Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Tamil News | Online Tamil News

Tamil News | Online Tamil News


அறிவிப்புகளை ஜெ., நிறைவேற்றவில்லை!

Posted: 22 Feb 2016 07:47 AM PST

தி.மு.க., மகளிர் அணி செயலர் கனிமொழி அளித்த பேட்டி: முதல்வர் ஜெயலலிதா, சட்டசபையில் கடந்த, ஐந்தாண்டுகளில், 110 விதியின் கீழ், 600க்கும் அதிகமான அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார். அதில், 550 அறிவிப்புகளை அவர் நிறைவேற்றவில்லை.தற்போது, ஆட்சி முடியும் நிலையில், பல அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார்.தமிழக சட்டசபை தேர்தல், ஓரிரு மாதத்தில் நடக்க உள்ள நிலையில், பெண்களுக்கு உள்ளாட்சி அமைப்புகளில், 50 சதவீத இடஒதுக்கீடு என்பது, வெற்று அறிவிப்பு. அதற்கு, சட்டசபையில் சட்ட திருத்த மசோதா தாக்கல் செய்து, விவாதம் நடத்தவேண்டும்.பெரும்பான்மையை பெற்று, மசோதாவை நிறைவேற்றிய ...

ஒரு போன் விற்றால் 31 ரூபாய் லாபம்: 'ரிங்கிங் பெல்' நிறுவனம் கூறுகிறது

Posted: 22 Feb 2016 08:12 AM PST

புதுடில்லி:'ரிங்கிங் பெல் நிறுவனத்தால், 251 ரூபாய் ஸ்மார்ட் போனை விற்பனை செய்ய முடியாது' என, விமர்சனம் எழுந்துள்ள நிலையில், 'இதே விலையில் செலவு போக, போன் ஒன்றுக்கு, 31 ரூபாய் லாபம் ஈட்ட முடியும்' என, அந்த நிறுவனம் உறுதியாக தெரிவித்துள்ளது. 'ரிங்கிங் பெல்' நிறுவனம், 'பிரீடம் 251' என்ற பெயரில், 251 ரூபாய்க்கு, அதிரடியாக ஸ்மார்ட் போனை அறிமுகம் செய்தது. அந்த நிறுவனத்தின் இணையதளத்தில், இதற்காக, ஏழு கோடி பேர் முன்பதிவு செய்தனர். வருமான வரி சோதனை, தொலைத்தொடர்பு அமைச்சகத்தின் குடைச்சல், உ.பி., அரசின் சந்தேகம் என, அடுத்தடுத்து பல பிரச்னைகளை, அந்நிறுவனம் சந்தித்து ...

தேச விரோத கோஷமிடவில்லை: ஜே.என்.யு., மாணவர்கள் தகவல்

Posted: 22 Feb 2016 08:14 AM PST

புதுடில்லி:தேச விரோத கோஷமிட்ட பிரச்னையில், 10 நாட்களாக, தலைமறைவாக இருந்த, ஜே.என்.யு., எனப்படும் டில்லி ஜவஹர்லால் நேரு பல்கலை மாணவர்கள், ஐந்து பேரும் நேற்று பல்கலைக்கு திரும்பினர். 'தேச விரோத கோஷங்களை நாங்கள் எழுப்பவில்லை' என, அவர்கள் கூறினர். தேச விரோத கோஷமிட்டதாக, ஜவஹர்லால் நேரு பல்கலை மாணவர் சங்கத் தலைவர் கன்னையா குமார் உட்பட, ஆறு பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.கடந்த, 12ல் கன்னையா குமார் கைது செய்யப்பட்டார். அதைத் தொடர்ந்து, குற்றம் சாட்டப்பட்ட மற்ற ஐந்து பேரும் தலைமறைவாக இருந்தனர். இந்நிலையில், தலைமறைவாக இருந்த, உமர் காலித், அனிர்பன் ...

