Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Tamil News | Online Tamil News

Tamil News | Online Tamil News


இன்ஜினியரிங் பட்டதாரிகளுக்கு வேலைவாய்ப்பு இரட்டிப்பு: 'மேக் இன் இந்தியா'வால் மாணவர்கள் உற்சாகம்

Posted: 20 Feb 2016 06:35 AM PST

அனைத்து இன்ஜி., கல்லுாரிகளிலும், விருப்ப பாடமான சி.பி.சி.எஸ்., திட்டம் அறிமுகமாவதால், இன்ஜி., பட்டதாரிகளுக்கான வேலைவாய்ப்புகள் இரட்டிப்பாகி உள்ளன. வெளிநாட்டு நிறுவனங்கள், இந்தியாவில் அதிக அளவில் முதலீடு செய்வதும், இன்ஜி., துறைக்கு புத்துணர்வை அளித்துள்ளது. மாணவர்களுக்கு வழக்கமான பாடத்திட்டம் மட்டுமே கற்றுத் தராமல், தொழிற்துறைக்கு தேவையான பாடங்கள், தனித்திறன் கொண்ட பாடங்கள், ஆர்வமான பாடங்களையும் விருப்ப பாடமாக எடுத்து படிக்க, மத்திய மனித வள மேம்பாட்டு அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது. இந்திய இன்ஜி., பட்டதாரிகளுக்கு வேலைவாய்ப்பை அளிக்கும் வகையில், ...

வைணவ தலத்தில் ஜெ., போட்டி? தயார் நிலையில் திருவள்ளூர் தொகுதி

Posted: 20 Feb 2016 07:03 AM PST

முதல்வர் ஜெயலலிதா, தேர்தலில், 108 வைணவ தலங்களில் ஒன்றான, திருவள்ளூரில், போட்டியிடப் போவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.முதல்வர் ஜெயலலிதா, 2011ம் ஆண்டு, வைணவ தலமான ஸ்ரீரங்கத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். சொத்து குவிப்பு வழக்கு காரணமாக, அத்தொகுதி யில் ராஜினாமா செய்த முதல்வர், அதன் பின், ஆர்.கே.நகரில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.இந்த நிலையில், வரும் தேர்தலில், தனக்கு சாதகமான தொகுதி குறித்து, உளவுத்துறை மூலம், ஆய்வு செய்தார். இதில், திருவள்ளூர் தொகுதி, அனைத்து விதங்களிலும் ஜெயலலிதா போட்டியிட சாதகமானது என, உளவுத் துறை அறிக்கை அளித்துள்ளது.இதையடுத்து ...

பெயருக்கு நடத்தப்படும் நேர்காணலால் தி.மு.க.,வினர் அதிருப்தி!

Posted: 20 Feb 2016 07:17 AM PST

தி.மு.க.,வில் நேர்காணல், பெயருக்கு நடத்தப்படும் என்பதால், விருப்ப மனு கொடுத்துவிட்டு, வேட்பாளர் ஆகும் கனவில் உள்ளவர்கள் அனைவரும், கடும் அதிருப்தியில் உள்ளதாக கூறப்படுகிறது. தமிழக சட்டசபை தேர்தலில், தி.மு.க., சார்பில், 234 தொகுதிகளில் போட்டியிட விருப்பம் தெரிவித்து, 7,000க்கும் மேற்பட்டோர் தலா, 25 ஆயிரம் ரூபாய் கட்டணம் செலுத்தி, விருப்ப மனுக்களை தாக்கல் செய்துள்ளனர். வரும் 22ம் தேதி கன்னியாகுமரி, ராமநாத புரம், திருநெல்வேலி, துாத்துக்குடி, தேனி, விருதுநகர், திண்டுக்கல் என, ஏழு மாவட்டங்களில் அடங்கிய அனைத்து சட்டசபை தொகுதிகளுக்கும் நேர்காணல் ...

ரயில்வே அமைச்சர் சுரேஷ் பிரபு தமிழகத்திற்கு நிபந்தனை: கூட்டு நிறுவனம் அமைத்தால் தான் நிதி

Posted: 20 Feb 2016 07:20 AM PST

'ரயில்வேயுடன் இணைந்து செயல்படும் வகையிலான கூட்டு நிறுவனம் அமைக்க, தமிழக அரசு முன் வந்தால் மட்டுமே தமிழக ரயில் திட்டங்களை செயல்படுத்த முடியும்' என, ரயில்வே அமைச்சர் சுரேஷ் பிரபு கண்டிப்புடன் தெரிவித்துள்ளார். தமிழக அரசு, இந்த விஷயத்தில் இனியும் யோசித்துக் கொண்டிருந்தால், முக்கிய ரயில் திட்டங்களை செயல்படுத்துவதில் சிக்கல் ஏற்படும்.

