதிக விளைச்சலை பெற வேண்டும். சொட்டுநீர் பாசனத்திற்காக, பல திட்டங்களை கொண்டுவர உள்ளோம்,'' என்று, பிரதமர் நரேந்திர மோடி, விவசாயிகளுக்கு அழைப்பு விடுத்தார்.. கர்நாடக மாநிலம், பெலகாவி மாவட்டம், அங்கடி கல்லுாரி மைதானத்தில், நேற்று நடந்த விவசாயிகளுக்கான, 'பிரதமரின் பசல் பீமா யோஜனா' திட்டத்தை, பிரதமர் மோடி துவக்கி வைத்தார்.அவர் பேசியதாவது: * நம் நாடு, விவசாய துறை, சேவை துறை, உற்பத்தி துறையில் அபார வளர்ச்சியடைந்து உள்ளது. உலகிலேயே, இந்தியா மட்டும் தான், வளரும் நாடுகளில் முன்னணியில் உள்ளது * ... |
| சிரியாவில் அமலாகியுள்ள சண்டை நிறுத்தம்...நீடிக்குமா? பலமுனை தாக்குதலால் அமைதி நிலவுவதில் சிக்கல் Posted: 27 Feb 2016 08:16 AM PST டமாஸ்கஸ்:ஐ.நா., முயற்சியுடன், அமெரிக்க, ரஷ்ய நாடுகள் கூட்டாக அறிவித்த சண்டை நிறுத்தம், சிரியாவில், நேற்று முதல் அமலுக்கு வந்தது. கிளர்ச்சியாளர்கள் மற்றும் பயங்கர வாதிகள், இதனை ஏற்காத நிலையில், சண்டை நிறுத்தம் நீடிப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. 'கட்டுப்பாட்டை மீறினால்' தாக்குதலை துவங்க, அமெரிக்காவும், ரஷ்யாவும் கூட தயாராக உள்ளன. மேற்கு ஆசிய நாடுகளில் ஒன்றான சிரியாவில், 2011ல் அதிபர் பஷார் அல் ஆசாத் அரசுக்கு எதிராக பெரிய அளவில் போராட்டங்கள் வெடித்தன. இதனை அடக்க, அரசு, கடுமையான நடவடிக்கை எடுத்த நிலையில், போராட்டம் வன்முறை களமாக மாறியது. பஷார் அரசை ... |
| ஸ்மிருதி பேச்சு: மாயாவதிக்கு அவல் உ.பி., தேர்தலை கலக்க அதிரடி திட்டம் Posted: 27 Feb 2016 09:07 AM PST புதுடில்லி,:பார்லிமென்ட் விவாதத்தின்போது, மகிசாசுரன் குறித்து மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி கூறியவற்றை, அடுத்த ஆண்டு நடக்க உள்ள உத்தர பிரதேச சட்டசபை தேர்தல் பிரசாரத்தின்போது, பா.ஜ.,வுக்கு எதிராக பயன்படுத்த, மாயாவதி தலைமையிலான பகுஜன் சமாஜ் கட்சி திட்டமிட்டுள்ளது. ஐதராபாத் பல்கலை மாணவர் தற்கொலை குறித்து, ராஜ்யசபாவில், கடந்த மூன்று நாட்களாக நடந்த விவாதத்தின்போது, மாயாவதியும், ஸ்மிருதி இரானியும் நேருக்கு நேர், கடுமையாக விவாதம் செய்தனர். 'ஐதராபாத் பல்கலை மாணவர் தலித் என்பதால்தான் அவருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்பட்டு, தற்கொலைக்கு ... |
| 'எல்லாத்துக்கும் பணம் வாங்கும் அமைச்சர்':'வாட்ஸ் ஆப்'பில் வாக்குமூலம் Posted: 27 Feb 2016 09:34 AM PST அ.தி.மு.க.,வில், ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளர்கள் நீக்கப்பட்ட நிலையில், அமைச்சர் முக்கூர் சுப்ரமணியம் ஆதரவாளரான, ஆரணி தொகுதி அ.தி.மு.க., செயலர் கார்த்திகேயனும், கட்சியிலிருந்து நீக்கப்பட்ட, முன்னாள் மாவட்ட செயலர் பையூர் சந்தானமும் பேசியதாக வெளியாகி உள்ள, 'வாட்ஸ் ஆப்' தகவல், பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அவர்கள் பேசியதாக, 'வாட்ஸ் ஆப்'பில் வலம் வரும், எட்டு நிமிட பேச்சு விவரம் வருமாறு: பையூர் சந்தானம்: பயந்து பயந்து வாழ வேண்டியதா இருக்குது.கார்த்திகேயன்: நான்கு நாட்களுக்கு முன், எனக்கும், அவருக்கும் (அமைச்சர் முக்கூர் சுப்ரமணியம்) லடாய் ... |