பெரிய மொபைல் போன் நிறுவனங்களுக்கு இடையே போட்டி: 'விர்ச்சுவல் ரியாலிட்டி' கருவி தயாரிப்பில் வெகு ஆர்வம்

Posted: 22 Feb 2016 08:48 AM PST

பார்சிலோனா: மொபைல் போன்களின் செயல்பாடுகளைப் பார்த்து, புல்லரித்துப் போயுள்ளவர்கள் மத்தியில், அதை விட அனைத்து அம்சங்களிலும் உயர்ந்த, துல்லியமான, தொட்டு உணர்ந்து, நுகர்ந்து உபயோகப்படுத்தக் கூடிய வகையிலான, 'விர்ச்சுவல் ரியாலிட்டி' தகவல் தொடர்பு கருவிகள் தயாரிப்பில், கூகுள், ஆப்பிள், மைக்ரோசாப்ட், சாம்சங், எச்.டி.சி., போன்ற பெரிய நிறுவனங்களுக்கு இடையே போட்டி ஏற்பட்டுள்ளது.அந்தப் போட்டியில், எச்.டி.சி., நிறுவனம், தன் புதிய கருவியை நேற்று அறிமுகம் செய்து, தன்னை உறுதிபடுத்திஉள்ளது.தகவல் தொடர்புக்காக மட்டுமே இருந்த சாதாரண போன்களில், அதி நவீன வசதிகள் ...

'கட், பேஸ்ட்' வேண்டாம்; கண்டுபிடியுங்கள்: மோடி

Posted: 22 Feb 2016 08:51 AM PST

வாரணாசி:''ஆராய்ச்சி மாணவர்கள், 'கட், பேஸ்ட்' செய்யாமல், மக்களுக்கு பயன்படக் கூடிய, பருவநிலை மாறுபாடு, எரிசக்தி, நோய்களுக்கு மருந்து போன்ற புதிய ஆராய்ச்சிகளில் ஈடுபட வேண்டும்,'' என, பிரதமர் நரேந்திர மோடி வலியுறுத்தினார்.

பட்டமளிப்பு விழா:பிரதமர் நரேந்திர மோடி, உத்தர பிரதேச மாநிலத்தில் உள்ள, தன் தொகுதியான
வாரணாசியில், நேற்று பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்றார். அங்குள்ள பனாரஸ் ஹிந்து பல்கலையின் நுாறாவது பட்டமளிப்பு விழாவில், மோடி பேசியதாவது:பருவநிலை மாறுபாடு, மாசில்லாத எரிசக்தி போன்றவையே, தற்போது இந்த உலகத்தில் உள்ள முக்கிய ...

கருணாநிதி, ஸ்டாலின் '3டி' பிரசாரம் ரூ.30 கோடி செலவில் திட்டம் தயார்

Posted: 22 Feb 2016 09:16 AM PST

ஜீன்ஸ் திரைப்படத்தில், இரண்டு ஐஸ்வர்யா ராய் நடனமாடுவது போன்ற காட்சி, 3டி காட்சி அமைப்பில் உருவாக்கப்பட்டது. அதேபோல், தி.மு.க., தலைவர் கருணாநிதி, பொருளாளர் ஸ்டாலின், ஆகியோர் பொதுக்கூட்டத்தில், மக்களிடம் நேரடியாக பேசுவது போன்ற, '3டி' காட்சிகளை உருவாக்குவதற்கான ஏற்பாடுகள் துவக்கப்பட்டுள்ளது.இது குறித்து, தி.மு.க., நிர்வாகிகள் சிலர், கூறியதாவது:வரும் சட்டசபை தேர்தலில், ஸ்டாலினை முதல்வர் வேட்பாளராக முன்னிறுத்த, அவரது மருமகன் சபரீசன் தலைமையிலான குழுவினர் ஏற்பாடு செய்தனர். அதற்காக, 'நமக்கு நாமே பயணம்' திட்டம் துவக்கப்பட்டது.சபரீசன் குழு: தகவல் ...

ஜெ.,வுக்காக கோ பூஜை: அமைச்சர்கள் பங்கேற்பு

Posted: 22 Feb 2016 09:18 AM PST

முதல்வர் ஜெயலலிதாவின் நட்சத்திர பிறந்த நாளான நேற்று, சென்னை ஓட்டேரி பசுக்கள் காப்பகத்தில், 2,000 பசுக்களுக்கு, கோ பூஜையுடன் சிறப்பு யாகம் நடத்தப்பட்டது.

ஸ்டாலின் பூஜை:
சென்னை, ஓட்டேரி - கொன்னுார் நெடுஞ்சாலையில், பசுக்கள் காப்பகம் உள்ளது.இந்த காப்பகத்தில், 2 ஆயிரம் பசு மாடுகளும், 50 எருமை மாடுகளும், 400 கன்று குட்டிகளும் உள்ளன. இந்த பசுக்கள் காப்பகத்திற்கு, சில தினங்களுக்கு முன், தி.மு.க., பொருளாளர் ஸ்டாலின் சென்று, கோ பூஜை செய்து வழிபட்டார்.இந்நிலையில், முதல்வர் ஜெயலலிதாவின் ஜென்ம நட்சத்திரமான மகம் நட்சத்திரமும், 12 ஆண்டுகளுக்கு, ஒரு முறை வரும் ...

