Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Tamil News | Online Tamil News

Tamil News | Online Tamil News


ஜெ., ஸ்டிக்கரை மாலையிலும் ஒட்டியாச்சு

Posted: 26 Feb 2016 07:12 AM PST

தஞ்சையில் நடந்த திருமண விழாவில், மணமக்களுக்கு வழங்கிய மாலைகளில், முதல்வர் ஜெயலிலதா ஸ்டிக்கர்கள் ஒட்டப்பட்டு இருந்தன. தஞ்சாவூர் புதிய பஸ் ஸ்டாண்ட் அருகேயுள்ள மாநகராட்சிக்கு சொந்தமான திடலில் நேற்று, அமைச்சர் வைத்திலிங்கம் தலைமையில், முதல்வர் ஜெயலலிதாவின், 68வது பிறந்த நாளை முன்னிட்டு, 164 ஜோடிகளுக்கு இலவசதிருமணம் நடந்தது.இதற்காக, மணமக்களுக்கு காமாட்சி விளக்கு, குத்துவிளக்கு, பட்டுச்சேலை, பட்டு ஜாக்கெட்,பட்டு வேட்டி, பட்டு துண்டு, பட்டு சட்டை, கட்டில், மெத்தை, தலையணை செட், பீரோ, பெரிய அண்டா, குக்கர் உட்பட, 68 வகையான சீர்வரிசை பொருட்கள் வழங்கப் ...

பா.ம.க.,வை இழுக்க தி.மு.க., திட்டம்

Posted: 26 Feb 2016 07:21 AM PST

தி.மு.க., கூட்டணிக்கு தே.மு.தி.க., வராமல், மாற்று அணி அமைக்கும் முடிவு எடுத்தால், பா.ம.க.,வை கூட்டணியில் இழுக்க, தி.மு.க., திட்டம் வகுத்துள்ளது என, அக்கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

பா.ம.க.,வின் பலம்:
வட மாவட்டங்களில் தி.மு.க., - பா.ம.க., கூட்டணி அமைந்த லோக்சபா, சட்டசபை தேர்தல்களில் தி.மு.க., - பா.ம.க., அமோக வெற்றி பெற்றுள்ளது. கடந்த சட்டசபை தேர்தலில், தி.மு.க., - பா.ம.க.,வுடன் விடுதலை சிறுத்தைகளும் இடம் பெற்றதால், அக்கூட்டணி தோற்றது. காரணம், விடுதலை சிறுத்தைகளுக்கு எதிரான ஓட்டுகளும்; பா.ம.க.,வுக்கு எதிரான ஓட்டுகளும் கூட்டணிக்கு கிடைக்கவில்லை. இதனால், ...

கும்பிடு போட்டால் குபேரன் ஆகலாம்: 'அம்மா' பார்வைக்கு ஏங்கும் அ.தி.மு.க.,வினர்

Posted: 26 Feb 2016 07:23 AM PST

முதல்வர் ஜெயலலிதாவின் கண்ணில் பட்டு, 'சீட்' கிடைத்துவிடாதா என ஏங்கும், அ.தி.மு.க., நிர்வாகிகளும், தொண்டர்களும், அவர் செல்லும் வழிநெடுக காத்து கிடக்கின்றனர்.சென்னை மற்றும் அதன் சுற்றுப் பகுதியில் உள்ள அ.தி.மு.க.,வினர், ஜெயலலிதா செல்லும் பாதையில் நின்று, அவரை கும்பிடுவது வழக்கமான ஒன்று. ஆனால், தற்போது, பிற மாவட்டங்களைச் சேர்ந்த தொண்டர்களும், நிர்வாகிகளும், ஜெயலலிதாவை கும்பிட, நாள் கணக்காக சென்னையில் காத்திருக்கின்றனர்.மேற்கு மற்றும் தென் மாவட்டங்களைச் சேர்ந்த நிர்வாகிகளும், தொண்டர்களும், வாரத்தில், நான்கு நாட்கள் சென்னையில் தங்குகின்றனர். இவர்கள் ...