| விஜயகாந்தின் மூன்று முக ஆட்டத்தால் அரசியல் கட்சிகள்... எரிச்சல்! Posted: 27 Feb 2016 10:36 AM PST தி.மு.க.,விடம் ஒரு முகம்; பா.ஜ.,விடம் மறு முகம்; மக்கள் நலக் கூட்டணியிடம் இன்னொரு முகம் என மூன்று கட்சிகளிடமும் தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்த் காட்டும் மூன்று முக ஆட்டத்தை பார்த்து அக்கட்சிகள் எரிச்சல் அடைந்துள்ளன. மேலும் அவர் கூட்டணி விஷயத்தில் தினம் ஒரு நிபந்தனை விதிப்பதால் அக்கட்சித் தலைவர்கள் கொந்தளிக்கின்றனர். கடந்த லோக்சபா தேர்தலில், பா.ஜ., தலைமையில் தே.மு.தி.க., - பா.ம.க., கட்சிகள் சேர்ந்து கூட்டணி அமைத்தது போல, வரும் சட்டசபை தேர்தலிலும் கூட்டணி அமைந்தால் தங்களுக்கு எதிரான ஓட்டுகள் சிதறும் என அ.தி.மு.க., கருதுகிறது.160 தொகுதிகள்:அதனால் பா.ஜ., - ... |
| தடை பட்டியலில் மசூத் அசார் ஐ.நா.,விடம் இந்தியா வலியுறுத்தல் Posted: 27 Feb 2016 12:55 PM PST புதுடில்லி,:'பாகிஸ்தானில் இருந்து செயல்படும், ஜெய்ஷ் - இ - முகமது பயங்கரவாத அமைப்பின் தலைவன் மசூத் அசாரை, 47, தடை செய்யப்பட்ட பயங்கரவாதிகள் பட்டியலில் சேர்க்க வேண்டும்' என, ஐ.நா.,வில் இந்தியா வலியுறுத்தியுள்ளது. ஐ.நா.,வின் அல் - குவைதா தடை குழுவின் தலைவர் ஜெரார்டு ஜேக்கப்பஸ்வான் போஹமனுக்கு, ஐ.நா.,வுக்கான இந்தியத் துாதர் சையது அக்பருதீன், இதுகுறித்து கடிதம் எழுதியுள்ளார்.இந்த கடிதத்துடன், பஞ்சாப் மாநிலம், பதன்கோட் விமானப் படை தளத்தில் நடந்த தாக்குதலின் முக்கிய குற்றவாளியுமான அசார் மற்றும் ஜெய்ஷ் அமைப்பு ஈடுபட்டது குறித்த ஆதாரங்களையும் இந்தியா ... |
| சமத்து மாணவர்களுக்கு பரிசு மத்திய அமைச்சர் அறிவிப்பு Posted: 27 Feb 2016 02:52 PM PST பரிதாபாத் : மாணவியரிடம், ஒழுக்கத்துடனும், மரியாதையுடனும் நடந்து கொள்ளும் மாணவர்களை, பரிசளித்து கவுரவிக்க உள்ளதாக, மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் நலத் துறை அமைச்சர் மேனகா தெரிவித்தார். டில்லிக்கு அருகில் உள்ள ஹரியானா மாநிலம் பரிதாபாத்தில், மானவ் ரச்னா பல்கலையில் நடந்த விழாவில் பங்கேற்ற, அமைச்சர் மேனகா, கூறியதாவது: மாணவியரிடம் ஒழுக்கமாக நடந்து கொள்ளும் மாணவர்களை பரிசளித்து, கவுரவிக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. விரைவில் இது குறித்து அறிவிக்கப்படும். பெண்களுக்கு ஆபத்து காலத்தில் உதவக் கூடிய வகையில், மொபைல் போன்களில் அலாரம் பட்டன் ... |
| You are subscribed to email updates from Dinamalar.com |பிப்ரவரி 28,2016. To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States | |