பொது தேர்வெழுதும் மாணவர்களுக்கு 'செக்': தேர்வு துறை நடவடிக்கைக்கு கடும் எதிர்ப்பு

Posted: 22 Feb 2016 10:10 AM PST

அரசு பொதுத் தேர்வில், நுாற்றுக்கு நுாறு மதிப்பெண் பெறுவதற்காக, மாணவர்கள் சில குறுக்கு வழிகளை கடைபிடிக்கின்றனர். இதை தடுக்கும் வகையில், தேர்வுத் துறை அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. இதற்கு, பெற்றோர் மற்றும் மாணவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.பிளஸ் 2 மற்றும், 10ம் வகுப்பு தேர்வெழுதும் மாணவர்கள், 'சென்டம்' எனப்படும், 100 சதவீத மதிப்பெண் பெறுவதற்காக, கடும் முயற்சி எடுக்கின்றனர். தேர்வெழுதும் போது, அதில் சில வினாக்களுக்கு விடை தெரியாவிட்டால், அவர்கள் எழுதிய விடைத்தாள் முழுவதிலும், குறுக்கு கோடிட்டு அடித்து விடுகின்றனர்.இதன் மூலம், அவர்கள் அந்த ...

தி.மு.க., - தே.மு.தி.க.,வில் வேட்பாளர் தேர்வுக்கு நேர்காணல் ஆரம்பம்: ஜாதி, பணம் செலவு செய்யும் திறமை, கூட்டணி பற்றி கேள்வி

Posted: 22 Feb 2016 10:14 AM PST

சட்டசபை தேர்தலில் போட்டியிட விருப்ப மனு அளித்தவர்களிடம் தி.மு.க., மற்றும் தே.மு.தி.க.,வில், நேற்று முதல் நேர்காணல் துவங்கியது. நேர்காணலுக்கு வந்தவர்களிடம் ஜாதி, பணம் செலவு செய்யும் திறமை, கூட்டணி பற்றிய கேள்விகள் கேட்கப்பட்டன.சட்டசபை தேர்தலில் தி.மு.க., சார்பில் போட்டியிட 7,000க்கும் மேற்பட்டோர் விருப்ப மனு கொடுத்துள்ளனர். அவர்களை அழைத்து நேர்காணல் நடத்தும் நிகழ்ச்சி அறிவாலயத்தில் நேற்று துவங்கியது. தி.மு.க., தலைவர் கருணாநிதி தலைமையில் பொதுச் செயலர் அன்பழகன், பொருளாளர் ஸ்டாலின், முதன்மை செயலர் துரைமுருகன், அமைப்பு செயலர் ஆர்.எஸ்.பாரதி ஆகியோர் இடம்பெற்ற ...

இன்று கூடுகிறது பார்லிமென்ட்: வரிந்து கட்டும் எதிர்க்கட்சிகள்

Posted: 22 Feb 2016 01:01 PM PST

புதுடில்லி: பார்லிமென்ட் பட்ஜெட் கூட்டத் தொடர், இன்று துவங்கும் நிலையில், ஜவஹர்லால் நேரு பல்கலை, தலித் மாணவர் தற்கொலை போன்ற பிரச்னைகளை கிளப்பி, அமளியை ஏற்படுத்த எதிர்க்கட்சிகள் திட்டமிட்டுள்ளன. இதனால், இந்த கூட்டத் தொடரிலும் முக்கிய மசோதாக்கள் நிறைவேறுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.பட்ஜெட் கூட்டத் தொடர், இன்று துவங்கவுள்ள நிலையில், அதை சுமுகமாக நடந்துவது தொடர்பாக, டில்லியில் நேற்று, அனைத்துக் கட்சி கூட்டம் நடந்தது.பின், செய்தியாளர்களிடம் பேசிய பார்லிமென்ட் விவகாரத் துறை அமைச்சர் வெங்கையா நாயுடு, ''ஜவஹர்லால் நேரு பல்கலை விவகாரம் உள்ளிட்ட ...



Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™