இணைந்து செயல்பட...:ரயில்வே துறையின் பெரும்பாலான திட்டங்களை அமல்படுத்த, போதிய நிதி இல்லை; ரயில்வே துறை, 26 ஆயிரம் கோடி ரூபாய் நஷ்டத்தில் இயங்கி வருகிறது. இருப்பினும், ஒவ்வொரு மாநிலத்திலும் முக்கிய ரயில் ...

தேசிய கொடிக்கு ரூ.45லட்சம்; பராமரிப்புக்கு ரூ.65 ஆயிரம்

Posted: 20 Feb 2016 09:13 AM PST

புதுடில்லி,:'நாட்டில் உள்ள, 46 மத்திய பல்கலைகளிலும், 207 அடி உயர கம்பத்தில் தேசியக் கொடியை பறக்க விட வேண்டும்' என, மத்திய அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது, சர்ச்சையை எழுப்பியுள்ளது; ஒரு தேசியக் கொடி மற்றும் கம்பத்தை நிறுவ, 45 லட்சம் ரூபாய் செலவாகும்; அதன் மாதாந்திர பராமரிப்புக்கு, 65 ஆயிரம் ரூபாய் செலவாகும் என, கணக்கிடப்பட்டு உள்ளது.

டில்லி ஜவஹர்லால் நேரு பல்கலையில், தேச விரோத கோஷமிட்டதாக, பிரச்னை நடந்து வரும் நிலையில், மாணவர்களிடையே தேசப்பற்றை வளர்க்கும் வகையில், நாடு முழுவதும் உள்ள மத்திய பல்கலைகளில், தேசியக் கொடியை பறக்க விட வேண்டும் என்று, மத்திய மனித வள ...

அ.தி.மு.க., - பா.ஜ., கூட்டணி: மத்திய அமைச்சர் சூசக தகவல்

Posted: 20 Feb 2016 09:35 AM PST

தமிழக சட்டசபை தேர்தலில், தி.மு.க., - காங்கிரஸ் கூட்டணி அமைந்துள்ளதால், அ.தி.மு.க., கூட்டணியில் பா.ஜ., இடம் பெற விரும்புகிறது. லோக்சபா தேர்தலில், பா.ஜ., கூட்டணியில் இடம்பெற்ற தே.மு.தி.க., - பா.ம.க., மற்றும் சிறிய கட்சிகளிடம் கூட்டணி அமைப்பது பற்றி அடிக்கடி பேசி வந்த தமிழக பா.ஜ., தலைவர்களுக்கு, தற்போது வாய்ப்பூட்டு போடப்பட்டுள்ளது.சமீபத்தில், கேரள மாநிலம், கொச்சியில் நடந்த, தமிழக சட்டசபை தேர்தல் ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்ற, பா.ஜ., தேசிய தலைவர் அமித் ஷா, 'தமிழகத்தில், கூட்டணி அமைப்பது குறித்து, கட்சித் தலைமை முடிவு செய்து கொள்ளும்' எனக்கூறிவிட்டதால், தமிழக பா.ஜ., ...

சட்டசபை தேர்தலில் யாருடன் கூட்டணி: காஞ்சி மாநாட்டில் விஜயகாந்த் 'சஸ்பென்ஸ்'

Posted: 20 Feb 2016 10:07 AM PST

தே.மு.தி.க., காஞ்சிபுரம் மாநாட்டில், அக்கட்சி தலைவர் விஜயகாந்த் பேசியதாவது: 'கண்ணுக்கு எட்டிய துாரம் வரை எதிரிகளே தெரியவில்லை' என்று ஜெயலலிதா கூறினார். இப்போது, அவரால், 234 தொகுதிகளுக்கும் வேட்பாளர்களை அறிவிக்க முடியவில்லையே ஏன்? சட்டசபையில், தே.மு.தி.க., - எம்.எல்.ஏ.,க்களை பார்த்து, 'ஜீரோ' என்று, நத்தம் விஸ்வநாதன் கூறுகிறார். கடந்த ஆட்சியில் நடந்த இடைத்தேர்தல்களில், அ.தி.மு.க.,வால் வெற்றி பெற முடிந்ததா? பர்கூர் தொகுதியில், அ.தி.மு.க.,வால் வெற்றி பெற முடிந்ததா என்று, நத்தம் விஸ்வநாதன் கூற வேண்டும். ஜெயலலிதா ஆட்சியில், எல்லாதுறைகளிலும் கொள்ளை அடிக்கின்றனர். ...