பணக்காரர்கள் அனுபவிக்கும் மானியம் ரூ.1 லட்சம் கோடி: ரத்து செய்ய பொருளாதார அறிக்கை பரிந்துரை

Posted: 26 Feb 2016 08:58 AM PST

புதுடில்லி,: 'வீடுகளுக்கு மானிய விலையில் வழங்கப்படும், சமையல் காஸ் சிலிண்டர் எண்ணிக்கையை, ஆண்டுக்கு, பத்தாக குறைக்க வேண்டும். வசதி படைத்தவர்களுக்கு, ஒரு லட்சம் கோடி ரூபாய் அளவுக்கு தரப்படும் மானியத்தை நிறுத்த வேண்டும்' என, பொருளாதார ஆய்வறிக்கையில் பரிந்துரைக்கப்பட்டு உள்ளது.வரும், 2016 - 17ம் நிதியாண்டுக்கான பொது பட்ஜெட், பார்லிமென்டில், வரும், 29ல் தாக்கல் செய்யப்பட உள்ளது. இந்நிலையில், 2015 - 16ம் நிதியாண்டிற்காக பொருளாதார ஆய்வறிக்கையை, மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி, நேற்று பார்லிமென்டில் தாக்கல் செய்தார்.ஆய்வறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:* ...

ஸ்மிருதி இரானி மன்னிப்பு கேட்க வேண்டும்: ராஜ்யசபாவில் எதிர்க்கட்சிகள் வலியுறுத்தல்

Posted: 26 Feb 2016 09:01 AM PST

புதுடில்லி, : 'துர்கா தேவியை அவமதிக்கும் வகையில், வெளியிடப்பட்ட நோட்டீசை படித்ததற்காக, மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் ஸ்மிருதி இரானி, மன்னிப்பு கேட்க வேண்டும்' என, ராஜ்யசபாவில், எதிர்க்கட்சிகள் வலியுறுத்தின.ராஜ்யசபாவில், ஜவஹர்லால் நேரு பல்கலை விவகாரம் தொடர்பாக, நேற்று முன்தினம் விவாதம் நடந்தது.விவாதத்துக்கு பதில் அளித்து, மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் ஸ்மிருதி இரானி பேசும் போது கூறியதாவது:நேரு பல்கலையில், மாணவர்கள் சிலர் தங்களுக்கு வழங்கப்பட்ட பேச்சுரிமையை மிகவும் தவறாக பயன்படுத்துகின்றனர். பல்கலையில், 'மகிஷாசுரன் தினம்' ...

இஷ்ரத் வழக்கில் அரசியல் தலையீடு: 'மாஜி' உள்துறை செயலர் புகார்

Posted: 26 Feb 2016 09:17 AM PST

புதுடில்லி :''இஷ்ரத் ஜகான் என்கவுன்டர் வழக்கில், அரசியல் நெருக்கடி காரணமாகவே, பிரமாண பத்திரம் திருத்தம் செய்யப்பட்டது,'' என, முன்னாள் உள்துறை செயலர் ஜி.கே.பிள்ளை குற்றம் சாட்டியுள்ளார். கடந்த, 2004ல் குஜராத் மாநிலம், ஆமதாபாத் அருகே, இஷ்ரத் ஜகான் என்ற, 19 வயது கல்லுாரி மாணவி,அவரது நண்பர் ஷேக் உட்பட, நான்கு பேர், சுட்டுக் கொல்லப்பட்டனர். இவர்கள், லஷ்கர் - இ - தொய்பா பயங்கரவாதிகள் என்றும், அப்போதைய, குஜராத் முதல்வரான, நரேந்திர மோடியை கொல்ல வந்தவர்கள் என்றும் தெரிவிக்கப்பட்டது. இது தொடர்பாக விசாரணை நடத்திய சி.பி.ஐ., அமைப்பு, இது, ஒரு போலி என்கவுன்டர் எனக்கூறி, ...

மீதி வீடுகள் எங்கே? ஸ்டாலின் கேள்வி

Posted: 26 Feb 2016 09:44 AM PST

தி.மு.க., பொருளாளர் ஸ்டாலின் வெளியிட்ட அறிக்கை: சில வாரங்களுக்கு முன், 'உங்கள் சொந்த இல்லம்' திட்டத்தின் கீழ், சொந்த வீட்டுக்காக விண்ணப்பித்த போலீசார் அனைவருக்கும், திடீரென்று அரசிடம் இருந்து ஒரு நோட்டீஸ் போனது. அந்த நோட்டீசில், ஏற்கனவே செலுத்திய தொகையிலிருந்து, மேலும் அதிகமாக, 50 ஆயிரம் ரூபாய் முதல், ஒரு லட்சம் ரூபாய் வரை ஒவ்வொருவரும், உடனடியாக, செலுத்த வேண்டும் என்று கெடுபிடி செய்யப்பட்டுள்ளது.அந்த தொகையை செலுத்தினால் மட்டுமே, மார்ச், 1ம் தேதிக்குள், வீடுகளின் சாவிகள் வழங்கப்படும் என்றும், அந்த நோட்டீசில்கூறப்பட்டுள்ளது.இந்த தகவல், காவல்துறை ...