அமைச்சர் ரமணா நீக்கம்! பதவியை பறித்த அந்தரங்க படம்

Posted: 20 Feb 2016 10:11 AM PST

அந்தரங்க படம் வெளியான விவகாரத்தில், பால்வளத்துறை அமைச்சர் பொறுப்பில் இருந்து ரமணா நீக்கப்பட்டுள்ளார். ரமணாவிடம் இருந்த பால்வள துறை, ஊரக தொழில் துறை அமைச்சர் ப.மோகனிடம், கூடுதல் பொறுப்பாக ஒப்படைக்கப்பட்டுள்ளது. ரமணா வகித்த கட்சியின் மாவட்ட செயலர் பொறுப்பு, உத்திரமேரூர் தொகுதி எம்.எல்.ஏ.,வும், காஞ்சிபுரம் மேற்கு மாவட்ட அ.தி.மு.க., செயலருமான வாலாஜாபாத் கணேசனிடம், கூடுதல் பொறுப்பாக ஒப்படைக்கப்பட்டு உள்ளது.

'பேஸ் புக்'கில்...:
சில தினங்களுக்கு முன், அமைச்சர் ரமணா, படுக்கை அறையில், ஒரு பெண்ணுடன் நெருக்கமாக இருப்பது போலவும், அந்த பெண் அவருக்கு ...

மத்திய அரசு உத்தரவு ஆர்.எஸ்.எஸ்.,க்கு பொருந்துமா என கேள்வி மூவர்ண கொடிக்கு முக்கியத்துவம் தருவார்களா என எதிர்பார்ப்பு

Posted: 20 Feb 2016 11:08 AM PST

புதுடில்லி:'மாணவர்களிடையே தேசப்பற்றை வளர்க்க, நாட்டில் உள்ள, 46 மத்திய பல்கலைகளிலும், 207 அடி உயர கம்பத்தில், தேசியக் கொடியை பறக்க விட வேண்டும்' என, மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை உத்தரவிட்டுள்ளது.இந்த உத்தரவு, தங்களது அமைப்பின் தலைமையகம் மற்றும் இதர கிளை அலுவலகங்களில், நாள்தோறும் தேசியக் கொடியை ஏற்ற மறுக்கும், தங்களது அமைப்பின் நிகழ்ச்சிகளில் மூவர்ண கொடிக்கு முக்கியத்துவம் தராத, ஆர்.எஸ்.எஸ்., அமைப்புக்கு பொருந்துமா என்ற கேள்வி எழுந்துள்ளது.இதென்ன புது கதை என்பவர்கள், நாடு சுதந்திரம் பெற்ற பின் நடந்த, சில சம்பவங்களை தெரிந்து கொள்ள வேண்டும். 1948ல், ...

தமிழக உள்ளாட்சி அமைப்புகளில் பெண்களுக்கு 50 சதவீதம் ஒதுக்கீடு: சட்டசபை கடைசி நாளில் சட்ட திருத்த மசோதா நிறைவேற்றம்

Posted: 20 Feb 2016 11:13 AM PST

சென்னை: தமிழக உள்ளாட்சி அமைப்பு பதவிகளில், பெண்களுக்கு, 50 சதவீத ஒதுக்கீடு அளிக்கும் சட்ட திருத்த மசோதா, 14வது சட்டசபையின் கடைசி நாளான, நேற்று நிறைவேற்றப்பட்டது. இது தொடர்பாக, உள்ளாட்சித் துறை அமைச்சர் வேலுமணி தாக்கல் செய்த, சட்ட மசோதா விவரம்:கிராம மற்றும் நகராட்சி அமைப்புகளில், பெண்களுக்கு தற்போது மொத்த பதவிகளில், மூன்றில் ஒரு பங்கான, 33 சதவீதம் ஒதுக்கப்பட்டு உள்ளது. பெண்களுக்கு அளிக்கப்படும் அதிகாரத்தை மேம்படுத்த, மொத்த பதவிகளில், 33 சதவீத ஒதுக்கீடு என்பதை, 50 சதவீதமாக அதிகரிப்பது அவசியம் என, அரசு கருதுகிறது. எனவே, கிராம ஊராட்சிகள், ஊராட்சி ...



Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™