பதவி பறிபோகும் பயத்தில் தமிழக மந்திரிகள் கலக்கம்: ஓ.பி.எஸ்., முக்கிய ஆதரவாளர்கள் கட்சி பதவி பறிப்பு

Posted: 26 Feb 2016 10:09 AM PST

தமிழக நிதி அமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்தின் முக்கிய ஆதரவாளர்களின் கட்சி பதவிகளை அதிரடியாக பறித்து முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளது பிற அமைச்சர்களிடம் கலக்கத்தை ஏற்படுத்தி உள்ளது. அவர்கள் தங்கள் பதவியும் பறிபோகுமோ என்ற அச்சத்தில் தவித்து வருகின்றனர்.சட்டசபை தேர்தலில் 'சீட்' கேட்டு விண்ணப்பித்துள்ள பெரும்பாலானோர் பன்னீர்செல்வம், நத்தம் விஸ்வநாதன், வைத்திலிங்கம், எடப்பாடி பழனிச்சாமி, பழனியப்பன் ஆகிய ஐவரணியினரை வலம் வருகின்றனர். இந்நிலையில் பன்னீர்செல்வம், நத்தம் விஸ்வநாதன் ஆதரவாளர்களின் கட்சி பதவிகள் திடீரென பறிக்கப்பட்டு ...

'தாவூத் இப்ராகிம் உள்ளிட்ட பயங்கரவாதிகளுடன் அரசியல்வாதிகளுக்கு நெருங்கிய தொடர்பு'

Posted: 26 Feb 2016 10:20 AM PST

''தாவூத் இப்ராகிம் உள்ளிட்ட பயங்கரவாதிகளுக்கும், இந்திய அரசியல்வாதிகளுக்கும் வலுவான தொடர்பு உள்ளது,'' என, எல்லை பாதுகாப்பு படை முன்னாள் டி.ஜி.பி., அனந்தாச்சாரி தெரிவித்துள்ளார். சென்னை பல்கலையின் குற்றவியல் துறை மற்றும் பார்த்தசாரதி நினைவு அறக்கட்டளை சார்பில், 'எல்லை தாண்டிய பயங்கரவாதம்' என்ற தலைப்பில், சிறப்பு கருத்தரங்கம், சென்னை பல்கலையில் நடந்தது. இதில், முன்னாள் டி.ஜி.பி.,க்கள் லட்சுமி நாராயணன், வைகுந்த், சென்னை குற்றவியல் துறை தலைவர் சீனிவாசன் ஆகியோர் பங்கேற்றனர்.

பயங்கரவாதம்:
முக்கிய விருந்தினராக, எல்லை பாதுகாப்பு படை ...

பாக்.,கிற்கு போர் விமானங்கள் கொடுக்காதீங்க: அமெரிக்க எம்.பி.,க்கள் எதிர்ப்பு

Posted: 26 Feb 2016 12:43 PM PST

வாஷிங்டன்,:'பயங்கரவாதம் விஷயத்தில், பாகிஸ்தான் இரட்டை வேடம் போடுகிறது; எனவே, அந்நாட்டுக்கு, 'எப் - 16' ரக போர் விமானங்களை விற்கக் கூடாது' என, அமெரிக்க அரசை, அந்நாட்டு எம்.பி.,க்கள் வலியுறுத்தி உள்ளனர். பயங்கரவாதிகளுக்கு எதிரான நடவடிக்கைக்கு பயன்படுத்த, பாகிஸ்தானுக்கு எப் -16 ரக போர் விமானங்களை விற்க, அமெரிக்க அரசு முடிவு செய்துள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, அமெரிக்க பார்லிமென்டில், டானா ரோஹ்ரா பச்சர் என்ற எம்.பி., தீர்மானம் தாக்கல் செய்தார். அப்போது அவர் பேசுகையில், ''அல் - குவைதா பயங்கரவாத அமைப்பின் தலைவன் ஒசாமா பின்லேடன் பதுங்கியிருந்த இடத்தை ...



Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™